-
எசேக்கியேல் 25:12, 13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
-
-
எசேக்கியேல் 35:10, 11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 ‘இந்த இரண்டு தேசங்களும் எனக்குச் சொந்தமாகும், இரண்டையுமே நாங்கள் கைப்பற்றுவோம்’+ என்று நீ சொன்னாய். யெகோவா அங்கே இருந்தும் நீ அப்படிச் சொன்னாய். 11 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்,* நீ அவர்கள்மேல் பொறாமைப்பட்டு எந்தளவுக்கு வெறுப்பையும் கோபத்தையும் காட்டினாயோ அந்தளவுக்கு நான் உனக்குப் பதிலடி கொடுப்பேன்.+ உன்னைத் தண்டிக்கும்போது, நான் யார் என்று அவர்களுக்குக் காட்டுவேன்.
-