12 நீங்களும் உங்களுடைய மகன்களும் மகள்களும், உங்களிடம் அடிமைகளாக இருக்கிற ஆண்களும் பெண்களும் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ தங்களுக்கென்று எந்தப் பங்கும் சொத்தும் கொடுக்கப்படாமல் உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும்+ அதேபோல் சந்தோஷமாக இருக்க வேண்டும்.