உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwtsty நீதிமொழிகள் 1:1-31:31
  • நீதிமொழிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீதிமொழிகள்
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
நீதிமொழிகள்

நீதிமொழிகள்

1 தாவீதின் மகனும்+ இஸ்ரவேலின் ராஜாவுமான+ சாலொமோனின் நீதிமொழிகள்:+

 2 இவை ஞானத்தையும்+ புத்திமதியையும் புகட்டுவதற்கும்,

ஆழமான கருத்துகளைப் புரிய வைப்பதற்கும்,

 3 விவேகத்தோடும்* நீதியோடும்+ நியாயத்தோடும்+

நேர்மையோடும் நடப்பதற்குத் தேவையான புத்திமதியைக்+ கொடுப்பதற்கும்,

 4 அனுபவமில்லாதவர்களைச் சாமர்த்தியசாலிகளாக+ ஆக்குவதற்கும்,

இளைஞர்களுக்கு அறிவையும் யோசிக்கும் திறனையும்+ தருவதற்கும் எழுதப்பட்டிருக்கின்றன.

 5 ஞானமுள்ளவர்கள் காதுகொடுத்துக் கேட்டு, நிறைய அறிவுரைகளை ஏற்றுக்கொள்வார்கள்.+

புத்தியுள்ளவர்கள்* திறமையான வழிநடத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.+

 6 நீதிமொழியையும் விடுகதையையும்* அவர்கள் புரிந்துகொள்வார்கள்.

ஞானமுள்ளவர்கள் சொல்லும் வார்த்தைகளையும் புதிர்களையும்+ புரிந்துகொள்வார்கள்.

 7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+

முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+

 8 என் மகனே, உன் அப்பா சொல்கிற புத்திமதியைக் கேள்,+

உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+

 9 அவை உன்னுடைய தலைக்கு அலங்காரக் கிரீடம்போல் இருக்கும்,+

உன்னுடைய கழுத்துக்கு அழகான நகைபோல் இருக்கும்.+

10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசை காட்டினாலும் நீ இணங்கிவிடாதே.+

11 அவர்கள் உன்னிடம், “எங்களோடு வா,

நாம் பதுங்கியிருந்து தாக்கலாம்.

ஒளிந்திருந்து அப்பாவிகளைத் தீர்த்துக்கட்டலாம்.

12 கல்லறை விழுங்குவதுபோல் அவர்களை உயிரோடு விழுங்கலாம்.

சவக்குழிக்குள் போகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுவதுமாக விழுங்கலாம்.

13 அவர்களிடம் இருக்கிற எல்லா பொக்கிஷங்களையும் சுருட்டிக்கொள்ளலாம்.

கொள்ளையடித்த பொருள்களால் நம் வீடுகளை நிரப்பலாம்.

14 நீயும் எங்களோடு சேர்ந்துகொள்,

கொள்ளையடிப்பதைச் சமமாகப் பங்குபோட்டுக்கொள்ளலாம்” என்றெல்லாம் சொன்னால்,

15 என் மகனே, நீ அவர்கள் பின்னால் போகாதே.

அவர்களுடைய வழியில் கால்வைக்காதே.+

16 ஏனென்றால், அவர்களுடைய கால்கள் அக்கிரமம் செய்வதற்கு ஓடுகின்றன.

கொலை செய்வதற்கு வேகமாகப் போகின்றன.+

17 பறவையைப் பிடிக்க அதன் கண் முன்னாலேயே வலை விரிப்பது வீண்.

18 அதனால்தான், அவர்கள் கொலை செய்வதற்குப் பதுங்கியிருக்கிறார்கள்.

மற்றவர்களுடைய உயிரைப் பறிப்பதற்கு ஒளிந்திருக்கிறார்கள்.

19 குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்க விரும்புகிற எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்.

அது அவர்களுடைய உயிரையே பறித்துவிடும்.+

20 உண்மையான ஞானம்+ வீதியில் நின்று சத்தமாக அழைக்கிறது.+

பொது சதுக்கங்களில் நின்று உரத்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது.+

21 சந்தடியான தெரு முனைகளில் நின்று முழங்குகிறது.

நகரவாசல்களில் நின்று இப்படிச் சொல்கிறது:+

22 “அனுபவமில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அனுபவமில்லாமல் இருக்க ஆசைப்படுவீர்கள்?

கேலி செய்கிறவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் கேலி செய்வதில் சந்தோஷப்படுவீர்கள்?

அறிவில்லாதவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் அறிவை வெறுப்பீர்கள்?+

23 நான் கண்டிப்பதைக் கேட்டுத் திருந்துங்கள்.+

அப்போது, என் சக்தியை உங்கள்மேல் பொழிவேன்.

என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.+

24 நான் உங்களைக் கூப்பிட்டேன், ஆனால் நீங்கள் வரவே இல்லை.

என் கையை நீட்டினேன், ஆனால் யாரும் கவனிக்கவே இல்லை.+

25 என்னுடைய எல்லா ஆலோசனைகளையும் அலட்சியம் செய்தீர்கள்.

நான் கண்டித்தபோது நீங்கள் காதில் வாங்கவே இல்லை.

26 அதனால், உங்களுக்குப் பேரழிவு வரும்போது நான் கைகொட்டிச் சிரிப்பேன்.

எந்த ஆபத்தை நினைத்துப் பயந்து நடுங்குகிறீர்களோ அது வரும்போது நான் கேலி செய்வேன்.+

27 நீங்கள் பயந்து நடுங்குகிற ஆபத்து புயல்போல் வரும்போது,

பேரழிவு சூறாவளிபோல் வரும்போது,

துன்பமும் துயரமும் உங்களைத் தாக்கும்போது,

உங்களைப் பார்த்து சிரிப்பேன்.

28 அப்போது, அவர்கள் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள், ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்.

ஆர்வத்தோடு என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டுபிடிக்க மாட்டார்கள்.+

29 ஏனென்றால், அவர்கள் அறிவை வெறுத்தார்கள்.+

யெகோவாவுக்குப் பயப்படாமல் இருந்தார்கள்.+

30 நான் ஆலோசனை சொன்னபோது அதைக் கேட்கவில்லை.

நான் கண்டித்தபோது அதைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.

31 அதனால், அவர்களுடைய நடத்தைக்குத் தகுந்த கூலியைப் பெறுவார்கள்.+

அவர்களுடைய சதித்திட்டங்களால் வரும் விளைவுகளை முழுமையாக அனுபவிப்பார்கள்.*

32 அனுபவமில்லாதவர்களின் தாறுமாறான போக்கு அவர்களுடைய உயிரைப் பறித்துவிடும்.

முட்டாள்களின் அலட்சியப் போக்கு அவர்களை அழித்துவிடும்.

33 ஆனால், நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான்.+

ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”+

2 என் மகனே, என்னுடைய ஆலோசனைகளை நீ ஏற்றுக்கொண்டால்,

என்னுடைய கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்தால்,+

 2 ஞானத்தைக் காதுகொடுத்துக் கேட்டால்,+

பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள+ உன் இதயத்தைத் திறந்தால்,

 3 புத்தியை* சத்தமாகக் கூப்பிட்டால்,+

பகுத்தறிவை உரத்த குரலில் அழைத்தால்,+

 4 வெள்ளியைத் தேடுவதுபோல் அவற்றை விடாமல் தேடினால்,+

புதையல்களைத் தேடுவதுபோல் தொடர்ந்து தேடினால்,+

 5 அப்போது, யெகோவாவுக்குப் பயப்படுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வாய்,+

கடவுளைப் பற்றிய அறிவைக் கண்டடைவாய்.+

 6 ஏனென்றால், யெகோவாவே ஞானத்தைக் கொடுக்கிறார்.+

அவருடைய வாய் அறிவையும் பகுத்தறிவையும் பொழிகிறது.

 7 நேர்மையானவர்களுக்காக ஞானத்தை* அவர் பொக்கிஷம்போல் வைத்திருக்கிறார்.

உத்தமமாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயம்போல் இருக்கிறார்.+

 8 அவர் நியாயத்தின் பாதைகளைக் காக்கிறார்.

தனக்கு உண்மையாக* இருப்பவர்களின் வழியைப் பாதுகாப்பார்.+

 9 இவற்றை நீ செய்தால் நீதி, நியாயம், நேர்மை என்னவென்று புரிந்துகொள்வாய்,

நல்ல வழிகள் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாய்.+

10 ஞானம் உன் இதயத்தில் குடிபுகுந்து,+

அறிவு உன் ஜீவனுக்குச் சந்தோஷம் தரும்போது,+

11 யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும்,+

பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்.

12 அதனால், நீ தவறான பாதையிலிருந்தும்,

தாறுமாறாகப் பேசுகிறவனிடமிருந்தும்,+

13 இருண்ட பாதைகளில் போவதற்காக

நேர்வழியைவிட்டு விலகுகிற ஆட்களிடமிருந்தும்,+

14 குற்றம் செய்வதில் சந்தோஷப்படுகிற ஆட்களிடமிருந்தும்,

படுமோசமான காரியங்களில் மகிழ்ச்சியடைகிற ஆட்களிடமிருந்தும் பாதுகாக்கப்படுவாய்.

15 அவர்களுடைய பாதைகள் கோணலானவை.

அவர்களுடைய வழிகள் எல்லாமே போலியானவை.

16 நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும்.

இனிக்க இனிக்கப் பேசுகிற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்து அது உன்னைக் காப்பாற்றும்.+

17 அப்படிப்பட்ட பெண், இளமையில் கைப்பிடித்த கணவனை விட்டுவிடுகிறாள்.+

கடவுளோடு செய்த ஒப்பந்தத்தை மறந்துவிடுகிறாள்.

18 அவள் வீடு சவக்குழிக்குள் இறங்குகிறது.

அவள் பாதைகள் கல்லறைக்கு* போகின்றன.+

19 அவளோடு உறவுகொள்கிற யாரும் உயிரோடு திரும்பி வருவதில்லை.

அவர்கள் யாரும் வாழ்வின் பாதைக்குத் திரும்புவதில்லை.+

20 அதனால், நல்லவர்களின் வழியில் நட.

நீதிமான்களின் பாதையைவிட்டு விலகாமல் இரு.+

21 நேர்மையானவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் குடியிருப்பார்கள்.

குற்றமற்றவர்கள்* மட்டும்தான் அதில் தங்கியிருப்பார்கள்.+

22 ஆனால், பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.+

துரோகிகள் இந்த உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்.+

3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.

என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி.

 2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,

நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+

 3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் விட்டுவிடாதே.+

அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.

உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+

 4 அப்போது, கடவுள் பார்வையிலும் மனிதர்கள் பார்வையிலும்,

நீ பிரியமானவனாகவும், மிகுந்த விவேகம் உள்ளவனாகவும் இருப்பாய்.+

 5 யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு.+

உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.*+

 6 எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.+

அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.+

 7 நீயே உன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ளாதே.+

யெகோவாவுக்குப் பயந்து நட, தீமையை விட்டு விலகு.

 8 அப்போது, உன் உடல் ஆரோக்கியம் அடையும்,

உன் எலும்புகள் புதுத்தெம்பு பெறும்.

 9 உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+

உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்து

யெகோவாவை மகிமைப்படுத்து.+

10 அப்போது, உன் சேமிப்புக் கிடங்குகள் நிறைந்திருக்கும்.+

உன் ஆலைகள் புதிய திராட்சமதுவால் நிரம்பி வழியும்.

11 என் மகனே, யெகோவாவின் புத்திமதியை ஒதுக்கித்தள்ளாதே.+

அவர் கண்டிக்கும்போது வெறுப்பைக் காட்டாதே.+

12 ஏனென்றால், அப்பா தன் செல்ல மகனைக் கண்டிப்பது போல,+

யெகோவாவும் தான் நேசிக்கிறவர்களைக் கண்டிக்கிறார்.+

13 ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும்,

பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன்.+

14 ஞானத்தைச் சம்பாதிப்பது வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட மேலானது.

அது தரும் லாபம் தங்கத்தைவிட மேலானது.+

15 அது பவளங்களைவிட* அதிக மதிப்புள்ளது.

நீ ஆசைப்படுகிற எதுவுமே அதற்கு ஈடாகாது.

16 அதன் வலது கையில் நீண்ட ஆயுள் இருக்கிறது.

அதன் இடது கையில் செல்வமும் மகிமையும் இருக்கின்றன.

17 அதன் வழிகள் சந்தோஷத்தைத் தரும்.

அதன் பாதைகளெல்லாம் சமாதானத்தைத் தரும்.+

18 அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது வாழ்வளிக்கிற மரம் போன்றது.

அதை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+

19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+

தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+

20 தன்னுடைய அறிவால் ஆழமான தண்ணீரைப் பிளந்தார்,

வானத்து மேகங்களைப் பனி பொழிய வைத்தார்.+

21 என் மகனே, இவற்றை* எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.

ஞானத்தையும்* யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.

22 அவை உனக்கு வாழ்வு தரும்.

உன் கழுத்துக்கு அலங்காரமாக இருக்கும்.

23 அப்போது, நீ உன் பாதையில் பாதுகாப்பாக நடப்பாய்.

உன் கால் ஒருபோதும் தடுமாறாது.*+

24 நீ பயம் இல்லாமல் படுத்துக்கொள்வாய்.+

உன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குவாய்.+

25 திடீரென வரும் ஆபத்தை நினைத்துப் பயப்பட மாட்டாய்.+

பொல்லாதவர்களைத் தாக்கும் புயலைப் பார்த்து நடுங்க மாட்டாய்.+

26 ஏனென்றால், யெகோவா உன் நம்பிக்கையாக* இருப்பார்.+

உன் கால்கள் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றுவார்.+

27 நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

28 ஒருவன் கேட்பதை உன்னால் உடனே கொடுக்க முடிந்தும்,

“நீ போய்விட்டு வா, நாளைக்குத் தருகிறேன்” என்று சொல்லாதே.

29 உன்னை நம்பி பயமில்லாமல் வாழ்கிற

உன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எதிராகச் சதி செய்யாதே.+

30 ஒருவன் உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாதபோது,

காரணமே இல்லாமல் அவனோடு சண்டை போடாதே.+

31 வன்முறையில் இறங்குகிறவனைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+

அவன் செய்கிற எதையும் நீ செய்யாதே.

32 ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார்.+

ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+

33 பொல்லாதவனின் வீட்டை யெகோவா சபிக்கிறார்.+

ஆனால், நீதிமானின் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.+

34 கேலி செய்கிறவர்களை அவர் கேலி செய்கிறார்.+

ஆனால், தாழ்மையானவர்களுக்கு* கருணை காட்டுகிறார்.+

35 ஞானமுள்ளவர்கள் மரியாதையைச் சம்பாதிப்பார்கள்.

ஆனால், முட்டாள்கள் அவமரியாதையைத் தேடிக்கொள்கிறார்கள்.*+

4 என் மகன்களே, அப்பா சொல்கிற புத்திமதியைக் கேளுங்கள்.+

புத்தியை* அடைவதற்குக் கவனம் செலுத்துங்கள்.

 2 ஏனென்றால், நான் உங்களுக்கு நல்ல அறிவுரைகளைத் தருவேன்.

என் போதனையை* ஒதுக்கித்தள்ளாதீர்கள்.+

 3 என் அப்பாவுக்கு நான் நல்ல பிள்ளையாக இருந்தேன்.+

என் அம்மாவுக்குச் செல்லப் பிள்ளையாக இருந்தேன்.+

 4 என் அப்பா எனக்கு இப்படிப் போதித்தார்:

“என் வார்த்தைகளை எப்போதும் உன் இதயத்தில் வைத்துக்கொள்.+

என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது நீண்ட காலம் வாழ்வாய்.+

 5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும்* சம்பாதி.+

நான் சொல்வதை மறந்துவிடாதே, அதை விட்டுவிலகாதே.

 6 ஞானத்தை ஒதுக்கித்தள்ளாதே, அது உன்னைப் பாதுகாக்கும்.

அதை நேசி, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.

 7 எல்லாவற்றையும்விட ஞானம்தான் முக்கியம்,+ அதனால் ஞானத்தைச் சம்பாதி.

எதைச் சம்பாதித்தாலும் புத்தியை* சம்பாதிக்க மறந்துவிடாதே.+

 8 அதை உயர்வாக மதித்தால், அது உன்னை உயர்த்தும்.+

அதை விரும்பி ஏற்றுக்கொண்டால், அது உனக்கு மதிப்புச் சேர்க்கும்.+

 9 அது உன் தலையில் அலங்காரக் கிரீடத்தைச் சூட்டும்.

அழகிய கிரீடத்தால் உன்னை அலங்கரிக்கும்.”

10 என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள், அவற்றை ஏற்றுக்கொள்.

அப்போது, நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.+

11 ஞானமான வழியை நான் உனக்குச் சொல்லிக்கொடுப்பேன்.+

நேர்மையான பாதையில் உன்னைக் கூட்டிக்கொண்டு போவேன்.+

12 நடக்கும்போது நீ தடுமாற மாட்டாய்.

ஓடினாலும் தடுக்கி விழ மாட்டாய்.

13 புத்திமதிகளை உறுதியாகப் பிடித்துக்கொள், அவற்றை விட்டுவிடாதே.+

அவற்றைப் பாதுகாத்துக்கொள், அவை உனக்கு வாழ்வு தரும்.+

14 பொல்லாதவர்களின் பாதையில் போகாதே.

அக்கிரமக்காரர்களின் வழியில் நடக்காதே.+

15 அதை வெறுத்துவிடு, அந்தப் பக்கமே தலைகாட்டாதே.+

அதைவிட்டு விலகு, அங்கிருந்து வந்துவிடு.+

16 அக்கிரமம் செய்யாவிட்டால் அவர்களுக்குத் தூக்கமே வராது.

யாருக்காவது குழி பறிக்கும்வரை அவர்களால் தூங்கவே முடியாது.

17 அவர்கள் அக்கிரமத்தின் உணவைச் சாப்பிடுகிறார்கள்.

வன்முறையின் திராட்சமதுவைக் குடிக்கிறார்கள்.

18 ஆனால், நீதிமான்களின் பாதை நடுப்பகல்வரை அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற

விடியற்கால வெளிச்சம்போல் இருக்கிறது.+

19 பொல்லாதவர்களின் பாதையோ இருள்போல் இருக்கிறது.

எது தங்களைத் தடுக்கி விழ வைக்கிறது என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை.

20 என் மகனே, என் வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.

என் ஆலோசனைகளைக் கவனமாகக் கேள்.

21 அவற்றை எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.

உன் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்.+

22 அவற்றைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவை வாழ்வு தரும்.+

அவர்களுடைய முழு உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

23 எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்.+

ஏனென்றால், உன் உயிர் அதைச் சார்ந்தே இருக்கிறது.*

24 பொய் புரட்டை நீ தவிர்த்துவிடு.+

நேர்மையற்ற பேச்சை உனக்குத் தூரமாக்கிவிடு.

25 உன்னுடைய கண்கள் நேராகப் பார்க்க வேண்டும்.

அங்கும் இங்கும் பார்க்காமல் நேராகவே பார்க்க வேண்டும்.+

26 உன் பாதையில் இருக்கிற தடைகளையெல்லாம் எடுத்துப்போடு.*+

அப்போது, உன் வழிகளெல்லாம் உறுதியாகும்.

27 வலது பக்கமோ இடது பக்கமோ சாயாதே.+

கெட்ட வழியில் கால்வைக்காதே.

5 என் மகனே, நான் சொல்கிற ஞானமான வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேள்.

பகுத்தறிவை நான் போதிக்கும்போது கவனமாகக் கேள்.+

 2 அப்போது, யோசிக்கும் திறனை நீ பாதுகாத்துக்கொள்வாய்.

உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.+

 3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+

அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+

 4 ஆனால், அவளுடைய சகவாசம் முடிவில் எட்டியை* போலக் கசக்கும்.+

இரண்டு பக்கமும் கூர்மையாக இருக்கும் வாளைப் போலக் குத்தும்.+

 5 அவளுடைய கால் சவக்குழிக்குள் இறங்கும்.

அவளுடைய காலடிகள் நேராகக் கல்லறைக்குப் போகும்.

 6 வாழ்வின் பாதையைப் பற்றி அவள் யோசிப்பதே இல்லை.

எங்கு போகிறாள் என்றே தெரியாமல் மனம்போன போக்கில் போகிறாள்.

 7 என் மகன்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.

என் வார்த்தைகளைவிட்டு விலகாதீர்கள்.

 8 மகனே, அவளைவிட்டு நீ தூரமாக விலகியிரு.

அவளுடைய வீட்டு வாசல் பக்கம்கூட போகாதே.+

 9 அப்போதுதான், உன் பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டாய்.+

வாழ்நாள் முழுவதும் வேதனைப்பட மாட்டாய்.+

10 இல்லையென்றால், உன் சொத்துகளை முன்பின் தெரியாதவர்கள் சுரண்டிக்கொள்வார்கள்.+

நீ கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததெல்லாம் அன்னியர்களின் வீட்டுக்குப் போய்விடும்.

11 உன் வாழ்க்கையின் முடிவிலே உன் பலம் குறைந்து,

உன் உடல் உருக்குலையும்போது நீ வேதனையில் முனகுவாய்.+

12 அப்போது, “புத்திமதியை வெறுத்தேனே!

கண்டிப்பை என் இதயம் அலட்சியம் செய்ததே!

13 என் போதகர்களின் பேச்சைக் கேட்காமல் போய்விட்டேனே!

எனக்கு உபதேசம் பண்ணினவர்கள் சொன்னதைக் காதில் வாங்காமல் போனேனே!

14 இப்போது என் வாழ்க்கையே நாசமாய்ப் போய்விட்டதே.

முழு சபைக்கும் முன்னால் தலைகுனியும் நிலைமை வந்துவிட்டதே!”+ என்று புலம்புவாய்.

15 உன் தொட்டியில் இருக்கும் தண்ணீரை மட்டும் குடி.

உன் கிணற்றில் ஊறும் தண்ணீரை மட்டும் குடி.+

16 உன் நீரூற்றுகள் ஏன் வெளியே பாய்ந்தோட வேண்டும்?

உன் நீரோடைகள் ஏன் பொது சதுக்கங்களில் வழிந்தோட வேண்டும்?+

17 அவை உனக்கு மட்டும்தான் சொந்தம்.

முன்பின் தெரியாதவர்களோடு அவற்றைப் பங்குபோட்டுக்கொள்ளாதே.+

18 உன்னுடைய நீரூற்றே உனக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.

இளவயதில் கைப்பிடித்த உன் மனைவியோடு சந்தோஷமாக இரு.+

19 அவள் பாசமான ஒரு பெண் மான், அழகான வரையாடு.+

அவளுடைய மார்புகள் எப்போதும் உன்னை மகிழ்விக்கட்டும்.

அவளுடைய அன்பில் நீ எப்போதும் மயங்கியிரு.+

20 என் மகனே, நடத்தைகெட்ட பெண்ணிடம் நீ ஏன் மயங்க வேண்டும்?

ஒழுக்கங்கெட்ட பெண்ணின் மார்பை ஏன் தழுவ வேண்டும்?+

21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கின்றன.

