உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தெசலோனிக்கேயர் 1
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 தெசலோனிக்கேயர் முக்கியக் குறிப்புகள்

      • வாழ்த்துக்கள் (1)

      • தெசலோனிக்கேயர்களின் விசுவாசத்துக்காக நன்றி (2-10)

1 தெசலோனிக்கேயர் 1:1

அடிக்குறிப்புகள்

  • *

    சீலா என்றும் அழைக்கப்படுகிறார்.

இணைவசனங்கள்

  • +அப் 15:22; 1பே 5:12
  • +அப் 16:1, 2

1 தெசலோனிக்கேயர் 1:2

இணைவசனங்கள்

  • +2தெ 1:11, 12

1 தெசலோனிக்கேயர் 1:3

இணைவசனங்கள்

  • +1பே 1:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2007, பக். 6-7

    ராஜ்ய ஊழியம்,

    2/2000, பக். 4

1 தெசலோனிக்கேயர் 1:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    ஊழியப் பள்ளி, பக். 194

    காவற்கோபுரம்,

    3/1/2000, பக். 16

    ராஜ்ய ஊழியம்,

    2/2000, பக். 3-4

1 தெசலோனிக்கேயர் 1:6

இணைவசனங்கள்

  • +1தெ 2:14
  • +1கொ 11:1; பிலி 3:17; 2தெ 3:9
  • +1பே 2:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    ராஜ்ய ஊழியம்,

    2/2000, பக். 3-4

1 தெசலோனிக்கேயர் 1:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இயேசுவின் சீஷர்கள்.”

1 தெசலோனிக்கேயர் 1:8

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2தெ 1:4

1 தெசலோனிக்கேயர் 1:9

இணைவசனங்கள்

  • +1கொ 10:14; 12:2; கலா 4:8; 1யோ 5:21

1 தெசலோனிக்கேயர் 1:10

இணைவசனங்கள்

  • +1தெ 5:2; 2பே 3:12
  • +அப் 1:10, 11; தீத் 2:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2010, பக். 13

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 தெ. 1:1அப் 15:22; 1பே 5:12
1 தெ. 1:1அப் 16:1, 2
1 தெ. 1:22தெ 1:11, 12
1 தெ. 1:31பே 1:3, 4
1 தெ. 1:61தெ 2:14
1 தெ. 1:61கொ 11:1; பிலி 3:17; 2தெ 3:9
1 தெ. 1:61பே 2:21
1 தெ. 1:82தெ 1:4
1 தெ. 1:91கொ 10:14; 12:2; கலா 4:8; 1யோ 5:21
1 தெ. 1:10அப் 1:10, 11; தீத் 2:13
1 தெ. 1:101தெ 5:2; 2பே 3:12
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
1 தெசலோனிக்கேயர் 1:1-10

தெசலோனிக்கேயருக்கு முதலாம் கடிதம்

1 பரலோகத் தகப்பனாகிய கடவுளோடும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒன்றுபட்டிருக்கிற தெசலோனிக்கேயருடைய சபைக்கு, சில்வானுவோடும்*+ தீமோத்தேயுவோடும்+ சேர்ந்து பவுல் எழுதுவது:

கடவுளிடமிருந்து அளவற்ற கருணையும் சமாதானமும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

2 உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம்+ கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். 3 விசுவாசத்தால் நீங்கள் செய்கிற ஊழியத்தையும், உங்களுடைய அன்பான உழைப்பையும், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துமேல் வைத்திருக்கிற நம்பிக்கையின்+ காரணமாக நீங்கள் காட்டுகிற சகிப்புத்தன்மையையும் நம்முடைய தகப்பனாகிய கடவுளுக்கு முன்னால் எப்போதும் நினைத்துக்கொள்கிறோம். 4 கடவுளுடைய அன்பைப் பெற்ற சகோதரர்களே, நீங்கள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 5 ஏனென்றால், நல்ல செய்தியை உங்களுக்கு வார்த்தைகளால் மட்டுமே பிரசங்கிக்காமல், வல்லமையோடும் கடவுளுடைய சக்தியோடும் முழு நிச்சயத்தோடும் பிரசங்கித்தோம். உங்களுடைய நலனை மனதில் வைத்து நாங்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டோம் என்பது உங்களுக்கே தெரியும். 6 உங்களுக்குப் பயங்கர உபத்திரவம் வந்தபோதிலும்,+ கடவுளுடைய சக்தியால் கிடைக்கிற சந்தோஷத்தோடு அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள்; எங்களைப் போலவும்+ நம் எஜமானைப் போலவும்+ நடந்துகொண்டீர்கள். 7 இப்படி, மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற விசுவாசிகள்* எல்லாருக்கும் முன்மாதிரிகளாக ஆனீர்கள்.

8 உண்மையில், மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் இருக்கிற மக்களுக்கு யெகோவாவின்* செய்தி உங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடவுள்மேல் நீங்கள் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள் என்ற செய்தி எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.+ அதனால், நாங்கள் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. 9 நாங்கள் முதன்முதலில் உங்களிடம் வந்தபோது நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட விதத்தையும், சிலைகளை விட்டுவிட்டு+ உயிருள்ள உண்மைக் கடவுளுக்கு ஊழியம் செய்ய அவரிடம் திரும்பிய விதத்தையும் அவர்களே மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறார்கள். 10 அதோடு, கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரும் வரப்போகிற கடும் கோபத்திலிருந்து+ நம்மைக் காப்பாற்றுகிறவருமான அவருடைய மகன் இயேசு பரலோகத்திலிருந்து வெளிப்படுவதற்காக+ நீங்கள் காத்துக்கொண்டிருப்பதையும் சொல்லி வருகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்