-
2 தீமோத்தேயு 2:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 நம் எஜமானின் ஊழியன் சண்டைபோடக் கூடாது; அதற்குப் பதிலாக, எல்லாரிடமும் மென்மையாக* நடந்துகொள்கிறவனாகவும்,+ கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவனாகவும், தீமையைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும்,+ 25 கலகம் செய்கிறவர்களுக்குச் சாந்தத்தோடு அறிவுரை சொல்கிறவனாகவும் இருக்க வேண்டும்.+ ஏனென்றால், அவர்கள் மனம் திருந்தி* சத்தியத்தைத் திருத்தமாகத் தெரிந்துகொள்வதற்குக்+ கடவுள் ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கலாம்.
-
-
தீத்து 3:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் அடிபணிந்து நடக்க வேண்டும், கீழ்ப்படிய வேண்டும்,+ எல்லா விதமான நல்ல செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும், 2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.
-