7 என் அன்புச் சகோதரரும் நம் எஜமானுடைய சேவையில் உண்மையுள்ள ஊழியரும் என் சக அடிமையுமான தீகிக்கு+ என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் உங்களிடம் சொல்வார். 8 நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றி உங்களிடம் சொல்வதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும் அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்.