-
2 ராஜாக்கள் 3:24, 25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 அவர்கள் இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் வந்ததும், இஸ்ரவேல் வீரர்கள் எழுந்து மோவாபியர்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்கள். உடனே அவர்கள் தப்பி ஓடினார்கள்.+ அவர்களைத் துரத்திக்கொண்டு இஸ்ரவேலர்கள் மோவாபுக்குள் போனார்கள். வழியெல்லாம் மோவாபியர்களை வீழ்த்திக்கொண்டே போனார்கள். 25 மோவாபியர்களின் நகரங்களை இஸ்ரவேலர்கள் தரைமட்டமாக்கினார்கள். வீரர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலங்களில் கற்களை எறிந்தார்கள், அவை எல்லாவற்றையும் கற்களால் நிரப்பினார்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துப்போட்டார்கள்,+ நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போட்டார்கள்.+ கற்களால் கட்டப்பட்ட கீர்-ஆரேசேத்தின்+ மதில் மட்டும்தான் கடைசியாக மிஞ்சியிருந்தது. கல்லெறியும் வீரர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு அதையும் தாக்கினார்கள்.
-