உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 7:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 அதோடு, நீ என் ஊழியன் தாவீதிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னைக்+ கூட்டிக்கொண்டு வந்து, என்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக்கினேன்.+

  • 2 சாமுவேல் 7:16
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார்.

  • 2 சாமுவேல் 23:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 என் வம்சமும் கடவுளுக்கு முன்னால் அப்படித்தானே இருக்கும்?

      அவர்தான் என்னோடு நிரந்தர ஒப்பந்தம் செய்திருக்கிறாரே;+

      அதைக் கச்சிதமாய், கவனமாய்த் தயார்படுத்தியிருக்கிறாரே.

      அது எனக்கு முழுமையான மீட்பும் அளவில்லாத ஆனந்தமும் அளிக்கும்;

      அதனால்தானே என் வம்சத்தை அவர் செழித்தோங்கச் செய்கிறார்?+

  • சங்கீதம் 89:28, 29
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 28 மாறாத அன்பை அவனுக்கு என்றென்றும் காட்டுவேன்.+

      அவனோடு செய்த ஒப்பந்தத்தை முறிக்கவே மாட்டேன்.+

      29 அவனுடைய சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.

      அவனுடைய சிம்மாசனத்தை வானம்போல் என்றுமே நிலைநிற்க வைப்பேன்.+

  • எரேமியா 33:25, 26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 25 யெகோவா சொல்வது இதுதான்: ‘பகலுக்கும் ராத்திரிக்கும்,+ வானத்துக்கும் பூமிக்கும் நான் ஏற்படுத்தியிருக்கும் சட்டங்கள் ஒருபோதும் மாறாதது போலவே,+ 26 யாக்கோபின் வம்சத்தையும் என் ஊழியனாகிய தாவீதின் வம்சத்தையும் ஒதுக்கித்தள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியும் ஒருபோதும் மாறாது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களின் வம்சத்தை ஆட்சி செய்ய தாவீதின் வம்சத்தில் ராஜாக்கள் இல்லாமல் போக மாட்டார்கள். ஏனென்றால், சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை நான் மறுபடியும் கூட்டிச்சேர்ப்பேன்,+ அவர்கள்மேல் இரக்கம் காட்டுவேன்.’”+

  • அப்போஸ்தலர் 13:34
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்