யோவான் எழுதியது
1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+ 2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார். 3 எல்லாம் அவர் மூலமாகத்தான் உண்டானது,+
அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை. 4 அவர் மூலம் வாழ்வு உண்டானது, அந்த வாழ்வு மனிதர்களுக்கு ஒளியாக இருந்தது.+ 5 அந்த ஒளி, இருளில் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது;+ இருள் அதை அடக்கி ஆளவில்லை.
6 கடவுளுடைய பிரதிநிதியாக அனுப்பப்பட்ட ஒரு மனிதர் வந்தார்; அவருடைய பெயர் யோவான்.+ 7 அவர் ஒரு சாட்சியாக வந்தார்; எல்லா விதமான மக்களும் தன் மூலம் அந்த ஒளியில் நம்பிக்கை வைப்பதற்காக அந்த ஒளியைப் பற்றிச் சாட்சி கொடுக்க வந்தார்.+ 8 அவர் அந்த ஒளி அல்ல,+ ஆனால் அந்த ஒளியைப் பற்றிச் சாட்சி கொடுக்க வந்தவர்.
9 எல்லா விதமான மனிதர்களுக்கும் ஒளி கொடுக்கிற அந்த உண்மையான ஒளி இந்த உலகத்துக்குச் சீக்கிரத்தில் வரவிருந்தார்.+ 10 அவர்* இந்த உலகத்தில் இருந்தார்.+ அவர் மூலமாக இந்த உலகம் உண்டானது,+ ஆனால் இந்த உலகம் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை. 11 அவர் தன்னுடைய சொந்த தேசத்துக்கே வந்தார், ஆனால் அவருடைய சொந்த மக்களே அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 இருந்தாலும், அவரை ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் கடவுளுடைய பிள்ளைகளாகும் உரிமையைக் கொடுத்தார்.+ ஏனென்றால், அவருடைய பெயரில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தார்கள்.+ 13 அவர்கள் இரத்தத்தாலோ இயற்கையான ஆசையாலோ ஆண்மகனின் விருப்பத்தாலோ பிறந்தவர்கள் அல்ல, கடவுளால் பிறந்தவர்கள்.+
14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார். 15 (அவரைப் பற்றி யோவான் சாட்சி கொடுத்தார்; “‘எனக்குப் பின்னால் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார்; ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’ என நான் சொன்னது இவரைப் பற்றித்தான்” என்று சத்தமாகச் சொன்னார்.)+ 16 அவர் அளவற்ற கருணை நிறைந்தவராக இருந்தார், அதனால் அவரிடமிருந்து நாம் எல்லாரும் அளவற்ற கருணைக்குமேல் அளவற்ற கருணையைப் பெற்றோம். 17 மோசேயின் மூலம் திருச்சட்டம் கொடுக்கப்பட்டது;+ ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலம்+ அளவற்ற கருணையும்+ சத்தியமும் கிடைத்தன. 18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+
19 யூதர்கள் எருசலேமிலிருந்து ஆலய குருமார்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, “நீ யார்?”+ என்று கேட்டபோது, 20 அவர் தயங்காமல், “நான் கிறிஸ்து அல்ல” என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். 21 அதற்கு அவர்கள், “அப்படியானால், நீ எலியாவா?”+ என்று கேட்டார்கள். அப்போது அவர், “இல்லை” என்று சொன்னார். “நீதான் வரவேண்டிய தீர்க்கதரிசியா?”+ என்று கேட்டார்கள். அதற்கும் அவர், “இல்லை!” என்று சொன்னார். 22 அதனால் அவர்கள், “அப்படியானால், நீ யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும். உன்னைப் பற்றி என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். 23 அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு* வழியைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்”+ என்றார். 24 அப்போது, பரிசேயர்களால் அனுப்பப்பட்ட அந்த ஆட்கள் அவரிடம், 25 “நீ கிறிஸ்துவும் அல்ல, எலியாவும் அல்ல, வரவேண்டிய தீர்க்கதரிசியும் அல்ல என்றால், எதற்காக ஞானஸ்நானம் கொடுக்கிறாய்?” என்று கேட்டார்கள். 26 அதற்கு யோவான், “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார், அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாது. 27 அவர் எனக்குப்பின் வரப்போகிறவர்; அவருடைய செருப்புகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை”+ என்று சொன்னார். 28 இவையெல்லாம் யோர்தானுக்கு அக்கரையில் பெத்தானியாவில் நடந்தன. அங்கேதான் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+
29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+ 30 ‘எனக்குப்பின் வரப்போகிறவர் எனக்கு முன்னால் போயிருக்கிறார். ஏனென்றால், அவர் எனக்கு முன்பிருந்தே இருக்கிறார்’+ என்று நான் சொன்னது இவரைப் பற்றித்தான். 31 எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை. ஆனால், இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்தேன்”+ என்று சொன்னார். 32 அதோடு, “கடவுளுடைய சக்தி புறாவைப் போல் பரலோகத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதைப் பார்த்தேன்.+ 33 எனக்கும்கூட இவரைத் தெரியவில்லை; ஆனால், தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுப்பதற்கு என்னை அனுப்பியவர், ‘கடவுளுடைய சக்தி இறங்கி யார்மேல் தங்குவதைப் பார்க்கிறாயோ+ அவர்தான் அந்தச் சக்தியால் ஞானஸ்நானம் கொடுப்பவர்’+ என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34 அதை நான் பார்த்தேன், அதனால் இவர்தான் கடவுளுடைய மகன்+ என்று சாட்சி கொடுத்துவருகிறேன்” என்று சொன்னார்.
35 அடுத்த நாள், மறுபடியும் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரோடு யோவான் நின்றுகொண்டிருந்தார். 36 அப்போது இயேசு நடந்துபோவதைப் பார்த்து, “இதோ! கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி”+ என்று சொன்னார். 37 அவர் அப்படிச் சொன்னதை அந்தச் சீஷர்கள் இரண்டு பேரும் கேட்டவுடன், இயேசுவின் பின்னால் போனார்கள். 38 அவர்கள் தன் பின்னால் வருவதை இயேசு திரும்பிப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “ரபீ (இதற்கு “போதகரே” என்று அர்த்தம்), நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். 39 அதற்கு அவர், “நீங்களே வந்து பாருங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவர் தங்கியிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள், அன்று அவருடன் தங்கினார்கள். அப்போது, சுமார் பத்தாம் மணிநேரமாக* இருந்தது. 40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவின் பின்னால் போன இரண்டு பேரில் ஒருவர் அந்திரேயா,+ இவர் சீமோன் பேதுருவின் சகோதரர். 41 இவர் முதலில் போய்த் தன்னுடைய சொந்த சகோதரராகிய சீமோனைப் பார்த்து, “நாங்கள் மேசியாவைக் கண்டுகொண்டோம்”+ என்று சொன்னார். (மேசியா என்பது “கிறிஸ்து” என்று மொழிபெயர்க்கப்படுகிறது). 42 பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+
43 அடுத்த நாள், இயேசு கலிலேயாவுக்குப் போக விரும்பினார். அப்போது பிலிப்புவைப்+ பார்த்து, “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார். 44 அந்திரேயாவையும் பேதுருவையும் போலவே இந்த பிலிப்புவும் பெத்சாயிதா நகரத்தைச் சேர்ந்தவர். 45 இவர் நாத்தான்வேலைச்+ சந்தித்து, “தீர்க்கதரிசிகளும், திருச்சட்டத்தில் மோசேயும் யாரைப் பற்றி எழுதினார்களோ அவரை நாங்கள் கண்டுகொண்டோம். யோசேப்பின்+ மகனும் நாசரேத்தைச் சேர்ந்தவருமான இயேசுதான் அவர்” என்று சொன்னார். 46 ஆனால் நாத்தான்வேல் அவரிடம், “நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பிலிப்பு, “நீயே வந்து பார்” என்று சொன்னார். 47 நாத்தான்வேல் தன்னை நோக்கி வருவதை இயேசு பார்த்து, “இதோ! கள்ளம்கபடமில்லாத உத்தம இஸ்ரவேலன்”+ என்று சொன்னார். 48 அதற்கு நாத்தான்வேல், “என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுவதற்கு முன்னால் நீ அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உன்னைப் பார்த்தேன்” என்று சொன்னார். 49 அதற்கு நாத்தான்வேல், “ரபீ, நீங்கள்தான் கடவுளுடைய மகன், நீங்கள்தான் இஸ்ரவேலின் ராஜா”+ என்று சொன்னார். 50 அப்போது இயேசு அவரிடம், “அத்தி மரத்தின் கீழ் உன்னைப் பார்த்தேன் என்று சொன்னதால்தான் நம்புகிறாயா? இவற்றைவிட பெரிய காரியங்களை நீ பார்ப்பாய்” என்று சொன்னார். 51 பின்பு, அவரிடம், “வானம் திறந்திருப்பதையும் தேவதூதர்கள் மனிதகுமாரனிடம் இறங்குவதையும் அவரிடமிருந்து ஏறுவதையும்+ பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
2 மூன்றாம் நாள் கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் ஒரு கல்யாண விருந்து நடந்தது. இயேசுவின் அம்மா அங்கே வந்திருந்தார். 2 இயேசுவும் அவருடைய சீஷர்களும்கூட அந்தக் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
3 திராட்சமது கிட்டத்தட்ட தீர்ந்துபோனபோது இயேசுவின் அம்மா, “பரிமாறுவதற்கு அவர்களிடம் திராட்சமது இல்லை” என்று அவரிடம் சொன்னார். 4 அப்போது இயேசு, “பெண்மணியே, அதற்கு நாம் என்ன செய்வது?* என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை” என்று சொன்னார். 5 அதனால் அவருடைய அம்மா, “அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்று பரிமாறுகிறவர்களிடம் சொன்னார். 6 யூதர்களுடைய தூய்மைச் சடங்குக்குத்+ தேவையான ஆறு தண்ணீர் ஜாடிகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கல்ஜாடிகள் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று குடம்* தண்ணீர் பிடிப்பவை. 7 பரிமாறுகிறவர்களைப் பார்த்து இயேசு, “இந்த ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று சொன்னார். அவர்களும் அவற்றின் விளிம்புவரை நிரப்பினார்கள். 8 பின்பு அவர்களிடம், “இதிலிருந்து எடுத்துக்கொண்டு போய் விருந்தின் மேற்பார்வையாளரிடம் கொடுங்கள்” என்று சொன்னார். அவர்களும் அப்படியே செய்தார்கள். 9 திராட்சமதுவாக மாற்றப்பட்ட தண்ணீரை மேற்பார்வையாளர் ருசிபார்த்தார். அந்தத் திராட்சமது எப்படி வந்ததென்று அதைக் கொண்டுவந்தவர்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும் அவருக்குத் தெரியவில்லை. அதனால், அந்த மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10 “எல்லாரும் தரமான திராட்சமதுவை முதலில் பரிமாறிவிட்டு, விருந்தாளிகள் மனம்போல் குடித்த பிறகு தரம் குறைந்ததைப் பரிமாறுவார்கள். ஆனால், நீங்கள் தரமான திராட்சமதுவை இதுவரை வைத்திருக்கிறீர்களே” என்று சொன்னார். 11 கலிலேயாவில் இருக்கிற கானா ஊரில் இயேசு இந்த முதல் அற்புதத்தைச் செய்து, தன்னுடைய வல்லமையைக் காட்டினார்.+ அவருடைய சீஷர்கள் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.