அவனுடைய பாதைகளையெல்லாம் அவர் ஆராய்கிறார்.+

22 பொல்லாதவன் செய்கிற குற்றங்களே அவனைக் கண்ணிபோல் பிடித்துக்கொள்ளும்.

அவன் செய்கிற பாவங்களே அவனைக் கயிறுபோல் இறுகச் சுற்றிக்கொள்ளும்.+

23 அவன் புத்திமதியைக் கேட்காததால் செத்துப்போவான்.

அடிமுட்டாளாக இருப்பதால் வழிதவறிப் போவான்.

6 என் மகனே, நீ ஒருவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்டால்,+

முன்பின் தெரியாதவனோடு கைகுலுக்கி ஒப்பந்தம் செய்துகொண்டால்,+

 2 உத்தரவாதம் கொடுத்துவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால்,

வாக்குக் கொடுத்துவிட்டு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால்,+

 3 என் மகனே, நான் சொல்வதுபோல் செய்து அதிலிருந்து தப்பித்துக்கொள்.

நீ அவனிடம் நன்றாக மாட்டிக்கொண்டதால்,

அவசரமாகப் போய், உன்னையே தாழ்த்தி, அவனிடம் கெஞ்சு.+

 4 அதுவரைக்கும் கண் அசந்துவிடாதே.

உன் கண் இமைகளை மூடவிடாதே.

 5 வேட்டைக்காரனின் கையிலிருந்து தப்பிக்கிற கலைமானை* போலவும்,

வேடனின் கையிலிருந்து தப்பிக்கிற பறவையைப் போலவும் நீ தப்பித்துக்கொள்.

 6 சோம்பேறியே, நீ போய் எறும்பைப் பார்.+

அது செய்வதையெல்லாம் கவனித்து, ஞானத்தைப் பெற்றுக்கொள்.

 7 அதற்குத் தலைவனும் இல்லை, அதிகாரியும் இல்லை, அரசனும் இல்லை.

 8 ஆனாலும், கோடைக் காலத்தில் உணவைச் சேமித்து வைக்கிறது.+

அறுவடைக் காலத்தில் உணவுப் பொருள்களைச் சேர்த்து வைக்கிறது.

 9 சோம்பேறியே, எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பாய்?

எப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பாய்?

10 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்”+ என்று சொன்னால்,

11 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,

ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+

12 உதவாக்கரையாகவும் அயோக்கியனாகவும்* இருப்பவன் பொய் பேசிக்கொண்டு அலைகிறான்.+

13 கண்ணால் ஜாடை காட்டுகிறான்,+ காலைத் தட்டியும், விரல்களை ஆட்டியும் சைகை காட்டுகிறான்.

14 அவனுடைய உள்ளம் நெறிகெட்டுப்போயிருப்பதால்,

எப்போதும் சதித்திட்டம் தீட்டுகிறான்,+ சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுகிறான்.+

15 அதனால், அவனுக்குத் திடீரென்று அழிவு வரும்.

நொடிப்பொழுதில் நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+

16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.

சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.

17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+

அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+

18 சதித்திட்டங்கள் போடுகிற இதயம்,+ கெட்டதைச் செய்ய வேகமாக ஓடுகிற கால்கள்,

19 மூச்சுக்கு மூச்சு பொய் சாட்சி சொல்லுதல்,*+

சகோதரர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகளை மூட்டிவிடுதல்.*+

20 என் மகனே, உன் அப்பா கொடுக்கிற கட்டளைக்குக் கீழ்ப்படி.

உன் அம்மா கொடுக்கிற அறிவுரையை ஒதுக்கித்தள்ளாதே.+

21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் பதிய வைத்துக்கொள்.

உன் கழுத்தில் கட்டிக்கொள்.

22 நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்.

நீ படுக்கும்போது அவை உன்னைக் காவல்காக்கும்.

நீ எழுந்திருக்கும்போது அவை உன்னிடம் பேசும்.

23 கட்டளைதான் விளக்கு.+

சட்டம்தான் வெளிச்சம்.+

கண்டிப்பும் புத்திமதியும்தான் வாழ்வின் வழி.+

24 அவை நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்தும்,+

அவளுடைய வசீகரப் பேச்சிலிருந்தும் உன்னைப் பாதுகாக்கும்.+

25 உன் உள்ளத்தில் அவளுடைய அழகை ரசிக்காதே.+

அவளுடைய மயக்கும் பார்வையில் மயங்கிவிடாதே.

26 ஏனென்றால், விபச்சாரியிடம் போகிறவன் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுவான்.+

நடத்தைகெட்ட மனைவி ஒருவனுடைய அருமையான உயிருக்கே உலை வைத்துவிடுவாள்.

27 ஒருவன் நெருப்புத்தணலை நெஞ்சோடு வைத்துக்கொண்டால் அவனுடைய உடை கருகாமல் இருக்குமா?+

28 ஒருவன் எரிகிற தணல்மேல் நடந்தால் அவனுடைய பாதங்கள் வெந்துபோகாமல் இருக்குமா?

29 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்பவனுக்கும் இதே கதிதான்.

அவளைத் தொடுகிற எவனும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.+

30 வயிற்றுப் பசிக்காக ஒருவன் திருடினால்,

மக்கள் அவனைக் கேவலமாகப் பேச மாட்டார்கள்.

31 ஆனால் அவன் பிடிபடும்போது, ஏழு மடங்கு திருப்பித்தர வேண்டியிருக்கும்;

தன் வீட்டில் இருக்கும் விலைமதிப்புள்ள பொருள்களையெல்லாம் கொடுக்க வேண்டியிருக்கும்.+

32 அடுத்தவனுடைய மனைவியோடு உறவுகொள்கிறவன் புத்தி இல்லாதவன்.

அவன் தனக்கே அழிவைத் தேடிக்கொள்கிறான்.+

33 அவனுக்கு வேதனையும்* தலைகுனிவும்தான் மிஞ்சும்.+

அவனுக்கு ஏற்படும் அவமானத்தைப் போக்கவே முடியாது.+

34 பொறாமையால் அவளுடைய கணவன் கொதித்தெழுவான்.

பழிவாங்கும்போது கொஞ்சம்கூட இரக்கம் காட்ட மாட்டான்.+

35 நஷ்ட ஈடாக எதைக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

எவ்வளவு பெரிய அன்பளிப்பைக் கொடுத்தாலும் சமாதானம் ஆக மாட்டான்.

7 என் மகனே, என் ஆலோசனைகளைக் கேள்.

என் கட்டளைகளைப் பொக்கிஷம்போல் பாதுகாத்துக்கொள்.+

 2 என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்போது வாழ்வாய்.+

என் அறிவுரைகளை* கண்மணிபோல் காத்துக்கொள்.

 3 அவற்றை உன் விரல்களில் கட்டிக்கொள்.

உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+

 4 ஞானத்தைப் பார்த்து, “நீ என் சகோதரி” என்று சொல்.

புத்தியை* பார்த்து, “என் சொந்தமே” என்று கூப்பிடு.

 5 அப்போதுதான், நடத்தைகெட்ட பெண்ணிடமிருந்தும்,+ ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும்,

அவளுடைய தேனொழுகும் பேச்சிலிருந்தும் நீ பாதுகாக்கப்படுவாய்.+

 6 என் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.

அங்கிருந்து கீழே கவனித்தேன்.

 7 அங்கே விவரம் தெரியாத* வாலிபர்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தார்கள்.

புத்தியில்லாத ஒரு வாலிபன் அந்தக் கூட்டத்தில் இருந்தான்.+

 8 அவன் அவளுடைய தெரு முனையின் வழியாகப் போனான்.

அவளுடைய வீடு இருந்த திசையில் நடந்து போனான்.

 9 பொழுதுசாயும் சாயங்கால வேளையிலே,+

இருட்டும் நேரத்திலே அவன் அங்கே போனான்.

10 அப்போது, ஒரு பெண் அவனைப் பார்க்க வந்தாள்.

அவள் விபச்சாரிபோல்* உடுத்தியிருந்தாள்,+ தந்திரமான உள்ளத்தோடு வந்தாள்.

11 அவள் வாயாடி, அடங்காதவள்.+

தன்னுடைய வீட்டில் தங்கவே மாட்டாள்.

12 ஒருநேரம் தெருவில் இருப்பாள், அடுத்த நேரம் பொது சதுக்கங்களில் இருப்பாள்.

ஒவ்வொரு தெரு முனையிலும் பதுங்கி நிற்பாள்.+

13 அவள் அவனைப் பிடித்து முத்தம் கொடுத்தாள்.

பின்பு, வெட்கமே இல்லாமல் அவனிடம்,

14 “நான் சமாதான பலி செலுத்த வேண்டியிருந்தது,+

என் நேர்த்திக்கடன்களை இன்று செலுத்திவிட்டேன்.

15 அதனால், உன்னைப் பார்க்க வந்தேன்.

உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், இப்போது கண்டுபிடித்துவிட்டேன்!

16 என் மெத்தையில் அருமையான விரிப்பை விரித்து வைத்திருக்கிறேன்,

எகிப்து தேசத்துப் பலவண்ண நாரிழை* விரிப்பைப்+ போட்டு வைத்திருக்கிறேன்.

17 என் படுக்கையில் வெள்ளைப்போளத்தையும்* அகிலையும்* லவங்கத்தையும் தூவி வைத்திருக்கிறேன்.+

18 என்னோடு வா, காலைவரை காதல் ரசத்தை நாம் பருகலாம்.

விடியும்வரை உல்லாசமாக இருக்கலாம்.

19 ஏனென்றால், என் புருஷன் வீட்டில் இல்லை.

ரொம்பத் தூரம் பிரயாணம் போயிருக்கிறார்.

20 பை நிறைய பணம் கொண்டுபோயிருக்கிறார்.

பௌர்ணமிவரை திரும்பிவர மாட்டார்” என்று சொன்னாள்.

21 அவள் இனிக்க இனிக்கப் பேசி அவனைத் தன் பக்கம் இழுத்தாள்.+

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி அவனை மயக்கினாள்.

22 உடனே அவன் அவளுக்குப் பின்னால் போனான்.

வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிற மாட்டைப் போலவும்,

தொழுமரத்தில்* தண்டிக்கப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிற முட்டாளைப் போலவும் போனான்.+

23 கடைசியில், ஓர் அம்பு அவனுடைய கல்லீரலைக் குத்திக் கிழிக்கும்.

உயிர் போகுமென்று தெரியாமல் வேகமாகப் போய்க் கண்ணியில் சிக்கிவிடும் பறவைபோல் ஆகிவிடுவான்.+

24 என் மகன்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.

என் வார்த்தைகளைக் கவனித்துக் கேளுங்கள்.

25 உங்கள் இதயத்தை அவளுடைய வழிகளில் போக விடாதீர்கள்.

அவளுடைய பாதைகளில் மயங்கித் திரியாதீர்கள்.+

26 ஏனென்றால், அவள் எத்தனையோ பேரின் சாவுக்குக் காரணமாகியிருக்கிறாள்.+

அவளால் செத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.+

27 அவளுடைய வீடு கல்லறைக்குப் போகும் வழி.

அது மரணத்தின் உள்ளறைகளுக்குக் கொண்டுபோகும் பாதை.

8 ஞானம் சத்தமாக அழைக்கிறது, அல்லவா?

பகுத்தறிவு உரத்த குரலில் கூப்பிடுகிறது, அல்லவா?+

 2 அது சாலையோரமாக உள்ள உயரமான இடங்களிலும்,+

சாலை சந்திப்புகளிலும் நின்று அழைக்கிறது.

 3 நகரவாசல்களின் பக்கத்திலும் நுழைவாசல்களிலும் நின்று,

சத்தமாக இப்படிக் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது:+

 4 “ஜனங்களே, உங்களைத்தான் சத்தமாக அழைக்கிறேன்.

எல்லாரையும் உரத்த குரலில் கூப்பிடுகிறேன்.

 5 அனுபவமில்லாதவர்களே, சாமர்த்தியமாக நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.+

அறிவில்லாதவர்களே, புரிந்துகொள்ளும் இதயத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 6 கேளுங்கள், நான் முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

என் உதடுகள் சரியானதையே பேசுகின்றன.

 7 என் வாய் உண்மையைத்தான் பேசுகிறது.

என் உதடுகள் கெட்ட விஷயங்களை அருவருக்கின்றன.

 8 என் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் எல்லாமே நீதியானவை.

அவை பொய்யும் புரட்டும் இல்லாதவை.

 9 அவையெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்குச் சட்டென்று புரியும்.

அறிவை அடைந்தவர்களுக்குச் சரியாகத் தோன்றும்.

10 வெள்ளிக்குப் பதிலாக என் புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

சொக்கத்தங்கத்துக்குப் பதிலாக அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+

11 ஏனென்றால், ஞானம் பவளங்களைவிட* சிறந்தது.

வேறெந்தப் பொக்கிஷமும் அதற்கு ஈடாகாது.

12 நான்தான் ஞானம், நான் சாமர்த்தியத்தோடு குடியிருக்கிறேன்.

நான் அறிவையும் யோசிக்கும் திறனையும் பெற்றிருக்கிறேன்.+

13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+

அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+

அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+

14 நல்ல ஆலோசனையும் ஞானமும்* என்னிடம் இருக்கின்றன.+

புரிந்துகொள்ளும் திறனும்+ பலமும்+ எனக்குச் சொந்தமானவை.

15 என்னாலேயே ராஜாக்கள் ஆட்சி செய்துவருகிறார்கள்,

உயர் அதிகாரிகள் நீதியான சட்டங்களைக் கொடுக்கிறார்கள்.+

16 என்னாலேயே அதிபதிகள் ஆட்சி செய்துவருகிறார்கள்,

தலைவர்கள் நீதியான தீர்ப்பு சொல்கிறார்கள்.

17 என்னை நேசிக்கிறவர்களை நானும் நேசிக்கிறேன்.

என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.+

18 செல்வமும் மகிமையும் என்னிடம் இருக்கின்றன.

அழியாத சொத்தும்* நீதியும் என்னிடம் இருக்கின்றன.

19 நான் தரும் பலன் தங்கத்தைவிடவும் சொக்கத்தங்கத்தைவிடவும் மேலானது.

என்னால் கிடைக்கும் பலன் சுத்தமான வெள்ளியைவிட அருமையானது.+

20 நான் நீதியான வழியில் நடக்கிறேன்.

நியாயமான பாதையின் நடுவிலேயே நடக்கிறேன்.

21 என்னை நேசிக்கிறவர்களுக்கு விலைமதிப்புள்ள சொத்துகளைக் கொடுக்கிறேன்.

அவர்களுடைய சேமிப்புக் கிடங்குகளை நிரப்புகிறேன்.

22 யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார்.+

படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.+

23 ஆரம்பத்திலேயே, பூமி படைக்கப்படுவதற்கு முன்பே,+

எண்ணிலடங்காத வருஷங்களுக்கு முன்பே நான் ஏற்படுத்தப்பட்டேன்.+

24 ஆழ்கடல்கள் எதுவும் இல்லாத காலத்தில்+ நான் உண்டாக்கப்பட்டேன்.*

பொங்கி வரும் நீரூற்றுகள் இல்லாத சமயத்தில் உருவாக்கப்பட்டேன்.

25 மலைகள் நிலைநிறுத்தப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்டேன்.

குன்றுகள் உண்டாக்கப்படுவதற்கு முன்னால் உயிர்பெற்றேன்.

26 அவர் பூமியையும் அதன் வயல்வெளிகளையும்,

பூமியின் முதல் மண்கட்டிகளையும் உருவாக்குவதற்கு முன்பே நான் உருவாக்கப்பட்டேன்.

27 அவர் வானத்தைப் படைத்தபோது+ நான் இருந்தேன்.

அவர் நீர்ப்பரப்புக்கு மேலாக அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோதும்,+

28 மேகங்களை வானத்தில் நிலைநிறுத்தியபோதும்,

ஆழத்திலுள்ள ஊற்றுகளை உருவாக்கியபோதும்,

29 அவர் கடலுக்கு எல்லை வகுத்து,

அதைத் தாண்டக் கூடாது என்று அதன் தண்ணீருக்கு உத்தரவு போட்டபோதும்,+

பூமிக்கு அஸ்திவாரம் போட்டபோதும்,

30 நான் அவருக்குப் பக்கத்தில் கைதேர்ந்த கலைஞனாக இருந்தேன்.+

நித்தமும் நான் அவருக்குச் செல்லப்பிள்ளையாக இருந்தேன்.+

அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்.+

31 மனுஷர்களுக்காக அவர் படைத்த பூமியைப் பார்த்தபோது எனக்குச் சந்தோஷமாக இருந்தது.

நான் மனுஷர்கள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தேன்.

32 என் மகன்களே, இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்.

எப்போதும் என் வழியில் நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.

33 புத்திமதியைக் கேட்டு,+ ஞானம் அடையுங்கள்.

அதை ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்.

34 தினமும் விடியற்காலையில் என் வீட்டு வாசலுக்கு வந்து,*

என் கதவுக்குப் பக்கத்தில் காத்திருந்து,

நான் சொல்வதைக் கேட்பவன் சந்தோஷமானவன்.

35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைவான்,+

யெகோவாவின் கருணையையும்* பெறுவான்.

36 ஆனால், என்னை உதறித்தள்ளுகிறவன் தனக்குத்தானே கேடு வரவழைத்துக்கொள்கிறான்.

என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தை விரும்புகிறார்கள்.”+

9 உண்மையான ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டியிருக்கிறது.

அதற்கு ஏழு தூண்களைச் செய்து வைத்திருக்கிறது.

 2 அது இறைச்சியை நன்றாகச் சமைத்து வைத்திருக்கிறது.*

திராட்சமதுவைக் கலந்து வைத்திருக்கிறது.

பந்தியைத் தயார் செய்திருக்கிறது.

 3 அது தன் பணிப்பெண்களை அனுப்பி வைத்திருக்கிறது.

அந்தப் பெண்கள் நகரத்தின் உயரமான இடங்களில் நின்றுகொண்டு,+

 4 “அனுபவமில்லாதவர்களே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கும்படி செய்திருக்கிறது.

அது* புத்தியில்லாதவர்களைப் பார்த்து,

 5 “வாருங்கள், நான் தரும் உணவைச் சாப்பிடுங்கள்.

நான் கலந்து வைத்திருக்கும் திராட்சமதுவைக் குடியுங்கள்.

 6 நீங்கள் அனுபவமில்லாமல் இருந்தது போதும்!+

இனி புத்தியின்* பாதையில் முன்னேறிச் செல்லுங்கள்.+

அப்போது வாழ்வீர்கள்” என்று சொல்கிறது.

 7 கேலி செய்கிறவனைத் திருத்தப் பார்க்கிறவன் அவமானத்தைத் தேடிக்கொள்கிறான்.+

கெட்டவனைக் கண்டிக்கிறவன் தன்னைப் புண்படுத்திக்கொள்வான்.

 8 கேலி செய்கிறவனைக் கண்டிக்காதே, அவன் உன்னை வெறுப்பான்.+

ஞானமுள்ளவனைக் கண்டி, அவன் உன்னை நேசிப்பான்.+

 9 ஞானமுள்ளவனுக்கு உபதேசம் பண்ணு, அவன் இன்னும் ஞானமாக நடப்பான்.+

நீதிமானுக்குக் கற்றுக்கொடு, அவன் இன்னும் அறிவாளியாக ஆவான்.

10 யெகோவாவுக்குப் பயப்படுவதுதான் ஞானத்தைப் பெறுவதற்கு முதல் படி.+

மகா பரிசுத்தமானவரைப் பற்றித் தெரிந்துகொள்வதுதான்+ புத்தியை* பெறுவதற்கு வழி.

11 என்னால் நீ பல்லாண்டு காலம் வாழ்வாய்.+

உன் ஆயுள்காலம் கூட்டப்படும்.

12 நீ ஞானமாக நடந்துகொண்டால் உனக்குத்தான் நல்லது.

ஆனால், நீ கேலி செய்துகொண்டிருந்தால், நீயே அதன் விளைவை அனுபவிப்பாய்.

13 புத்தியில்லாத பெண் வாயடிக்கிறாள்.+

அவளுக்கு அறிவில்லை, எதுவுமே தெரிவதில்லை.

14 நகரத்தின் உயரமான இடத்திலே,

தன் வீட்டு வாசலில் அவள் உட்கார்ந்திருக்கிறாள்.+

15 தெருவில் போகிறவர்களைக் கூப்பிடுகிறாள்.

நேராகத் தங்கள் வழியில் போகிற அந்த ஆட்களைப் பார்த்து,

16 “அனுபவமில்லாதவர்களே, உள்ளே வாருங்கள்” என்று கூப்பிடுகிறாள்.

புத்தியில்லாதவர்களைப் பார்த்து,+

17 “திருட்டுத் தண்ணீர் தித்திப்பாக இருக்கும்.

திருட்டுத்தனமாகச் சாப்பிடுகிற உணவு ருசியாக இருக்கும்”+ என்று சொல்கிறாள்.

18 ஆனால், அவளுடைய வீடு பிணங்களால்* நிறைந்திருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

அவளுடைய விருந்தாளிகள் ஆழமான கல்லறையில் கிடக்கிறார்கள்+ என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

10 சாலொமோனின் நீதிமொழிகள்.+

ஞானமுள்ள மகன் தன் அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+

ஆனால், புத்தியில்லாத மகன் தன் அம்மாவை வேதனைப்படுத்துகிறான்.

 2 அநியாயமாகச் சேர்க்கிற சொத்துகளால் எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது.

ஆனால், நீதியான செயல்கள்தான் மரணத்திலிருந்து காப்பாற்றும்.+

 3 யெகோவா நீதிமானைப் பசியில் வாட விடமாட்டார்.+

ஆனால், பொல்லாதவனுக்கு அவன் ஆசைப்படுவதைத் தர மாட்டார்.

 4 சோம்பலான கைகள் வறுமையை வர வைக்கும்.+

ஆனால், கடினமாக உழைக்கும் கைகள் செல்வத்தைக் கொண்டுவரும்.+

 5 விவேகத்தோடு நடக்கிற மகன் கோடைக் காலத்தில் அறுவடை செய்கிறான்.

ஆனால், வெட்கக்கேடாக நடக்கிற மகன் அறுவடைக் காலத்தில் நன்றாகத் தூங்குகிறான்.+

 6 நீதிமானின் தலைமேல் ஆசீர்வாதங்கள் பொழிகின்றன.+

ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.

 7 நீதிமானைப் பற்றிய நினைவுகள்* ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும்.+

ஆனால், பொல்லாதவனின் பெயர் கெட்டுப்போகும்.+

 8 இதயத்தில் ஞானம் உள்ளவன் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வான்.+

ஆனால், முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+

 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடப்பான்.+

ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் மாட்டிக்கொள்வான்.+

10 கள்ளத்தனமாகக் கண் ஜாடை காட்டுகிறவன் மனவேதனையை உண்டாக்குகிறான்.+

முட்டாள்தனமாகப் பேசுகிறவன் மிதிபடுவான்.+

11 நீதிமானின் வாய் வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறது.+

ஆனால், பொல்லாதவனின் வாய் அவனுடைய வன்முறையான எண்ணங்களை மூடிமறைக்கிறது.+

12 பகை சண்டைகளைத் தூண்டிவிடுகிறது.

