-
2 நாளாகமம் 16:13, 14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 தான் ஆட்சி செய்த 41-ஆம் வருஷத்தில் இறந்துபோனார்.*+ 14 ‘தாவீதின் நகரத்தில்’+ ஆசா தனக்காக வெட்டி வைத்திருந்த பிரமாண்டமான கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள். பலவித வாசனை எண்ணெயும் வாசனைப் பொருள்களும் கலந்து செய்யப்பட்ட தைலத்தையும் பரிமளத் தைலத்தையும் பாடையில் ஊற்றி, அதில் அவருடைய உடலை வைத்தார்கள்.+ அதோடு, அவருக்கு மரியாதை செய்வதற்காக எக்கச்சக்கமான வாசனைப் பொருள்களையும் எரித்தார்கள்.
-
-
எரேமியா 34:4, 5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 ஆனாலும், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, யெகோவாவின் செய்தியைக் கேள்: ‘உன்னைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீ வாளால் சாக மாட்டாய். 5 உனக்கு இயற்கையான மரணம்தான் வரும்.+ உனக்கு முன்பு வாழ்ந்த ராஜாக்கள் இறந்தபோது வாசனைப் பொருள்கள் எரிக்கப்பட்டதைப் போலவே உனக்கும் எரிக்கப்படும். அப்போது ஜனங்கள், ‘ஐயோ, எங்கள் ராஜாவே!’ என்று அழுது புலம்புவார்கள். ‘இதை நானே சொல்லியிருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”’”
-