12 இதன் பின்பு, அவரும் அவருடைய அம்மாவும் அவருடைய சகோதரர்களும்+ அவருடைய சீஷர்களும் கப்பர்நகூமுக்குப்+ போனார்கள். ஆனால், அங்கே அவர்கள் அதிக நாட்கள் தங்கவில்லை.
13 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிவிட்டதால் இயேசு எருசலேமுக்குப் போனார். 14 ஆலயத்தில் ஆடு, மாடு, புறா+ விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருந்த காசுத் தரகர்களையும் பார்த்தார். 15 உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்து, ஆடு மாடுகளோடு சேர்த்து அவர்கள் எல்லாரையும் ஆலயத்திலிருந்து விரட்டினார்; காசு மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார்.+ 16 புறா விற்பவர்களிடம், “இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தகப்பனுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!”+ என்று சொன்னார். 17 அப்போது, “உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்”+ என்று எழுதப்பட்டிருக்கிற வசனத்தை அவருடைய சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
18 யூதர்கள் அவரிடம், “இப்படியெல்லாம் செய்கிறாயே, உனக்கு அதிகாரம் இருப்பதை நிரூபிக்க என்ன அடையாளத்தை எங்களுக்குக் காட்டப்போகிறாய்?”+ என்று கேட்டார்கள். 19 அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்”+ என்று சொன்னார். 20 அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட 46 வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள். 21 ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்.+ 22 இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் உயிரோடு எழுப்பப்பட்டபோது சீஷர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.+ அதனால், வேதவசனங்களையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நம்பினார்கள்.
23 பஸ்கா பண்டிகை சமயத்தில் அவர் எருசலேமில் செய்த அடையாளங்களைப் பார்த்து, நிறைய பேர் அவருடைய பெயரில் விசுவாசம் வைத்தார்கள். 24 ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 25 எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+
3 நிக்கொதேமு+ என்ற ஒரு பரிசேயர் இருந்தார்; அவர் யூதர்களுடைய தலைவர்களில் ஒருவர். 2 அவர் ஒருநாள் ராத்திரி இயேசுவிடம் போய்,+ “ரபீ,+ நீங்கள் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்கிற இந்த அடையாளங்களைக்+ கடவுளுடைய உதவி இல்லாமல் யாராலும் செய்ய முடியாது”+ என்று சொன்னார். 3 அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒருவன் மறுபடியும் பிறக்கவில்லை*+ என்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பார்க்க முடியாது”+ என்று சொன்னார். 4 அதற்கு நிக்கொதேமு, “வயதான பிறகு ஒருவனால் எப்படிப் பிறக்க முடியும்? இரண்டாவது தடவை அவன் தன்னுடைய தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாது, இல்லையா?” என்று கேட்டார். 5 அப்போது இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், தண்ணீராலும்+ கடவுளுடைய சக்தியாலும் ஒருவன் பிறக்கவில்லை என்றால்,+ அவன் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் நுழைய முடியாது. 6 மனுஷனால் பிறக்கிறவன் மனுஷனுடைய பிள்ளை, கடவுளுடைய சக்தியால் பிறக்கிறவன் கடவுளுடைய பிள்ளை. 7 ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென்று நான் உங்களிடம் சொன்னதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள். 8 காற்று அதற்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது, அதன் சத்தத்தை நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால் அது எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளுடைய சக்தியால் பிறந்திருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
9 அதற்கு நிக்கொதேமு, “இதெல்லாம் எப்படி நடக்கும்?” என்று கேட்டார். 10 அப்போது இயேசு, “இஸ்ரவேல் மக்களுக்குப் போதகராக இருந்தும்கூட இது உங்களுக்குத் தெரியவில்லையா? 11 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றித்தான் நாங்கள் பேசுகிறோம், பார்த்ததைப் பற்றித்தான் சாட்சி சொல்கிறோம். ஆனால், நீங்கள் எல்லாரும் எங்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை. 12 பூமிக்குரிய விஷயங்களைப் பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால், பரலோகத்துக்குரிய விஷயங்களைப் பற்றிச் சொல்லும்போது எப்படி நம்புவீர்கள்? 13 எந்த மனுஷனும் பரலோகத்துக்கு ஏறிப் போனதில்லை.+ ஆனால், மனிதகுமாரன் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறார்.+ 14 வனாந்தரத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல்+ மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.+ 15 அப்போதுதான், அவரை நம்புகிற எல்லாரும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்.+
16 கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல்*+ விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து,+ இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார். 17 இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்கு அல்ல, மீட்பதற்கே கடவுள் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார்.+ 18 அவர்மேல் விசுவாசம் வைக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை.+ விசுவாசம் வைக்காதவனோ, கடவுளுடைய ஒரே மகனின்* பெயரில் விசுவாசம் வைக்காததால் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டான்.+ 19 நியாயத்தீர்ப்புக்கு அடிப்படையாக இருப்பது இதுதான்: இந்த உலகத்துக்கு ஒளி வந்திருக்கிறது.+ ஆனாலும், மக்களுடைய செயல்கள் பொல்லாதவையாக இருப்பதால் ஒளிக்குப் பதிலாக இருளையே விரும்புகிறார்கள். 20 கெட்ட செயல்களைத் தொடர்ந்து செய்கிறவன் ஒளியை வெறுக்கிறான், தன்னுடைய செயல்கள் அம்பலமாகிவிட* கூடாது என்பதற்காக ஒளியிடம் வராமல் இருக்கிறான். 21 நீதியான செயல்களைச் செய்கிறவனோ, தன்னுடைய செயல்கள் கடவுளுடைய விருப்பத்தின்படி இருக்கின்றன என்பது வெளிப்படுவதற்காக ஒளியிடம் வருகிறான்”+ என்று சொன்னார்.
22 இவற்றுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் யூதேயாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள். அங்கே அவர் சீஷர்களோடு சில காலம் தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.+ 23 அப்போது, யோவானும் சாலிமுக்குப் பக்கத்தில் அயினோன் என்ற இடத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார். ஏனென்றால், அங்கே நிறைய தண்ணீர் இருந்தது.+ மக்கள் அங்கே போய் ஞானஸ்நானம் பெற்றுவந்தார்கள்.+ 24 அதுவரை யோவான் சிறையில் அடைக்கப்படவில்லை.+
25 தூய்மைச் சடங்கு பற்றி யோவானுடைய சீஷர்களுக்கும் ஒரு யூதனுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. 26 அவர்கள் யோவானிடம் வந்து, “ரபீ, யோர்தானுக்கு அக்கரையில் உங்களோடு ஒருவர் இருந்தாரே, அவரைப் பற்றி நீங்களும் சாட்சி கொடுத்தீர்களே,+ இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள். 27 அதற்கு யோவான், “பரலோகத்திலிருந்து அருளப்பட்டால் தவிர யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. 28 ‘நான் கிறிஸ்து அல்ல,+ ஆனால் அவருக்குமுன் அனுப்பப்பட்டவன்’+ என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணமகள் யாருக்குச் சொந்தமோ அவர்தான் மணமகன்.+ இருந்தாலும், மணமகனின் தோழன் அவர் பக்கத்தில் நின்று அவர் பேசுவதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் எனக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது. 30 அவருடைய செயல்கள் அதிகமாகிக்கொண்டே இருக்க வேண்டும், ஆனால் என்னுடைய செயல்கள் குறைந்துகொண்டே இருக்க வேண்டும்” என்று சொன்னார்.
31 மேலிருந்து வருகிறவர்+ எல்லாருக்கும் மேலானவர். ஆனால், பூமியிலிருந்து வருகிறவர் பூமியிலிருந்து வருவதால் பூமிக்குரிய விஷயங்களைப் பேசுகிறார். பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரையும்விட மேலானவர்.+ 32 தான் பார்த்ததையும் கேட்டதையும் பற்றி அவர் சாட்சி கொடுக்கிறார்,+ ஆனால் ஒருவனும் அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்வதில்லை.+ 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டவனோ, கடவுள் உண்மையானவர் என்பதை முத்திரைபோட்டு உறுதிப்படுத்துகிறான்.+ 34 கடவுளால் அனுப்பப்பட்டவர் கடவுளுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்.+ ஏனென்றால், கடவுள் அவருக்குத் தன்னுடைய சக்தியை அளவில்லாமல் கொடுக்கிறார்.* 35 தகப்பன் தன்னுடைய மகன்மேல் அன்புகாட்டி,+ எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்படைத்திருக்கிறார்.+ 36 மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது,+ அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்.+
4 யோவானைவிட இயேசு நிறைய பேரைச் சீஷர்களாக்கி ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார் என்ற செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள்.+ 2 உண்மையில் இயேசு ஞானஸ்நானம் கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள்தான் கொடுத்தார்கள். 3 அந்தச் செய்தியை பரிசேயர்கள் கேள்விப்பட்டார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியவந்தபோது, யூதேயாவைவிட்டு மறுபடியும் கலிலேயாவுக்குப் புறப்பட்டார். 4 ஆனால், அவர் சமாரியா வழியாகப் போக வேண்டியிருந்தது; 5 அதனால், சீகார் என்ற சமாரிய நகரத்துக்கு அவர் வந்தார். யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்குப் பக்கத்தில் அந்த நகரம் இருந்தது.+ 6 அங்கே யாக்கோபின் கிணறு* இருந்தது.+ பயணம் செய்து களைப்பாக இருந்ததால் இயேசு அந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார். அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது.