ஆனால், அன்பு எல்லா குற்றங்களையும் மூடிவிடுகிறது.+

13 பகுத்தறிவோடு நடப்பவனின் உதடுகளில் காணப்படுவது ஞானம்.+

ஆனால், புத்தியில்லாதவனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு.+

14 ஞானமுள்ளவர்கள் அறிவைப் பொக்கிஷம்போல் பாதுகாக்கிறார்கள்.+

ஆனால், முட்டாளின் வாய் அழிவைத் தேடித்தருகிறது.+

15 பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது.

ஆனால், ஏழைகளின் வறுமை அவர்களை அழிக்கிறது.+

16 நீதிமானின் உழைப்பு வாழ்வுக்கு வழிநடத்துகிறது.

ஆனால், பொல்லாதவனின் வருமானம் பாவத்துக்கு வழிநடத்துகிறது.+

17 புத்திமதியை ஏற்றுக்கொள்கிறவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிறான்.*

ஆனால், கண்டிக்கப்படுவதைக் காதில் வாங்காதவன் தவறாக வழிகாட்டுகிறான்.

18 உள்ளத்தில் பகையை மறைத்து வைத்திருப்பவன் பொய் பேசுகிறான்.+

வதந்திகளைப் பரப்புகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.

19 அதிகமாகப் பேசுவது பாவத்தில்தான் போய் முடியும்.+

ஆனால், தன் உதடுகளை அடக்குகிறவன் விவேகமாக நடந்துகொள்கிறான்.+

20 நீதிமானின் நாவு உயர்தரமான வெள்ளியைப் போல இருக்கிறது.+

ஆனால், பொல்லாதவனின் இதயம் செல்லாக்காசு போல இருக்கிறது.

21 நீதிமானின் உதடுகள் பலருக்கு ஊட்டமளிக்கின்றன.*+

ஆனால், முட்டாள் புத்தியில்லாததால் செத்துப்போகிறான்.+

22 யெகோவா தரும் ஆசீர்வாதம்தான் ஒருவருக்குக் கிடைக்கும் சொத்து.*+

அதனோடு சேர்த்து அவர் எந்த வேதனையையும்* கொடுக்க மாட்டார்.

23 வெட்கக்கேடாக நடப்பது முட்டாளுக்கு ஒரு விளையாட்டாக இருக்கிறது.

ஆனால், பகுத்தறிவோடு நடப்பவனிடம் ஞானம் இருக்கிறது.+

24 பொல்லாதவன் எதை நினைத்துப் பயப்படுகிறானோ அது அவனுக்கு நடக்கும்.

ஆனால், நீதிமானின் ஆசை நிறைவேற்றப்படும்.+

25 புயல் அடிக்கும்போது பொல்லாதவன் இல்லாமல் போவான்.+

ஆனால், நீதிமான் நிலையான அஸ்திவாரம்போல் இருப்பான்.+

26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்குமோ,

அப்படித்தான் சோம்பேறியும் தன் முதலாளிக்கு* இருப்பான்.

27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்.+

ஆனால், பொல்லாதவனின் வாழ்நாள் குறைக்கப்படும்.+

28 நீதிமானின் எதிர்பார்ப்பு சந்தோஷத்தைக் கொடுக்கும்.+

ஆனால், பொல்லாதவனின் நம்பிக்கை நாசமாகும்.+

29 யெகோவாவின் வழி குற்றமற்றவர்களுக்கு ஒரு கோட்டைபோல் இருக்கிறது.+

ஆனால், அக்கிரமக்காரர்களுக்கு அது அழிவைக் கொண்டுவருகிறது.+

30 நீதிமான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டான்.+

ஆனால், பொல்லாதவன் இனி பூமியில் இருக்க மாட்டான்.+

31 நீதிமானின் வாயிலிருந்து ஞானம் பிறக்கும்.

ஆனால், தாறுமாறாகப் பேசுகிற நாவு அறுத்தெறியப்படும்.

32 நீதிமானின் உதடுகளுக்கு இனிமையாகப் பேசத் தெரியும்.

ஆனால், பொல்லாதவனின் வாய் தாறுமாறாகப் பேசும்.

11 கள்ளத் தராசுகளை யெகோவா அருவருக்கிறார்.

ஆனால், சரியான எடைக்கற்களை அவர் விரும்புகிறார்.+

 2 அகங்காரம்* வந்தால் அவமானம் பின்னாலேயே வரும்.+

ஆனால், அடக்கமானவர்களிடம் ஞானம் இருக்கும்.+

 3 நேர்மையானவர்களின் உத்தம குணம் அவர்களை வழிநடத்தும்.+

ஆனால், துரோகிகளின் குறுக்குபுத்தி அவர்களை அழித்துவிடும்.+

 4 கடும் கோபத்தின் நாளில் சொத்துப்பத்துகள் உதவாது.+

ஆனால், நீதியே மரணத்திலிருந்து காப்பாற்றும்.+

 5 குற்றமற்றவர்களுடைய நீதி அவர்களுடைய பாதையை நேராக்கும்.

ஆனால், அக்கிரமக்காரர்கள் தங்களுடைய அக்கிரமத்தாலேயே விழுந்துபோவார்கள்.+

 6 நேர்மையானவர்களுடைய நீதி அவர்களைக் காப்பாற்றும்.+

ஆனால், துரோகிகள் தங்களுடைய ஆசைகளிலேயே சிக்கிக்கொள்வார்கள்.+

 7 பொல்லாதவன் சாகும்போது அவனுடைய எதிர்பார்ப்பு அழிந்துபோகிறது.

தன் பலத்தின் மேல் அவன் வைத்திருக்கிற நம்பிக்கையும் அழிந்துபோகிறது.+

 8 நீதிமான் இக்கட்டிலிருந்து காப்பாற்றப்படுகிறான்.

ஆனால், பொல்லாதவன் அந்த இக்கட்டில் மாட்டிக்கொள்கிறான்.+

 9 கடவுளைவிட்டு விலகியவன்* தன் வாயால் அடுத்தவர்களைச் சீரழிக்கிறான்.

ஆனால், நீதிமான்கள் தங்களுடைய அறிவால் தப்பித்துக்கொள்கிறார்கள்.+

10 நீதிமான்களுடைய நல்ல குணத்தால் நகரமே சந்தோஷப்படுகிறது.

ஆனால், பொல்லாதவர்கள் அழியும்போது ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது.+

11 நேர்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தால் நகரம் செழிக்கிறது.+

ஆனால், பொல்லாதவர்களுடைய வாயினால் அது சின்னாபின்னமாகிறது.+

12 புத்தியில்லாதவன் அடுத்தவர்களை அவமதிக்கிறான்.

ஆனால், பகுத்தறிவு நிறைந்தவன் அமைதியாக இருக்கிறான்.+

13 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியத்தை அம்பலப்படுத்துகிறான்.+

ஆனால், நம்பகமானவன் ரகசியத்தைக் காப்பாற்றுகிறான்.

14 திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால் மக்கள் திண்டாடுவார்கள்.

ஆனால், ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி* நிச்சயம்.+

15 முன்பின் தெரியாதவனுடைய கடனுக்குப் பொறுப்பு ஏற்கிறவன் கண்டிப்பாக அவதிப்படுவான்.+

ஆனால், கைகுலுக்கி ஒப்பந்தம் செய்யாதவன் பாதுகாப்பாக இருப்பான்.

16 கனிவான பெண் நல்ல பெயர் சம்பாதிக்கிறாள்.+

ஆனால், ஈவிரக்கமில்லாத ஆட்கள் சொத்துகளை அபகரிக்கிறார்கள்.

17 கருணையுள்ளவன்* தனக்கு நன்மை செய்துகொள்கிறான்.+

ஆனால், கொடூரமானவன் தனக்குக் கஷ்டத்தை* தேடிக்கொள்கிறான்.+

18 பொல்லாதவன் சம்பாதிக்கிற கூலியால் எந்தப் பலனும் கிடைக்காது.+

ஆனால், நீதியை விதைக்கிறவன் நல்ல பலனை அறுப்பான்.+

19 நீதியின் பக்கம் உறுதியாக நிற்கிறவன் வாழ்வு அடைவான்.+

ஆனால், அக்கிரமம் செய்ய ஓடுகிறவன் மரணம் அடைவான்.

20 கோணலான புத்தி* உள்ளவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.+

ஆனால், குற்றமற்ற வழியில் நடக்கிறவர்கள் அவருக்குப் பிரியமானவர்கள்.+

21 இது உறுதி: அக்கிரமக்காரன் தண்டனையிலிருந்து தப்பிக்க மாட்டான்.+

ஆனால், நீதிமான்களின் பிள்ளைகள் தப்பித்துக்கொள்வார்கள்.

22 புத்தியில்லாமல் நடக்கிற அழகான பெண்,

பன்றியின் மூக்கில் இருக்கிற தங்க மூக்குத்திபோல் இருக்கிறாள்.

23 நீதிமான்களின் விருப்பம் நன்மையைக் கொண்டுவரும்.+

ஆனால், பொல்லாதவர்களின் நம்பிக்கை கடும் கோபத்தைக் கொண்டுவரும்.

24 தாராளமாகக் கொடுக்கிறவன்* ஏராளமாகப் பெறுகிறான்.+

கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் காட்டுகிறவன் ஏழையாகிறான்.+

25 தாராள குணமுள்ளவன் செழிப்பான்.+

மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்.*+

26 தானியத்தைப் பதுக்கி வைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்.

ஆனால், அதை விற்கிறவனைப் புகழ்வார்கள்.

27 நல்லது செய்வதில் தீவிரமாக இருக்கிறவன் மற்றவருடைய பிரியத்தை* சம்பாதிக்கிறான்.+

ஆனால், கெட்டது செய்வதில் குறியாக இருக்கிறவனுக்குக் கெட்டதுதான் நடக்கும்.+

28 தன்னுடைய சொத்துப்பத்துகளை நம்புகிறவன் விழுந்துபோவான்.+

ஆனால், நீதிமான்கள் இளந்தளிரைப் போலத் தழைப்பார்கள்.+

29 தன் குடும்பத்துக்குத் துன்பத்தை* கொண்டுவருகிறவன் காற்றைத்தான் சொத்தாகப் பெறுவான்.+

ஞானமுள்ளவனுக்கு முட்டாள் வேலைக்காரனாக இருப்பான்.

30 நீதிமானின் செயல்கள் வாழ்வளிக்கும் மரத்தைப் போல் இருக்கின்றன.+

மற்றவர்களை நல்ல வழிக்குக் கொண்டுவருகிறவன் ஞானமுள்ளவன்.+

31 பூமியில் நீதிமானுக்கே கூலி கிடைக்கும் என்றால்,

அக்கிரமக்காரனையும் பாவியையும் பற்றிச் சொல்லவே வேண்டாம்!+

12 புத்திமதியை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்.+

ஆனால், கண்டிக்கப்படுவதை வெறுக்கிறவன் புத்தியில்லாமல் நடக்கிறான்.+

 2 நல்லவன் யெகோவாவின் பிரியத்தை* சம்பாதிக்கிறான்.

ஆனால், சதிகாரனை அவர் கண்டனம் செய்கிறார்.+

 3 அக்கிரமம் செய்வதன் மூலம் ஒருவனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.+

ஆனால், நீதிமானின் வேர் ஒருபோதும் பிடுங்கப்படாது.

 4 திறமைசாலியான மனைவி தன்னுடைய கணவனுக்குக் கிரீடம்போல் இருக்கிறாள்.+

ஆனால், வெட்கக்கேடாக நடக்கிற மனைவி அவனுக்கு எலும்புருக்கி நோய்போல் இருக்கிறாள்.+

 5 நீதிமான்களின் யோசனைகள் நியாயமானவை.

ஆனால், பொல்லாதவர்களின் ஆலோசனைகள் ஏமாற்றுபவை.

 6 பொல்லாதவர்களுடைய வார்த்தைகள் இரத்தம் சிந்தப் பதுங்கியிருக்கின்றன.+

ஆனால், நேர்மையானவர்களின் வாய் அவர்களைக் காப்பாற்றுகிறது.+

 7 கெட்டவர்கள் வீழ்த்தப்படும்போது சுவடு தெரியாமல் போய்விடுவார்கள்.

ஆனால், நீதிமான்களின் வீடு என்றென்றும் நிலைத்திருக்கும்.+

 8 விவேகத்தோடு பேசுகிறவனை எல்லாரும் புகழ்வார்கள்.+

ஆனால், கோணலான புத்தி* உள்ளவனை எல்லாரும் கேவலமாக நடத்துவார்கள்.+

 9 சாப்பாட்டுக்கு வழியில்லாமல் வாழ்ந்துகொண்டு வீண் பெருமையடிக்கிற ஒருவனைவிட,

வீண் பகட்டு இல்லாமல் வாழ்ந்துகொண்டு வேலைக்காரனை வைத்திருக்கிறவன் மேல்.+

10 நீதிமான் தன் வீட்டு விலங்குகளை நன்றாகக் கவனித்துக்கொள்கிறான்.+

ஆனால், பொல்லாதவன் காட்டுகிற இரக்கம்கூட கொடூரமாகத்தான் இருக்கிறது.

11 தன்னுடைய நிலத்தில் பயிரிடுகிறவன் திருப்தியாகச் சாப்பிடுவான்.+

ஆனால், வீணான காரியங்களுக்குப் பின்னால் போகிறவன் புத்தியில்லாதவன்.

12 அக்கிரமக்காரர்கள் கொள்ளையடித்தவற்றைப் பார்த்துப் பொல்லாதவன் பொறாமைப்படுகிறான்.

ஆனால், நீதிமான் நன்றாக வேரூன்றிய மரத்தைப் போல் கனி கொடுக்கிறான்.

13 அக்கிரமக்காரன் தன்னுடைய பாவமுள்ள பேச்சினால் சிக்கிக்கொள்கிறான்.+

ஆனால், நீதிமான் வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்கிறான்.

14 நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவன் அதன் பலனைப் பார்த்துத் திருப்தியடைகிறான்.+

அவனுடைய கைகளின் உழைப்பு அவனுக்குப் பலன் தரும்.

15 முட்டாள் தன்னுடைய பாதை சரி என்று நினைக்கிறான்.+

ஆனால், ஞானமுள்ளவன் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறான்.+

16 முட்டாள் சட்டென்று* எரிச்சலைக் காட்டிவிடுகிறான்.+

ஆனால், சாமர்த்தியசாலி அவமரியாதையைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுகிறான்.

17 உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உள்ளதை உள்ளபடியே சொல்கிறான்.

ஆனால், பொய் சாட்சி சொல்கிறவன் உண்மைக்கு மாறாகப் பேசுகிறான்.

18 யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.

ஆனால், ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்.+

19 உண்மை பேசுகிற உதடுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.+

ஆனால், பொய் பேசுகிற நாவு நொடிப்பொழுதுதான் இருக்கும்.+

20 சதித்திட்டம் போடுகிறவர்களின் உள்ளத்தில் இருப்பது கள்ளத்தனம்.

ஆனால், சமாதானத்துக்காகப் பாடுபடுகிறவர்களுக்குக் கிடைப்பது சந்தோஷம்.+

21 நீதிமானுக்கு எந்தக் கெடுதலும் வராது.+

ஆனால், பொல்லாதவனின் வாழ்க்கையில் சோகங்கள் நிறைந்திருக்கும்.+

22 பொய் பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார்.+

ஆனால், உண்மையாக நடக்கிறவர்கள்மேல் பிரியமாக இருக்கிறார்.

23 சாமர்த்தியசாலி தன் அறிவைக் காட்டிக்கொள்ளாமல் இருக்கிறான்.

ஆனால், முட்டாள் தன் உள்ளத்திலுள்ள முட்டாள்தனத்தை உளறிக்கொட்டிவிடுகிறான்.+

24 கடினமாக உழைக்கும் கைகள் ஆட்சி செய்யும்.+

ஆனால், சோம்பலான கைகள் அடிமை வேலைதான் செய்யும்.+

25 கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும்.*+

ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.+

26 நீதிமான் தன்னுடைய மேய்ச்சல் நிலங்களைக் கவனமாகத் தேடுகிறான்.

ஆனால், பொல்லாதவனின் பாதை அவனை வழிதவறிப்போக வைக்கிறது.

27 சோம்பேறி எதையும் வேட்டையாடிப் பிடிப்பது இல்லை.+

ஆனால், கடின உழைப்பு ஒருவனுக்கு அருமையான பொக்கிஷமாக இருக்கிறது.

28 நீதியின் பாதை வாழ்வுக்கு வழிநடத்தும்.+

அந்தப் பாதையில் மரணம் இல்லை.

13 ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவின் புத்திமதியை ஏற்றுக்கொள்கிறான்.+

ஆனால், கேலி செய்கிறவன் எச்சரிப்பை* காதில் வாங்குவது இல்லை.+

 2 நல்ல வார்த்தைகளைப் பேசுகிறவன் நல்ல பலனை அனுபவிப்பான்.+

ஆனால், துரோகியின் மனம் வன்முறையில் இறங்கவே ஆசைப்படும்.

 3 தன் வாய்க்குக் காவல் போடுகிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+

ஆனால், தன் வாய்க்குக் காவல் போடாதவன் நாசமாவான்.+

 4 சோம்பேறிக்கு நிறைய ஆசைகள் இருந்தாலும், ஆசைப்பட்ட எதுவும் அவனுக்குக் கிடைப்பதில்லை.+

ஆனால், கடினமாக உழைப்பவனுக்கு எல்லாமே கிடைக்கும்.*+

 5 நீதிமான் பொய்களை வெறுக்கிறான்.+

ஆனால், பொல்லாதவனின் செயல்கள் அவமானத்தையும் தலைகுனிவையும் கொண்டுவருகின்றன.

 6 நேர்மையாக நடக்கிறவனை நீதி பாதுகாக்கிறது.+

ஆனால், பாவியை அக்கிரமம் அழித்துவிடுகிறது.

 7 ஒன்றுமே இல்லாவிட்டாலும் பணக்காரன்போல் காட்டிக்கொள்கிறவன் உண்டு.+

ஏராளமாக இருந்தாலும் ஏழைபோல் காட்டிக்கொள்கிறவனும் உண்டு.

 8 பணக்காரன் பணம் கொடுத்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறான்.+

ஆனால், ஏழைக்கு மிரட்டல்கூட வருவதில்லை.+

 9 நீதிமானின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசும்.+

ஆனால், பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+

10 அகங்காரமாக* நடப்பது சண்டையில்தான் கொண்டுபோய் விடும்.+

ஆனால், ஆலோசனை கேட்கிறவர்களிடம்* ஞானம் இருக்கும்.+

11 திடீர்ப் பணக்காரனின் சொத்துகள் கரைந்துபோகும்.+

ஆனால், சிறுகச் சிறுகச் சேர்க்கிறவனின் சொத்துகள் பெருகும்.

12 எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்குத் தாமதமானால் நெஞ்சம் நொந்துபோகும்.+

ஆனால், ஆசை நிறைவேறும்போது அது வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கும்.+

13 அறிவுரையை அலட்சியம் செய்கிறவன் அதன் விளைவுகளை அனுபவிப்பான்.+

ஆனால், கட்டளையை மதித்து நடக்கிறவன் பலன் பெறுவான்.+

14 ஞானமுள்ளவனின் போதனை* வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.+

மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.

15 மிகுந்த விவேகத்தோடு நடந்துகொண்டால் மற்றவர்களின் பிரியத்தைச் சம்பாதிக்கலாம்.

ஆனால், துரோகிகளின் பாதை கரடுமுரடாக இருக்கிறது.

16 சாமர்த்தியசாலி அறிவோடு நடந்துகொள்கிறான்.+

ஆனால், முட்டாள் தன் முட்டாள்தனத்தைக் காட்டிவிடுகிறான்.+

17 பொல்லாத தூதுவன் பிரச்சினைகளைக் கொண்டுவருகிறான்.+

ஆனால், உண்மையுள்ள தூதுவன் நன்மைகளைக் கொண்டுவருகிறான்.+

18 புத்திமதியை ஒதுக்கித்தள்ளுகிறவனுக்கு வறுமையும் அவமானமும்தான் மிஞ்சும்.

ஆனால், கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறவனுக்கு மதிப்புக் கிடைக்கும்.+

19 ஆசை நிறைவேறுவது இதயத்துக்கு இனிதாக இருக்கிறது.+

ஆனால், தவறான பாதையைவிட்டு விலகுவது முட்டாளுக்கு வெறுப்பாக இருக்கிறது.+

20 ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்.+

ஆனால், முட்டாள்களோடு பழகுகிறவன் நாசமடைவான்.+

21 பாவிகளைத் துன்பம் துரத்திக்கொண்டே இருக்கும்.+

ஆனால், நீதிமான்களுக்குக் கிடைக்கும் பலன் வளமான வாழ்வு.+

22 நல்லவன் தன் பேரப்பிள்ளைகளுக்குச் சொத்துகளை விட்டுச்செல்கிறான்.

ஆனால், பாவியின் சொத்துகள் நீதிமானுக்காகச் சேர்த்து வைக்கப்படும்.+

23 ஏழையின் வயல் நன்றாக விளையும்.

ஆனால், அநியாயத்தின் காரணமாக அது* வாரிக்கொண்டு போகப்படலாம்.

24 பிரம்பைக் கையில் எடுக்காதவன்* தன் மகனை வெறுக்கிறான்.+

ஆனால், மகனை நேசிக்கிறவன் அவனை அக்கறையோடு* கண்டித்துத் திருத்துகிறான்.+

25 நீதிமான் வயிறார சாப்பிடுகிறான்.+

ஆனால், பொல்லாதவனின் வயிறு காய்ந்து கிடக்கிறது.+

14 ஞானமுள்ள பெண் தன் குடும்பத்தைக் கட்டிக்காக்கிறாள்.+

ஆனால், புத்தியில்லாத பெண் அதைக் குட்டிச்சுவராக்குகிறாள்.

 2 நேர்மையாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறான்.

ஆனால், குறுக்கு வழியில் போகிறவன் அவரை அவமதிக்கிறான்.

 3 முட்டாளின் வாயிலிருந்து வரும் ஆணவப் பேச்சு பிரம்புபோல் இருக்கும்.

ஆனால், ஞானமுள்ளவர்களின் உதடுகள் அவர்களைப் பாதுகாக்கும்.

 4 மாடுகள் இல்லையென்றால் தொழுவம் சுத்தமாக இருக்கும்.

ஆனால், காளையின் பலத்தால் அறுவடை அமோகமாக இருக்கும்.

 5 உண்மையான சாட்சி பொய் பேச மாட்டான்.

ஆனால், பொய் சாட்சி மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.+

 6 கேலி செய்கிறவன் ஞானத்தை எவ்வளவுதான் தேடினாலும் கண்டுபிடிக்க மாட்டான்.

ஆனால், புரிந்துகொள்ளும் திறன் உள்ளவனுக்கு அறிவு எளிதில் கிடைக்கும்.+

 7 முட்டாளைவிட்டுத் தூர விலகு.

ஏனென்றால், அவன் எதையும் அறிவோடு பேச மாட்டான்.+

 8 சாமர்த்தியமாக நடக்கிறவன் தான் போகும் பாதையை ஞானத்தால் புரிந்துகொள்கிறான்.

