உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 3
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நியாயாதிபதிகள் முக்கியக் குறிப்புகள்

      • இஸ்ரவேலர்களை யெகோவா பரீட்சை பார்க்கிறார் (1-6)

      • ஒத்னியேல், முதல் நியாயாதிபதி (7-11)

      • நியாயாதிபதியான ஏகூத் குண்டாக இருந்த எக்லோன் ராஜாவைக் கொன்றுபோடுகிறார் (12-30)

      • நியாயாதிபதியான சம்கார் (31)

நியாயாதிபதிகள் 3:1

இணைவசனங்கள்

  • +உபா 8:2; நியா 2:10

நியாயாதிபதிகள் 3:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”

இணைவசனங்கள்

  • +நியா 1:18, 19
  • +யோசு 13:1, 4; நியா 1:31
  • +எண் 34:2, 8; யோசு 13:1, 5
  • +யோசு 13:1, 6
  • +யோசு 9:1, 2

நியாயாதிபதிகள் 3:4

இணைவசனங்கள்

  • +யாத் 23:33; நியா 2:21, 22

நியாயாதிபதிகள் 3:5

இணைவசனங்கள்

  • +நியா 1:29; சங் 106:34

நியாயாதிபதிகள் 3:6

இணைவசனங்கள்

  • +யாத் 34:15, 16; எண் 25:1, 2; உபா 7:3, 4; 1ரா 11:1, 4

நியாயாதிபதிகள் 3:7

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 34:13; உபா 12:3; 16:21; 31:16; நியா 2:11; 10:6

நியாயாதிபதிகள் 3:8

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “விற்றுப்போட்டார்.”

நியாயாதிபதிகள் 3:9

இணைவசனங்கள்

  • +உபா 4:30; நியா 10:10, 15
  • +நியா 2:16, 18; 3:15
  • +1நா 4:13

நியாயாதிபதிகள் 3:10

இணைவசனங்கள்

  • +எண் 11:16, 17; நியா 6:34; 11:29; 14:5, 6; 15:14; 1சா 11:6; 16:13; 2நா 15:1

நியாயாதிபதிகள் 3:12

இணைவசனங்கள்

  • +நியா 2:19
  • +ஆதி 19:36, 37

நியாயாதிபதிகள் 3:13

இணைவசனங்கள்

  • +ஆதி 19:36, 38; நியா 11:4, 5
  • +யாத் 17:8; நியா 6:3
  • +உபா 34:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 29

நியாயாதிபதிகள் 3:14

இணைவசனங்கள்

  • +உபா 28:48

நியாயாதிபதிகள் 3:15

இணைவசனங்கள்

  • +சங் 78:34
  • +நியா 3:9
  • +ஆதி 49:27
  • +நியா 4:1
  • +நியா 20:15, 16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 29-30

    3/15/1997, பக். 29

நியாயாதிபதிகள் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    ஒருவேளை, “சின்ன முழமாக.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30

    3/15/1997, பக். 29-30

நியாயாதிபதிகள் 3:17

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:19

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “கற்சுரங்கங்கள்வரை.”

  • *

    நே.மொ., “அமைதி!”

இணைவசனங்கள்

  • +யோசு 4:19; 5:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2005, பக். 26

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30

நியாயாதிபதிகள் 3:23

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “காற்றுப்போக்கி.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30-31

    3/15/1997, பக். 30

நியாயாதிபதிகள் 3:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 30-31

    3/15/1997, பக். 30-31

நியாயாதிபதிகள் 3:25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 31

நியாயாதிபதிகள் 3:26

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “கற்சுரங்கங்களை.”

இணைவசனங்கள்

  • +நியா 3:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/1997, பக். 31

நியாயாதிபதிகள் 3:27

இணைவசனங்கள்

  • +நியா 7:24
  • +நியா 6:34; 1சா 13:3

நியாயாதிபதிகள் 3:28

அடிக்குறிப்புகள்

  • *

    ஜனங்கள் ஆற்றைக் கடக்கும் ஆழமில்லாத பகுதிகள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 31

நியாயாதிபதிகள் 3:29

இணைவசனங்கள்

  • +உபா 28:7
  • +லேவி 26:7, 8

நியாயாதிபதிகள் 3:30

இணைவசனங்கள்

  • +நியா 3:11

நியாயாதிபதிகள் 3:31

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +நியா 5:6
  • +யோசு 13:1, 2
  • +நியா 15:3, 15; 1சா 17:47, 50