7 அந்தச் சமயத்தில், ஒரு சமாரியப் பெண் தண்ணீர் எடுக்க அங்கே வந்தாள். இயேசு அவளிடம், “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்டார். 8 (அவருடைய சீஷர்கள் உணவு வாங்குவதற்காக நகரத்துக்குள்ளே போயிருந்தார்கள்.) 9 சமாரியர்களோடு யூதர்கள் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்+ என்பதால் அந்தச் சமாரியப் பெண் அவரிடம், “நான் ஒரு சமாரியப் பெண், நீங்களோ ஒரு யூதர். அப்படியிருக்கும்போது, குடிப்பதற்கு என்னிடம் எப்படித் தண்ணீர் கேட்கிறீர்கள்?” என்றாள். 10 அதற்கு இயேசு, “கடவுள் கொடுக்கும் இலவச அன்பளிப்பு+ எது என்றும், குடிப்பதற்கு உன்னிடம் தண்ணீர் கேட்பவர் யார் என்றும் உனக்குத் தெரிந்திருந்தால், நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவர் உனக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்”+ என்று சொன்னார். 11 அப்போது அவள், “ஐயா, தண்ணீர் எடுக்க உங்களிடம் வாளிகூட இல்லை, கிணறும் ஆழமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது, வாழ்வு தரும் தண்ணீர் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? 12 எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்த எங்கள் மூதாதையான யாக்கோபைவிட நீங்கள் உயர்ந்தவரா? அவரும் அவருடைய பிள்ளைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தார்கள், அவருடைய கால்நடைகளும் இதிலிருந்துதானே தண்ணீர் குடித்தன” என்று சொன்னாள். 13 அதற்கு இயேசு, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற எல்லாருக்கும் மறுபடியும் தாகமெடுக்கும். 14 ஆனால், நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற ஒருவனுக்கும் என்றுமே தாகம் எடுக்காது;+ நான் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து பொங்கிவருகிற நீரூற்றாக மாறி, முடிவில்லாத வாழ்வைத் தரும்”+ என்று சொன்னார். 15 அந்தப் பெண் அவரிடம், “ஐயா, எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுங்கள்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் எடுக்க நான் இங்கே வர வேண்டிய அவசியமும் இருக்காது” என்று சொன்னாள்.
16 அதற்கு அவர், “நீ போய் உன் கணவனை இங்கே கூட்டிக்கொண்டு வா” என்று சொன்னார். 17 அந்தப் பெண்ணோ, “எனக்குக் கணவன் இல்லை” என்று சொன்னாள். அப்போது இயேசு, “‘எனக்குக் கணவன் இல்லை’ என்று நீ சொன்னது சரிதான். 18 ஏனென்றால், உனக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள், இப்போது உன்னோடு இருப்பவன் உன் கணவன் அல்ல. நீ உண்மையைச் சொன்னாய்” என்றார். 19 அந்தப் பெண், “ஐயா, நீங்கள் ஒரு தீர்க்கதரிசி என்று எனக்குப் புரிந்துவிட்டது.+ 20 எங்களுடைய முன்னோர்கள் இந்த மலையில் கடவுளை வணங்கினார்கள். ஆனால், எருசலேமில்தான் அவரை வணங்க வேண்டுமென்று நீங்கள் எல்லாரும் சொல்கிறீர்கள்”+ என்றாள். 21 இயேசு அவளிடம், “பெண்ணே, என்னை நம்பு. நேரம் வருகிறது, அப்போது பரலோகத் தகப்பனை நீங்கள் இந்த மலையிலும் வணங்க மாட்டீர்கள், எருசலேமிலும் வணங்க மாட்டீர்கள். 22 நீங்கள் தெரியாமல் வணங்குகிறீர்கள்.+ நாங்களோ தெரிந்து வணங்குகிறோம். ஏனென்றால், மீட்பு யூதர்களிடமிருந்து ஆரம்பிக்கிறது.+ 23 ஆனாலும், உண்மை வணக்கத்தார் பரலோகத் தகப்பனை அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்கப்போகிற நேரம் வருகிறது, அது ஏற்கெனவே வந்துவிட்டது. சொல்லப்போனால், தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்.+ 24 கடவுள் பார்க்க முடியாத உருவத்தில்* இருக்கிறார்.+ அவரை வணங்குகிறவர்கள் அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”+ என்று சொன்னார். 25 அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து என்ற மேசியா வருவார் என்று எனக்குத் தெரியும். அவர் வரும்போது எல்லா விஷயங்களையும் எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்வார்” என்றாள். 26 அதற்கு இயேசு, “உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நான்தான் அவர்”+ என்று சொன்னார்.
27 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷர்கள் திரும்பி வந்தார்கள், அவர் ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், “என்ன வேண்டும்?” என்றோ “அவளோடு ஏன் பேசுகிறீர்கள்?” என்றோ யாரும் அவரிடம் கேட்கவில்லை. 28 பின்பு, அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் ஜாடியை வைத்துவிட்டு, நகரத்துக்குள் போய் அங்கிருந்த மக்களிடம், 29 “நான் செய்த எல்லாவற்றையும் ஒருவர் என்னிடம் சொன்னார்; அவரை வந்து பாருங்கள். அவர் கிறிஸ்துவாக இருப்பாரோ?” என்றாள். 30 அதனால், அவர்கள் நகரத்திலிருந்து புறப்பட்டு அவரிடம் வர ஆரம்பித்தார்கள்.
31 இதற்கிடையே அவருடைய சீஷர்கள், “ரபீ,+ சாப்பிடுங்கள்” என்று அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 32 ஆனால் அவர், “உங்களுக்குத் தெரியாத ஒரு உணவு என்னிடம் இருக்கிறது” என்று சொன்னார். 33 அப்போது சீஷர்கள், “யாராவது அவருக்கு உணவு கொண்டுவந்து கொடுத்திருப்பார்களோ?” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 34 இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி* செய்து+ அவருடைய வேலையை முடிப்பதே+ என்னுடைய உணவாக இருக்கிறது. 35 அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறதென்று நீங்கள் சொல்வதில்லையா? இதோ! நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வயல்களை ஏறெடுத்துப் பாருங்கள். அவை விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கின்றன.+ 36 அறுவடை செய்கிறவர் ஏற்கெனவே கூலியை வாங்கிக்கொண்டு, முடிவில்லாத வாழ்வுக்காகப் பயிர்களைச் சேகரித்து வருகிறார். இதனால், விதைக்கிறவரும் அறுவடை செய்கிறவரும் ஒன்றுசேர்ந்து சந்தோஷப்படுகிறார்கள்.+ 37 விதைக்கிறவர் ஒருவர், அறுவடை செய்கிறவர் வேறொருவர் என்ற பழமொழி இந்த விஷயத்தில் உண்மையாக இருக்கிறது. 38 நீங்கள் பாடுபட்டு பயிர் செய்யாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள், அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்களும் அனுபவித்துவருகிறீர்கள்” என்று சொன்னார்.
39 “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொன்னார்”+ என்று சாட்சி சொன்ன பெண்ணின் வார்த்தையைக் கேட்டு, அந்த நகரத்திலிருந்த சமாரியர்கள் நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள். 40 அதனால் அந்தச் சமாரியர்கள் அவரிடம் வந்து, தங்களோடு தங்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் இரண்டு நாட்கள் அங்கே தங்கினார். 41 இதன் விளைவாக, இன்னும் நிறைய பேர் அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள். 42 அந்தப் பெண்ணிடம் அவர்கள், “நீ சொன்னதை வைத்து நாங்கள் இனி நம்ப வேண்டியதில்லை, நாங்களே அவர் பேசியதைக் கேட்டோம்; நிச்சயமாக அவர்தான் இந்த உலகத்தின் மீட்பர் என்று தெரிந்துகொண்டோம்”+ என்றார்கள்.
43 அந்த இரண்டு நாட்களுக்குப் பின்பு அவர் கலிலேயாவுக்குப் புறப்பட்டார். 44 ஆனாலும், ஒரு தீர்க்கதரிசிக்குத் தன்னுடைய சொந்த தேசத்தில் மதிப்பில்லை என்று இயேசுவே சொல்லியிருந்தார்.+ 45 அவர் கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். ஏனென்றால், பண்டிகைக்காக எருசலேமுக்கு அவர்கள் போயிருந்தபோது+ அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்தார்கள்.+
46 பின்பு, கலிலேயாவில் இருந்த கானா ஊருக்கு அவர் மறுபடியும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சமதுவாக மாற்றியிருந்தார்.+ அவர் வந்த சமயத்தில், ஓர் அரசு அதிகாரியின் மகன் கப்பர்நகூமில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருக்கிறார் என்பதை அந்த அதிகாரி கேள்விப்பட்டு அவரிடம் போனார், சாகக்கிடந்த தன் மகனைக் குணப்படுத்த வரும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். 48 இயேசு அவரிடம், “நீங்கள் எல்லாரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் பார்த்தால் தவிர ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்”+ என்று சொன்னார். 49 அந்த அரசு அதிகாரி அவரிடம், “எஜமானே, என்னுடைய பிள்ளை சாவதற்கு முன்பு என் வீட்டுக்கு வாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். 50 அதற்கு இயேசு, “நீ புறப்பட்டுப் போ, உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்”+ என்று சொன்னார். இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை வைத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுப் போனார். 51 அவர் போய்க்கொண்டிருந்தபோதே அவருடைய வேலைக்காரர்கள் அவர் எதிரில் வந்து, அவருடைய மகன் பிழைத்துக்கொண்டதாக* சொன்னார்கள். 52 அவன் எந்த நேரத்தில் குணமடைந்தான் என்று அவர்களிடம் விசாரித்தார். அதற்கு அவர்கள், “நேற்று ஏழாம் மணிநேரத்தில்* அவனுக்குக் காய்ச்சல் விட்டது” என்று சொன்னார்கள். 53 சரியாக அதே மணிநேரத்தில்தான், “உன்னுடைய மகன் பிழைத்துக்கொண்டான்”+ என்று இயேசு சொல்லியிருந்ததை அவர் நினைத்துப் பார்த்தார். அதன் பின்பு, அவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள். 54 இதுதான் இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபோது செய்த இரண்டாவது அற்புதம்.+
5 இதற்குப் பின்பு யூதர்களின் பண்டிகை ஒன்று வந்தது,+ அப்போது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எருசலேமில் ‘ஆட்டு நுழைவாசலுக்கு’+ பக்கத்தில், எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. 3 ஏராளமான நோயாளிகளும் பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் கை கால் சூம்பியவர்களும்* அந்த மண்டபங்களில் படுத்துக்கிடந்தார்கள். 4 *—— 5 அங்கே 38 வருஷங்களாக வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரும் இருந்தார். 6 அவர் அங்கே படுத்திருப்பதை இயேசு பார்த்தார்; அவர் ரொம்பக் காலமாக வியாதிப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டு, “நீங்கள் குணமாக விரும்புகிறீர்களா?”+ என்று கேட்டார். 7 அதற்கு அந்த நோயாளி, “ஐயா, குளத்து நீர் கலங்கும்போது என்னை அதில் இறக்கிவிட யாரும் இல்லை; நான் இறங்குவதற்குள் வேறு யாராவது எனக்கு முன்னால் இறங்கிவிடுகிறார்கள்” என்று சொன்னார். 8 அப்போது இயேசு, “எழுந்து, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்”+ என்று சொன்னார். 9 உடனே அந்த மனிதர் குணமடைந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. 10 அதனால் யூதர்கள், “இது ஓய்வுநாள், நீ படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவது சரியல்ல”+ என்று குணமடைந்த மனிதரிடம் சொன்னார்கள். 11 அவரோ, “என்னைக் குணமாக்கியவர்தான் ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று என்னிடம் சொன்னார்” என்றார். 12 அதற்கு அவர்கள், “‘இதை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று உனக்குச் சொன்ன அந்த மனுஷன் யார்?” என்று கேட்டார்கள். 13 குணமடைந்த மனிதருக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனென்றால், இயேசு கூட்டத்தோடு கூட்டமாகப் போயிருந்தார்.
