39 நீங்கள் விசுவாசம் வைத்தால், எந்தக் காரியங்களில் மோசேயின் திருச்சட்டம் உங்கள் குற்றங்களை நீக்க முடியவில்லையோ+ அந்தக் காரியங்களிலெல்லாம் அவர் மூலமாக உங்கள் குற்றங்கள் நீக்கப்படும்.+
17 ஒருவனுடைய குற்றத்தால் அந்த ஒருவன் மூலம் மரணம் ராஜாவாக ஆட்சி செய்தது;+ அப்படியென்றால், அளவற்ற கருணையையும் நீதியாகிய அன்பளிப்பையும்+ ஏராளமாகப் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் மூலம்+ வாழ்வு பெற்று ராஜாக்களாக ஆட்சி செய்யப்போவது+ அதிக நிச்சயம், இல்லையா?
11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள்,+ பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.+