ஆனால், முட்டாள்கள் தங்களுடைய முட்டாள்தனத்தால் ஏமாந்துபோகிறார்கள்.*+

 9 முட்டாள்கள் குற்றம் செய்துவிட்டுக் கவலையில்லாமல் சிரிக்கிறார்கள்.+

ஆனால், நேர்மையானவர்கள் சமரசமாவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

10 இதயத்திலுள்ள வேதனை இதயத்துக்குத்தான் தெரியும்.

அதன் சந்தோஷத்தை வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியாது.

11 பொல்லாதவர்களின் வீடு அழிந்துபோகும்.+

ஆனால், நேர்மையானவர்களின் கூடாரம் செழிக்கும்.

12 மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.+

ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+

13 ஒருவன் வெளியே சிரித்தாலும் உள்ளத்தில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

ஒருவனுடைய சந்தோஷம் துக்கத்தில் போய் முடியலாம்.

14 ஒருவனுடைய உள்ளம் தாறுமாறாகப் போகும்போது அதன் விளைவுகளை அவன் சந்திப்பான்.+

ஆனால், நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்.+

15 விவரம் தெரியாதவன்* யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான்.

ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.+

16 ஞானமுள்ளவன் ஜாக்கிரதையாக நடந்து, கெட்ட வழியைவிட்டு விலகுகிறான்.

ஆனால், முட்டாள் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு கண்மூடித்தனமாக* நடந்துகொள்கிறான்.

17 சட்டென்று கோபப்படுகிறவன் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறான்.+

ஆனால், எதையும் யோசித்து செய்கிறவன் வெறுக்கப்படுகிறான்.

18 விவரம் தெரியாதவர்கள்* முட்டாள்தனமாக நடந்துகொள்வார்கள்.

ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவர்கள் அறிவு என்ற கிரீடத்தைச் சூடியிருப்பார்கள்.+

19 நல்லவர்களுக்கு முன் கெட்டவர்கள் தலைவணங்க வேண்டியிருக்கும்.

நீதிமான்களின் வாசலில் பொல்லாதவர்கள் தலைவணங்குவார்கள்.

20 ஏழையை அக்கம்பக்கத்தார்கூட வெறுக்கிறார்கள்.+

ஆனால், பணக்காரனுக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.+

21 அடுத்தவரை அவமதிக்கிறவன் பாவம் செய்கிறான்.

ஆனால், எளியவர்களுக்குக் கரிசனை காட்டுகிறவன் சந்தோஷமானவன்.+

22 சதித்திட்டம் போடுகிறவர்கள் வழிதவறிப் போய்விடுவார்கள்.

ஆனால், நல்லது செய்யப் பாடுபடுகிறவர்களுக்கு மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் காட்டப்படும்.+

23 எல்லா விதமான கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும்.

ஆனால், வெட்டிப் பேச்சு வறுமையைக் கொண்டுவரும்.+

24 ஞானமுள்ளவர்களின் கிரீடம் அவர்களுடைய செல்வம்.

ஆனால், முட்டாள்களின் முட்டாள்தனத்தால் விளைவது இன்னுமதிக முட்டாள்தனமே.+

25 உண்மையாகச் சாட்சி சொல்கிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்.

ஆனால், ஏமாற்றுக்காரன் மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறான்.

26 யெகோவாமேல் இருக்கும் பயம் ஒருவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையைத் தரும்.+

அது அவனுடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாக இருக்கும்.+

27 யெகோவாமேல் இருக்கும் பயம் வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.

மரணத்தின் கண்ணிகளிலிருந்து அது ஒருவனைக் காப்பாற்றுகிறது.

28 மக்கள்தொகை உயர்ந்தால் ராஜாவின் மகிமை கூடும்.+

மக்கள்தொகை குறைந்தால் அவனுடைய ஆட்சி கவிழும்.

29 பகுத்தறிவு நிறைந்தவன் சட்டெனக் கோபப்பட மாட்டான்.+

ஆனால், பொறுமை இல்லாதவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வான்.+

30 அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்.*

ஆனால், பொறாமை எலும்புருக்கி.+

31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+

ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+

32 பொல்லாதவன் தன்னுடைய அக்கிரமத்தாலேயே வீழ்ச்சி அடைவான்.

ஆனால், நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே அடைக்கலம் காண்பான்.+

33 புத்தி* உள்ளவரின் இதயத்தில் ஞானம் அமைதியாகக் குடியிருக்கும்.+

ஆனால், முட்டாள் தனக்கு ஞானமாகத் தோன்றுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறான்.

34 நீதி ஒரு தேசத்தின் மதிப்பை உயர்த்தும்.+

ஆனால், பாவம் குடிமக்களின் மதிப்பைக் கெடுக்கும்.

35 விவேகமாக நடக்கிற ஊழியன்மேல் ராஜா பிரியமாக இருக்கிறார்.+

ஆனால், வெட்கக்கேடாக நடக்கிறவனைப் பார்த்து அவர் கோபத்தில் கொதிக்கிறார்.+

15 சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும்.+

ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.+

 2 ஞானமுள்ளவர்களின் நாவு அறிவோடு பேசுகிறது.*+

ஆனால், முட்டாள்களின் வாய் முட்டாள்தனமாகவே பேசுகிறது.

 3 யெகோவாவின் கண்கள் எங்கும் பார்க்கின்றன.

நல்லவர்களையும் பார்க்கின்றன, கெட்டவர்களையும் பார்க்கின்றன.+

 4 சாந்தமான நாவு வாழ்வளிக்கும் மரம்போல் இருக்கிறது.+

ஆனால், பொய்புரட்டு மனதை நொறுக்கிவிடுகிறது.

 5 முட்டாள் தன் அப்பாவின் புத்திமதியை அலட்சியம் செய்கிறான்.+

ஆனால், சாமர்த்தியசாலி கண்டிப்பை ஏற்றுக்கொள்கிறான்.+

 6 நீதிமானின் வீட்டில் ஏராளமான பொக்கிஷம் இருக்கிறது.

ஆனால், பொல்லாதவனின் வருமானம் அவனுக்குக் கஷ்டத்தைத்தான் கொடுக்கிறது.+

 7 ஞானியின் உதடுகள் அறிவை வாரி இறைக்கும்.+

ஆனால், முட்டாளின் இதயம் அப்படிச் செய்யாது.+

 8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+

ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+

 9 பொல்லாதவன் போகிற பாதையை யெகோவா அருவருக்கிறார்.+

ஆனால், நீதியை நாடுகிறவனை அவர் நேசிக்கிறார்.+

10 நேர்வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி கசப்பாக இருக்கிறது.*+

ஆனால், கண்டிப்பை வெறுக்கிறவன் உயிரை இழப்பான்.+

11 யெகோவாவின் கண்கள் கல்லறையையும் புதைகுழியையும்கூட ஊடுருவிப் பார்க்கிறதென்றால்,+

மனிதர்களின் இதயத்தைப் பார்க்காமல் இருக்குமா?+

12 கேலி செய்கிறவன் தன்னைக் கண்டிப்பவரை வெறுக்கிறான்.+

ஞானமுள்ளவர்களிடம் அவன் ஆலோசனை கேட்க மாட்டான்.+

13 உள்ளத்தின் மகிழ்ச்சியால் முகம் மலர்ச்சி அடையும்.

ஆனால், உள்ளத்தின் வேதனையால் மனம் நொந்துபோகும்.+

14 புரிந்துகொள்ளும் இதயம் அறிவைத் தேடும்.+

ஆனால், முட்டாளின் வாய் முட்டாள்தனத்தை நாடும்.*+

15 கஷ்டத்தில் தவிப்பவனுக்கு எல்லா நாளும் திண்டாட்டம்தான்.+

ஆனால், இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு* எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்.+

16 ஏராளமான சொத்துகளை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல்* வாழ்வதைவிட,+

கொஞ்சத்தை வைத்துக்கொண்டு யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே மேல்.+

17 வெறுப்போடு பரிமாறப்படும் அருமையான இறைச்சியைவிட,*+

அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்.+

18 எளிதில் கோபப்படுகிறவன் சண்டையைக் கிளப்புகிறான்.+

ஆனால், சீக்கிரத்தில் கோபப்படாதவன் வாக்குவாதத்தைத் தீர்க்கிறான்.+

19 சோம்பேறியின் வழி முள்வேலியைப் போல் இருக்கிறது.+

ஆனால், நேர்மையானவனின் பாதை சீரான நெடுஞ்சாலையைப் போல் இருக்கிறது.+

20 ஞானமுள்ள மகன் தன்னுடைய அப்பாவைச் சந்தோஷப்படுத்துகிறான்.+

ஆனால், புத்தியில்லாதவன் தன்னுடைய அம்மாவை அவமதிக்கிறான்.+

21 புத்தியில்லாதவன் முட்டாள்தனமாக நடப்பதில் சந்தோஷப்படுகிறான்.+

ஆனால், பகுத்தறிவு உள்ளவன் நேரான பாதையில் நடக்கிறான்.+

22 கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும்.

ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+

23 சரியான பதிலைச் சொல்கிறவனுக்குச் சந்தோஷம் கிடைக்கும்.+

சரியான சமயத்தில் சொல்லப்படுகிற வார்த்தை எவ்வளவு அருமையானது!+

24 வாழ்வின் வழி விவேகமுள்ளவனை முன்னேறிச் செல்ல வைக்கிறது.+

அவனைக் கல்லறைக்குப் போகாதபடி காப்பாற்றுகிறது.+

25 கர்வமுள்ளவர்களின் வீட்டை யெகோவா தரைமட்டமாக்குவார்.+

ஆனால், விதவைப் பெண்ணுடைய நிலத்தின் எல்லையைப் பாதுகாப்பார்.+

26 பொல்லாதவன் போடும் சதித்திட்டங்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவை.+

ஆனால், இனிய வார்த்தைகள் அவருக்குப் பிரியமானவை.+

27 குறுக்கு வழியில் சம்பாதிப்பவன் தன் குடும்பத்துக்குப் பிரச்சினையை* கொண்டுவருகிறான்.+

ஆனால், லஞ்சத்தை வெறுப்பவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.+

28 நீதிமானின் இதயம் பதில் சொல்வதற்கு முன்னால் யோசிக்கும்.*+

ஆனால், பொல்லாதவனின் வாய் கெட்ட விஷயங்களை உளறிக்கொட்டும்.

29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.

ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+

30 பிரகாசமான கண்கள்* இதயத்தைப் பூரிப்பாக்கும்.

நல்ல செய்தி எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும்.+

31 உயிர்காக்கும் கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன்,

ஞானமுள்ளவர்கள் மத்தியில் குடியிருக்கிறான்.+

32 புத்திமதியை ஏற்றுக்கொள்ளாதவன் தன் உயிரை அலட்சியப்படுத்துகிறான்.+

ஆனால், கண்டிப்பைக் கேட்டு நடக்கிறவன் புத்தியை* சம்பாதிக்கிறான்.+

33 யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானமாக நடக்க பயிற்சி அளிக்கும்.+

மனத்தாழ்மையாக இருந்தால் மதிப்பு மரியாதை கிடைக்கும்.+

16 ஒருவன் தன் இதயத்தில் சில விஷயங்களை யோசித்து* வைக்கலாம்.

ஆனால், அவன் சொல்கிற பதில்* யெகோவாவிடமிருந்தே வருகிறது.+

 2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+

ஆனால், அவனுடைய உள்நோக்கத்தை யெகோவா ஆராய்கிறார்.+

 3 நீ எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடு.+

அப்போது, உன் திட்டங்கள் வெற்றி பெறும்.

 4 யெகோவா எல்லாவற்றையும் தன்னுடைய நோக்கத்தின்படி நடக்க வைத்திருக்கிறார்,

பொல்லாதவனையும் அழிவு நாளுக்கென்று விட்டு வைத்திருக்கிறார்.+

 5 இதயத்தில் கர்வமுள்ள எவனையும் யெகோவா அருவருக்கிறார்.+

தண்டனையிலிருந்து அவன் தப்பிக்கவே முடியாது.

 6 மாறாத அன்பாலும் உண்மைத்தன்மையாலும் குற்றம் மன்னிக்கப்படும்.+

யெகோவாவுக்குப் பயப்படுகிறவன் கெட்டதைவிட்டு விலகுகிறான்.+

 7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,

அவனுடைய எதிரிகள்கூட அவனிடம் சமாதானமாவதற்கு அவர் வழிசெய்வார்.+

 8 அநியாயம் செய்து கைநிறைய சம்பாதிப்பதைவிட,+

நியாயமான வழியில் கொஞ்சம் சம்பாதிப்பதே மேல்.+

 9 எந்த வழியில் போக வேண்டுமென்று ஒருவன் தன் உள்ளத்தில் திட்டம் போடலாம்.

ஆனால், யெகோவாதான் அவனுடைய காலடிகளுக்கு வழிகாட்டுகிறார்.+

10 ராஜாவின் வாயிலிருந்து கடவுளின் தீர்ப்புதான் வர வேண்டும்.+

ராஜா ஒருநாளும் நியாயத்தைப் புரட்டக் கூடாது.+

11 சரியான அளவுகோல்களும் தராசுகளும் யெகோவாவிடமிருந்து வந்தவை.

பையில் இருக்கிற எடைக்கற்களெல்லாம் அவரால் உண்டானவை.+

12 அக்கிரமங்களை ராஜாக்கள் அருவருக்கிறார்கள்.+

ஏனென்றால், அவர்களுடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படுகிறது.+

13 நீதியான பேச்சை ராஜாக்கள் விரும்புகிறார்கள்.

நேர்மையாகப் பேசுகிறவர்களை அவர்கள் நேசிக்கிறார்கள்.+

14 ராஜாவின் கடும் கோபம் மரணத்தின் தூதுவனைப் போல் இருக்கிறது.+

ஆனால், ஞானமுள்ளவன் அதைத் தணிக்கிறான்.*+

15 ராஜாவின் முகம் பிரகாசிக்கும்போது, ஒருவருடைய வாழ்க்கை பிரகாசமாகிறது.

அவர் காட்டுகிற கருணை வசந்த கால மழைமேகம்போல் இருக்கிறது.+

16 தங்கத்தைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு மேலானது!+

வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட புத்தியை* சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!+

17 நேர்வழியில் நடக்கிறவன் தவறான வழியைத் தவிர்க்கிறான்.

தன் வழியைக் காத்துக்கொள்கிறவன் தன் உயிரைப் பாதுகாக்கிறான்.+

18 அகம்பாவம் வந்தால் அழிவு வரும்.

ஆணவம் வந்தால் அடிசறுக்கும்.+

19 தலைக்கனம் பிடித்தவர்களோடு சேர்ந்து கொள்ளைப்பொருளைப் பங்குபோடுவதைவிட,

தாழ்மையானவர்களோடு* சேர்ந்து மனத்தாழ்மையாக இருப்பது நல்லது.+

20 விவேகத்தோடு ஒரு காரியத்தைச் செய்கிறவன் வெற்றி* பெறுவான்.

யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.

21 இதயத்தில் ஞானம் உள்ளவன் புத்தி* உள்ளவன் என்று சொல்லப்படுவான்.+

கனிவாக* பேசுகிறவனுக்கு மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமை இருக்கிறது.+

22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களுடைய விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றுபோல் இருக்கிறது.

ஆனால், முட்டாள்கள் தங்கள் முட்டாள்தனத்தாலேயே கண்டிக்கப்படுகிறார்கள்.

23 ஞானமுள்ளவனின் இதயம் அவனை விவேகமாகப் பேச வைக்கிறது.+

பக்குவமாகப் பேசி மற்றவர்களைச் சம்மதிக்க வைக்கும் திறமையைக் கொடுக்கிறது.

24 இனிய வார்த்தைகள் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்போல் இருக்கின்றன.

மனதுக்கு இனிமையாகவும் எலும்புகளுக்கு அருமருந்தாகவும் இருக்கின்றன.+

25 மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு.

ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.+

26 வயிற்றுப் பசிதான் ஓர் உழைப்பாளியைப் பாடுபட்டு உழைக்கச் செய்கிறது.

அதுதான்* அவனை வேலை செய்யத் தூண்டுகிறது.+

27 உதவாக்கரை மனுஷன் கெட்ட காரியங்களைக் கிளறி எடுக்கிறான்.+

அவனுடைய பேச்சு சுட்டுப்பொசுக்கும் நெருப்புபோல் இருக்கிறது.+

28 சதிகாரன் பிரிவினைகளை உண்டாக்குகிறான்.+

இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+

29 வன்முறைக்காரன் அடுத்தவனுக்கு ஆசைகாட்டி

அவனைத் தவறான வழிக்குக் கொண்டுபோகிறான்.

30 அவன் கண்ணால் ஜாடை செய்து சதித்திட்டம் தீட்டுகிறான்.

உதடுகளைக் கடித்துக்கொண்டு திட்டத்தை முடிக்கிறான்.

31 நீதியான வழியில் நடப்பவர்களுக்கு+

நரைமுடி அழகான* கிரீடம்.+

32 பலசாலியைவிட சட்டெனக் கோபப்படாதவனே+ மேலானவன்.

நகரத்தைக் கைப்பற்றுகிறவனைவிட கோபத்தைக் கட்டுப்படுத்துகிறவனே மேலானவன்.+

33 மடியில் குலுக்கல் போடப்படலாம்.+

ஆனால், எல்லா முடிவுகளும் யெகோவாவிடமிருந்தே வருகின்றன.+

17 சண்டை நிறைந்த வீட்டில் பெரிய விருந்து சாப்பிடுவதைவிட,+

சமாதானம் நிறைந்த* வீட்டில் காய்ந்த ரொட்டியைச் சாப்பிடுவதே மேல்.+

 2 விவேகமாக நடக்கும் வேலைக்காரன் வெட்கக்கேடாக நடக்கும் மகனை* ஆளுவான்.

எஜமானின் மகன்களோடு அவனும் சொத்தில் ஒரு பங்கைப் பெறுவான்.

 3 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை.+

ஆனால், இதயத்தை ஆராய்கிறவர் யெகோவா.+

 4 புண்படுத்துகிற பேச்சைப் பொல்லாதவன் கவனித்துக் கேட்கிறான்.

தீய பேச்சை ஏமாற்றுக்காரன் காதுகொடுத்துக் கேட்கிறான்.+

 5 ஏழையைக் கிண்டல் செய்கிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+

அடுத்தவன் படும் கஷ்டத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறவன் தண்டனைக்குத் தப்ப மாட்டான்.+

 6 வயதானவர்களுக்குக் கிரீடம் அவர்களுடைய பேரன்கள்.*

மகன்களுக்கு* பெருமை அவர்களுடைய அப்பாக்கள்.*

 7 சரியான பேச்சு* முட்டாளுக்குப் பொருந்துவதே இல்லை.+

அப்படியிருக்கும்போது, பொய்யான பேச்சு ராஜாவுக்கு* கொஞ்சமாவது பொருந்துமா?+

 8 அன்பளிப்பு கொடுக்கிறவனுக்கு அது விலைமதிப்புள்ள* கல்லைப் போல இருக்கிறது.+

அவன் போகும் இடமெல்லாம் அது அவனுக்கு வெற்றி தேடித்தருகிறது.+

 9 குற்றத்தை மன்னிக்கிறவன்* அன்பு காட்டுகிறான்.+

ஆனால், அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பவன் உயிர் நண்பர்களைக்கூட பிரித்துவிடுகிறான்.+

10 முட்டாளை நூறு தடவை அடிப்பதைவிட,+

புத்தி* உள்ளவனை ஒரு தடவை எச்சரித்தாலே* நன்றாக உறைக்கும்.+

11 கெட்டவன் எப்போதும் கலகத்தைத்தான் விரும்புவான்.

ஆனால், அவனைத் தண்டிக்க கொடூரமான தூதுவன் அனுப்பப்படுவான்.+

12 அறிவில்லாமல் நடக்கும் முட்டாளிடம் மாட்டிக்கொள்வதைவிட,

குட்டிகளைப் பறிகொடுத்த கரடியிடம் மாட்டிக்கொள்வது எவ்வளவோ மேல்.+

13 நன்மை செய்தவனுக்கு யாராவது தீமை செய்தால்,

தீமை அவன் வீட்டைவிட்டு நீங்கவே நீங்காது.+

14 சண்டையை ஆரம்பிப்பது அணையைத் திறந்துவிடுவதுபோல் இருக்கிறது.

வாக்குவாதம் வெடிப்பதற்கு முன் அந்த இடத்தைவிட்டுப் போய்விடு.+

15 குற்றவாளியை விடுதலை செய்கிறவனும் நிரபராதியைத் தண்டிப்பவனும்+

யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.

16 முட்டாளுக்கு ஞானத்தைச் சம்பாதிக்க வழியிருந்து என்ன பிரயோஜனம்?

அதைச் சம்பாதிக்கிற எண்ணம்* அவனுக்கு இல்லையே.+

17 உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.+

கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.+

18 அடுத்தவனுடைய கடனுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு,*

அவனுக்காகக் கைகுலுக்கி ஒப்பந்தம் செய்கிறவன் புத்தியில்லாதவன்.+

19 வாக்குவாதம் செய்ய விரும்புகிறவன் குற்றம் செய்ய விரும்புகிறான்.+

தன் நுழைவாசலை உயரமாகக் கட்டுகிறவன் அழிவைத் தேடிக்கொள்கிறான்.+

20 கோணலான புத்தி* உள்ளவன் எதிலும் வெற்றிபெற மாட்டான்.+

பொய் புரட்டு பேசுகிறவன் நாசமாவான்.

21 புத்தியில்லாத பிள்ளையைப் பெற்றவன் துக்கப்படுவான்.

அறிவில்லாத பிள்ளையைப் பெற்றவன் சந்தோஷத்தைப் பறிகொடுப்பான்.+

22 சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.+

ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.*+

23 பொல்லாதவன் ரகசியமாய் லஞ்சம் வாங்கி,

நியாயத்தைப் புரட்டுகிறான்.+

24 பகுத்தறிவு உள்ளவன் ஞானத்தைப் பெறுவதிலேயே கண்ணாக இருக்கிறான்.

ஆனால், புத்தி இல்லாதவனின் கண்கள் நாலாபக்கமும் அலைபாய்கின்றன.+

25 புத்தியில்லாத மகன் தன் அப்பாவின் மனதைத் துக்கப்படுத்துகிறான்,

தன் அம்மாவின் உள்ளத்தை வேதனைப்படுத்துகிறான்.+

26 நீதிமானைத் தண்டிப்பது* நல்லதல்ல.

மதிப்பு மரியாதை உள்ளவர்களை அடிப்பது சரியல்ல.

27 அறிவுள்ளவன் அளவோடு பேசுவான்.+

பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்.+

28 பேசாமல் இருந்தால் முட்டாள்கூட அறிவாளியாகக் கருதப்படுவான்.

வாய் திறக்காமல் இருப்பவன் பகுத்தறிவு உள்ளவனாகக் கருதப்படுவான்.

18 தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் தன்னுடைய* ஆசைகளையே தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான்.

எல்லா ஞானத்தையும்* அவன் ஒதுக்கித்தள்ளுகிறான்.