14 பின்பு, இயேசு அவரை ஆலயத்தில் பார்த்து, “இதோ, நீங்கள் குணமாகிவிட்டீர்கள். முன்பு இருந்ததைவிட மோசமான எதுவும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க இனிமேல் பாவம் செய்யாதீர்கள்” என்று சொன்னார். 15 அந்த மனிதர் அங்கிருந்து போய், தன்னைக் குணமாக்கியது இயேசுதான் என்று யூதர்களிடம் சொன்னார். 16 இயேசு ஓய்வுநாளில் இவற்றைச் செய்ததால் யூதர்கள் அவரை எதிர்த்தார்கள். 17 அவரோ, “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார், நானும் வேலை செய்துவருகிறேன்”+ என்று அவர்களிடம் சொன்னார். 18 அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு கடவுளைத் தன்னுடைய சொந்தத் தகப்பன் என்று சொல்லித்+ தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக+ யூதர்கள் நினைத்தார்கள். அதனால், அவரைக் கொலை செய்ய இன்னும் தீவிரமாக முயற்சி செய்தார்கள்.
19 அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மகனால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது; தகப்பன் எதைச் செய்வதைப் பார்க்கிறாரோ அதை மட்டுமே அவரால் செய்ய முடியும்.+ தகப்பன் எவற்றையெல்லாம் செய்கிறாரோ அவற்றையெல்லாம் மகனும் அப்படியே செய்கிறார். 20 மகன்மேல் தகப்பன் பாசம் வைத்திருப்பதால்,+ தான் செய்கிற எல்லாவற்றையும் அவருக்குக் காட்டுகிறார்; நீங்கள் ஆச்சரியப்படும்படி, அவற்றைவிட பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார்.+ 21 இறந்தவர்களைத் தகப்பன் உயிரோடு எழுப்புவது போலவே+ மகனும் தனக்கு விருப்பமானவர்களை உயிரோடு எழுப்புகிறார்.+ 22 தகப்பன் ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை, நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதையும் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார்.+ 23 எல்லாரும் தகப்பனுக்கு மதிப்புக் கொடுப்பது போலவே மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார். மகனுக்கு மதிப்புக் கொடுக்காதவன் அவரை அனுப்பிய தகப்பனுக்கும் மதிப்புக் கொடுப்பதில்லை.+ 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்.+
25 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இறந்தவர்கள் கடவுளுடைய மகனின் குரலைக் கேட்கும் நேரம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அதைக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். 26 உயிர் கொடுக்கும் வல்லமை தகப்பனுக்கு இருக்கிறது,+ அந்த வல்லமையை மகனுக்கும் அவர் கொடுத்திருக்கிறார்.+ 27 அதோடு, அவருடைய மகன் மனிதகுமாரனாக+ இருப்பதால் நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்.+ 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.+ 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.+ 30 என்னால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது. என் தகப்பன் சொல்கிறபடிதான் நான் நியாயந்தீர்க்கிறேன். என்னுடைய தீர்ப்பு நீதியானது,+ ஏனென்றால் நான் என்னுடைய விருப்பத்தை* அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தையே* நாடுகிறேன்.+
31 நான் மட்டுமே என்னைப் பற்றிச் சாட்சி கொடுத்தால், என் சாட்சி உண்மையாக இருக்காது.+ 32 என்னைப் பற்றி வேறொருவர் சாட்சி கொடுக்கிறார், என்னைப் பற்றி அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று எனக்குத் தெரியும்.+ 33 நீங்கள் யோவானிடம் ஆள் அனுப்பினீர்கள், அவர் சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.+ 34 ஆனாலும், மனுஷனுடைய சாட்சியை நான் சார்ந்திருப்பதில்லை. நீங்கள் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றைச் சொல்கிறேன். 35 அவர் பிரகாசமாக எரிகிற விளக்காக இருந்தார். கொஞ்சக் காலம் அவருடைய ஒளியில் சந்தோஷமாக இருக்க விரும்பினீர்கள்.+ 36 ஆனால், யோவானுடைய சாட்சியைவிட முக்கியமான சாட்சி என்னிடம் இருக்கிறது. நான் செய்து முடிப்பதற்காக என் தகப்பன் என்னிடம் ஒப்படைத்த செயல்கள்தான், அதாவது நான் செய்து வருகிற செயல்கள்தான், தகப்பன் என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன.+ 37 அதோடு, என்னை அனுப்பிய தகப்பனே என்னைப் பற்றிச் சாட்சி கொடுத்திருக்கிறார்.+ நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதில்லை, அவருடைய உருவத்தைப் பார்த்ததுமில்லை.+ 38 அவரால் அனுப்பப்பட்டவரையே நீங்கள் நம்பாததால், அவருடைய வார்த்தை உங்கள் இதயத்தில் நிலைத்து நிற்பதுமில்லை.
39 முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்;+ அவையே என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.+ 40 அப்படியிருந்தும், வாழ்வு பெறுவதற்கு என்னிடம் வர உங்களுக்கு விருப்பமில்லை.+ 41 மனுஷர்கள் தரும் மகிமையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. 42 ஆனால், உங்களுக்குக் கடவுள்மேல் அன்பு இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். 43 நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். 44 ஒரே கடவுளிடமிருந்து வரும் மகிமையை நாடாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வரும் மகிமையை ஏற்றுக்கொள்கிற நீங்கள் எப்படி என்னை நம்புவீர்கள்?+ 45 என்னுடைய தகப்பனுக்கு முன்னால் நான் உங்களைக் குற்றம்சாட்டுவேன் என்று நினைக்காதீர்கள். உங்களைக் குற்றம்சாட்டுகிற ஒருவர் இருக்கிறார்; நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற மோசேதான் அவர்.+ 46 நீங்கள் மோசேயை நம்பினால் என்னையும் நம்புவீர்கள். ஏனென்றால், அவர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.+ 47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்கிறவற்றை எப்படி நம்புவீர்கள்?” என்று கேட்டார்.
6 இதற்குப் பின்பு திபேரியா கடலின், அதாவது கலிலேயா கடலின், அக்கரைக்கு இயேசு போனார்.+ 2 நோயாளிகளை அவர் அற்புதமாகக் குணமாக்கியதைப் பார்த்து+ ஒரு பெரிய கூட்டம் அவருக்குப் பின்னாலேயே போனது.+ 3 அதனால் இயேசு ஒரு மலைமேல் ஏறிப்போய், அங்கே தன்னுடைய சீஷர்களோடு உட்கார்ந்தார். 4 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ சீக்கிரத்தில் வரவிருந்தது. 5 இயேசு தன்னுடைய கண்களை ஏறெடுத்து, தன்னிடம் வந்துகொண்டிருந்த பெரிய கூட்டத்தைப் பார்த்து, “இந்த ஜனங்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகளை எங்கே வாங்கலாம்?”+ என்று பிலிப்புவிடம் கேட்டார். 6 தான் என்ன செய்யப்போகிறார் என்று தெரிந்திருந்தும் பிலிப்புவைச் சோதிப்பதற்காக இப்படிக் கேட்டார். 7 அதற்கு பிலிப்பு, “ஆளுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டுமென்றாலும், 200 தினாரியுவுக்கு* ரொட்டிகளை வாங்கினால்கூட போதாதே” என்று சொன்னார். 8 அவருடைய சீஷர்களில் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரிடம், 9 “இதோ, இங்கிருக்கிற ஒரு சிறுவனிடம் ஐந்து பார்லி ரொட்டிகளும் இரண்டு சிறிய மீன்களும் இருக்கின்றன. ஆனால், இத்தனை பேருக்கு அது எப்படிப் போதும்?”+ என்று கேட்டார்.
10 அப்போது இயேசு, “இவர்களை உட்கார வையுங்கள்” என்று சொன்னார். அந்த இடத்தில் நிறைய புல் இருந்ததால் அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்களில் சுமார் 5,000 ஆண்கள் இருந்தார்கள்.+ 11 இயேசு ரொட்டிகளை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அங்கே உட்கார்ந்திருந்தவர்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அந்தச் சிறிய மீன்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் வேண்டுமளவுக்குச் சாப்பிட்டார்கள். 12 எல்லாரும் வயிறார சாப்பிட்டு முடித்த பிறகு அவர் தன்னுடைய சீஷர்களிடம், “எதுவும் வீணாகாதபடி, மீதியான ரொட்டித் துண்டுகளைச் சேகரியுங்கள்” என்று சொன்னார். 13 அதனால், மக்கள் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த ஐந்து பார்லி ரொட்டிகளில் மீதியான துண்டுகளை 12 கூடைகள் நிறைய சேகரித்தார்கள்.
14 அவர் செய்த அடையாளங்களை மக்கள் பார்த்தபோது, “இந்த உலகத்துக்கு வர வேண்டிய தீர்க்கதரிசி நிச்சயமாகவே இவர்தான்”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 15 அவர்கள் வந்து தன்னைப் பிடித்து ராஜாவாக்கப்போகிறார்கள் என்பதை இயேசு தெரிந்துகொண்டு, அந்த இடத்தைவிட்டு+ மறுபடியும் மலைக்குத் தனியாகப்+ போனார்.
