10 இத்தனை நாட்களுக்குப் பின்பு நீங்கள் மறுபடியும் என்னைப் பற்றி நினைத்துப் பார்த்ததை+ அறிந்து நம் எஜமானுடைய ஊழியனாகிய நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என்மேல் உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தாலும் அதைக் காட்டுவதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.