 2 புத்தியில்லாதவன் எதையும் புரிந்துகொள்ள விரும்ப மாட்டான்.

தன்னுடைய உள்ளத்தில் இருப்பதைத்தான் சொல்ல விரும்புவான்.+

 3 பொல்லாதவன் வரும்போது அவமதிப்பும் வரும்.

அவமரியாதையோடு அவமானமும் வரும்.+

 4 ஒருவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன.+

ஞானத்தின் ஊற்று, பாய்ந்தோடுகிற நீரோடைபோல் இருக்கிறது.

 5 பொல்லாதவனுக்குப் பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

நிரபராதிக்கு நியாயம் வழங்காமல் இருப்பது சரியல்ல.+

 6 முட்டாளின் பேச்சினால் சண்டைகள்தான் வரும்.+

அவன் வாயைத் திறந்தால் அடிதான் விழும்.+

 7 முட்டாள் தன் வாயாலேயே கெட்டுப்போகிறான்.+

அவனுடைய பேச்சு அவனுடைய உயிருக்கே உலை வைக்கிறது.

 8 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.+

அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+

 9 வேலையில் சோம்பலாக இருக்கிறவன்,

நாசம் உண்டாக்குகிறவனுக்குச் சகோதரனாக* இருக்கிறான்.+

10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+

நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+

11 பணக்காரனின் சொத்து அவனுக்கு மதில் சூழ்ந்த நகரம்போல் இருக்கிறது.

அதை ஒரு கோட்டைச் சுவர்போல் அவன் கற்பனை செய்துகொள்கிறான்.+

12 ஆணவமான இதயம் இருந்தால் அழிவு வரும்.+

மனத்தாழ்மை இருந்தால் மகிமை வரும்.+

13 ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம்.

அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.+

14 மனதில் தைரியம் இருக்கும்போது நோயைத் தாங்கிக்கொள்ளலாம்.+

ஆனால், மனம் உடைந்துபோகும்போது யாரால் தாங்கிக்கொள்ள முடியும்?+

15 புத்தி* உள்ளவனின் இதயம் அறிவைச் சம்பாதிக்கும்.+

ஞானமுள்ளவனின் காது அறிவைத் தேடும்.

16 அன்பளிப்பு கொடுக்கிறவனுக்குப் பல வாய்ப்புகள் திறக்கின்றன.+

பெரிய மனிதர்களைப் பார்த்துப் பேச வாய்ப்புகள் கிடைக்கின்றன.

17 முதலில் வாதாடுகிறவனின் பக்கம்தான் நியாயம் இருப்பதுபோல் தெரியும்.+

ஆனால், எதிர்க்கட்சிக்காரன் வந்து குறுக்கு விசாரணை செய்யும்போது உண்மை புரியும்.+

18 குலுக்கல் போட்டால் சச்சரவுகள் தீரும்,+

எதிரும் புதிருமாக இருப்பவர்களின் சண்டைகள் முடிவுக்கு வரும்.

19 மதில் சூழ்ந்த நகரத்தைப் பிடிப்பதைவிட புண்பட்ட சகோதரனை* சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம்.+

வாக்குவாதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல் பலமாக இருக்கும்.+

20 ஒருவன் பேசும் வார்த்தைகள் அவனுடைய வயிற்றை நிரப்பும் உணவுபோல் இருக்கின்றன.+

அவற்றின் விளைவுகளை அவன் அனுபவிப்பான்.

21 சாவும் வாழ்வும் நாவின் அதிகாரத்தில் இருக்கின்றன.+

நாவை அதிகமாகப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அதன் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.+

22 நல்ல மனைவியைத் தேடிக்கொள்கிறவன் நல்ல ஆசீர்வாதத்தைத் தேடிக்கொள்கிறான்.+

யெகோவாவின் பிரியத்தையும்* பெறுகிறான்.+

23 ஏழை உதவி கேட்டுக் கெஞ்சுகிறான்.

ஆனால், பணக்காரன் எரிந்துவிழுகிறான்.

24 கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு.+

ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.+

19 முட்டாளாக இருந்துகொண்டு பொய் பேசுவதைவிட,

ஏழையாக இருந்துகொண்டு உத்தமமாக நடப்பதே மேல்.+

 2 ஒருவன் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.+

யோசிக்காமல் நடந்துகொள்கிறவன் பாவம் செய்கிறான்.

 3 மனிதனுடைய முட்டாள்தனம் அவன் வழியைத் தாறுமாறாக்குகிறது.

ஆனால், அவனுடைய உள்ளம் யெகோவாவுக்கு எதிராகக் கொதிப்படைகிறது.

 4 பணக்காரனுக்குப் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள்.

ஆனால், ஏழையை அவனுடைய நண்பன்கூட கைவிட்டுவிடுவான்.+

 5 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.+

மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் தப்பிக்கவே மாட்டான்.+

 6 பெரிய மனிதனின்* தயவைத் தேடி பல பேர் வருவார்கள்.

அன்பளிப்புகள் கொடுப்பவனுக்கு எல்லாரும் நண்பர்களாக இருப்பார்கள்.

 7 ஏழையை அவனுடைய சகோதரர்களே வெறுக்கும்போது,+

அவனுடைய நண்பர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?+

அவன் கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தாலும், அவர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.

 8 நல்ல புத்தியைச் சம்பாதிப்பவன் தன்னை நேசிக்கிறான்.+

பகுத்தறிவைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பவன் வெற்றி* பெறுவான்.+

 9 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.

மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் அழிந்துபோவான்.+

10 ஆடம்பரமாக வாழ்வது முட்டாளுக்குப் பொருந்தாதபோது,

இளவரசர்களை ஆட்சி செய்வது வேலைக்காரனுக்குக் கொஞ்சமாவது பொருந்துமா?+

11 விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும்.+

தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை* மன்னிப்பது அவனுக்கு அழகு.+

12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கர்ஜனைபோல் இருக்கிறது.+

ஆனால் அவருடைய கருணை, புல்லின் மேலுள்ள பனித்துளிபோல் இருக்கிறது.

13 புத்தியில்லாத மகன் தன்னுடைய அப்பாவுக்குப் பெரும் தொல்லையைக் கொண்டுவருகிறான்.+

சண்டைக்கார* மனைவி ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரையைப் போல் இருக்கிறாள்.+

14 வீடும் செல்வமும் அப்பா கொடுக்கிற சொத்து.

ஆனால், விவேகமுள்ள மனைவி யெகோவா தருகிற சொத்து.+

15 சோம்பேறி தூங்கிக்கொண்டே இருப்பான்.

மந்தமானவன் பசியில் கிடப்பான்.+

16 கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+

தன் வழிகளில் கவனமாக இல்லாதவன் உயிரைத் தொலைத்துவிடுவான்.+

17 ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான்.+

அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.*+

18 திருந்துவான் என்ற நம்பிக்கை இருக்கும்போதே உன் மகனைக் கண்டித்துத் திருத்து.+

அவனுடைய சாவுக்கு நீ காரணமாகிவிடாதே.+

19 எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறவன் அதற்கான தண்டனையைப் பெறுவான்.

அவனைக் காப்பாற்ற நீ முயற்சி செய்தால், திரும்பத் திரும்ப அதைச் செய்ய வேண்டியிருக்கும்.+

20 ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.+

அப்போதுதான் எதிர்காலத்தில் ஞானமுள்ளவனாக ஆவாய்.+

21 மனிதன் தன் உள்ளத்தில் நிறைய திட்டங்களைப் போடலாம்.

ஆனால், கடைசியில் யெகோவா நினைப்பதுதான்* நடக்கும்.+

22 மாறாத அன்பு காட்டுவதுதான் மனிதனுக்கு அழகு.+

பொய்யனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

23 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவன் வாழ்வு பெறுவான்.+

அவன் எந்த ஆபத்தும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவான்.+

24 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,

ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+

25 கேலி செய்கிறவனை அடி,+ அப்போதுதான் அனுபவமில்லாதவன் சாமர்த்தியசாலி ஆவான்.+

புத்தி* உள்ளவனைக் கண்டி, அப்போதுதான் அவனுக்கு இன்னும் அறிவு வளரும்.+

26 அப்பாவைக் கொடுமைப்படுத்தி, அம்மாவை விரட்டியடிக்கிற மகன்,

அவமானத்தையும் தலைகுனிவையும் உண்டாக்குகிறான்.+

27 என் மகனே, புத்திமதி கேட்பதை நீ விட்டுவிட்டால்,

அறிவு புகட்டுகிற வார்த்தைகளைவிட்டு விலகிவிடுவாய்.

28 உதவாக்கரையான சாட்சி நியாயத்தைக் கேலி செய்கிறான்.+

பொல்லாத மனிதன் அக்கிரமத்தை ஆசையோடு விழுங்குகிறான்.+

29 கேலி செய்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு காத்திருக்கிறது.+

முட்டாள்களின் முதுகுக்குப் பிரம்படி காத்திருக்கிறது.+

20 திராட்சமது கேலி செய்யும்,+

மதுபானம் அடாவடித்தனம் பண்ணும்.+

அவற்றால் வழிதவறிப் போகிற எவனும் ஞானம் இல்லாதவன்.+

 2 சிங்கத்தின் கர்ஜனைக்குப் பயப்படுவதுபோல், எல்லாரும் ராஜாவுக்குப் பயப்படுகிறார்கள்.+

அவருடைய கோபத்தைக் கிளறுகிறவன் தன்னுடைய உயிருக்கே உலை வைக்கிறான்.+

 3 வாக்குவாதம் செய்யாமல் இருப்பது ஒருவருக்கு மரியாதை.+

ஆனால், முட்டாள்கள் சட்டென்று வாக்குவாதத்தில் இறங்குவார்கள்.+

 4 சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான்.

அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்.*+

 5 மனிதனுடைய உள்ளத்தில் இருக்கும் யோசனைகள்* ஆழமான தண்ணீர்போல் இருக்கின்றன.

ஆனால், பகுத்தறிவு உள்ளவன் அதை மொண்டெடுப்பான்.

 6 நிறைய பேர் தாங்கள் விசுவாசமாய் இருப்பதாக* சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால், விசுவாசமாக இருப்பவனை யாரால் கண்டுபிடிக்க முடியும்?

 7 நீதிமான் தன் உத்தமத்தில் நடக்கிறான்.+

அவனுக்குப் பிறக்கும் பிள்ளைகள் சந்தோஷமானவர்கள்.+

 8 தீர்ப்பு சொல்ல ராஜா சிம்மாசனத்தில் உட்காரும்போது,+

ஒரே பார்வையில் கெட்டதையெல்லாம் சலித்தெடுத்துவிடுகிறார்.+

 9 “இப்போது என் இதயம் சுத்தமாக இருக்கிறது,+

என்னிடம் பாவமே இல்லை” என்று யாரால் சொல்ல முடியும்?+

10 போலி எடைக்கற்களும் போலி படிகளும்*

யெகோவாவுக்கு அருவருப்பானவை.+

11 சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும்.

அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்.+

12 கேட்பதற்குக் காதுகள், பார்ப்பதற்குக் கண்கள்,

இரண்டையுமே யெகோவாதான் உண்டாக்கினார்.+

13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் வறுமையில் வாடுவாய்.+

கண் விழித்திரு, அப்போது வயிறார சாப்பிடுவாய்.+

14 பொருளை வாங்குபவன், “அது சரியில்லை, இது சரியில்லை” என்று சொல்வான்.

ஆனால், பேரம் பேசி வாங்கிச் சென்ற பிறகு அதைப் பற்றிப் பெருமையடிப்பான்.+

15 தங்கம் இருக்கலாம், ஏராளமான பவளமும்* இருக்கலாம்.

ஆனால், அறிவை உதிர்க்கும் உதடுகள்தான் விலைமதிப்புள்ளவை.+

16 ஒருவன் முன்பின் தெரியாதவரின் கடனுக்குப் பொறுப்பேற்றிருந்தால், அவனுடைய அங்கியை எடுத்துக்கொள்.+

அன்னியப் பெண்ணுக்காக* அவன் அப்படிச் செய்திருந்தால், அவனிடம் அடமானம் வாங்காமல் விடாதே.+

17 ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் சாப்பிடுகிற சாப்பாடு ருசியாக இருக்கும்.

ஆனால், பிற்பாடு வாய் நிறைய கற்களை அள்ளிப்போட்டதுபோல் இருக்கும்.+

18 கலந்துபேசினால்* திட்டங்கள் வெற்றி பெறும்.+

திறமையான வழிநடத்துதலைப் பெற்று போருக்குப் போ.+

19 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் ரகசியங்களை அம்பலப்படுத்துகிறான்.+

அதனால், வம்பளப்பதில் ஆர்வமாக இருக்கிறவர்களோடு* சேராதே.

20 அப்பாவையும் அம்மாவையும் சபிக்கிறவனுடைய விளக்கு,

இருள் சூழ்ந்துகொள்ளும் நேரத்தில் அணைக்கப்படும்.+

21 ஆரம்பத்தில் பேராசையோடு சம்பாதித்த சொத்து,

கடைசியில் அவனுக்கு ஆசீர்வாதமாக இருக்காது.+

22 “பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று சொல்லாதே.+

யெகோவாமேல் நம்பிக்கையாக இரு,+ அவர் உன்னைக் காப்பாற்றுவார்.+

23 போலி எடைக்கற்களை* யெகோவா அருவருக்கிறார்.

கள்ளத் தராசு நல்லதல்ல.

24 மனிதனின் காலடிகளை யெகோவா வழிநடத்துகிறார்.+

இல்லையென்றால், அவன் எப்படித் தன்னுடைய வழியைப் புரிந்துகொள்வான்?

25 “அர்ப்பணிக்கிறேன்!” என்று அவசரப்பட்டு நேர்ந்துகொண்டு பின்னால் யோசிப்பது,

மனிதனுக்கு ஒரு கண்ணியாக இருக்கிறது.+

26 ஞானமான ராஜா பொல்லாதவர்களைச் சலித்தெடுத்து,+

போரடிக்கும் சக்கரங்களை அவர்கள்மேல் ஏற்றுகிறார்.+

27 மனிதன் வெளிவிடுகிற மூச்சுக்காற்று யெகோவாவின் விளக்கு.

அது அவனுடைய அடிமனதில் இருப்பதை வெட்டவெளிச்சமாக்கும்.

28 மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் ராஜாவைப் பாதுகாக்கும்.+

மாறாத அன்பினால் தன்னுடைய சிம்மாசனத்தை அவர் நிலைநிறுத்துகிறார்.+

29 இளைஞர்களுடைய அழகு அவர்களுடைய பலம்.+

வயதானவர்களுடைய கம்பீரம் அவர்களுடைய நரைமுடி.+

30 காயங்களும் தழும்புகளும் கெட்டதை விட்டுவிட உதவும்.+

பிரம்படி ஒருவனை அடியோடு திருத்தும்.

21 ராஜாவின் இதயம் யெகோவாவின் கையில் நீரோடைபோல்* இருக்கிறது.

தான் விரும்பும் திசையில் அதை அவர் திருப்பிவிடுகிறார்.+

 2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுக்குச் சரியாகத் தோன்றுகின்றன.+

ஆனால், யெகோவாதான் இதயங்களை* ஆராய்கிறார்.+

 3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்

யெகோவா மிகவும் விரும்புகிறார்.+

 4 அக்கிரமக்காரர்களின் பாதைக்கு விளக்குபோல் இருக்கிற ஆணவக் கண்களும்,

அகம்பாவ இதயமும் பாவம் நிறைந்தவை.+

 5 கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்.+

ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.+

 6 பொய் சொல்லி சம்பாதிக்கிற சொத்து,

மறைந்துபோகும் மூடுபனி போன்றது, ஆபத்தான கண்ணி போன்றது.*+

 7 பொல்லாதவர்கள் நியாயமாக நடக்க மறுக்கிறார்கள்.

அதனால், அவர்கள் செய்கிற கொடுமைகளே அவர்களை வாரிக்கொண்டு போய்விடும்.+

 8 குற்றமுள்ளவனின் வழி குறுக்கு வழி.

ஆனால், குற்றமற்றவனின் வழி நேர்வழி.+

 9 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,

கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+

10 பொல்லாதவன் கெட்டதைச் செய்யத் துடிக்கிறான்.+

அடுத்தவனுக்கு அவன் கொஞ்சம்கூட கருணை காட்டுவது இல்லை.+

11 கேலி செய்கிறவனைத் தண்டிக்கும்போது அனுபவமில்லாதவனும் ஞானமுள்ளவனாக ஆகிறான்.

ஞானமுள்ளவன் ஒரு விஷயத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளும்போது* அறிவை அடைகிறான்.*+

12 நீதியுள்ள கடவுள் பொல்லாதவனின் வீட்டைக் கவனிக்கிறார்.

பொல்லாதவர்கள் எல்லாரையும் ஒழித்துக்கட்டுகிறார்.+

13 ஏழை கதறும்போது ஒருவன் காதுகளை அடைத்துக்கொண்டால்,

அவன் கதறும்போதும் யாருமே கேட்க மாட்டார்கள்.+

14 ரகசியமாகக் கொடுக்கப்படுகிற அன்பளிப்பு கோபத்தைத் தணிக்கும்.+

மறைவாகக் கொடுக்கப்படுகிற லஞ்சம் ஆக்ரோஷத்தை அடக்கும்.

15 நியாயமாக நடப்பது நீதிமானுக்குச் சந்தோஷம் தருகிறது.+

ஆனால், அக்கிரமம் செய்கிறவனுக்கு அது கொடுமையாக இருக்கிறது.

16 விவேகமான வழியைவிட்டு விலகிப்போகிறவன்

செத்துக் கிடப்பவர்களோடு* அமைதியாகக் கிடப்பான்.+

17 உல்லாசப் பிரியன் ஏழையாவான்.+

திராட்சமதுவையும் எண்ணெயையும் விரும்புகிறவன் பணக்காரனாக மாட்டான்.

18 நீதிமானுக்குப் பொல்லாதவன் மீட்புவிலையாவான்.

நேர்மையானவனுக்குத் துரோகி மீட்புவிலையாவான்.+

19 சண்டைக்காரியும்* கோபக்காரியுமான மனைவியோடு குடியிருப்பதைவிட

வனாந்தரத்தில் வாழ்வதே மேல்.+

20 ஞானமுள்ளவனின் வீட்டில் அருமையான பொக்கிஷமும் எண்ணெயும் இருக்கும்.+

ஆனால், முட்டாள் தன்னிடம் இருப்பதையெல்லாம் வெட்டியாகச் செலவழித்துவிடுவான்.+

21 நீதியையும் மாறாத அன்பையும் நாடுகிறவன்

வாழ்வும், நீதியும், மகிமையும் பெறுவான்.+

22 ஞானமுள்ளவனால் பலசாலிகளுடைய நகரத்தின் மதிலில்கூட ஏற முடியும்.

அவர்கள் நம்பியிருக்கிற கோட்டையைக்கூட அவனால் தகர்க்க முடியும்.+

23 தன் வாயையும் நாவையும் அடக்குகிறவன்

பிரச்சினையில் சிக்காமல் இருப்பான்.+

24 அகங்காரத்தோடு* கண்மூடித்தனமாக நடக்கிறவன்,

அகங்காரம்பிடித்த பெருமைக்காரன்+ என்று சொல்லப்படுகிறான்.

25 சோம்பேறி எதை நினைத்து ஏங்குகிறானோ அதுவே அவனைக் கொன்றுவிடும்.

ஏனென்றால், அவனுடைய கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.+

26 அவன் நாள் முழுவதும் பேராசையோடு ஏங்குகிறான்.

ஆனால், நீதிமான் கஞ்சத்தனம் காட்டாமல் எல்லாவற்றையும் கொடுக்கிறான்.+

27 பொல்லாதவன் கொடுக்கிற பலி அருவருப்பானது என்றால்,+

கெட்ட எண்ணத்தோடு* அவன் கொடுக்கிற பலி இன்னும் எந்தளவுக்கு அருவருப்பானது!

28 பொய் சாட்சி சொல்கிறவன் அழிந்துபோவான்.+

ஆனால், கவனமாகக் கேட்கிறவன் சரியாகச் சாட்சி சொல்வான்.*

29 பொல்லாதவன் தனக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாததுபோல் காட்டிக்கொள்கிறான்.+

ஆனால், நேர்மையானவனின் வழிதான் உறுதியான வழி.+

30 யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை.+

31 போருக்காகக் குதிரைகள் தயாராக நிறுத்தி வைக்கப்படும்.+

ஆனால், யெகோவாதான் வெற்றி* தருகிறார்.+

22 நிறைய சொத்துகளைச் சம்பாதிப்பதைவிட நல்ல பெயரைச் சம்பாதிப்பது சிறந்தது.+

தங்கத்தையும் வெள்ளியையும் சம்பாதிப்பதைவிட மரியாதையைச் சம்பாதிப்பது சிறந்தது.

 2 பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அவர்கள் இரண்டு பேரையும் யெகோவாதான் படைத்தார்.+

 3 சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.

ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*

 4 மனத்தாழ்மை காட்டுவதாலும் யெகோவாவுக்குப் பயப்படுவதாலும் கிடைக்கிற பலன்,

செல்வமும் மகிமையும் வாழ்வுமே.+

 5 குறுக்கு வழியில் போகிறவனின் பாதையிலே முட்களும் கண்ணிகளும் இருக்கின்றன.

ஆனால், தன் உயிரை மதிக்கிறவன் அவற்றிலிருந்து தூரமாக விலகியிருப்பான்.+

 6 நடக்க வேண்டிய வழியில்* நடக்க பிள்ளையைப் பழக்கு.+

வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.+

 7 பணக்காரன் ஏழையை ஆளுகிறான்.

கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.+

 8 அநீதியை விதைக்கிறவன் அழிவை அறுப்பான்.+

அவனுடைய அராஜகம்* முடிவுக்கு வரும்.+

 9 தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்.

ஏனென்றால், அவன் ஏழைகளோடு தன் உணவைப் பகிர்ந்துகொள்கிறான்.+

10 ஏளனம் செய்கிறவனை விரட்டிவிடு.

அப்போது சண்டை நின்றுவிடும்,

சச்சரவுகளும்* பழிப்பேச்சுகளும் முடிவுக்கு வரும்.

11 ஒருவன் சுத்தமான இதயத்தை விரும்பும்போதும் கனிவாகப் பேசும்போதும்,

ராஜாவுக்கு நண்பனாக இருப்பான்.+

12 அறிவோடு நடக்கிறவனை யெகோவா கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்கிறார்.*

ஆனால், துரோகியின் பேச்சை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்.+

13 “வெளியே சிங்கம் நிற்கிறது,

நடுத்தெருவில் என்னைக் கடித்துக் குதறிப்போடும்!” என்று சோம்பேறி சொல்கிறான்.+

14 நடத்தைகெட்ட பெண்ணின் வாய் ஒரு படுகுழி.+

யெகோவாவின் கண்டனத் தீர்ப்புக்கு ஆளானவன் அதில் விழுவான்.

15 பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்.+

ஆனால், தண்டனையின்* பிரம்பு அதை அவனைவிட்டு நீக்கிவிடும்.+

16 ஏழையை ஏமாற்றி சொத்து சேர்க்கிறவனும்,+

பணக்காரனுக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறவனும்

வறுமையின் பிடியில் சிக்குவார்கள்.