16 சாயங்காலம் ஆனபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போனார்கள்.+ 17 ஒரு படகில் ஏறி, அக்கரையில் இருக்கிற கப்பர்நகூமை நோக்கிப் போனார்கள். அதற்குள் இருட்டிவிட்டது, இயேசுவும் அதுவரை அவர்களிடம் வந்துசேரவில்லை.+ 18 அதோடு, காற்று பலமாக வீசியதால் கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது.+ 19 சுமார் மூன்று அல்லது நான்கு மைல்* தூரத்துக்கு அவர்கள் படகை ஓட்டிய பிறகு, இயேசு கடல்மேல் நடந்து, படகுக்குப் பக்கத்தில் வருவதைப் பார்த்துப் பயந்துபோனார்கள். 20 ஆனால் அவர், “நான்தான், பயப்படாதீர்கள்!”+ என்று சொன்னார். 21 அதனால், சந்தோஷமாக அவரைப் படகில் ஏற்றிக்கொண்டார்கள். படகு கொஞ்ச நேரத்திலேயே போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.+
22 அடுத்த நாள், கடலின் அக்கரையிலேயே தங்கியிருந்த மக்கள் அங்கே எந்தப் படகும் இல்லாததைப் பார்த்தார்கள் ; முந்தின நாள் அங்கே இருந்திருந்த ஒரு சின்னப் படகில் சீஷர்கள் மட்டும் ஏறிப்போயிருந்தார்கள், அவர்களுடன் இயேசு போகவில்லை. 23 திபேரியாவிலிருந்து வந்த சில படகுகள், இயேசு நன்றி சொல்லி ஜெபம் செய்த பின்பு அவர்கள் ரொட்டி சாப்பிட்ட இடத்துக்குப் பக்கத்தில் வந்துசேர்ந்தன. 24 அந்தப் படகுகளில் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இல்லை என்று தெரிந்தவுடன் மக்கள் தங்களுடைய படகுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு கப்பர்நகூமுக்குப் போனார்கள்.
25 கடலின் அக்கரையில் அவர்கள் அவரைப் பார்த்தபோது, “ரபீ,+ எப்போது இங்கே வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். 26 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அற்புதங்களைப் பார்த்ததால் அல்ல, ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான் நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்.+ 27 அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத்+ தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள். மனிதகுமாரன் இதை உங்களுக்குக் கொடுப்பார்; இவரை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத் தகப்பனாகிய கடவுளே இவர்மேல் தன்னுடைய முத்திரையை குத்தியிருக்கிறார்”+ என்று அவர்களிடம் சொன்னார்.
28 அதனால் அவர்கள், “கடவுள் எங்களை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டார்கள். 29 அப்போது இயேசு, “கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு, அவரால் அனுப்பப்பட்டவர்மேல் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும்”+ என்று சொன்னார். 30 அதற்கு அவர்கள், “அப்படியென்றால், உங்களை நம்புவதற்கு நாங்கள் பார்க்கும்படி என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறீர்கள்?+ என்ன செயலைச் செய்யப்போகிறீர்கள்? 31 வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள். 32 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மோசே உங்களுக்குப் பரலோகத்திலிருந்து உணவைத் தரவில்லை, என்னுடைய தகப்பன்தான் பரலோகத்திலிருந்து உண்மையான உணவை உங்களுக்குத் தருகிறார். 33 கடவுள் தருகிற உணவு பரலோகத்திலிருந்து வந்து, உலகத்துக்கு வாழ்வு தருகிறது” என்று அவர்களிடம் சொன்னார். 34 அதற்கு அவர்கள், “எஜமானே, அந்த உணவையே எங்களுக்கு எப்போதும் கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
35 அப்போது இயேசு, “வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது, என்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்குத் தாகமே எடுக்காது.+ 36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள்.+ 37 தகப்பன் எனக்குத் தருகிற ஒவ்வொருவனும் என்னிடம் வருவான், அப்படி என்னிடம் வருகிறவனை நான் ஒருபோதும் துரத்திவிட மாட்டேன்.+ 38 ஏனென்றால், என்னுடைய விருப்பத்தின்படி* செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி* செய்வதற்காகத்தான்+ பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன்.+ 39 அவர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவர்கள் எல்லாரையும் நான் உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பது என்னை அனுப்பியவருடைய விருப்பம்.* 40 அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும்,+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்ப வேண்டும்+ என்பதும் என் தகப்பனின் விருப்பம்”* என்று சொன்னார்.
41 “பரலோகத்திலிருந்து வந்த உணவு நான்தான்”+ என்று அவர் சொன்னதால் யூதர்கள் அவரைப் பற்றி முணுமுணுத்தார்கள். 42 “இவன் யோசேப்பின் மகன் இயேசுதானே? இவனுடைய அப்பாவும் அம்மாவும் நமக்குத் தெரிந்தவர்கள்தானே?+ அப்படியிருக்கும்போது, ‘நான் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறேன்’ என்று இவன் எப்படிச் சொல்கிறான்?” எனப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 43 அப்போது இயேசு, “ஒருவருக்கொருவர் முணுமுணுப்பதை நிறுத்துங்கள். 44 என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால்* அவன் என்னிடம் வர முடியாது;+ கடைசி நாளில் நான் அவனை உயிரோடு எழுப்புவேன்.+ 45 ‘அவர்கள் எல்லாரும் யெகோவாவினால்* கற்பிக்கப்பட்டிருப்பார்கள்’+ என்று தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. தகப்பனிடமிருந்து கேட்டுக் கற்றுக்கொள்கிற ஒவ்வொருவனும் என்னிடம் வருகிறான். 46 அதற்காக, தகப்பனை எந்த மனுஷனாவது பார்த்திருக்கிறான் என்று அர்த்தமாகாது,+ தகப்பனாகிய கடவுளிடமிருந்து வந்தவர் மட்டும்தான் அவரைப் பார்த்திருக்கிறார்.+ 47 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்னை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.+
48 வாழ்வு தரும் உணவு நான்தான்.+ 49 உங்களுடைய முன்னோர்கள் வனாந்தரத்தில் மன்னாவைச் சாப்பிட்டார்கள், ஆனால் இறந்துபோனார்கள்.+ 50 பரலோகத்திலிருந்து வந்திருக்கும் இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் சாகவே மாட்டார். 51 பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உயிருள்ள உணவு நான்தான்; இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் என்றென்றும் உயிர் வாழ்வார். சொல்லப்போனால், நான் கொடுக்கப்போகிற உணவு, உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதைதான்”+ என்று சொன்னார்.
52 அப்போது யூதர்கள், “இவன் எப்படித் தன்னுடைய சதையை நமக்குச் சாப்பிடக் கொடுக்க முடியும்?” என்று சொல்லி, ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். 53 அதனால் இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள்.*+ 54 என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும், நான் அவனைக் கடைசி நாளில் உயிரோடு எழுப்புவேன்.+ 55 என் சதைதான் உண்மையான உணவு, என் இரத்தம்தான் உண்மையான பானம். 56 என் சதையைச் சாப்பிட்டு என் இரத்தத்தைக் குடிக்கிறவன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறான், நானும் அவனோடு ஒன்றுபட்டிருக்கிறேன்.+ 57 என்றென்றும் உயிரோடிருக்கிற தகப்பன் என்னை அனுப்பினார்; அவரால்தான் நான் உயிர் வாழ்கிறேன்; அதேபோல், என்னைச் சாப்பிடுகிறவனும் என்னால் உயிர் வாழ்வான்.+ 58 பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உணவு இதுதான். இந்த உணவு உங்களுடைய முன்னோர்கள் சாப்பிட்ட உணவைப் போன்றது அல்ல, அதைச் சாப்பிட்டும் அவர்கள் இறந்துபோனார்கள். இந்த உணவைச் சாப்பிடுகிறவனோ என்றென்றும் உயிர் வாழ்வான்”+ என்று சொன்னார். 59 கப்பர்நகூமில் இருக்கிற ஜெபக்கூடத்தில்* அவர் கற்பித்துக்கொண்டிருந்தபோது இந்த விஷயங்களைச் சொன்னார்.
60 அவர் சொன்னதைக் கேட்டபோது, “இவர் சொல்வது அதிர்ச்சியாக இருக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று அவருடைய சீஷர்களில் பலர் சொன்னார்கள். 61 தன்னுடைய சீஷர்கள் இதைப் பற்றி முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, “நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா? 62 அப்படியென்றால், மனிதகுமாரன் தான் முன்பிருந்த இடத்துக்கு ஏறிப்போவதை+ நீங்கள் பார்த்தால் இன்னும் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கும்? 63 கடவுளுடைய சக்திதான் வாழ்வு தருகிறது;+ மனுஷனுடைய முயற்சியால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தைகள் கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டவை, வாழ்வு தருபவை.+ 64 ஆனாலும், உங்களில் சிலர் இதை நம்புவதில்லை” என்று சொன்னார். நம்பாதவர்கள் யார் என்றும், தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவன் யார் என்றும் இயேசுவுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்ததால்+ அவர்களிடம் அப்படிச் சொன்னார். 65 அதோடு அவர், “அதனால்தான், தகப்பனுடைய அனுமதி இல்லையென்றால் யாரும் என்னிடம் வர முடியாது+ என்று உங்களுக்குச் சொன்னேன்” என்றார்.
