-
2 சாமுவேல் 5:19-21பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அப்போது தாவீது யெகோவாவிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். 20 அதனால், தாவீது பாகால்-பிராசீமுக்கு வந்து பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் யெகோவா எனக்கு முன்னால் போய் என் எதிரிகளை அழித்துப்போட்டார்”+ என்று சொன்னார். அதனால் அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்*+ என்று பெயர் வைத்தார். 21 பெலிஸ்தியர்கள் தங்களுடைய சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். தாவீதும் அவருடைய வீரர்களும் அவற்றை எடுத்து அழித்துப்போட்டார்கள்.
-