17 ஞானமுள்ளவர்கள் சொல்கிற வார்த்தைகளைக் காதுகொடுத்துக் கேட்டு,+

நான் புகட்டும் அறிவை உன் இதயத்தில் வை.+

18 அவை எப்போதும் உன் உதடுகளில் இருக்கும்படி,+

அவற்றை உன் இதயத்தில் ஆழமாகப் பதிய வைப்பது சந்தோஷத்தைத் தரும்.+

19 நீ யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்காக

இன்று நான் உனக்கு அறிவு புகட்டுகிறேன்.

20 ஆலோசனைகளையும் அறிவுரைகளையும்

நான் உனக்கு ஏற்கெனவே எழுதியிருக்கிறேனே!

21 உன்னை அனுப்பியவருக்குச் சரியான தகவலை நீ கொண்டுபோய்க் கொடுப்பதற்காக

உண்மையான, நம்பகமான வார்த்தைகளை உனக்குப் போதித்திருக்கிறேனே!

22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+

நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+

23 அவர்களுக்காக யெகோவாவே வாதாடுவார்.+

அவர்களை ஏமாற்றுகிறவர்களின் உயிரைப் பறித்துவிடுவார்.

24 கோபக்காரனோடு சகவாசம் வைக்காதே.

எரிந்து விழுகிற சுபாவம் உள்ளவனோடு சேராதே.

25 அப்போதுதான், அவனைப் பார்த்து நீயும் கெட்டுப்போக மாட்டாய்,

ஆபத்தில் சிக்கிக்கொள்ள மாட்டாய்.+

26 வேறொருவன் வாங்குகிற கடனுக்கு நீ பொறுப்பேற்காதே.

அதற்காகக் கை குலுக்கி ஒப்பந்தம் செய்யாதே.+

27 கடனை அடைக்க உனக்கு வழியில்லை என்றால்,

நீ படுத்திருக்கிற படுக்கைகூட பறிபோய்விடுமே!

28 உன் முன்னோர்கள் பூர்வ காலத்தில் வைத்த

எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+

29 திறமையாக வேலை செய்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?

அவன் சாதாரண ஆட்கள் முன்னால் அல்ல,

ராஜாக்கள் முன்னால் நிற்பான்.+

23 ராஜாவோடு விருந்து சாப்பிட உட்காரும்போது,

சூழ்நிலையை மனதில் வைத்துக் கவனமாக நடந்துகொள்.

 2 நீ பயங்கர பசியோடு இருந்தாலும்,

உன் வாயைக் கட்டிக்கொள்.*

 3 அவர் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.

அவை உன்னை மோசம்போக்கிவிடும்.

 4 சொத்து சேர்ப்பதற்காக உழைத்து உழைத்துக் களைத்துப்போகாதே.+

அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டு புத்தியோடு நடந்துகொள்.*

 5 இல்லாமல்போகும் ஒன்றின்மேல் நீ ஏன் கண்ணை வைக்க வேண்டும்?+

அது கழுகைப் போல் இறக்கை விரித்து வானத்துக்குப் பறந்துவிடுமே!+

 6 கஞ்சன் தரும் உணவைச் சாப்பிடாதே.

அவன் கொடுக்கிற ருசியான உணவுகளைச் சாப்பிடத் துடிக்காதே.

 7 ஏனென்றால், அவன் எல்லாவற்றுக்கும் கணக்குப் பார்ப்பான்.

“நன்றாகச் சாப்பிடு, குடி” என்று வெறும் பேச்சுக்குத்தான் சொல்வான்.

 8 நீ அதைச் சாப்பிட்டபின் வாந்தி எடுத்துவிடுவாய்.

நீ பாராட்டிப் பேசியதெல்லாம் வீணாகிவிடும்.

 9 முட்டாளின் காதில் விழும்படி எதையும் பேசாதே.+

ஏனென்றால், நீ சொல்கிற ஞானமான வார்த்தைகளை அவன் மதிக்க மாட்டான்.+

10 பூர்வ காலத்தில் வைக்கப்பட்ட எல்லைக் குறியைத் தள்ளி வைக்காதே.+

அப்பா இல்லாத பிள்ளைகளின் நிலத்தை ஆக்கிரமிக்காதே.

11 ஏனென்றால், அவர்களை விடுவிக்கிறவர்* பலம்படைத்தவர்.

அவர்களுக்காக அவரே உன்னோடு வாதாடுவார்.+

12 புத்திமதியை உன் இதயத்தில் வை.

அறிவுள்ள வார்த்தைகளை உன் காதில் வாங்கிக்கொள்.

13 பிள்ளையைத் தண்டிக்காமல் இருக்காதே.+

நீ பிரம்பால் அடித்தால் அவன் ஒன்றும் செத்துவிட மாட்டான்.

14 நீ அவனைப் பிரம்பால் அடித்தால்தான்

கல்லறைக்குப் போகாதபடி அவனைக் காப்பாற்ற முடியும்.

15 என் மகனே, உன் இதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,

என் இதயம் சந்தோஷத்தில் பூரிக்கும்.+

16 உன் உதடுகள் சரியானதைப் பேசினால்,

என் உள்ளம்* சந்தோஷத்தில் துள்ளும்.

17 உன் இதயம் பாவிகள்மேல் பொறாமைப்படாமல் இருக்கட்டும்.+

நாள் முழுவதும் நீ யெகோவாவுக்குப் பயந்து நட.+

18 அப்போது உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.+

உன் நம்பிக்கை வீண்போகாது.

19 என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு ஞானம் அடைந்து,

உன் இதயத்தைச் சரியான வழியில் நடத்து.

20 அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடும்,+

அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறவர்களோடும் சேர்ந்துகொள்ளாதே.+

21 ஏனென்றால், குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள்.+

தூக்க மயக்கத்திலேயே இருப்பவர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள்.

22 உன்னைப் பெற்ற அப்பாவின் பேச்சைக் கேள்.

உன் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவளை அலட்சியம் செய்யாதே.+

23 சத்தியத்தை வாங்கு,* அதை ஒருபோதும் விற்காதே.+

அதேபோல், ஞானத்தையும் புத்திமதியையும் புத்தியையும்* வாங்கு.+

24 நீதிமானைப் பெற்றவன் நிச்சயம் சந்தோஷப்படுவான்.

ஞானமுள்ள மகனைப் பெற்றவன் பூரித்துப்போவான்.

25 உன் அப்பாவும் அம்மாவும் பூரித்துப்போவார்கள்.

உன்னைப் பெற்றெடுத்தவள் சந்தோஷப்படுவாள்.

26 என் மகனே, உன் இதயத்தை எனக்குத் தா.

உன் கண்கள் என் வழிகளை ரசிக்கட்டும்.+

27 விபச்சாரி ஓர் ஆழமான படுகுழி.

ஒழுக்கங்கெட்ட பெண் ஒரு குறுகலான கிணறு.+

28 திருடனைப் போல் அவள் பதுங்கியிருக்கிறாள்.+

நிறைய ஆண்களைத் துரோகம் செய்ய வைக்கிறாள்.

29 யாருக்கு வேதனை? யாருக்குக் கவலை?

யாருக்குச் சண்டை சச்சரவுகள்? யாருக்குப் புலம்பல்கள்?

யாருக்குத் தேவையில்லாத காயங்கள்? யாருக்குச் சிவந்த* கண்கள்?

30 மதுவே கதி என்று கிடப்பவர்களுக்குத்தான்.+

அதிக போதையேற்றும் மதுவை* நாடிப் போகிறவர்களுக்குத்தான்.

31 திராட்சமதுவின் சிவப்பு நிறத்தைப் பார்க்காதே.

அது கிண்ணத்தில் பளபளக்கும், தொண்டையில் இதமாக இறங்கும்.

32 கடைசியில், பாம்புபோல் கடிக்கும்.

விரியன் பாம்புபோல் விஷத்தைக் கக்கும்.

33 உன் கண்கள் வினோதமான காட்சிகளைப் பார்க்கும்.

உன் இதயம் தாறுமாறாகப் பேசும்.+

34 நடுக்கடலில் படுத்திருப்பவனைப் போலவும்,

பாய்மரக் கம்பத்தின் உச்சியில் படுத்திருப்பவனைப் போலவும் நீ இருப்பாய்.

35 “என்னை அடித்தார்கள், ஆனால் எனக்கு உறைக்கவில்லை.

என்னை உதைத்தார்கள், ஆனால் நான் உணரவில்லை.

நான் எப்போது எழுந்திருப்பேன்?+

நான் மறுபடியும் குடிக்க வேண்டும்!” என்று நீ சொல்வாய்.

24 அக்கிரமக்காரர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.

அவர்களோடு பழகுவதற்கு ஏங்காதே.+

 2 ஏனென்றால், அவர்களுடைய உள்ளம் வன்முறையைப் பற்றியே யோசிக்கிறது.

அவர்களுடைய உதடுகள் தீமையைப் பற்றியே பேசுகின்றன.

 3 வீடு* ஞானத்தால் கட்டப்படும்.+

பகுத்தறிவால் அது நிலைநிறுத்தப்படும்.

 4 அறிவால் அதன் அறைகள் நிரப்பப்படும்.

எல்லாவித அருமையான பொக்கிஷங்களும் அவற்றில் குவித்து வைக்கப்படும்.+

 5 ஞானமுள்ளவன் பலமுள்ளவன்.+

ஒருவன் தன் அறிவினால் அதிக பலம் அடைகிறான்.

 6 திறமையான வழிநடத்துதல் இருந்தால் நீ போர் செய்ய முடியும்.+

ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.+

 7 உண்மையான ஞானம் முட்டாளுக்கு எட்டவே எட்டாது.+

நகரவாசலில் சொல்வதற்கு அவனிடம் எதுவும் இருக்காது.

 8 சதித்திட்டம் தீட்டுகிறவன்

மோசடி மன்னன் என்று அழைக்கப்படுவான்.+

 9 முட்டாள்தனமான திட்டங்கள்* பாவம் நிறைந்தவை.

கேலி செய்கிறவனை மக்கள் அருவருக்கிறார்கள்.+

10 இக்கட்டில்* தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால்,

உன் பலம் குறைந்துவிடும்.

11 சாகடிப்பதற்காகக் கொண்டுபோகப்படுகிற ஆட்களைக் காப்பாற்று.

கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படுகிறவர்களை விடுவி.+

12 “அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்று நீ சொல்லலாம்.

ஆனால், இதயங்களை* ஆராய்கிறவருக்கு உன் இதயத்தில் இருப்பது தெரியாதா?+

உன்னைக் கவனித்துக்கொண்டிருப்பவர் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வாரே.

அவனவன் செயலுக்குத் தகுந்த கூலியை அவர் கொடுப்பாரே.+

13 என் மகனே, தேனைச் சாப்பிடு; அது நல்லது.

தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாக இருக்கும்.

14 அதேபோல், ஞானம் உனக்கு நல்லது என்பதைத் தெரிந்துகொள்.+

அதை நீ தேடிக் கண்டுபிடித்தால், உன் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

உன் நம்பிக்கை வீண்போகாது.+

15 நீதிமானின் வீட்டுக்குப் பக்கத்தில் கெட்ட எண்ணத்தோடு பதுங்கியிருக்காதே.

அவன் குடியிருக்கும் இடத்தை அழிக்காதே.

16 நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்.+

ஆனால், பொல்லாதவன் பேராபத்தில் சிக்கி விழுந்துபோவது உறுதி.+

17 உன் எதிரி விழுந்தால் கைகொட்டிச் சிரிக்காதே.

அவனுக்கு அடிசறுக்கினால் உன் உள்ளத்தில் சந்தோஷப்படாதே.+

18 அப்படிச் செய்தால், யெகோவா அதைப் பார்த்து உன்மேல் வருத்தப்படுவார்.

அவன்மேல்* இருந்த கோபம் அவருக்குப் போய்விடும்.+

19 அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சல் அடையாதே.

பொல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப்படாதே.

20 அக்கிரமம் செய்கிறவனுக்கு எதிர்காலமே இல்லை.+

பொல்லாதவனின் விளக்கு அணைக்கப்படும்.+

21 என் மகனே, யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயப்படு.+

எதிர்ப்பு காட்டுகிறவர்களோடு* சேராதே.+

22 அவர்களுக்குத் திடீரென்று அழிவு வரும்.+

கடவுளும் ராஜாவும் அவர்களை எப்படித் தண்டிப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்?+

23 இவையும் ஞானமுள்ளவர்கள் கொடுத்த ஆலோசனைகள்:

தீர்ப்பு சொல்லும்போது பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

24 குற்றவாளியைப் பார்த்து, “நீ நிரபராதி” என்று சொல்கிறவனை+

ஜனங்கள் சபிப்பார்கள், தேசங்கள் கண்டனம் செய்யும்.

25 ஆனால், அவனைக் கண்டிக்கிறவர்களுக்கு நல்லது நடக்கும்.+

அவர்களுக்கு அருமையான ஆசீர்வாதங்கள் வந்து சேரும்.+

26 நேர்மையாகப் பதில் சொல்கிறவனுக்கு மக்கள் முத்தம் கொடுப்பார்கள்.*+

27 உன் வெளிவேலையைத் திட்டமிடு, வயலில் செய்ய வேண்டியதைச் செய்துவிடு,

அதன் பிறகு உன் வீட்டை* கட்டு.

28 எந்த ஆதாரமும் இல்லாமல் அடுத்தவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லாதே.+

உன் வாயால் மற்றவர்களை ஏமாற்றாதே.+

29 “அவன் எனக்குச் செய்த மாதிரியே நானும் செய்வேன்;

பழிக்குப்பழி வாங்குவேன்” என்று சொல்லாதே.+

30 சோம்பேறியின்+ வயல் வழியாக நான் போனேன்.

புத்தியில்லாதவனின் திராட்சைத் தோட்டம் பக்கமாகப் போனேன்.

31 அங்கே களைகள் மண்டிக் கிடந்தன.

முட்செடிகள் நிலத்தை மூடியிருந்தன,

கற்சுவரும் உடைந்து கிடந்தது.+

32 அதைப் பார்த்தபோது எனக்குக் கஷ்டமாகிவிட்டது.

அதையெல்லாம் பார்த்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்:

33 “இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கொள்ள வேண்டும்,

இன்னும் கொஞ்ச நேரம் கைகளை மடக்கி ஓய்வெடுக்க வேண்டும்” என்று சொன்னால்,

34 வறுமை கொள்ளைக்காரனைப் போலவும்,

ஏழ்மை ஆயுதமேந்தியவனைப் போலவும் உன்னிடம் வரும்.+

25 இவையும் சாலொமோனின் நீதிமொழிகள்;+ இவற்றை யூதாவின் ராஜாவான எசேக்கியாவின்+ ஆட்கள் தொகுத்து, நகலெடுத்தார்கள்:

 2 எந்த விஷயத்தையும் ரகசியமாக வைப்பது கடவுளுக்கு மகிமை.+

எந்த விஷயத்தையும் தீர ஆராய்வது ராஜாவுக்குப் பெருமை.

 3 வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் தெரிந்துகொள்ள முடியாததுபோல்,

ராஜாவின் உள்ளத்தில் இருப்பதையும் புரிந்துகொள்ள முடியாது.

 4 வெள்ளியில் இருக்கிற கசடை எடுத்துப்போடு.

அப்போது, அது சுத்தமான வெள்ளியாகப் பளபளக்கும்.+

 5 ராஜாவின் முன்னாலிருந்து பொல்லாதவனைத் துரத்திவிடு.

அப்போது, அவருடைய சிம்மாசனம் நீதியால் உறுதியாக நிலைநிறுத்தப்படும்.+

 6 ராஜாவுக்கு முன்னால் உன்னை உயர்த்தாதே.+

முக்கியப் பிரமுகர்களின் நடுவே உட்காராதே.+

 7 ராஜா உன்னைப் பெரிய மனிதர்கள் முன்னால் அவமானப்படுத்துவதைவிட,

“இங்கே வந்து உட்கார்” என்று அவராகவே சொல்வதுதான் மேல்!+

 8 அவசரப்பட்டு ஒருவன்மேல் வழக்கு போடாதே.

உன்மேல் தப்பு இருப்பதாக அவன் நிரூபித்துவிட்டால் என்ன செய்வாய்?+

 9 அதனால், பிரச்சினையை அவனோடு நேரடியாகப் பேசித் தீர்த்துக்கொள்.+

ஆனால், அவன் உன்னிடம் சொன்ன ரகசியங்களை* அம்பலப்படுத்தாதே.+

10 ஏனென்றால், நீ யாரிடம் ரகசியத்தைச் சொல்கிறாயோ அவனே உன்னை அவமானப்படுத்திவிடுவான்.

நீ மோசமான விஷயத்தை* பரப்பிய பிறகு அதைத் திரும்பப் பெற முடியாதே!

11 சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தை

வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்.+

12 ஒருவர் ஞானமாகக் கண்டிக்கும்போது அதை நீ காதுகொடுத்துக் கேட்டால்,

அவர் உனக்குத் தங்கக் கம்மல் போலவும் சொக்கத்தங்கத்தில் செய்த நகை போலவும் இருப்பார்.+

13 குளிர்ந்த பனி அறுவடை நாளில் புத்துணர்ச்சி தருவதுபோல்,

உண்மையுள்ள தூதுவனும் தன் எஜமானுக்குப் புத்துணர்ச்சி தருகிறான்.+

14 அன்பளிப்பு கொடுப்பதாகப் பெருமையடித்துவிட்டு அதைக் கொடுக்காமல் இருக்கிறவன்,

மழை தராத மேகங்களையும் காற்றையும் போல இருக்கிறான்.+

15 பொறுமையால் அதிகாரியை வெல்லலாம்.

மென்மையான* நாவினால் எலும்பையும் நொறுக்கிவிடலாம்.+

16 நீ தேனைக் கண்டால், அதை அளவோடு சாப்பிடு.

அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வாந்தி எடுத்துவிடுவாய்.+

17 அடுத்தவன் வீட்டுக்கு அடிக்கடி போகாதே.

போனால், அவன் அலுத்துப்போய் உன்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவான்.

18 அடுத்தவனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்கிறவன்

தடியையும்* வாளையும் கூர்மையான அம்பையும் போல் இருக்கிறான்.+

19 கஷ்ட காலங்களில் பொறுப்பில்லாதவனை* நம்புவது

உடைந்த பல்லையும் நொண்டுகிற காலையும் நம்புவதற்குச் சமம்.

20 சோகத்தில் வாடுகிறவனுக்கு முன்பாகப் பாட்டுப் பாடுகிறவன்,+

குளிர் காலத்தில் உடையைக் கழற்றுகிறவன் போலவும்,

சோடா உப்பின் மேல் ஊற்றப்படுகிற காடியைப் போலவும் இருக்கிறான்.

21 உன் எதிரி பசியாக இருந்தால் அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு.

அவன் தாகமாக இருந்தால் அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடு.+

22 இப்படிச் செய்யும்போது, நெருப்புத் தணலை அவன் தலைமேல் குவிப்பாய்.*+

யெகோவா உனக்குப் பலன் கொடுப்பார்.

23 வடக்கிலிருந்து வீசுகிற காற்று கனமழையை வர வைக்கும்.

வம்பளக்கிற வாய் மற்றவர்களுக்குக் கோபத்தை வர வைக்கும்.+

24 சண்டைக்கார* மனைவியோடு வீட்டுக்குள் குடியிருப்பதைவிட,

கூரைக்கு மேலே ஒரு ஓரமாகத் தங்கியிருப்பதே மேல்.+

25 தூர தேசத்திலிருந்து வருகிற நல்ல செய்தி,

தாகத்தில் தவிப்பவனுக்குக் கிடைக்கிற குளிர்ந்த தண்ணீரைப் போல் இருக்கிறது.+

26 பொல்லாதவனுக்கு இணங்கிப்போகிற நீதிமான்,

கலங்கிய நீரூற்று போலவும் பாழடைந்த கிணறு போலவும் இருக்கிறான்.

27 அளவுக்கு அதிகமாகத் தேன் சாப்பிடுவது நல்லதல்ல.+

தனக்குத் தானே புகழ் தேடுவதும் புகழல்ல.+

28 கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத மனிதன்,

மதில் இடிந்த நகரம்போல் இருக்கிறான்.+

26 கோடைக் காலத்துக்குப் பனியும், அறுவடைக் காலத்துக்கு மழையும் எப்படிப் பொருந்தாதோ,

அப்படித்தான் முட்டாளுக்கும் மதிப்பு மரியாதை பொருந்தாது.+

 2 காரணமில்லாமல் பறவை தப்பிக்காது, தகைவிலான் குருவியும் பறந்து போகாது.

அதேபோல், காரணமில்லாமல் எந்தச் சாபமும் வராது.*

 3 குதிரைக்குச் சாட்டையும் கழுதைக்குக் கடிவாளமும் தேவை.+

அதேபோல், முட்டாளின் முதுகுக்குப் பிரம்படி தேவை.+

 4 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்லாதே.

நீ ஏன் அவன் அளவுக்கு இறங்கி வர வேண்டும்?*

 5 முட்டாளுக்கு அவனுடைய முட்டாள்தனத்தின்படி பதில் சொல்.

அவன் ஏன் தன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ள வேண்டும்?+

 6 முட்டாளை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைப்பதும்,

தன் காலையே முடமாக்கிக்கொண்டு தனக்கே கேடு செய்துகொள்வதும் ஒன்றுதான்.

 7 முட்டாள் சொல்கிற பழமொழியும்+

கால் ஊனமானவனின் நொண்டிக் காலும்* ஒன்றுதான்.

 8 கவணில் கல்லைக் கட்டுவதும்

முட்டாளைப் புகழ்வதும் ஒன்றுதான்.+

 9 முட்டாள் சொல்கிற பழமொழியும்

குடிகாரன் கையில் இருக்கிற முட்செடியும் ஒன்றுதான்.

10 முட்டாளையோ முன்பின் தெரியாதவனையோ கூலிக்கு வைக்கிறவனும்,

கண்மூடித்தனமாக அம்பு எறிந்து மற்றவர்களை* காயப்படுத்துகிறவனும் ஒன்றுதான்.

11 நாய் தான் கக்கியதையே திரும்பப் போய்த் தின்பதுபோல்,

முட்டாளும் தான் செய்த முட்டாள்தனத்தையே திரும்பவும் செய்கிறான்.+

12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+

அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.

13 “வெளியில் ஒரு இளம் சிங்கம் சுற்றுகிறது,

தெருவில் ஒரு பெரிய சிங்கம் அலைகிறது!” என்று சோம்பேறி சொல்கிறான்.+

14 கீலில்* கதவு ஆடிக்கொண்டே இருப்பதுபோல்,

சோம்பேறியும் கட்டிலில் புரண்டுகொண்டே இருப்பான்.+

15 சோம்பேறி பாத்திரத்துக்குள் கை விடுவான்,

ஆனால் சாப்பாட்டை வாய்வரை கொண்டுபோகக்கூட சோம்பல்படுவான்.+

16 புத்திசாலித்தனமாகப் பதில் சொல்கிற ஏழு பேரைவிட,

தானே ஞானி என்று சோம்பேறி நினைத்துக்கொள்கிறான்.

