உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 7:51
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 51 இப்படி, யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் ராஜா செய்து முடித்தார். பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த பொருள்களை+ ஆலயத்துக்குக் கொண்டுவந்தார். வெள்ளியையும் தங்கத்தையும் மற்ற பொருள்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+

  • 1 ராஜாக்கள் 14:25, 26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 ரெகொபெயாம் ராஜா ஆட்சி செய்த ஐந்தாம் வருஷத்தில், எகிப்தின் ராஜாவான சீஷாக்+ எருசலேம்மீது படையெடுத்து வந்தான்.+ 26 யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான்.+ சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட, எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+

  • 1 நாளாகமம் 9:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 நம்பிக்கைக்குரிய நான்கு பேர் தலைமை வாயிற்காவலர்களாக இருந்தார்கள். உண்மைக் கடவுளின் வீட்டிலுள்ள சாப்பாட்டு அறைகளையும் பொக்கிஷ அறைகளையும் காவல்காக்கும் பொறுப்பு இந்த லேவியர்களுக்கு இருந்தது.+

  • 1 நாளாகமம் 18:10, 11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 உடனே, தாவீது ராஜாவிடம் நலம் விசாரிக்கவும் ஆதாதேசரைத் தோற்கடித்ததற்கு வாழ்த்துச் சொல்லவும் தோயூ தன்னுடைய மகன் ஹதோராமை அனுப்பினார். (ஏனென்றால், ஆதாதேசர் அடிக்கடி தோயூவை எதிர்த்துப் போர் செய்துவந்தான்) தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட பலவிதமான பொருள்களை தாவீதுக்கு ஹதோராம் கொடுத்தார். 11 தாவீது ராஜா இவற்றை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்.*+ அதோடு, ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனியர்கள்,+ பெலிஸ்தியர்கள்,+ அமலேக்கியர்கள்+ ஆகிய எல்லா மக்களிடமிருந்தும் எடுத்துவந்த தங்கத்தையும் வெள்ளியையும்கூட அர்ப்பணித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்