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நியா. 3:1உபா 8:2; நியா 2:10
நியா. 3:3நியா 1:18, 19
நியா. 3:3யோசு 13:1, 4; நியா 1:31
நியா. 3:3எண் 34:2, 8; யோசு 13:1, 5
நியா. 3:3யோசு 13:1, 6
நியா. 3:3யோசு 9:1, 2
நியா. 3:4யாத் 23:33; நியா 2:21, 22
நியா. 3:5நியா 1:29; சங் 106:34
நியா. 3:6யாத் 34:15, 16; எண் 25:1, 2; உபா 7:3, 4; 1ரா 11:1, 4
நியா. 3:7யாத் 34:13; உபா 12:3; 16:21; 31:16; நியா 2:11; 10:6
நியா. 3:9நியா 2:16, 18; 3:15
நியா. 3:91நா 4:13
நியா. 3:9உபா 4:30; நியா 10:10, 15
நியா. 3:10எண் 11:16, 17; நியா 6:34; 11:29; 14:5, 6; 15:14; 1சா 11:6; 16:13; 2நா 15:1
நியா. 3:12நியா 2:19
நியா. 3:12ஆதி 19:36, 37
நியா. 3:13ஆதி 19:36, 38; நியா 11:4, 5
நியா. 3:13யாத் 17:8; நியா 6:3
நியா. 3:13உபா 34:3
நியா. 3:14உபா 28:48
நியா. 3:15சங் 78:34
நியா. 3:15நியா 3:9
நியா. 3:15ஆதி 49:27
நியா. 3:15நியா 4:1
நியா. 3:15நியா 20:15, 16
நியா. 3:19யோசு 4:19; 5:8, 9
நியா. 3:26நியா 3:19
நியா. 3:27நியா 7:24
நியா. 3:27நியா 6:34; 1சா 13:3
நியா. 3:29உபா 28:7
நியா. 3:29லேவி 26:7, 8
நியா. 3:30நியா 3:11
நியா. 3:31நியா 5:6
நியா. 3:31யோசு 13:1, 2
நியா. 3:31நியா 15:3, 15; 1சா 17:47, 50
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
நியாயாதிபதிகள் 3:1-31

நியாயாதிபதிகள்

3 கானானியர்களோடு போர் செய்யாத இஸ்ரவேலர்களின் தலைமுறைகளைச் சோதித்துப் பார்ப்பதற்காக,+ 2 (அதாவது, போர் அனுபவம் இல்லாத இஸ்ரவேலர்களின் தலைமுறைகள் போர் செய்யக் கற்றுக்கொள்வதற்காக) யெகோவா விட்டுவைத்த தேசத்தார் இவர்கள்தான்: 3 பெலிஸ்தியர்களின்+ ஐந்து தலைவர்கள், கானானியர்கள், சீதோனியர்கள்,+ மற்றும் பாகால்-எர்மோன் மலையிலிருந்து லெபோ-காமாத்*+ வரைக்கும் உள்ள லீபனோன் மலைத்தொடர்களில்+ இருக்கிற ஏவியர்கள்.+ 4 முன்னோர்களின் காலத்தில் மோசே மூலம் யெகோவா கொடுத்த கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிவார்களா மாட்டார்களா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் அந்தத் தேசத்தாரையெல்லாம் அவர் விட்டுவைத்தார்.+ 5 அதனால் கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகியவர்களோடு இஸ்ரவேலர்கள் வாழ்ந்துவந்தார்கள்.+ 6 இஸ்ரவேலர்கள் அவர்களிடமிருந்து பெண் எடுத்தார்கள், அவர்களுக்குத் தங்களுடைய பெண்களைக் கொடுத்தார்கள். அவர்களுடைய தெய்வங்களைக் கும்பிடவும் ஆரம்பித்தார்கள்.+

7 இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள். தங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்து, பாகால்களையும் பூஜைக் கம்பங்களையும்* கும்பிட்டார்கள்.+ 8 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமின் கையில் கொடுத்தார்.* இஸ்ரவேலர்கள் எட்டு வருஷங்கள் அந்த ராஜாவுக்குச் சேவை செய்தார்கள். 9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார். 10 யெகோவாவின் சக்தி அவருக்குக் கிடைத்தது,+ அவர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக ஆனார். அவர் போருக்குப் போனபோது, மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமைத் தோற்கடிக்க யெகோவா அவருக்கு உதவினார். 11 அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது. பின்பு, கேனாசின் மகன் ஒத்னியேல் இறந்துபோனார்.

12 மறுபடியும் இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்கள்.+ அதனால், இஸ்ரவேலர்களை அடக்கி ஒடுக்கும்படி மோவாபின்+ ராஜாவாகிய எக்லோனை யெகோவா விட்டுவிட்டார். இஸ்ரவேலர்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டிருந்ததால், 13 அம்மோனியர்களையும்+ அமலேக்கியர்களையும்கூட+ அவர்களுக்கு விரோதமாக வர வைத்தார். அவர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கி, பேரீச்ச மரங்கள் நிறைந்த நகரத்தைக்+ கைப்பற்றினார்கள். 14 மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்கு இஸ்ரவேலர்கள் 18 வருஷங்கள் சேவை செய்தார்கள்.+ 15 பின்பு, யெகோவாவிடம் உதவிக்காகக் கதறினார்கள்.+ அப்போது, அவர்களைக் காப்பாற்ற+ பென்யமீன் கோத்திரத்தைச்+ சேர்ந்த கேராவின் மகன் ஏகூத்தை+ யெகோவா அனுப்பினார். இவர் இடது கை பழக்கமுள்ளவர்.+ மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் கப்பம் கட்டிவிட்டு வரச் சொல்லி இஸ்ரவேலர்கள் இவரை அனுப்பி வைத்தார்கள். 16 இதற்கிடையில், ஏகூத் தனக்காக ஒரு வாளைச் செய்துகொண்டார். அதன் நீளம் ஒரு முழமாக* இருந்தது, இரண்டு பக்கமும் கூர்மையாக இருந்தது. அதைத் தன்னுடைய அங்கிக்கு அடியில் வலது தொடையில் கட்டிவைத்துக்கொண்டார். 17 பின்பு, மோவாபின் ராஜாவாகிய எக்லோனிடம் போய் கப்பம் கட்டினார். எக்லோன் மிகவும் குண்டாக இருந்தான்.