17 வழியிலே யாரோ சண்டை போடுவதைப் பார்த்து ஆவேசப்படுவதும்,*

நாயின் காதுகளைப் பிடிப்பதும் ஒன்றுதான்.+

18 தீ பறக்கும் ஆயுதங்களையும் கொடிய* அம்புகளையும் எறிகிற பைத்தியக்காரனைப் போலத்தான்,

19 அடுத்தவனை ஏமாற்றிவிட்டு, “விளையாட்டுக்காகச் செய்தேன்!” என்று சொல்கிறவனும் இருக்கிறான்.+

20 விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.

இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன் இல்லையென்றால் சண்டை சச்சரவுகள் அடங்கிவிடும்.+

21 கரியும் விறகும் நெருப்பை மூட்டிவிடுவதுபோல்,

சண்டைக்காரன் வாக்குவாதங்களை மூட்டிவிடுகிறான்.+

22 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனின் வார்த்தைகள் சிலருக்கு ருசியான உணவு* போல் இருக்கின்றன.

அதை அவர்கள் ஆசை ஆசையாக விழுங்குகிறார்கள்.+

23 உள்ளத்தில் பகையும் உதட்டில் பாசமும் காட்டுகிறவன்

வெள்ளி முலாம் பூசப்பட்ட மண் ஓடுபோல் இருக்கிறான்.+

24 ஒருவன் இனிக்க இனிக்கப் பேசி தன் பகையை மூடி மறைக்கிறான்.

ஆனால், உள்ளத்தில் வஞ்சனையை வளர்க்கிறான்.

25 அவன் தேனொழுகப் பேசினாலும் நம்பிவிடாதே.

ஏனென்றால், அருவருப்பான ஏழு விஷயங்கள் அவன் உள்ளத்தில் இருக்கின்றன.*

26 என்னதான் நயவஞ்சகமாக அவன் தன் பகையை மறைத்தாலும்,

அவனுடைய கெட்ட எண்ணம் சபையில் வெட்டவெளிச்சமாகும்.

27 ஒருவன் குழி வெட்டினால் அவனே அந்தக் குழியில் விழுவான்.

ஒருவன் கல்லை உருட்டிவிட்டால் அவன் மேலேயே அது உருண்டு விழும்.+

28 பொய் பேசுகிற நாவு, தான் புண்படுத்தியவர்களை வெறுக்கிறது.

பொய்யாகப் புகழ்கிற வாய், அழிவை உண்டாக்குகிறது.+

27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,

நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+

 2 உன்னை நீயே புகழாதே, இன்னொருவன் உன்னைப் புகழட்டும்.

உன் உதடுகள் அல்ல, மற்றவர்களுடைய உதடுகளே உன்னை மெச்சட்டும்.+

 3 கல்லும் பாரம், மணலும் பாரம்.

ஆனால், முட்டாளினால் ஏற்படும் எரிச்சல் அதைவிட பாரம்.+

 4 ஆவேசம் கொடூரமானது, கோபம் வெள்ளப்பெருக்குபோல் பயங்கரமானது.

ஆனால், பொறாமை இதையெல்லாம்விட படுமோசமானது.+

 5 வெளிப்படையாகக் கண்டிப்பதே மறைத்து வைக்கப்படும் அன்பைவிட மேலானது.+

 6 நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்.+

ஆனால், எதிரி ஏராளமான* முத்தங்களைக் கொடுக்கிறான்.

 7 திருப்தியாகச் சாப்பிட்டவனுக்குத் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்கூட கசக்கும்.

ஆனால், பசியில் வாடுகிறவனுக்குக் கசப்பானதுகூட இனிக்கும்.

 8 வீட்டைவிட்டு அலைந்து திரிகிற மனிதனும்

கூட்டைவிட்டுப் பறந்து திரிகிற பறவையும் ஒன்றுதான்.

 9 அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு,

எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.+

10 உன் நண்பனையோ உன் அப்பாவின் நண்பனையோ அலட்சியம் செய்யாதே,

ஆபத்து நாளில் உன் சகோதரனுடைய வீட்டுக்குப் போகாதே.

தூரத்தில் இருக்கிற சகோதரனைவிட பக்கத்தில் இருக்கிற நண்பனே மேல்.+

11 என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து.+

அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு* என்னால் பதிலடி கொடுக்க முடியும்.+

12 சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.+

ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*

13 ஒருவன் முன்பின் தெரியாதவரின் கடனுக்குப் பொறுப்பேற்றிருந்தால், அவனுடைய அங்கியை எடுத்துக்கொள்.

அன்னியப் பெண்ணுக்காக* அவன் அப்படிச் செய்திருந்தால், அவனிடம் அடமானம் வாங்காமல் விடாதே.+

14 ஒருவன் விடியற்காலையிலே சத்தமான குரலில் யாரையாவது ஆசீர்வதித்தால்,

அது சாபமாகத்தான் கருதப்படும்.

15 சண்டைக்கார* மனைவி மழை நாளில் ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரைபோல் இருக்கிறாள்.+

16 அவளை அடக்குவதைவிட காற்றை அடக்கிவிடலாம்,

எண்ணெயையும் வலது கையில் பிடித்துக்கொள்ளலாம்.

17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல,

நண்பனை நண்பன் கூர்மையாக்குகிறான்.+

18 அத்தி மரத்தைக் கவனித்துக்கொள்பவன் அதன் பழத்தைச் சாப்பிடுவான்.+

எஜமானைக் கவனித்துக்கொள்பவன் மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பான்.+

19 தண்ணீர் ஒருவனின் முகத்தைப் பிரதிபலிப்பதுபோல்,

ஒருவனின் இதயம் இன்னொருவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறது.

20 கல்லறையும் புதைகுழியும் ஒருபோதும் திருப்தி அடையாது.+

அதேபோல், மனிதனுடைய கண்களும் ஒருபோதும் திருப்தி அடையாது.

21 வெள்ளியைப் புடமிடுவது பானை, தங்கத்தைப் புடமிடுவது உலை,+

அதுபோல் ஒருவனைச் சோதிப்பது புகழ்ச்சி.

22 தானியத்தை உரலில் போட்டு இடித்து நொறுக்குவது போல,

முட்டாளை உலக்கையால் இடித்து நொறுக்கினாலும்,

அவனுடைய முட்டாள்தனம் அவனைவிட்டுப் போகாது.

23 உன் மந்தையின் நிலைமையை நீ நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

உன் ஆடுகள் ஒவ்வொன்றையும் அக்கறையோடு கவனித்துக்கொள்.*+

24 சொத்து என்றென்றும் நிலைக்காது.+

கிரீடம் எல்லா தலைமுறைக்கும் நிலைக்காது.

25 பசும்புல் வாடிவிடும், புதிதாகப் புல் முளைக்கும்,

மலைகளிலுள்ள புல்பூண்டுகள் சேகரிக்கப்படும்.

26 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் உனக்கு உடையைத் தரும்.

வெள்ளாட்டுக் கடாக்கள் உனக்கு வயலை வாங்கித் தரும்.

27 வெள்ளாடுகள் உனக்கும் உன் குடும்பத்துக்கும் போதுமான அளவு பால் கொடுக்கும்.

அதனால் உன் வேலைக்காரிகளும் பிழைப்பார்கள்.

28 யாரும் துரத்தாமலேயே பொல்லாதவர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

ஆனால், நீதிமான்கள் சிங்கத்தைப் போலத் தைரியமாக நிற்கிறார்கள்.+

 2 மக்கள் கலகம் செய்தால்* ராஜாக்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.+

ஆனால், பகுத்தறியும் திறனும் அறிவும் உள்ளவரின் உதவி இருந்தால் ராஜா நீண்ட காலம் நிலைத்திருப்பார்.+

 3 எளியவனை மோசடி செய்கிற ஏழை,+

விளைச்சலையெல்லாம் அடித்துக்கொண்டு போகிற மழைபோல் இருக்கிறான்.

 4 சட்டத்தை ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் பொல்லாதவனைப் புகழ்கிறார்கள்.

ஆனால், சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் அவர்களைப் பார்த்துக் கொதிப்படைகிறார்கள்.+

 5 அக்கிரமக்காரர்களால் நீதி நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், யெகோவாவைத் தேடுகிறவர்களால் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும்.+

 6 குறுக்கு வழிகளில் போகிற பணக்காரனைவிட,

உத்தமமாக நடக்கிற ஏழையே மேல்.+

 7 புத்தியுள்ள* மகன் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறான்,

ஆனால், பெருந்தீனிக்காரர்களோடு பழகுகிறவன் தன் அப்பாவுக்கு அவமானத்தைக் கொண்டுவருகிறான்.+

 8 வட்டி வாங்கியும்+ அநியாயமாக லாபம் சம்பாதித்தும் சேர்க்கப்படுகிற சொத்து,

ஏழைக்கு இரக்கம் காட்டுகிற மனிதனுக்குத்தான் போய்ச் சேரும்.+

 9 ஒருவன் சட்டத்தைக் கேட்க விரும்பாவிட்டால்,

அவனுடைய ஜெபம் அருவருப்பானதாக இருக்கும்.+

10 நேர்மையானவனைக் கெட்ட வழியில் கொண்டுபோகிறவன், தான் வெட்டிய குழியிலேயே விழுவான்.+

ஆனால், குற்றமற்றவன் நல்ல பலனைப் பெறுவான்.+

11 பணக்காரன் தனக்கு ஞானம் இருப்பதாக நினைத்துக்கொள்கிறான்.+

ஆனால் பகுத்தறிவுள்ள ஏழை, அவனைச் சரியாக எடைபோடுகிறான்.+

12 நீதிமான்கள் வெற்றி பெற்றால் மகா கொண்டாட்டமாக இருக்கும்.

ஆனால், பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஜனங்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.+

13 ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது.+

ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.+

14 எப்போதும் கவனமாக* நடந்துகொள்கிறவன் சந்தோஷமானவன்.

ஆனால், தன் இதயத்தை இறுகிப்போகச் செய்பவன் ஆபத்தில் சிக்கிக்கொள்வான்.+

15 ஆதரவற்ற மக்களை ஆட்சி செய்கிற பொல்லாத ராஜா,

கர்ஜிக்கிற சிங்கத்தைப் போலவும் தாக்க வருகிற கரடியைப் போலவும் இருக்கிறான்.+

16 பகுத்தறிவு இல்லாத தலைவன் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறான்.+

ஆனால், அநியாயமாக லாபம் சம்பாதிப்பதை வெறுக்கிறவன் நீண்ட காலம் வாழ்வான்.+

17 கொலைப்பழியை* சுமக்கிறவன் கல்லறைக்குப் போகும்வரை பயந்து பயந்து ஓடிக்கொண்டிருப்பான்.+

அவனுக்கு யாரும் ஆதரவு தர வேண்டாம்.

18 குற்றமற்ற வழியில் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்.+

ஆனால், குறுக்கு வழிகளில் நடக்கிறவன் திடீரென்று விழுந்துவிடுவான்.+

19 நிலத்தை உழுகிறவனுக்கு உணவுப் பஞ்சமே வராது.

ஆனால், வீணான காரியங்களைச் செய்கிறவனுக்கு வறுமைதான் வரும்.+

20 உண்மையாக நடக்கிறவன் நிறைய ஆசீர்வாதங்களைப் பெறுவான்.+

ஆனால், சீக்கிரத்தில் பணக்காரனாக நினைக்கிறவன் குறுக்கு வழியில் போய்விடுவான்.+

21 பாரபட்சம் காட்டுவது நல்லதல்ல.+

ஆனால், ஒரு துண்டு ரொட்டிக்காகக்கூட ஒருவன் தவறு செய்துவிடலாம்.

22 பொறாமைபிடித்தவன்* சொத்து சேர்ப்பதில் வெறியாக இருக்கிறான்.

ஆனால், வறுமை அவனைத் துரத்திப் பிடித்துவிடுமென்று தெரியாமல் இருக்கிறான்.

23 போலியாகப் புகழ்கிறவனைவிட

வெளிப்படையாகக் கண்டிக்கிறவனைத்தான்+ ஒருவன் பிற்பாடு பாராட்டுவான்.+

24 அப்பாவிடமும் அம்மாவிடமும் திருடிவிட்டு, “இது ஒன்றும் தப்பில்லை” என்று சொல்கிறவன்,

நாசம் உண்டாக்குகிறவனுக்குக் கூட்டாளியாக இருக்கிறான்.+

25 பேராசைபிடித்தவன்* வாக்குவாதங்களை உண்டாக்குகிறான்.

ஆனால், யெகோவாவை நம்புகிறவன் செழிப்பாக வாழ்வான்.+

26 தன்னுடைய இதயத்தையே நம்புகிறவன் முட்டாள்.+

ஆனால், ஞானமாக நடக்கிறவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.+

27 ஏழைகளுக்குக் கொடுத்து உதவுகிறவனுக்கு ஒரு குறையும் வராது.+

ஆனால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறவனுக்கு நிறைய சாபங்கள் வரும்.

28 பொல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒருவன் ஒளிந்துகொள்வான்.

ஆனால், அவர்கள் அழிந்துபோனால் நீதிமான்கள் பெருகுவார்கள்.+

29 பல தடவை கண்டித்த பிறகும் முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறவன்,+

திடீரென்று நொறுக்கப்படுவான், அவனால் மீண்டுவரவே முடியாது.+

 2 நீதிமான்கள் பெருகும்போது ஜனங்கள் சந்தோஷப்படுவார்கள்.

ஆனால், அக்கிரமக்காரன் ஆட்சி செய்யும்போது மக்கள் வேதனையில் குமுறுவார்கள்.+

 3 ஞானத்தை விரும்புகிறவன் தன்னுடைய அப்பாவின் மனதைச் சந்தோஷப்படுத்துகிறான்.+

ஆனால், விபச்சாரிகளிடம் போகிறவன் தன் சொத்தை வீணடிக்கிறான்.+

 4 அரசன் நியாயமாக நடந்தால் தேசம் நிலைநிற்கும்.+

ஆனால், லஞ்சம் வாங்க விரும்புகிறவனால் அது சீரழியும்.

 5 அடுத்தவனைப் போலியாகப் புகழ்கிறவன்

அவனுடைய கால்களுக்கு வலை விரிக்கிறான்.+

 6 கெட்டவன் செய்கிற குற்றமே அவனுக்குக் கண்ணியாகிவிடுகிறது.+

ஆனால், நீதிமான் சந்தோஷத்தில் ஆரவாரம் செய்கிறான்.+

 7 ஏழைகளின் சட்டப்பூர்வ உரிமைகள்மேல் நீதிமான் அக்கறை காட்டுகிறான்.+

ஆனால், பொல்லாதவன் அப்படிப்பட்ட அக்கறையைக் காட்டுவதே இல்லை.+

 8 பெருமையடிக்கிறவர்கள் கோபத் தீயை ஊருக்குள் கிளறிவிடுகிறார்கள்.+

ஆனால், ஞானமாக நடக்கிறவர்கள் அதைத் தணிக்கிறார்கள்.+

 9 ஞானமுள்ளவன் முட்டாளோடு வழக்காடுவது வீண்.

முட்டாளின் கூச்சலையும் கிண்டலையும்தான் அவன் கேட்க வேண்டியிருக்கும்.+

10 இரத்தவெறி பிடித்தவர்கள் அப்பாவிகளை* வெறுக்கிறார்கள்.+

நேர்மையானவர்களின் உயிரைப் பறிக்க அவர்கள் வழி தேடுகிறார்கள்.*

11 முட்டாள் தன்னுடைய உணர்ச்சிகளையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான்.+

ஆனால், ஞானமுள்ளவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறான்.+

12 ஆட்சி செய்கிறவன் பொய்யான விஷயங்களைக் காதுகொடுத்துக் கேட்டால்,

அவனுடைய ஊழியர்கள் எல்லாரும் பொல்லாதவர்களாக இருப்பார்கள்.*+

13 ஏழைக்கும் அடக்கி ஒடுக்குகிறவனுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது.

அவர்கள் இரண்டு பேருடைய கண்களுக்கும் யெகோவாதான் வெளிச்சம் கொடுக்கிறார்.*

14 ஒரு ராஜா ஏழைகளுக்கு நீதி வழங்கினால்,+

அவருடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைத்திருக்கும்.+

15 பிரம்பும்* கண்டிப்பும் ஞானத்தைப் புகட்டும்.+

ஆனால், பிள்ளையை அவனுடைய இஷ்டத்துக்கு விட்டுவிட்டால் அம்மாவுக்கு அவமானம்தான் வரும்.

16 பொல்லாதவர்கள் பெருகினால் குற்றங்களும் பெருகும்.

ஆனால், அவர்களுடைய வீழ்ச்சியை நீதிமான்கள் பார்ப்பார்கள்.+

17 உன் மகனைக் கண்டித்து வளர்த்தால் உனக்கு நிம்மதி கிடைக்கும்.

அவனால் அளவில்லாத சந்தோஷமும் கிடைக்கும்.+

18 கடவுளுடைய வழிநடத்துதல்* இல்லாவிட்டால் மக்கள் மனம்போன போக்கில் போவார்கள்.+

ஆனால், கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+

19 வெறும் வார்த்தைகளால் வேலைக்காரன் திருந்த மாட்டான்.

அவற்றைப் புரிந்துகொண்டாலும் அவன் கீழ்ப்படிய மாட்டான்.+

20 அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுகிறவனைப் பார்த்திருக்கிறாயா?+

அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.+

21 வேலைக்காரனுக்குச் சின்ன வயதிலிருந்தே செல்லம் கொடுத்துவந்தால்,

பிற்பாடு நன்றிகெட்டவனாக ஆகிவிடுவான்.

22 கோபக்காரன்* சண்டையைக் கிளப்புகிறான்.+

ஆவேசப்படுகிறவன்* நிறைய குற்றங்களைச் செய்துவிடுகிறான்.+

23 மனிதனுடைய தலைக்கனம் அவனைத் தாழ்த்தும்.+

ஆனால், மனத்தாழ்மை மகிமையைத் தேடித்தரும்.+

24 திருடனுடைய கூட்டாளி தன்னையே வெறுக்கிறான்.

குற்றத்தைத் தெரிவிக்க வேண்டுமென்ற அறிவிப்பைக் கேட்டும், அவன் தெரிவிக்காமல் இருந்துவிடுகிறான்.+

25 மனிதனைப் பார்த்து நடுங்குகிறவன் கண்ணியில் மாட்டிக்கொள்கிறான்.+

ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் பாதுகாக்கப்படுவான்.+

26 அரசனைச் சந்தித்து நீதி கேட்க* நிறைய பேர் ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், யெகோவாதான் ஒருவனுக்கு நியாயம் வழங்குகிறார்.+

27 அநியாயம் செய்கிறவனை நீதிமான் அருவருக்கிறான்.+

ஆனால், நேர்மையாக நடக்கிறவனைப் பொல்லாதவன் அருவருக்கிறான்.+

30 யாக்கே என்பவரின் மகன் ஆகூர், இத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன முக்கியமான விஷயங்கள்.

 2 மற்ற யாரையும்விட நான்தான் எதுவும் தெரியாதவனாக இருக்கிறேன்.+

மனிதர்களுக்கு இருக்க வேண்டிய புத்தி* எனக்கு இல்லை.

 3 நான் ஞானத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.

மகா பரிசுத்தமானவரைப் பற்றிய அறிவு எனக்கு இல்லை.

 4 வானத்துக்கு ஏறி இறங்கியவர் யார்?+

காற்றைத் தன் இரண்டு கைகளிலும் பிடித்தவர் யார்?

தண்ணீரைத் தன் உடையில் கட்டிவைத்தவர் யார்?+

பூமியின் எல்லைகளையெல்லாம் குறித்தவர் யார்?+

அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனின் பெயர் என்ன? உனக்குத் தெரியுமா?

 5 கடவுளுடைய ஒவ்வொரு வார்த்தையும் புடமிடப்பட்டது.+

அவரிடம் தஞ்சம் புகுந்தவர்களுக்கு அவர் ஒரு கேடயம்.+

 6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் சேர்க்காதே.+

அப்படிச் சேர்த்தால் அவர் உன்னைக் கண்டிப்பார்.

நீ ஒரு பொய்யன் என்பது நிரூபணமாகும்.

 7 கடவுளே, நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்

எனக்காக இரண்டு காரியங்களை நீங்கள் செய்ய வேண்டும்.

 8 பொய் புரட்டை என்னைவிட்டுத் தூரமாக நீக்கிவிடுங்கள்.+

எனக்கு வறுமையையோ அதிக செல்வத்தையோ கொடுக்காமல்,

தேவையான அளவு உணவு மட்டும் கொடுங்கள்.+

 9 ஏனென்றால், எல்லா வசதிகளும் கிடைத்த திருப்தியில், “யார் அந்த யெகோவா?” என்று நான் கேட்டுவிடக் கூடாது.+

அதேபோல், வறுமையால் திருடனாக மாறி, உங்களுடைய பெயரைக் களங்கப்படுத்திவிடக் கூடாது.

10 வேலைக்காரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் எஜமானிடம் சொல்லாதே.

அப்படிச் சொன்னால், அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாக ஆகிவிடுவாய்.+

11 அப்பாவைச் சபிக்கிற தலைமுறையும்

அம்மாவைப் பாராட்டாத தலைமுறையும் உண்டு.+

12 அசுத்தமானவர்களாக இருந்தாலும்கூட

சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிற தலைமுறையும் உண்டு.+

13 கண்களில் அளவுக்கு மீறிய ஆணவமும்+

பார்வையில் அளவுக்கு மீறிய அகம்பாவமும் உள்ள தலைமுறையும் உண்டு.

14 வாள் போன்ற பற்களையும்

வெட்டுக்கத்தி போன்ற தாடைகளையும் கொண்ட தலைமுறையும் உண்டு.

அது உலகத்திலுள்ள ஏழை எளியவர்களை விழுங்குகிறது.+

15 “கொடு! கொடு!” என்று கத்துகிற இரண்டு மகள்கள் அட்டைப்பூச்சிகளுக்கு உண்டு.

திருப்தியே அடையாத மூன்று காரியங்கள் உண்டு.

“போதும்!” என்று ஒருபோதும் சொல்லாத நான்கு காரியங்கள் உண்டு.

16 அவை: கல்லறை,+ மலடியின் கர்ப்பப்பை,

தண்ணீர் இல்லாத நிலம்,

“போதும்!” என்று சொல்லாத நெருப்பு.

17 ஒருவன் தன் அப்பாவை ஏளனம் செய்து, அம்மாவின் பேச்சை மதிக்காமல் போனால்,+

அவனுடைய கண்களைப் பள்ளத்தாக்கில் திரிகிற அண்டங்காக்கைகள் கொத்தி எடுக்கும்,

இளம் கழுகுகள் அவற்றைத் தின்றுவிடும்.+

18 என்னுடைய அறிவுக்கு எட்டாத* மூன்று விஷயங்கள் இருக்கின்றன.

எனக்குப் புரியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.

19 அவை: வானத்தில் பறக்கிற கழுகின் வழி,

பாறையில் ஊர்ந்துபோகிற பாம்பின் வழி,

கடலில் மிதந்துசெல்கிற கப்பலின் வழி,

இளம் பெண்ணோடு பழகுகிற ஆணின் வழி.

