6 நியாயசங்கத்தாரில் ஒரு பகுதியினர் சதுசேயர்கள், மற்றொரு பகுதியினர் பரிசேயர்கள் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்ததால், “சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன்.+ ஆம், பரிசேயர்களுடைய மகன். இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று நான் நம்புவதால்தான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்” என்று சத்தமாகச் சொன்னார்.