11 நகரத்தில் மிச்சமிருந்த மக்களையும், பாபிலோன் ராஜாவிடம் சரணடைந்தவர்களையும், மற்ற மக்களையும் காவலாளிகளின் தலைவன் நேபுசராதான் சிறைபிடித்துக்கொண்டு போனான்.+ 12 ஆனால், திராட்சைத் தோட்டங்களிலும் வயல்களிலும் கட்டாய வேலை செய்வதற்காக பரம ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவிட்டுப் போனான்.+