52 உடனே, இஸ்ரவேல் வீரர்களும் யூதாவின் வீரர்களும் கத்திக் கூச்சல் போட்டுக்கொண்டே பள்ளத்தாக்கிலிருந்து+ எக்ரோனின்+ நுழைவாசல்கள் வரைக்கும் பெலிஸ்தியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். சாராயிமுக்குப்+ போகும் சாலை தொடங்கி காத் மற்றும் எக்ரோன் வரைக்கும் பெலிஸ்தியர்களை வழியெல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள்.