66 அவர் இப்படியெல்லாம் பேசியதால், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.+ 67 அதனால் இயேசு பன்னிரண்டு பேரிடம்,* “நீங்களும் என்னைவிட்டுப் போகப் போகிறீர்களா?” என்று கேட்டார். 68 அதற்கு சீமோன் பேதுரு, “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்?+ முடிவில்லாத வாழ்வைத் தருகிற வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன.+ 69 நீங்கள்தான் கடவுளால் அனுப்பப்பட்ட பரிசுத்தர்+ என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும், நாங்கள் அதை நம்புகிறோம்” என்று சொன்னார். 70 அப்போது இயேசு அவர்களிடம், “பன்னிரண்டு பேரான உங்களை நான் தேர்ந்தெடுத்தேன், இல்லையா?+ ஆனாலும், உங்களில் ஒருவன் அவதூறு பேசுகிறவனாக* இருக்கிறான்”+ என்று சொன்னார். 71 சீமோன் இஸ்காரியோத்து என்பவரின் மகனாகிய யூதாசைப் பற்றித்தான் அவர் இப்படிச் சொன்னார். ஏனென்றால், அவன் அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவனாக இருந்தும் அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தான்.+
7 இதற்குப் பின்பு, இயேசு கலிலேயாவிலேயே பயணம் செய்துவந்தார்.* அவரைக் கொலை செய்வதற்கு யூதர்கள்* வழிதேடிக்கொண்டிருந்ததால்+ அவர் யூதேயாவில் பயணம் செய்ய விரும்பவில்லை. 2 யூதர்களுடைய கூடாரப் பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. 3 அதனால் அவருடைய சகோதரர்கள்+ அவரிடம், “நீங்கள் இந்த இடத்தைவிட்டு யூதேயாவுக்குப் போங்கள், நீங்கள் செய்யும் செயல்களை உங்களுடைய சீஷர்களும் பார்க்கட்டும். 4 பிரபலமாக இருக்க விரும்புகிற யாரும் எதையும் ரகசியமாகச் செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் செய்வதாக இருந்தால் ஊர் உலகத்துக்கே செய்து காட்டுங்கள்” என்று சொன்னார்கள். 5 அவருடைய சகோதரர்கள் அவர்மேல் விசுவாசம் வைக்காததால்+ அப்படிச் சொன்னார்கள். 6 அதற்கு இயேசு அவர்களிடம், “என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை,+ ஆனால் உங்களுக்கு எந்த நேரமும் சரியான நேரம்தான். 7 இந்த உலகம் உங்களை வெறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது.+ 8 பண்டிகைக்கு நீங்கள் போங்கள்; நான் இப்போது போகப்போவதில்லை; ஏனென்றால், என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை”+ என்று சொன்னார். 9 அவர்களிடம் இப்படிச் சொன்ன பின்பு அவர் கலிலேயாவிலேயே இருந்துவிட்டார்.
10 ஆனால், பண்டிகைக்கு அவருடைய சகோதரர்கள் போன பின்பு அவரும் அங்கே போனார்; ஆனாலும், வெளிப்படையாகப் போகாமல் ரகசியமாகப் போனார். 11 அதனால், பண்டிகையின்போது யூதர்கள் அவரைத் தேட ஆரம்பித்தார்கள்; “அந்த ஆள் எங்கே?” என்று கேட்டார்கள். 12 மக்கள் அவரைப் பற்றிப் பலவிதமாகக் கிசுகிசுத்தார்கள். சிலர், “அவர் ஒரு நல்ல மனுஷர்” என்று சொன்னார்கள். மற்றவர்களோ, “இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்”+ என்று சொன்னார்கள். 13 ஆனால், யூதர்களுக்குப் பயந்ததால் அவர்களில் யாருமே அவரைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை.+
14 பண்டிகை பாதி முடிந்தபோது, ஆலயத்துக்குப் போய் இயேசு கற்பிக்க ஆரம்பித்தார். 15 அப்போது யூதர்கள், “பள்ளிகளுக்கு* போகாத இவனுக்கு+ வேதவசனங்களைப்+ பற்றி எப்படி இந்தளவு அறிவு வந்தது?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள். 16 அதற்கு இயேசு, “என் போதனை என்னுடையதல்ல, என்னை அனுப்பியவருடையது.+ 17 அவருடைய விருப்பத்தின்படி* செய்ய ஒருவன் விரும்பினால், என் போதனை கடவுளிடமிருந்து வந்திருக்கிறதா+ அல்லது நானே சொந்தமாகப் பேசுகிறேனா என்று தெரிந்துகொள்வான். 18 சொந்தமாகப் பேசுகிறவன் சொந்த மகிமையை விரும்புகிறான். ஆனால், தன்னை அனுப்பியவருக்கு மகிமை சேர்க்க+ விரும்புகிறவன்தான் உண்மையுள்ளவன். அவனிடம் எந்த அநீதியும் இல்லை. 19 மோசே உங்களுக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்தார்,+ இல்லையா? ஆனால், உங்களில் ஒருவர்கூட அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதில்லை. இப்போது என்னை ஏன் கொல்லப் பார்க்கிறீர்கள்?”+ என்று கேட்டார். 20 அதற்கு அந்தக் கூட்டத்தார், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது. யார் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்?” என்று கேட்டார்கள். 21 அப்போது இயேசு, “நான் ஒரேவொரு செயலைச் செய்ததற்காக நீங்கள் எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 அப்படியானால் இதை யோசித்துப் பாருங்கள்: மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைப்+ பற்றிய கட்டளையைக் கொடுத்தார்—அது மோசேயின் காலத்திலிருந்து அல்ல, அவருக்குமுன் வாழ்ந்த முன்னோர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது+—அதன்படி, ஓய்வுநாளில் ஒருவனுக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள். 23 மோசேயின் திருச்சட்டத்தை மீறக் கூடாது என்பதற்காக ஓய்வுநாளில் ஒருவனுக்கு நீங்கள் விருத்தசேதனம் செய்கிறீர்கள் என்றால், அதே ஓய்வுநாளில் நான் ஒருவனை முழுமையாகக் குணமாக்கியதற்காக ஏன் என்மேல் சீறுகிறீர்கள்?+ 24 வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டு, நீதியின்படி தீர்ப்பு கொடுங்கள்”+ என்று சொன்னார்.
25 அப்போது, எருசலேம் குடிமக்களில் சிலர், “இவரைத்தானே கொலை செய்யத் தேடுகிறார்கள்?+ 26 அப்படியிருந்தும், இதோ! மக்களிடம் இவர் வெளிப்படையாகப் பேசிக்கொண்டிருக்கிறார், அவர்களும் இவரிடம் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள். இவர்தான் கிறிஸ்து என்று தலைவர்கள் உறுதியாகத் தெரிந்துகொண்டார்களோ? 27 ஆனால், கிறிஸ்து எங்கிருந்து வருவார் என்பது யாருக்கும் தெரியாமல்தானே இருக்கும்! இவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதுதான் நமக்குத் தெரியுமே!”+ என்று பேசிக்கொண்டார்கள். 28 அதனால், ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருந்த இயேசு உரத்த குரலில் அவர்களிடம், “நான் யார் என்றும், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் சுயமாக வரவில்லை,+ என்னை அனுப்பியவர் நிஜமானவர், உங்களுக்கு அவரைத் தெரியாது.+ 29 எனக்கு அவரைத் தெரியும்;+ ஏனென்றால், நான் அவருடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன்; அவரே என்னை அனுப்பினார்” என்று சொன்னார். 30 இதைக் கேட்டதும் அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்.+ ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால் ஒருவரும் அவர்மேல் கை வைக்கவில்லை.+ 31 இருந்தாலும், மக்களில் பலர் அவர்மேல் விசுவாசம் வைத்து,+ “கிறிஸ்து வரும்போது இவர் செய்வதைவிடவா அதிகமான அடையாளங்களைச் செய்யப்போகிறார்?” என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
32 மக்கள் அவரைப் பற்றி இப்படிக் கிசுகிசுப்பதைப் பரிசேயர்கள் கேட்டார்கள்; அதனால், முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் அவரைப் பிடித்துக்கொண்டு வருவதற்காகக் காவலர்களை அனுப்பினார்கள். 33 அப்போது இயேசு, “இன்னும் கொஞ்சக் காலம்தான் உங்களோடு இருப்பேன், அதன் பின்பு என்னை அனுப்பியவரிடமே போய்விடுவேன்.+ 34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது”+ என்று சொன்னார். 35 அதனால் அந்த யூதர்கள், “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எங்கே போகப் போகிறான்? கிரேக்கர்கள் மத்தியில் சிதறியிருக்கிற யூதர்களிடம் போகப் போகிறானோ, கிரேக்கர்களுக்கும்கூட கற்பிக்கப் போகிறானோ? 36 ‘என்னைத் தேடுவீர்கள், ஆனால் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்துக்கு உங்களால் வரவும் முடியாது’ என்று சொல்கிறானே, இதற்கு என்ன அர்த்தம்?” என்று பேசிக்கொண்டார்கள்.
37 பண்டிகையின் மிக முக்கியமான நாளாகிய கடைசி நாளில்+ இயேசு எழுந்து நின்று, “ஒருவன் தாகமாக இருந்தால், அவன் என்னிடம் வந்து தண்ணீர் குடிக்கட்டும்.+ 38 ஒருவன் என்மேல் விசுவாசம் வைத்தால், வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, ‘வாழ்வு தரும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்’”+ என்று சொன்னார். 39 அவர்மேல் விசுவாசம் வைத்தவர்களுக்கு அருளப்படவிருந்த கடவுளுடைய சக்தியைப் பற்றியே அவர் அப்படிச் சொன்னார்; இயேசு அதுவரை மகிமைப்படாததால்+ கடவுளுடைய சக்தி அதுவரை அவர்களுக்கு அருளப்படவில்லை.+ 40 இந்த வார்த்தைகளைக் கேட்ட மக்களில் சிலர், “நிச்சயமாகவே இவர்தான் வர வேண்டிய தீர்க்கதரிசி”+ என்று சொன்னார்கள். 41 மற்றவர்களோ, “இவர்தான் கிறிஸ்து”+ என்று சொன்னார்கள். ஆனால் வேறு சிலர், “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?+ 42 அவர் தாவீதின் வம்சத்தில்,+ தாவீது குடியிருந்த+ பெத்லகேம்+ கிராமத்திலிருந்துதான் வருவாரென வேதவசனம் சொல்கிறது, இல்லையா?” என்றார்கள். 43 இப்படி, அவரைப் பற்றி மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. 44 அவர்களில் சிலர் அவரைப் பிடித்துக்கொடுக்க நினைத்தார்கள், ஆனால் ஒருவரும் அவர்மேல் கை வைக்கவில்லை.