20 கணவனுக்குத் துரோகம் செய்கிற பெண்ணின் வழி இதுதான்:

அவள் சாப்பிட்டுவிட்டு, வாயைத் துடைத்துக்கொள்கிறாள்.

பின்பு, “நான் எந்தத் தப்பும் செய்யவில்லை” என்று சொல்கிறாள்.+

21 இந்தப் பூமியையே அதிர வைக்கிற மூன்று விஷயங்கள் இருக்கின்றன.

இந்தப் பூமியால் தாங்க முடியாத நான்கு விஷயங்கள் இருக்கின்றன.

22 அவை: ஓர் அடிமை அரசனாக ஆட்சி செய்வது,+

ஒரு முட்டாள் வயிறுமுட்ட சாப்பிடுவது,

23 வெறுக்கப்பட்ட* பெண் ஒருவனுக்கு மனைவியாவது,

எஜமானியின் இடத்தை வேலைக்காரி பிடித்துக்கொள்வது.+

24 இந்தப் பூமியிலுள்ள மிகச் சிறிய உயிரினங்களில் நான்கு உண்டு.

ஆனால், அவை இயல்பாகவே* ஞானமுள்ளவை.+

25 அவை: அற்பமான ஜீவன்களாக இருந்தும்

கோடைக் காலத்தில் உணவைச் சேர்த்து வைக்கிற எறும்புகள்.+

26 பலம் இல்லாத ஜீவன்களாக இருந்தும்

பாறைகளில் பொந்துகளை அமைக்கிற கற்பாறை முயல்கள்.*+

27 அரசன் இல்லாமலேயே,

அணி அணியாக முன்னேறிப் போகிற வெட்டுக்கிளிகள்.+

28 கால்களால் சுவரைப் பற்றிக்கொண்டு,

ராஜாவின் அரண்மனைக்குள் போகிற வீட்டுப் பல்லி.+

29 கம்பீரமாய் நடக்கிற மூன்று உண்டு.

வீறுநடை போடுகிற நான்கு உண்டு.

30 அவை: விலங்குகளிலேயே மகா பலம்படைத்ததும்,

யாரைக் கண்டும் பயந்து ஓடாததுமான சிங்கம்;+

31 வேட்டை நாய்; வெள்ளாட்டுக் கடா;

ராஜாவின் தலைமையில் போகும் படை.

32 உன்னை நீயே முட்டாள்தனமாக உயர்த்தியிருந்தால்,+

அல்லது அப்படிச் செய்யத் திட்டம் போட்டிருந்தால்,

உன் கையால் வாயை மூடிக்கொள்.+

33 பாலைக் கடைந்தால் வெண்ணெய் வருவது போலவும்,

மூக்கைப் பிசைந்தால் இரத்தம் வருவது போலவும்,

கோபத்தைக் கிளறினால் சண்டைகள் வரும்.+

31 லேமுவேல் ராஜாவின் வார்த்தைகள்; அவருடைய அம்மா அவருக்குச் சொன்ன முக்கியமான அறிவுரைகள்:+

 2 என் மகனே, என் வயிற்றில் பிறந்தவனே,

என் நேர்த்திக்கடன்களின் பலனாகக் கிடைத்த மகனே,+

நான் உனக்கு என்ன சொல்வேன்?

 3 உன்னுடைய வீரியத்தைப் பெண்களிடம் வீணடிக்காதே.+

ராஜாக்களை அழிவுக்குக் கொண்டுபோகிற வழிகளில் போகாதே.+

 4 திராட்சமது குடிப்பது ராஜாக்களுக்கு நல்லதல்ல.

லேமுவேலே, அது ராஜாக்களுக்கு நல்லதல்ல.

“மதுபானம் எங்கே?” என்று கேட்பதும் அரசர்களுக்கு அழகல்ல.+

 5 குடித்தால் அவர்கள் சட்டத்தை மறந்துவிடுவார்கள்,

எளியவர்களின் உரிமைகளைப் பறித்துவிடுவார்கள்.

 6 சாகப்போகிறவர்களுக்கு மதுபானத்தைக் கொடுங்கள்.+

கடும் வேதனையில் இருப்பவர்களுக்குத் திராட்சமதுவை ஊற்றிக் கொடுங்கள்.+

 7 அவர்கள் குடித்துவிட்டுத் தங்கள் வறுமையை மறக்கட்டும்;

தங்கள் கவலைகளை நினைக்காமல் இருக்கட்டும்.

 8 வாய் பேசாதவர்களுக்காக நீ பேசு.

சாவின் விளிம்பில் இருக்கிறவர்களுடைய உரிமைகளுக்காகப் பாடுபடு.+

 9 தயங்காமல் பேசு, நீதி வழங்கு.

ஏழை எளியவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடு.*+

א [ஆலெஃப்]

10 திறமைசாலியான* மனைவியை யாரால் கண்டுபிடிக்க முடியும்?+

அவளுடைய மதிப்பு பவளங்களைவிட* மிக உயர்ந்தது.

ב [பேத்]

11 அவளுடைய கணவன் அவளை நெஞ்சார நம்புகிறான்.

அருமையான எதுவும் அவனுக்குக் கிடைக்காமல் போவதில்லை.

ג [கீமெல்]

12 வாழ்நாள் முழுக்க அவள் அவனுக்கு நல்லதையே செய்கிறாள்.

அவனுக்குக் கஷ்டம் கொடுப்பதே இல்லை.

ד [டாலத்]

13 கம்பளி நூலையும் நாரிழையையும்* அவள் சேகரிக்கிறாள்.

தன் கைகளால் உற்சாகமாக வேலை செய்கிறாள்.+

ה [ஹே]

14 வியாபாரியின் கப்பல்களைப்+ போல அவள் இருக்கிறாள்.

வெகு தூரத்திலிருந்து உணவுப் பொருள்களைக் கொண்டுவருகிறாள்.

ו [வா]

15 விடிவதற்கு முன்பே எழுந்துவிடுகிறாள்.

வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கிறாள்.

வேலைக்காரிகளுக்கு அவர்களுடைய பங்கைத் தருகிறாள்.+

ז [ஸாயின்]

16 கவனமாக யோசித்துப் பார்த்த பிறகு ஒரு வயலை வாங்குகிறாள்.

தன் சம்பாத்தியத்தை வைத்து திராட்சைத் தோட்டம் போடுகிறாள்.

ח [ஹேத்]

17 கடினமாக உழைக்கத் தன்னைத் தயாராக்குகிறாள்.+

தன் கையால் பாடுபட்டு வேலை செய்கிறாள்.

ט [டேத்]

18 வியாபாரத்தை லாபகரமாக நடத்துகிறாள்.

ராத்திரியில்கூட அவளுடைய விளக்கு அணைவதில்லை.

י [யோத்]

19 நூற்புக் கோலையும் நூற்புக் கதிரையும்* பிடித்து

துணி நெய்கிறாள்.+

כ [காஃப்]

20 எளியவர்களுக்குக் கைகொடுக்கிறாள்.

ஏழைகளுக்கு வாரி வழங்குகிறாள்.+

ל [லாமெத்]

21 பனிக்காலத்தில் தன்னுடைய குடும்பத்தாரைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாள்.

ஏனென்றால், அவர்கள் எல்லாரும் கதகதப்பான* உடைகளைப் போட்டிருக்கிறார்கள்.

מ [மேம்]

22 தன் படுக்கை விரிப்புகளை அவளே நெய்கிறாள்.

நாரிழையிலும் ஊதா நிற கம்பளி நூலிலும் நெய்த உடையை உடுத்தியிருக்கிறாள்.

נ [நூன்]

23 அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்.+

ஊர்ப் பெரியோர்களோடு* சேர்ந்து உட்கார்ந்திருப்பவன்.

ס [சாமெக்]

24 அவள் நாரிழையில் உடைகளை* நெய்து விற்கிறாள்.

இடுப்புவார்களை வியாபாரிகளிடம் விற்கிறாள்.

ע [ஆயின்]

25 பலத்தையும் அழகையும் ஆடைபோல் அணிந்திருக்கிறாள்.

எதிர்காலத்தை நம்பிக்கையோடு பார்க்கிறாள்.

פ [பே]

26 அவளுடைய வாய் ஞானத்தை உதிர்க்கிறது.+

அவளுடைய நாவில் அன்பின் சட்டம்* இருக்கிறது.

צ [சாதே]

27 வீட்டுக் காரியங்களைக் கண்ணும்கருத்துமாக அவள் கவனித்துக்கொள்கிறாள்.

சோம்பேறித்தனம் என்பதே அவளிடம் கிடையாது.+

ק [கோஃப்]

28 அவளுடைய பிள்ளைகள் எழுந்து நின்று அவளைப் புகழ்கிறார்கள்.

அவளுடைய கணவனும் எழுந்து நின்று அவளைப் பாராட்டுகிறான்.

ר [ரேஷ்]

29 “திறமைசாலியான* பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்,

ஆனால், நீதான் அவர்கள் எல்லாரையும்விட அருமையானவள்!”

ש [ஷீன்]

30 வசீகரம் பொய்யானது, அழகும் வீணானது,*+

ஆனால், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெண்தான் புகழப்படுவாள்.+

ת [ட்டா]

31 அவள் செய்கிற எல்லாவற்றுக்கும் வெகுமதி கொடுங்கள்.+

அவற்றைப் பற்றி நகரவாசல்களில் புகழ்ந்து பேசுங்கள்.+

வே.வா., “ஆழமான புரிந்துகொள்ளுதலோடும்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள்.”

வே.வா., “நீதிக்கதையையும்.”

வே.வா., “பயபக்தி காட்டுவதே.”

வே.வா., “தங்களுடைய சதித்திட்டங்களால் திக்குமுக்காடிப்போவார்கள்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

அதாவது, “நடைமுறை ஞானத்தை.”

வே.வா., “பற்றுமாறாமல்.”

வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களிடம்.”

வே.வா., “உத்தமமாக நடக்கிறவர்கள்.”

வே.வா., “சட்டத்தை.”

வே.வா., “சொந்த புத்திமேல் சாயாதே.”

வே.வா., “உன் வருமானத்தில் கிடைக்கிற மிகச் சிறந்தவற்றையும்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அநேகமாக, முந்தின வசனங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் குணங்களைக் குறிக்கலாம்.

அதாவது, “நடைமுறை ஞானத்தையும்.”

வே.வா., “எதன்மேலும் மோதாது.”

வே.வா., “நம்பிக்கையின் ஊற்றாக.”

வே.வா., “கடமைப்பட்டவர்களுக்கு.”

வே.வா., “சாந்தமானவர்களுக்கு.”

வே.வா., “அவமரியாதையைப் பெருமையாக நினைக்கிறார்கள்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “சட்டத்தை.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலையும்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “உயிரின் ஊற்று அதிலிருந்தே புறப்படுகிறது.”

அல்லது, “உன் பாதையைப் பற்றிக் கவனமாக யோசி.”

நே.மொ., “உதடுகள்.”

நே.மொ., “வாய்.”

மூலமொழியில், பாலஸ்தீனாவில் வளரும் ஒரு கசப்பான செடி குறிப்பிடப்பட்டுள்ளது.

வே.வா., “நவ்வி மானை.”

வே.வா., “பொல்லாதவனாகவும்.”

வே.வா., “சொல்பவன்.”

வே.வா., “மூட்டிவிடுபவன்.”

நே.மொ., “காயங்களும்.”

வே.வா., “சட்டங்களை.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “அனுபவம் இல்லாத.”

வே.வா., “விபச்சாரியின் உடையை.”

அதாவது, “லினன்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

இது ஒருவித வாசனைப் பொருள்.

வே.வா., “விலங்கிடப்பட்டு.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “நடைமுறை ஞானமும்.”

வே.வா., “நெறிமுறைகளும்.”

வே.வா., “பிரசவ வலியோடு பிறப்பிக்கப்பட்டேன்.”

வே.வா., “தினமும் என் வீட்டு வாசலில் விழித்திருந்து.”

வே.வா., “அங்கீகாரத்தையும்.”

நே.மொ., “வெட்டி வைத்திருக்கிறாள்.”

நே.மொ., “அவள்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலின்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களால்.”

வே.வா., “நீதிமான் எடுத்திருக்கும் நல்ல பெயர்.”

அல்லது, “வாழ்வின் வழியில் நடக்கிறான்.”

வே.வா., “வழிகாட்டுகின்றன.”

வே.வா., “ஒருவரைச் செல்வந்தராக்கும்.”

வே.வா., “கவலையையும்; கஷ்டத்தையும்.”

வே.வா., “தன்னை அனுப்பியவருக்கு.”

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “விசுவாசதுரோகி.”

வே.வா., “மீட்பு.”

வே.வா., “மாறாத அன்பு காட்டுகிறவன்.”

வே.வா., “அவமானத்தை.”

நே.மொ., “இதயம்.”

நே.மொ., “வாரி இறைக்கிறவன்.”

வே.வா., “தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சுகிறவனுக்குத் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”

கடவுளுடைய பிரியத்தையோ மனிதர்களுடைய பிரியத்தையோ குறிக்கலாம்.

வே.வா., “அவமானத்தை.”

வே.வா., “அங்கீகாரத்தை.”

நே.மொ., “இதயம்.”

வே.வா., “அதே நாளில்.”

வே.வா., “ஒருவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்.”

வே.வா., “தான் கண்டிக்கப்படுவதை.”

நே.மொ., “உழைப்பவன் புஷ்டியாவான்.”

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “ஒன்றுகூடி ஆலோசனை செய்கிறவர்களிடம்.”

வே.வா., “சட்டம்.”

வே.வா., “அவன்.”

வே.வா., “கண்டித்துத் திருத்தாதவன்; தண்டிக்காதவன்.”

அல்லது, “உடனடியாக.”

அல்லது, “மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள்.”

வே.வா., “அனுபவம் இல்லாதவன்.”

வே.வா., “வெறித்தனமாக.”

வே.வா., “அனுபவம் இல்லாதவர்கள்.”

வே.வா., “உயிர்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

வே.வா., “அறிவை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறது.”

வே.வா., “கடுமையாகத் தோன்றுகிறது.”

வே.வா., “மேயும்.”

வே.வா., “நல்ல இதயம் உள்ளவனுக்கு.”

வே.வா., “குழப்பமாக.”

நே.மொ., “கொழுத்த காளையைவிட.”

வே.வா., “அவமானத்தை.”

வே.வா., “எப்படிப் பதில் சொல்வதென்று கவனமாகச் சிந்திக்கும்; பேசுவதற்கு முன்னால் யோசிக்கும்.”

வே.வா., “ஒருவரின் சந்தோஷப் பார்வை.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “சில யோசனைகளை அடுக்கி.”

வே.வா., “சரியான பதில்.”

வே.வா., “தவிர்க்கிறான்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலை.”

வே.வா., “சாந்தமானவர்களோடு.”

நே.மொ., “நன்மை.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

வே.வா., “இனிமையாக.”

நே.மொ., “அவனுடைய வாய்தான்.”

வே.வா., “மகிமையான.”

வே.வா., “அமைதியான.”

அதாவது, “எஜமானின் மகனை.”

வே.வா., “பேரப்பிள்ளைகள்.”

வே.வா., “பிள்ளைகளுக்கு.”

வே.வா., “பெற்றோர்கள்.”

வே.வா., “நல்ல பேச்சு.”

வே.வா., “பெரிய மனிதனுக்கு.”

வே.வா., “தயவைப் பெற்றுத்தரும்.”

நே.மொ., “மூடுகிறவன்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

வே.வா., “கண்டித்தாலே.”

வே.வா., “புத்தி.”

வே.வா., “உத்தரவாதம் கொடுத்து.”

நே.மொ., “இதயம்.”

வே.வா., “எலும்புகளை உலர்ந்துபோகச் செய்யும்.”

வே.வா., “நீதிமானுக்கு அபராதம் விதிப்பது.”

வே.வா., “சுயநல.”

அதாவது, “நடைமுறை ஞானத்தையும்.”

வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”

வே.வா., “நண்பனாக.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

வே.வா., “நண்பனை.”

வே.வா., “அனுக்கிரகத்தையும்.”

வே.வா., “தாராள குணமுள்ளவனின்.”

நே.மொ., “நன்மையை.”

வே.வா., “தனக்கு எதிரான குற்றத்தை.”

வே.வா., “நச்சரிக்கிற.”

வே.வா., “அவர் அவனுக்குப் பலன் கொடுப்பார்.”

வே.வா., “யெகோவாவின் நோக்கம்தான்; ஆலோசனைதான்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

அல்லது, “அறுவடைக் காலத்தில் அவன் தேடும்போது எதுவும் கிடைக்காது.”

வே.வா., “மனிதனுடைய உள்ளெண்ணங்கள்.”

வே.வா., “மாறாத அன்பு காட்டுவதாக.”

வே.வா., “இரண்டு விதமான எடைக்கற்களும், இரண்டு விதமான அளவைகளும்.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

வே.வா., “வேறு தேசத்தைச் சேர்ந்தவருக்காக.”

வே.வா., “ஒன்றுகூடி ஆலோசனை செய்தால்.”

வே.வா., “பேசி மயக்குகிறவர்களோடு.”

வே.வா., “இரண்டு விதமான எடைக்கற்களை.”

வே.வா., “வாய்க்கால்கள்போல்.”

வே.வா., “உள்ளெண்ணங்களை.”

அல்லது, “சாவை விரும்புகிறவர்களுக்கு மறைந்துபோகும் மூடுபனி போன்றது.”

வே.வா., “நச்சரிக்கிற.”

வே.வா., “விவேகத்தைச் சம்பாதிக்கும்போது.”

வே.வா., “என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறான்.”

வே.வா., “செத்து செயலிழந்து போனவர்களோடு.”

வே.வா., “நச்சரிக்கிறவளும்.”

இதற்கான எபிரெய வார்த்தை அசட்டுத் துணிச்சலோடு நடப்பதையும், வரம்பு மீறுவதையும், பொறுப்பில் உள்ளவர்களை அநாவசியமாக முந்திக்கொள்வதையும் குறிக்கிறது.

வே.வா., “வெட்கங்கெட்ட விதமாக நடந்துகொண்டு.”

நே.மொ., “என்றென்றும் பேசுவான்.”

வே.வா., “மீட்பு.”

வே.வா., “அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.”

வே.வா., “சரியான வழியில்.”

நே.மொ., “கோபாவேசத்தின் கோல்.”

வே.வா., “வழக்குகளும்.”

நே.மொ., “யெகோவாவின் கண்கள் அறிவைக் காக்கும்.”

வே.வா., “கண்டித்துத் திருத்தும்.”

நே.மொ., “உன் தொண்டையில் கத்தியை வை.”

அல்லது, “உன் சொந்த புத்தியை நம்பாதே.”

வே.வா., “மீட்கிறவர்.”

நே.மொ., “சிறுநீரகம்.”

வே.வா., “சம்பாதி.”

வே.வா., “புரிந்துகொள்ளுதலையும்.”

வே.வா., “மங்கிப்போன.”

வே.வா., “கலப்புத் திராட்சமதுவை.”

வே.வா., “குடும்பம்.”

வே.வா., “முட்டாளின் திட்டங்கள்.”

வே.வா., “வேதனையில்.”

வே.வா., “உள்ளெண்ணங்களை.”

அதாவது, “எதிரிமேல்.”

வே.வா., “கலகக்காரர்களோடு.”

அல்லது, “நேரடியாகப் பதில் சொல்வது முத்தம் கொடுப்பதுபோல் இருக்கிறது.”

வே.வா., “குடும்பத்தை.”

வே.வா., “மற்றவர்களுடைய ரகசியங்களை.”

வே.வா., “வதந்தியை.”

வே.வா., “சாந்தமான.”

வே.வா., “தண்டாயுதத்தையும்.”

வே.வா., “நம்ப முடியாதவனை.” அல்லது, “துரோகியை.”

அதாவது, ஒருவரைச் சாந்தப்படுத்தி, அவருடைய கல்நெஞ்சைக் கரைய வைப்பதைக் குறிக்கிறது.

வே.வா., “நச்சரிக்கிற.”

அல்லது, “காரணமில்லாமல் விடுகிற சாபம் பலிக்காது.”

வே.வா., “நீ ஏன் அவனுக்குச் சமமாய் ஆக வேண்டும்?”

வே.வா., “தள்ளாடுகிற காலும்.”

வே.வா., “எல்லாரையும்.”

கீல் என்பது கதவைத் திறந்து மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகப் பட்டை.

அல்லது, “தேவையில்லாமல் தலையிடுவதும்.”

வே.வா., “உயிரைப் பறிக்கும்.”

வே.வா., “பேராசையோடு விழுங்குகிற உணவு.”

வே.வா., “ஏனென்றால், அவனுடைய உள்ளம் முழுவதும் அருவருப்பானது.”

அல்லது, “போலியான.”

வே.வா., “எனக்குச் சவால் விடுகிறவனுக்கு.”

வே.வா., “அதன் விளைவுகளை அனுபவிக்கிறான்.”

வே.வா., “வேறு தேசத்தைச் சேர்ந்தவருக்காக.”

வே.வா., “நச்சரிக்கிற.”

வே.வா., “கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்; உன் ஆடுகளுக்குக் கவனம் செலுத்து.”

வே.வா., “சட்டவிரோதமாக நடந்தால்.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல் உள்ள.”

வே.வா., “பயத்தோடு.”

வே.வா., “இரத்தப்பழியை.”

வே.வா., “பேராசைபிடித்தவன்.”

அல்லது, “அகம்பாவம்பிடித்தவன்.”

வே.வா., “குற்றமற்றவர்களை.”

அல்லது, “நேர்மையானவர்களோ தங்களுடைய உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள்.”

வே.வா., “ஆகிவிடுவார்கள்.”

அதாவது, “யெகோவா அவர்களுக்கு உயிர் கொடுக்கிறார்.”

வே.வா., “புத்திமதியும்; தண்டனையும்.”

வே.வா., “தரிசனம்; வெளிப்படுத்துதல்.”

வே.வா., “கோபப்படும் சுபாவமுள்ளவன்.”

வே.வா., “ஆவேசப்படும் சுபாவமுள்ளவன்.”

அல்லது, “அரசனின் தயவைப் பெற.”

வே.வா., “புரிந்துகொள்ளுதல்.”

வே.வா., “நான் பார்த்து அதிசயப்படுகிற.”

வே.வா., “நேசிக்கப்படாத.”

வே.வா., “மிக மிக.”

இவை கற்பாறைகளுக்கு நடுவே வாழ்கிற ஒருவகையான பெரிய முயல்கள்.

வே.வா., “ஏழை எளியவர்களுக்காக வாதாடு.”

வே.வா., “அருமையான.”

சொல் பட்டியலைப் பாருங்கள்.

அதாவது, “லினனையும்.”

துணி நெய்ய இவை பயன்படுத்தப்பட்டன.

நே.மொ., “இரண்டு.”

வே.வா., “மூப்பர்களோடு.”

வே.வா., “உள்ளாடைகளை.”

வே.வா., “அன்பான போதனை; மாறாத அன்பின் சட்டம்.”

வே.வா., “அருமையான.”

வே.வா., “சீக்கிரத்தில் மறைந்துபோகலாம்.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்