7 நீ போய் யெரொபெயாமிடம் இந்தச் செய்தியைச் சொல். ‘இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், “நான் உன்னைச் சாதாரண மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுத்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+
9 நீயோ, உனக்கு முன்பிருந்த எல்லாரையும்விட படுமோசமாக நடந்துகொண்டாய். என்னைப் புண்படுத்துவதற்காக இன்னொரு தெய்வத்தை உருவாக்கினாய், உலோகச் சிலைகளைச் செய்தாய்.+ இப்படியெல்லாம் செய்து நீ என்னை ஒதுக்கித்தள்ளிவிட்டாய்.+