10 கேடுண்டாக்கும் விதிமுறைகளைக் கொடுக்கிறவர்களுக்கும்,
ஜனங்களை ஒடுக்குகிற சட்டங்களை எழுதிக்கொண்டே இருக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!+
2 அவர்கள் ஏழைகளின் வழக்குகளை விசாரிப்பதில்லை.
எளியவர்களுக்கு நியாயம் வழங்குவதில்லை.+
விதவைகளைச் சூறையாடுகிறார்கள்.
அப்பா இல்லாத பிள்ளைகளை கொள்ளையடிக்கிறார்கள்.+