12 இப்போது இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள்.+ 13 முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்களின் பாதங்கள் யோர்தான் ஆற்றில் பட்டவுடன், மேலிருந்து ஓடிவரும் தண்ணீர் அப்படியே அணைபோல் நிற்கும்”+ என்று சொன்னார்.