25 இன்றுமுதல், பூமியிலுள்ள எல்லா ஜனங்களும் உங்களை நினைத்துப் பயப்படும்படி செய்வேன். அவர்கள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கதிகலங்குவார்கள், நடுநடுங்குவார்கள்’*+ என்று சொன்னார்.
9 அவள் அவர்களிடம், “இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கண்டிப்பாகக் கொடுப்பார்+ என்று எனக்குத் தெரியும். உங்களை நினைத்து நாங்கள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.+ இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் கதிகலங்கிப்போயிருக்கிறார்கள்.+