40 அதனால், மனாசேயின் மகன் மாகீருக்கு மோசே கீலேயாத்தைக் கொடுத்தார், அவன் அதில் குடியிருந்தான்.+ 41 மனாசேயின் மகனாகிய யாவீர் கீலேயாத்தின் சிற்றூர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அவற்றைக் கைப்பற்றினான். அவற்றுக்கு அவோத்-யாவீர் என்று பெயர் வைத்தான்.+