45 பின்பு, முதன்மை குருமார்களிடமும் பரிசேயர்களிடமும் அந்தக் காவலர்கள் திரும்பிப்போனபோது, “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று பரிசேயர்கள் அவர்களிடம் கேட்டார்கள். 46 அதற்கு அவர்கள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”+ என்று சொன்னார்கள். 47 அப்போது பரிசேயர்கள், “நீங்களுமா ஏமாந்துவிட்டீர்கள்? 48 தலைவர்களிலும் பரிசேயர்களிலும் ஒருவராவது அவன்மேல் விசுவாசம் வைத்திருக்கிறார்களா?+ 49 திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று சொன்னார்கள். 50 அந்தப் பரிசேயர்களில் ஒருவரும், முன்பு இயேசுவிடம் வந்தவருமான நிக்கொதேமு அவர்களிடம், 51 “ஒருவனை முதலில் விசாரித்து அவன் என்ன செய்தானென்று தெரிந்துகொள்ளாமல் அவனுக்குத் தீர்ப்பளிக்கும்படி நம்முடைய திருச்சட்டம் சொல்கிறதா?”+ என்று கேட்டார். 52 அதற்கு அவர்கள், “நீங்களும் கலிலேயரா என்ன? கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வர மாட்டார் என்பதை வேதவசனங்களில் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.*
8 12 இயேசு மறுபடியுமாக மக்களிடம், “நான் இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்.+ என்னைப் பின்பற்றுகிற யாரும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள், ஆனால் வாழ்வு தரும் ஒளியைப் பெற்றிருப்பார்கள்”+ என்று சொன்னார். 13 அதனால் பரிசேயர்கள் அவரிடம், “உன்னைப் பற்றி நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல” என்று சொன்னார்கள். 14 அதற்கு இயேசு, “என்னைப் பற்றி நானே சாட்சி கொடுத்தாலும் என் சாட்சி உண்மையானதுதான்; ஏனென்றால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று எனக்குத் தெரியும்.+ ஆனால், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே போகிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. 15 நீங்கள் மனுஷ கண்ணோட்டத்தில் நியாயந்தீர்க்கிறீர்கள்;+ நான் எந்த மனுஷனையும் நியாயந்தீர்ப்பதில்லை. 16 அப்படியே நான் நியாயந்தீர்த்தாலும் என்னுடைய தீர்ப்பு உண்மையானது; ஏனென்றால், நான் தனியாக இல்லை, என்னை அனுப்பிய தகப்பன் என்னோடு இருக்கிறார்.+ 17 அதோடு, ‘இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது’+ என்று உங்கள் திருச்சட்டத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது. 18 நான் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறேன், என்னை அனுப்பிய தகப்பனும் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறார்”+ என்று சொன்னார். 19 அதனால் அவர்கள், “உன்னுடைய தகப்பன் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “உங்களுக்கு என்னையும் தெரியாது, என் தகப்பனையும் தெரியாது.+ உங்களுக்கு என்னைத் தெரிந்திருந்தால், என் தகப்பனையும் தெரிந்திருக்கும்”+ என்று சொன்னார். 20 ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிகள்+ வைக்கப்பட்டிருந்த பகுதியில் கற்பித்துக்கொண்டிருந்தபோது அவர் இந்த விஷயங்களைச் சொன்னார். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.+
21 அவர் மறுபடியுமாக அவர்களிடம், “நான் போகிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள்.+ நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது”+ என்று சொன்னார். 22 அப்போது யூதர்கள், “‘நான் போகும் இடத்துக்கு உங்களால் வர முடியாது’ என்று சொல்கிறானே, இவன் என்ன தற்கொலையா செய்துகொள்ளப்போகிறான்?” என்று பேசிக்கொண்டார்கள். 23 அதனால் அவர், “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். நான் மேலே இருந்து வந்தவன்.+ நீங்கள் இந்த உலகத்திலிருந்து வந்தவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து வரவில்லை. 24 அதனால்தான், உங்களுடைய பாவங்களிலேயே சாவீர்கள் என்று சொன்னேன். நான்தான் அவர் என்பதை நீங்கள் நம்பவில்லை என்றால் உங்களுடைய பாவங்களிலேயே சாவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். 25 அப்போது அவர்கள், “நீ யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “நான் ஏன்தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டுமோ? 26 உங்களைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, நான் நியாயந்தீர்ப்பதற்கும் நிறைய காரியங்கள் இருக்கின்றன. என்னை அனுப்பியவர் உண்மையானவர், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களைத்தான் இந்த உலகத்தில் பேசிக்கொண்டிருக்கிறேன்”+ என்று சொன்னார். 27 பரலோகத் தகப்பனைப் பற்றித்தான் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. 28 அதனால் இயேசு, “மனிதகுமாரனை நீங்கள் உயர்த்திய*+ பின்பு நான்தான் அவர்+ என்றும், நான் எதையும் சொந்தமாகச் செய்வதில்லை+ என்றும், தகப்பன் எனக்குக் கற்றுக்கொடுத்தபடியே இந்த விஷயங்களைப் பேசுகிறேன் என்றும் தெரிந்துகொள்வீர்கள். 29 என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்வதால்+ அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று சொன்னார். 30 அவர் பேசிய இந்த விஷயங்களைக் கேட்டு நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.
31 பின்பு, இயேசு தன்மேல் நம்பிக்கை வைத்த யூதர்களிடம், “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; 32 சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள்,+ சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”+ என்று சொன்னார். 33 அதற்கு மற்றவர்கள், “நாங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள், எந்தக் காலத்திலும் எந்த மனுஷனுக்கும் நாங்கள் அடிமைகளாக இருந்தது கிடையாது. அப்படியிருக்கும்போது, நாங்கள் விடுதலையாவோம் என்று எப்படிச் சொல்கிறாய்?” என்றார்கள். 34 இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் பாவத்துக்கு அடிமையாக இருக்கிறான்.+ 35 அதோடு, ஒரு வீட்டில் அடிமை நிரந்தரமாக இருப்பதில்லை. மகனோ நிரந்தரமாக இருப்பார். 36 அதனால், மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையில் விடுதலையாவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் வம்சத்தில் வந்தவர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், என்னுடைய போதனையை நீங்கள் ஏற்றுக்கொள்ளாததால் என்னைக் கொல்ல வழிதேடுகிறீர்கள். 38 நான் என்னுடைய தகப்பனோடு இருந்தபோது பார்த்த காரியங்களைப் பேசுகிறேன்.+ நீங்கள் உங்களுடைய தகப்பனிடமிருந்து கேட்ட காரியங்களைச் செய்கிறீர்கள்” என்று சொன்னார். 39 அதற்கு அவர்கள், “ஆபிரகாம்தான் எங்கள் தகப்பன்” என்று சொன்னார்கள். இயேசுவோ, “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள்+ என்றால், ஆபிரகாம் செய்த செயல்களையே செய்வீர்கள். 40 ஆனால், கடவுளிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட+ சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன என்னைக் கொல்ல இப்போது வழிதேடுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. 41 உங்களுடைய தகப்பன் செய்த செயல்களைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்” என்று சொன்னார். அப்போது அவர்கள், “நாங்கள் முறைகேடாக* பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தகப்பன் இருக்கிறார், அவர்தான் கடவுள்” என்று சொன்னார்கள்.
42 இயேசு அவர்களிடம், “கடவுள்தான் உங்கள் தகப்பன் என்றால், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவீர்கள்.+ ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து இங்கே வந்திருக்கிறேன். நான் சுயமாக வரவில்லை, அவர்தான் என்னை இங்கே அனுப்பினார்.+ 43 நான் சொல்வதை ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? என் வார்த்தையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததால்தான். 44 பிசாசுதான் உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள்.+ ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்;+ சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான்.+ 45 நானோ சத்தியத்தைப் பேசுகிறேன், ஆனாலும் நீங்கள் என்னை நம்புவதில்லை. 46 நான் பாவம் செய்ததாக உங்களில் யார் என்மேல் குற்றம்சாட்ட முடியும்? நான் சத்தியத்தைப் பேசினால்கூட, நீங்கள் ஏன் என்னை நம்புவதில்லை? 47 கடவுள் உங்கள் தகப்பனாக இருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கேட்பீர்கள்.+ அவர் உங்கள் தகப்பனாக இல்லாததால் அவருடைய வார்த்தைகளை நீங்கள் கேட்பதில்லை”+ என்று சொன்னார்.
48 அதற்கு யூதர்கள் அவரிடம், “‘நீ ஒரு சமாரியன்,+ பேய் பிடித்தவன்’+ என்றெல்லாம் நாங்கள் சொல்வது சரிதான்” என்று சொன்னார்கள். 49 அதற்கு இயேசு, “நான் பேய் பிடித்தவன் அல்ல, நான் என் தகப்பனுக்கு மதிப்புக் கொடுக்கிறேன், நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள். 50 ஆனால், நானே எனக்காக மகிமை தேடுவதில்லை.+ அதைத் தேடித்தருகிற ஒருவர் இருக்கிறார், அவரே நியாயந்தீர்ப்பவர். 51 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்”+ என்று சொன்னார். 52 யூதர்கள் அவரிடம், “உனக்குப் பேய் பிடித்திருக்கிறது என்பது இப்போது எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்துபோனார், தீர்க்கதரிசிகளும் இறந்துபோனார்கள். ஆனால் நீ, ‘என் வார்த்தையைக் கேட்டு நடக்கிற யாரும் சாகவே மாட்டார்கள்’ என்று சொல்கிறாய். 53 இறந்துபோன எங்கள் தகப்பனாகிய ஆபிரகாமைவிட நீ என்ன உயர்ந்தவனா? தீர்க்கதரிசிகளும் இறந்துவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, உன்னை நீ யாரென்று சொல்லிக்கொள்கிறாய்?” எனக் கேட்டார்கள். 54 அதற்கு இயேசு, “நானே என்னை மகிமைப்படுத்தினால், என் மகிமை வீணாக இருக்கும். என் தகப்பன் என்னை மகிமைப்படுத்துகிறார்.+ அவரை உங்கள் கடவுள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். 55 இருந்தாலும், உங்களுக்கு அவரைத் தெரியாது.+ ஆனால், எனக்கு அவரைத் தெரியும்.+ அவரைத் தெரியாது என்று நான் சொன்னால் உங்களைப் போலவே நானும் ஒரு பொய்யனாக இருப்பேன். ஆனால், எனக்கு அவரைத் தெரியும், நான் அவருடைய வார்த்தையின்படி நடக்கிறேன். 56 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என் நாளைப் பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார், அதைப் பார்த்து சந்தோஷப்பட்டார்”+ என்று சொன்னார். 57 அப்போது யூதர்கள், “உனக்கு இன்னும் 50 வயதுகூட ஆகவில்லை, நீயா ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். 58 அதற்கு இயேசு, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருந்திருக்கிறேன்”+ என்று சொன்னார். 59 அவர்கள் இதைக் கேட்டபோது கற்களை எடுத்து அவர்மேல் எறியப் பார்த்தார்கள். ஆனால், இயேசு அவர்களிடமிருந்து நழுவி ஆலயத்தைவிட்டு வெளியே போனார்.
