-
எண்ணாகமம் 21:23, 24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 ஆனால், சீகோன் தன்னுடைய தேசத்தின் வழியாகப் போக இஸ்ரவேலர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக வனாந்தரத்திலே போர் செய்யக் கிளம்பினான். அவன் யாகாசுக்குப் போய், அங்கே இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+ 24 ஆனால், இஸ்ரவேலர்கள் அவனை வாளால் வீழ்த்தி,+ அர்னோனிலிருந்து+ யாபோக் வரையுள்ள+ அவன் தேசத்தைக் கைப்பற்றினார்கள்.+ யாபோக் அம்மோனியர்களின் தேசத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், யாசேர்+ அம்மோனியர்களின் எல்லையாக இருந்ததால்+ அதைத் தாண்டி அவர்கள் போகவில்லை.
-
-
எண்ணாகமம் 21:33-35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+ 34 அப்போது யெகோவா மோசேயிடம், “அவனைப் பார்த்துப் பயப்படாதே.+ அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன்.+ எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்”+ என்று சொன்னார். 35 அவர் சொன்னபடியே, இஸ்ரவேலர்கள் அவனையும் அவனுடைய மகன்களையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் வெட்டி வீழ்த்தினார்கள்.+ அதன்பின், அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+
-