-
லேவியராகமம் 7:33-35பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 சமாதான பலிகளின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிற ஆரோனின் மகனுக்கு அந்த வலது காலைப் பங்காகக் கொடுக்க வேண்டும்.+ 34 இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்துகிற சமாதான பலிகளிலிருந்து, அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும் பரிசுத்த பங்காகிய காலையும் குருமார்களாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்களுக்கு இதை ஒரு நிரந்தரக் கட்டளையாகத் தந்திருக்கிறேன்.+
35 யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட தகன பலிகளிலிருந்து எடுக்கப்படும் இந்தப் பங்கை குருமார்களாகிய ஆரோனுக்காகவும் அவனுடைய மகன்களுக்காகவும் ஒதுக்கி வைக்க வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டது. அவர்கள் யெகோவாவுக்குக் குருத்துவச் சேவை செய்ய நியமிக்கப்பட்ட நாளில் அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது.+
-