29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்;+ அதனால் என் நுகத்தடியை* உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.
14 எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால்,+ நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்.*+15 நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்.+