-
1 கொரிந்தியர் 9:16, 17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 நான் இப்போது நல்ல செய்தியை அறிவித்து வந்தாலும் பெருமை பேச எனக்கு இடமில்லை; ஏனென்றால், அதை அறிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. உண்மையில், நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!+ 17 அதை விருப்பத்தோடு செய்தால் எனக்குப் பலன் இருக்கிறது; அதை விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.+
-
-
கொலோசெயர் 1:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 கடவுளுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாய்ப் பிரசங்கிப்பதற்காக அவர் எனக்குக் கொடுத்த நிர்வாகப் பொறுப்பின்படி,+ அந்தச் சபைக்கு நான் ஊழியனானேன். 26 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம்+ கடந்த சகாப்தங்களுக்கும்* கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது.+ ஆனால், இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.+
-