15யூதேயாவிலிருந்து சில ஆட்கள் வந்து, “மோசேயின் சட்டத்தின்படி விருத்தசேதனம்+ செய்யாவிட்டால் மீட்புப் பெற முடியாது” என்று சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.
24 எங்களில் சிலர் உங்களிடம் வந்து தங்களுடைய வார்த்தைகளால் உங்கள் மனதைக் குழப்பி, உங்களுடைய நம்பிக்கையைக் குலைத்துப்போட முயற்சி செய்திருப்பதாகக் கேள்விப்பட்டோம்.+ ஆனால், நாங்கள் அவர்களுக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை.