-
1 கொரிந்தியர் 12:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 உதாரணமாக, கடவுளுடைய சக்தியால் ஒருவருக்கு ஞானத்தோடு பேசுகிற வரமும், அதே சக்தியால் வேறொருவருக்கு அறிவோடு பேசுகிற வரமும், 9 அதே சக்தியால் வேறொருவருக்கு விசுவாசம் வைக்கிற வரமும்,+ அந்த ஒரே சக்தியால் வேறொருவருக்குக் குணப்படுத்துகிற வரமும் கொடுக்கப்படுகிறது.+ 10 வேறொருவருக்கு அற்புதச் செயல்களைச் செய்கிற வரமும்,+ வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் சொல்கிற வரமும், வேறொருவருக்கு ஒரு செய்தி கடவுளிடமிருந்து வந்ததா என்பதைப் பகுத்தறிகிற வரமும்,+ வேறொருவருக்கு வெவ்வேறு மொழிகளில் பேசுகிற வரமும்,+ வேறொருவருக்கு அதை மொழிபெயர்க்கிற வரமும் கொடுக்கப்படுகிறது.+
-