18 ஏகூத் கப்பம் கட்டி முடித்தவுடன், அதைச் சுமந்து வந்த ஆட்களை அனுப்பிவிட்டார். 19 பின்பு, தான் மட்டும் கில்காலில்+ இருந்த சிலைகள்வரை* போய்விட்டு, ராஜாவிடம் திரும்பி வந்தார். அவனிடம், “ராஜாவே, நான் உங்களிடம் ஒரு ரகசியம் சொல்ல வேண்டும்” என்றார். அப்போது ராஜா, “எல்லாரும் போங்கள்!”* என்று சொன்னான், உடனே அங்கிருந்த சேவகர்கள் எல்லாரும் வெளியே போனார்கள். 20 மொட்டைமாடியில் இருந்த குளிர்ச்சியான அறையில் தனியாக உட்கார்ந்திருந்த ராஜாவிடம் ஏகூத், “கடவுள் உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னார். அப்போது, ராஜா இருக்கையிலிருந்து எழுந்தான். 21 உடனே, ஏகூத் தன்னுடைய வலது தொடையில் கட்டியிருந்த வாளை இடது கையால் உருவி, அவனுடைய வயிற்றில் ஒரே குத்தாகக் குத்தினார். 22 கத்தியோடு கைப்பிடியும் சேர்ந்து வயிற்றுக்குள் பாய்ந்தது. அந்தக் கத்தி வயிற்றிலுள்ள கொழுப்புக்குள் சிக்கிக்கொண்டதால், அவர் அதை உருவி எடுக்கவில்லை. ராஜாவின் உடலிலிருந்து மலம் வெளியே வந்தது. 23 பின்பு ஏகூத், அந்த மொட்டைமாடி அறையின் கதவுகளைப் பூட்டிவிட்டு, வராந்தா* வழியாக வெளியே வந்தார். 24 அவர் போன பின்பு, சேவகர்கள் வந்து பார்த்தார்கள். அப்போது, மொட்டைமாடி அறையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அதனால், “ராஜா ஒருவேளை மலஜலம் கழித்துக்கொண்டிருப்பார்” என்று சொல்லிக்கொண்டு வெளியே காத்திருந்தார்கள். 25 ஆனால், காத்துக் காத்து சலித்துப்போனார்கள். ராஜா கதவுகளை திறக்காமலேயே இருந்ததால், கடைசியில் அவர்களே சாவியை எடுத்துவந்து திறந்தார்கள். உள்ளே பார்த்தபோது, ராஜா தரையில் பிணமாகக் கிடந்தான்!

26 இதெல்லாம் நடப்பதற்குள் ஏகூத் தப்பித்து ஓடிவிட்டார். சிலைகளை* கடந்து+ சேயிரா என்ற இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தார். 27 அங்கு போய்ச் சேர்ந்ததும், அந்த எப்பிராயீம் மலைப்பகுதியில்+ ஊதுகொம்பை ஊதினார்.+ இஸ்ரவேலர்கள் அவருடைய தலைமையில் அந்த மலைப்பகுதியிலிருந்து இறங்கிவந்தார்கள். 28 அவர் அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்கள் எதிரிகளான மோவாபியர்களை யெகோவா உங்களுடைய கையில் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார். அதனால், அவர்கள் அவர் பின்னால் போய், மோவாபியர்கள் தப்பித்துப் போகாதபடி யோர்தானின் ஆற்றுத்துறைகளை* கைப்பற்றினார்கள். யாருமே ஆற்றைக் கடப்பதற்கு அவர்கள் விடவில்லை. 29 பலம்படைத்த மாவீரர்களான சுமார் 10,000 மோவாபியர்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தார்கள்.+ அவர்களில் ஒருவன்கூட தப்பிக்கவில்லை.+ 30 இப்படி, இஸ்ரவேலர்கள் அன்று மோவாபியர்களை அடக்கிவிட்டார்கள். அதன்பின், 80 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.+

31 ஏகூத்துக்குப் பின்பு ஆனாத்தின் மகன் சம்கார்,+ 600 பெலிஸ்திய வீரர்களைத்+ தார்க்கோலால்*+ கொன்று, இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்