-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-
-
எசேக்கியேல் 9:9, 10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அதற்கு அவர், “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா வம்சத்தாரும் மகா பெரிய அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள்.+ தேசமெங்கும் இரத்தம் ஓடுகிறது,+ எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது.+ அவர்கள் எல்லாரும், ‘யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார், யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை’+ என்று சொல்லிக்கொள்கிறார்கள். 10 அவர்களைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். அவர்கள்மேல் கரிசனை காட்ட மாட்டேன்.+ அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்” என்று சொன்னார்.
-