14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்.
11 பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை+ இருந்தது. நம்பகமானவர்+ என்றும், உண்மையானவர்+ என்றும் அழைக்கப்படுகிறவர் அதன்மேல் உட்கார்ந்திருந்தார்; அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறவர், நீதியாகப் போர் செய்கிறவர்.+