உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 1:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 பரலோகப் படைகளின் யெகோவாவை வணங்கி அவருக்குப் பலி செலுத்த எல்க்கானா வருஷா வருஷம் சீலோவுக்குப் போனார்.+ ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ சீலோவில் யெகோவாவின் சன்னிதியில் குருமார்களாகச் சேவை செய்துவந்தார்கள்.+

  • 1 சாமுவேல் 4:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 மற்ற வீரர்கள் முகாமுக்குத் திரும்பியபோது இஸ்ரவேல் பெரியோர்கள்* அவர்களிடம், “இன்று யெகோவா ஏன் நம்மை பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போக விட்டுவிட்டார்?+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துவருவோம்,+ அது நமக்குத் துணையாக இருக்கும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள்.

  • சங்கீதம் 78:60
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 60 கடைசியில், சீலோவிலிருந்த வழிபாட்டுக் கூடாரத்தைக் கைவிட்டார்.+

      மக்கள் மத்தியில் தான் குடிகொண்டிருந்த அந்தக் கூடாரத்தைவிட்டு விலகினார்.+

  • எரேமியா 7:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 “‘நீங்கள் கெட்ட காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள். நான் மறுபடியும் மறுபடியும் உங்களோடு பேசியும் நீங்கள் கேட்கவில்லை.+ உங்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் நீங்கள் பதில் சொல்லவே இல்லை.+

  • அப்போஸ்தலர் 7:44, 45
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 44 வனாந்தரத்தில் நம்முடைய முன்னோர்களுக்குச் சாட்சிக் கூடாரம் இருந்தது; தரிசனத்தில் காட்டப்பட்ட மாதிரியின்படி அந்தக் கூடாரத்தை அமைக்க வேண்டுமென மோசேக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். அதன்படியே அந்தக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.+ 45 நம்முடைய முன்னோர்கள் அந்தக் கூடாரத்தைப் பெற்றுக்கொண்டு, தங்கள் கண்முன் கடவுள் துரத்திவிட்ட மக்களுடைய தேசத்துக்குள் யோசுவாவோடு வந்தபோது அதைக் கொண்டுவந்தார்கள்;+ தாவீதின் நாட்கள்வரை அந்தக் கூடாரம் அங்கேயே இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்