12அதனால் சகோதரர்களே, கடவுள் கரிசனையுள்ளவராக இருப்பதால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உங்களுடைய உடலை+ உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும்+ கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப்+ பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்.
15 அதனால், இயேசுவின் வழியாகக் கடவுளுக்கு எப்போதும் நம்முடைய உதடுகளின் கனியைப் பலி செலுத்துவோமாக.+ அதாவது, கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் அறிவிப்பதன்+ மூலம் அவருக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக.+