உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 14
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

நியாயாதிபதிகள் முக்கியக் குறிப்புகள்

      • ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கல்யாணம் செய்ய சிம்சோன் ஆசைப்படுகிறார் (1-4)

      • யெகோவாவின் சக்தியால் சிம்சோன் ஒரு சிங்கத்தைக் கொன்றுபோடுகிறார் (5-9)

      • கல்யாணத்தின்போது சிம்சோன் சொல்லும் விடுகதை (10-19)

      • சிம்சோனின் மனைவி வேறொருவனுக்குக் கல்யாணம் செய்துவைக்கப்படுகிறாள் (20)

நியாயாதிபதிகள் 14:3

இணைவசனங்கள்

  • +உபா 7:3

நியாயாதிபதிகள் 14:4

அடிக்குறிப்புகள்

  • *

    அநேகமாக, “கடவுள்.”

இணைவசனங்கள்

  • +நியா 13:1

நியாயாதிபதிகள் 14:6

இணைவசனங்கள்

  • +நியா 13:24, 25

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2005, பக். 31

நியாயாதிபதிகள் 14:7

இணைவசனங்கள்

  • +நியா 14:2

நியாயாதிபதிகள் 14:8

இணைவசனங்கள்

  • +ஆதி 24:67; மத் 1:24

நியாயாதிபதிகள் 14:12

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “லினன்.”

நியாயாதிபதிகள் 14:14

இணைவசனங்கள்

  • +நியா 14:8, 9

நியாயாதிபதிகள் 14:15

இணைவசனங்கள்

  • +நியா 16:5

நியாயாதிபதிகள் 14:16

இணைவசனங்கள்

  • +நியா 16:15

நியாயாதிபதிகள் 14:17

இணைவசனங்கள்

  • +நியா 16:16, 18

நியாயாதிபதிகள் 14:18

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “உள்ளறைக்கு அவர் போவதற்கு முன்பு.”

  • *

    அதாவது, “என் மனைவியை வளைத்துப்போட்டிருக்காவிட்டால்.”

இணைவசனங்கள்

  • +நியா 14:14
  • +நியா 14:15

நியாயாதிபதிகள் 14:19

இணைவசனங்கள்

  • +நியா 13:24, 25; 14:6; 15:14
  • +யோசு 13:2, 3; நியா 1:18
  • +நியா 14:12

நியாயாதிபதிகள் 14:20

இணைவசனங்கள்

  • +நியா 14:2
  • +நியா 14:11; 15:1, 2

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

நியா. 14:3உபா 7:3
நியா. 14:4நியா 13:1
நியா. 14:6நியா 13:24, 25
நியா. 14:7நியா 14:2
நியா. 14:8ஆதி 24:67; மத் 1:24
நியா. 14:14நியா 14:8, 9
நியா. 14:15நியா 16:5
நியா. 14:16நியா 16:15
நியா. 14:17நியா 16:16, 18
நியா. 14:18நியா 14:14
நியா. 14:18நியா 14:15
நியா. 14:19நியா 13:24, 25; 14:6; 15:14
நியா. 14:19யோசு 13:2, 3; நியா 1:18
நியா. 14:19நியா 14:12
நியா. 14:20நியா 14:2
நியா. 14:20நியா 14:11; 15:1, 2
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
நியாயாதிபதிகள் 14:1-20

நியாயாதிபதிகள்

14 அப்போது, சிம்சோன் திம்னாவுக்குப் போனார். அங்கே ஒரு பெலிஸ்தியப் பெண்ணைப் பார்த்தார். 2 அவர் தன்னுடைய அம்மா அப்பாவிடம் போய், “திம்னாவில் ஒரு பெலிஸ்தியப் பெண்ணைப் பார்த்தேன். அவளை எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னார். 3 ஆனால் அவருடைய அம்மாவும் அப்பாவும், “நம்முடைய சொந்தத்திலும் ஜனத்திலும் உனக்குப் பெண் கிடைக்கவில்லையா?+ விருத்தசேதனம் செய்யாத பெலிஸ்திய ஜனங்களிடமிருந்துதான் நீ பெண்ணெடுக்க வேண்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு சிம்சோன் தன் அப்பாவிடம், “அவள்தான் எனக்குப் பொருத்தமானவள், அவளையே எனக்குக் கல்யாணம் செய்து வையுங்கள்” என்று சொன்னார். 4 அது யெகோவாவின் செயல் என்பது அவருடைய அம்மா அப்பாவுக்குத் தெரியவில்லை. பெலிஸ்தியர்களைத் தண்டிக்க அவர்* சரியான சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களை ஆட்சி செய்துவந்தார்கள்.+

5 சிம்சோன் தன்னுடைய அம்மா அப்பாவோடு திம்னாவுக்குப் புறப்பட்டுப் போனார். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்துக்கு அவர் போய்ச் சேர்ந்தபோது, ஒரு சிங்கம் கர்ஜித்தபடி அவருக்கு நேராகப் பாய்ந்து வந்தது. 6 அப்போது யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்று,+ ஓர் ஆட்டுக்குட்டியை இரண்டாகக் கிழிப்பதுபோல் அந்தச் சிங்கத்தை வெறுங்கையால் இரண்டாகக் கிழித்தார். ஆனால், இதைப் பற்றித் தன் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்லவில்லை. 7 பின்பு, அங்கிருந்து போய் அந்தப் பெண்ணைப் பார்த்துப் பேசினார். அப்போதும், அவள்தான் அவருக்குப் பொருத்தமானவளாகத் தெரிந்தாள்.+

