உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 19:47, 48
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 47 தாணின் பகுதி அவர்களுக்கு ரொம்பவே சின்னதாக இருந்தது.+ அதனால் அவர்கள் போய் லேசேமைத்+ தாக்கி, அதைக் கைப்பற்றி, அங்கிருந்தவர்களை வாளால் கொன்றார்கள். அந்த நகரத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியேறினார்கள். அதோடு, தங்களுடைய மூதாதை தாணின் ஞாபகமாக அதன் பெயரை தாண் என்று மாற்றினார்கள்.+ 48 இந்த நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே தாண் வம்சத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி கிடைத்த சொத்து.

  • நியாயாதிபதிகள் 20:1
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 அதனால், தாண்முதல்+ பெயெர்-செபாவரை இருந்த இஸ்ரவேலர்களும் கீலேயாத் பிரதேசத்தில்+ இருந்த இஸ்ரவேலர்களும், மிஸ்பாவில் யெகோவாவுக்கு முன்னால் ஒருமனதாகக் கூடினார்கள்.+

  • 1 ராஜாக்கள் 4:25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள்.

  • 1 ராஜாக்கள் 12:28, 29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 அதனால் தன்னுடைய ஆலோசகர்களுடன் கலந்துபேசி, இரண்டு தங்கக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்.+ பின்பு மக்களிடம், “இஸ்ரவேலர்களே, எருசலேமுக்குப் போய் வருவது உங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும். இதோ! உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த உங்கள் கடவுள்”+ என்று சொன்னார். 29 அவற்றில் ஒன்றை பெத்தேலிலும்+ மற்றொன்றை தாணிலும்+ வைத்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்