12 நீ இறந்து+ உன் முன்னோர்களைப் போல் நல்லடக்கம் செய்யப்பட்ட* பின்பு, உன் சந்ததியை, உன் சொந்த மகனை, ராஜாவாக ஏற்படுத்துவேன். அவனுடைய ஆட்சியை உறுதியாக நிலைநாட்டுவேன்.+
36 என்னுடைய பெயரை நிலைநாட்டுவதற்காக நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தில் என் முன்னால் தாவீதுடைய விளக்கு அணையாமல்* காக்கப்பட வேண்டும்+ என்பதற்காக அவனுடைய மகனுக்கு ஒரு கோத்திரத்தைத் தருவேன்.