14பின்பு நான் பார்த்தபோது, சீயோன் மலைமீது+ ஆட்டுக்குட்டியானவர்+ நின்றுகொண்டிருந்தார்; அவருடைய பெயரும் அவருடைய தகப்பனின் பெயரும்+ நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த 1,44,000 பேர்+ அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.
12 அவருடைய கண்கள் தீ ஜுவாலை போல் இருந்தன.+ அவருடைய தலையில் நிறைய மகுடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு பெயர் அவர்மேல் எழுதப்பட்டிருந்தது.