-
எபேசியர் 1:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 தன்னுடைய விருப்பத்தை* பற்றிய பரிசுத்த ரகசியத்தைத்+ தெரியப்படுத்தினார். இந்த ரகசியம், ஒரு நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கும் பிரியத்துக்கும் ஏற்றபடி இருக்கிறது. 10 குறித்த காலங்கள் நிறைவேறும்போது அந்த நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதாவது, பரலோகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் பூமியில் இருக்கிற எல்லாவற்றையும்+ மறுபடியும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டிச்சேர்க்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. அதன்படியே, கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு
-
-
கொலோசெயர் 1:26, 27பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம்+ கடந்த சகாப்தங்களுக்கும்* கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது.+ ஆனால், இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.+ 27 மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த அந்தப் பரிசுத்த ரகசியத்தை+ மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வதில் கடவுள் சந்தோஷம் அடைந்திருக்கிறார். கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருப்பதால் அவரோடு மகிமைப்படுவதற்கான+ நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் பரிசுத்த ரகசியம்.
-