8 பிற்பாடு, அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவதற்காகப்+ போனபோது, தான் கொன்றுபோட்டிருந்த சிங்கத்தைப் பார்ப்பதற்காகத் திரும்பினார். அந்தச் சிங்கத்தின் உடலுக்குள் தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. 9 அதைக் கையில் எடுத்து சாப்பிட்டுக்கொண்டே, தன் அம்மா அப்பாவிடம் வந்து, அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தார். ஆனால், அதைச் சிங்கத்தின் உடலிலிருந்து எடுத்த விஷயத்தை அவர்களிடம் சொல்லவில்லை.

10 அவருடைய அப்பா அந்தப் பெண்ணைப் பார்க்கப் போனார். அங்கே சிம்சோன் ஒரு விருந்து வைத்தார். பொதுவாக, மணமகன்கள் அப்படி விருந்து வைப்பது வழக்கம். 11 சிம்சோனுக்காக 30 மாப்பிள்ளைத் தோழர்கள் வர வைக்கப்பட்டார்கள். 12 சிம்சோன் அவர்களிடம், “நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். விருந்து நடக்கிற ஏழு நாட்களுக்குள் நீங்கள் அதற்குப் பதில் கண்டுபிடித்துவிட்டால், நான் உங்களுக்கு 30 நாரிழை* உடைகளையும் 30 மேலங்கிகளையும் கொடுப்பேன். 13 பதில் கண்டுபிடிக்காவிட்டால், நீங்கள் எனக்கு 30 நாரிழை உடைகளையும் 30 மேலங்கிகளையும் கொடுக்க வேண்டும், சம்மதமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சரி, உன் விடுகதையைச் சொல், நாங்கள் அதைக் கேட்க வேண்டும்” என்றார்கள். 14 அப்போது சிம்சோன்,

“உண்கிறவனிடமிருந்து உணவு வந்தது,

பலவானிடமிருந்து தித்திப்பானது வந்தது”+

என்று சொன்னார். மூன்று நாட்கள் வரைக்கும் அவர்களால் அந்த விடுகதைக்குப் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. 15 நான்காம் நாள் அவர்கள் சிம்சோனின் மனைவியிடம், “உன் புருஷனிடமிருந்து தந்திரமாக+ அந்த விடுகதைக்குப் பதில் தெரிந்துகொண்டு வா. இல்லாவிட்டால், உன்னையும் உன் அப்பாவின் வீட்டையும் கொளுத்திவிடுவோம். எங்கள் பொருள்களைப் பறித்துக்கொள்ளவா எங்களை வர வைத்தீர்கள்?” என்றார்கள். 16 அதனால், சிம்சோனின் மனைவி அவர் முன்னால் அழுதபடியே, “நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள், என்மேல் உங்களுக்கு அன்பே இல்லை.+ என் ஜனங்களிடம் ஒரு விடுகதை சொன்னீர்கள். ஆனால், பதிலை என்னிடம் சொல்லாமல் மறைக்கிறீர்கள்” என்றாள். அதற்கு அவர், “நான் அதை என் அப்பா அம்மாவிடம்கூட சொல்லவில்லை, உன்னிடம் மட்டும் சொல்வேனா?” என்று கேட்டார். 17 அதனால், அந்த ஏழு நாள் விருந்தின் மீதி நாட்களும் அவள் அழுதுகொண்டே இருந்தாள். அவரை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். கடைசியில், ஏழாம் நாளில் விடுகதைக்கான பதிலை அவளிடம் அவர் சொல்லிவிட்டார். அதை அவள் தன்னுடைய ஜனங்களிடம் சொன்னாள்.+ 18 ஏழாம் நாளில் சூரியன் மறைவதற்கு முன்பு,* அந்த நகரத்திலிருந்த ஆண்கள் அவரிடம்,

“தேனைவிட தித்திப்பானது எது,

சிங்கத்தைவிட பலமானது எது?”+

என்றார்கள். அதற்கு அவர்,

“என் இளம் பசுவை வைத்து நீங்கள் உழாமல் இருந்திருந்தால்*+

என் விடுகதைக்குப் பதில் சொல்லியிருக்க முடியாது”

என்று சொன்னார்.

19 அப்போது, யெகோவாவின் சக்தியால் அவர் பலம் பெற்றார்.+ உடனே, அவர் அஸ்கலோனுக்குப்+ போய் 30 ஆட்களைக் கொன்று, அவர்களுடைய உடைகளை எடுத்து, தன் விடுகதைக்குப் பதில் சொன்னவர்களுக்குக் கொடுத்தார்.+ பின்பு, பயங்கர கோபத்தோடு தன்னுடைய அப்பாவின் வீட்டுக்குத் திரும்பிப்போனார்.

20 சிம்சோனின் மனைவி,+ அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்குக் கல்யாணம் செய்து வைக்கப்பட்டாள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்