-
உபாகமம் 33:13-15பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
“அவனுடைய தேசம் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படட்டும்.+
வானத்திலிருந்து பனித்துளியும் ஆசீர்வாதங்களும் அங்கே பொழியட்டும்.
ஆழத்திலிருந்து ஊற்றுகள் பொங்கி எழட்டும்.+
14 சூரிய வெளிச்சத்தில் அழகான செடிகொடிகள் முளைக்கட்டும்.
ஒவ்வொரு மாதமும் நல்ல விளைச்சல் கிடைக்கட்டும்.+
15 என்றென்றுமுள்ள* மலைகள் வளங்களை வாரி இறைக்கட்டும்.+
அழியாத குன்றுகள் பொக்கிஷங்களைக் கொடுக்கட்டும்.
-
யோசுவா 17:17, 18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அப்போது யோசேப்பின் வம்சத்தாராகிய எப்பிராயீம் மற்றும் மனாசே கோத்திரத்தாரிடம் யோசுவா, “நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிறைய பலம் இருக்கிறது. அதனால், உங்களுக்கு ஒரு பங்கு மட்டுமல்ல,+ 18 மலைப்பகுதி முழுவதும் கொடுக்கப்படும்.+ அது காடாக இருந்தாலும் அங்குள்ள மரங்களை வெட்டிவிடுங்கள். அதுதான் உங்களுடைய பகுதியின் எல்லை. கானானியர்கள் பலசாலிகளாக இருந்தாலும், இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட போர் ரதங்களை வைத்திருந்தாலும், அவர்களைத் துரத்தியடியுங்கள்”+ என்று சொன்னார்.
-
-
-