உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 6:11, 12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர்,

      “நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,

      வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,

      தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+

      12 யெகோவாவாகிய நான் ஜனங்களைத் தொலைதூரத்துக்குத் துரத்திவிடும் வரைக்கும்,+

      தேசத்தின் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கும் வரைக்கும்” என்று சொன்னார்.

  • எரேமியா 26:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:

      “வயலைப் போல சீயோன் உழப்படும்.

      எருசலேம் மண்மேடாகும்.+

      ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+

      என்று சொன்னார்.

  • புலம்பல் 2:5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  5 யெகோவா எதிரியைப் போல ஆகிவிட்டார்.+

      இஸ்ரவேலை அழித்துவிட்டார்.

      அவளுடைய எல்லா கோபுரங்களையும் தரைமட்டமாக்கிவிட்டார்.

      அவளுடைய எல்லா கோட்டைகளையும் நாசமாக்கிவிட்டார்.

      யூதாவைப் பயங்கரமாக அழுது புலம்ப வைத்துவிட்டார்.

  • எசேக்கியேல் 36:4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 4 அதனால் இஸ்ரவேலின் மலைகளே, உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் செய்தியைக் கேளுங்கள்! உன்னதப் பேரரசராகிய யெகோவா மலைகளுக்கும், குன்றுகளுக்கும், ஓடைகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், சுற்றியுள்ள தேசங்களால் சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டு,+ கேலி செய்யப்பட்ட நகரங்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்