9 அவர் போய்க்கொண்டிருந்தபோது, பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனைப் பார்த்தார். 2 அப்போது அவருடைய சீஷர்கள், “ரபீ,+ இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமா?” என்று கேட்டார்கள். 3 அதற்கு இயேசு, “இவன் செய்த பாவமும் இல்லை, இவனுடைய அப்பா அம்மா செய்த பாவமும் இல்லை. கடவுளுடைய செயல்கள் இவன் மூலம் எல்லாருக்கும் தெரியவரும்படியே இப்படிப் பிறந்திருக்கிறான்.+ 4 என்னை அனுப்பியவருடைய செயல்களைப் பகலிலேயே நாம் செய்ய வேண்டும்.+ ராத்திரி வரப்போகிறது, அப்போது எந்த மனுஷனாலும் வேலை செய்ய முடியாது. 5 நான் இந்த உலகத்தில் இருக்கும்வரை, இந்த உலகத்துக்கு ஒளியாக இருக்கிறேன்”+ என்று சொன்னார். 6 இவற்றைச் சொன்ன பின்பு, தரையில் துப்பி, எச்சிலால் மண்ணைக் குழைத்து, அந்த மனிதனுடைய கண்கள்மேல் பூசி,+ 7 “சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு” என்றார். (சீலோவாம் என்றால் “அனுப்பப்பட்டது” என்று அர்த்தம்.) அவனும் போய், கழுவி, பார்வை பெற்றுத் திரும்பி வந்தான்.+
8 அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் முன்பு அவன் பிச்சை எடுத்ததைப் பார்த்தவர்களும், “இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவன் இவன்தானே?” என்று பேசிக்கொண்டார்கள். 9 சிலர், “இவன்தான்” என்று சொன்னார்கள். வேறு சிலர், “இல்லவே இல்லை, ஆனால் அவனைப் போலவே இருக்கிறான்” என்று சொன்னார்கள். அந்த மனிதனோ, “நான்தான் அவன்” என்று திரும்பத் திரும்பச் சொன்னான். 10 அதற்கு அவர்கள், “அப்படியானால், உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று கேட்டார்கள். 11 அப்போது அவன், “இயேசு என்பவர் மண்ணைக் குழைத்து என் கண்கள்மேல் பூசி, ‘சீலோவாம் குளத்துக்குப் போய்க் கழுவு’+ என்று சொன்னார். நானும் போய்க் கழுவினேன், எனக்குப் பார்வை கிடைத்தது” என்று சொன்னான். 12 அதற்கு அவர்கள், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அவனோ, “எனக்குத் தெரியாது” என்று சொன்னான்.
13 முன்பு பார்வையற்றவனாக இருந்த அந்த மனிதனைப் பரிசேயர்களிடம் அவர்கள் கூட்டிக்கொண்டு போனார்கள். 14 இயேசு மண்ணைக் குழைத்து அவனுடைய கண்கள்மேல் பூசிய+ நாள் ஓய்வுநாளாக இருந்தது.+ 15 அப்போது பரிசேயர்களும், “உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவனிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு அவன், “மண்ணைக் குழைத்து அவர் என் கண்கள்மேல் பூசினார்; அதைக் கழுவிய பிறகு எனக்குப் பார்வை கிடைத்தது” என்று சொன்னான். 16 பின்பு பரிசேயர்களில் சிலர், “அந்த மனுஷன் கடவுளிடமிருந்து வந்தவனல்ல. ஏனென்றால், அவன் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதில்லை”+ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மற்றவர்களோ, “இப்படிப்பட்ட அற்புதங்களை ஒரு பாவியால் எப்படிச் செய்ய முடியும்?”+ என்று கேட்டார்கள். இதனால், அவர்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது.+ 17 பின்பு அந்த மனிதனிடம், “அவன் உனக்குத்தானே பார்வை கொடுத்தான், அந்த ஆளைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு தீர்க்கதரிசி” என்று சொன்னான்.
18 ஆனால், பார்வையற்றவனாக இருந்தவன் இப்போது பார்க்கிறான் என்பதை யூத மதத் தலைவர்கள் நம்பவில்லை. அதனால், அவனுடைய அப்பா அம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். 19 “இவன்தான் உங்கள் மகனா? இவன் குருடனாகப் பிறந்தான் என்று சொல்கிறீர்களே, இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவர்களிடம் கேட்டார்கள். 20 அப்போது அவனுடைய அப்பா அம்மா, “இவன் எங்களுடைய மகன்தான், பிறக்கும்போதே குருடனாகத்தான் பிறந்தான். 21 ஆனால், இப்போது இவனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது என்று எங்களுக்குத் தெரியாது, யார் இவனுக்குப் பார்வை தந்தது என்றும் எங்களுக்குத் தெரியாது. இவனையே கேளுங்கள். இவன் வளர்ந்த பையன்தானே, இவனே சொல்லட்டும்” என்றார்கள். 22 யூத மதத் தலைவர்களுக்குப் பயந்து+ அவனுடைய அப்பா அம்மா இப்படிச் சொன்னார்கள்; ஏனென்றால், இயேசுவைக் கிறிஸ்து என்று யாராவது சொன்னால் ஜெபக்கூடத்திலிருந்து அவர்களை நீக்கிவிட வேண்டுமென்று+ அந்தத் தலைவர்கள் ஏற்கெனவே தீர்மானம் எடுத்திருந்தார்கள். 23 அதனால்தான், “இவன் வளர்ந்த பையன்தானே. இவனையே கேளுங்கள்” என்று அவனுடைய அப்பா அம்மா சொன்னார்கள்.
24 முன்பு பார்வையற்றவனாக இருந்த அந்த மனிதனை இரண்டாவது தடவை அவர்கள் கூப்பிட்டு, “உண்மையைச் சொல்லி கடவுளை மகிமைப்படுத்து. அந்த ஆள் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்று சொன்னார்கள். 25 அதற்கு அவன், “அவர் ஒரு பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும், பார்க்க முடியாமலிருந்த என்னால் இப்போது பார்க்க முடிகிறது” என்று சொன்னான். 26 அப்போது அவர்கள், “அவன் உனக்கு என்ன செய்தான்? உனக்கு எப்படிப் பார்வை தந்தான்?” என்று அவனிடம் கேட்டார்கள். 27 அதற்கு அவன், “நான் ஏற்கெனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை. மறுபடியும் ஏன் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீஷர்களாக விரும்புகிறீர்களா என்ன?” என்று கேட்டான். 28 அப்போது அவர்கள் அவனைச் சபித்து, “நீதான் அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயுடைய சீஷர்கள். 29 மோசேயிடம் கடவுள் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும்; ஆனால், அந்த ஆள் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியாது” என்று சொன்னார்கள். 30 அதற்கு அந்த மனிதன், “என்ன ஆச்சரியம்! அவர் எனக்குப் பார்வை தந்திருக்கிறார், அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று தெரியாது என்கிறீர்களே! 31 பாவிகளுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை,+ அவருக்குப் பயந்து அவருடைய விருப்பத்தின்படி* செய்கிறவனுடைய ஜெபத்தைத்தான் அவர் கேட்கிறார்+ என்பது நமக்குத் தெரியும். 32 பிறவிக் குருடனுக்கு ஒருவர் பார்வை தந்ததாகச் சரித்திரமே இல்லை. 33 அவர் கடவுளிடமிருந்து வரவில்லை என்றால், அவரால் ஒன்றுமே செய்திருக்க முடியாது”+ என்று சொன்னான். 34 அதற்கு அவர்கள், “முழுக்க முழுக்கப் பாவத்தில் பிறந்த நீயா எங்களுக்குச் சொல்லித்தருகிறாய்?” என்று கேட்டு, அவனைத் துரத்திவிட்டார்கள்!+
35 அவனைத் துரத்திவிட்டார்கள் என்ற விஷயத்தை இயேசு கேள்விப்பட்டார்; பிறகு அவனைப் பார்த்தபோது, “மனிதகுமாரன்மேல் நீ விசுவாசம் வைக்கிறாயா?” என்று கேட்டார். 36 அதற்கு அந்த மனிதன், “ஐயா, அவர் யார் என்று சொல்லுங்கள்; அப்போது நான் விசுவாசம் வைப்பேன்” என்று சொன்னான். 37 இயேசு அவனிடம், “நீ அவரைப் பார்த்திருக்கிறாய்; உன்னிடம் பேசிக்கொண்டிருப்பவர்தான் அவர்” என்று சொன்னார். 38 உடனடியாக அவன், “எஜமானே, நான் விசுவாசம் வைக்கிறேன்” என்று சொல்லி அவர் முன்னால் மண்டிபோட்டு தலைவணங்கினான். 39 பின்பு இயேசு, “பார்வையற்றவர்கள் பார்வை அடையும்படியும்+ பார்வையுள்ளவர்கள் பார்வை இழக்கும்படியும்+ தீர்ப்பு பெறுவதற்காகவே நான் இந்த உலகத்துக்கு வந்தேன்” என்று சொன்னார். 40 அவனோடிருந்த பரிசேயர்கள் இவற்றைக் கேட்டு, “நாங்களும் என்ன பார்வையற்றவர்களா?” என்று கேட்டார்கள். 41 அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாக இருந்திருந்தால், பாவமில்லாமல் இருந்திருப்பீர்கள். ஆனால், ‘நாங்கள் பார்க்கிறோம்’ என்று நீங்கள் சொல்வதால் பாவமுள்ளவர்களாகவே இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
10 பின்பு இயேசு அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஆட்டுத்தொழுவத்தின் கதவு வழியாக வராமல் வேறு வழியாக ஏறி வருகிறவன் திருடனாகவும் கொள்ளைக்காரனாகவும் இருக்கிறான்.+ 2 ஆனால், கதவு வழியாக வருகிறவர் ஆடுகளின் மேய்ப்பராக இருக்கிறார்.+ 3 காவல்காரன் அவருக்குத்தான் கதவைத் திறந்துவிடுகிறான்;+ ஆடுகளும் அவருடைய குரலைக் கேட்கின்றன;+ அவர் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவற்றை வெளியே நடத்திக்கொண்டு போகிறார். 4 அவர் தன்னுடைய ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே கொண்டுவந்த பின்பு, அவற்றுக்கு முன்னால் போகிறார்; அந்த ஆடுகள் அவருடைய குரலைத் தெரிந்து வைத்திருப்பதால் அவருக்குப் பின்னால் போகின்றன. 5 அன்னியர்களுடைய குரல் அவற்றுக்குத் தெரியாது; அதனால், அவை அன்னியன் பின்னால் போகவே போகாது, அவனைவிட்டு ஓடிவிடும்” என்று சொன்னார். 6 அவர் சொன்ன இந்த ஒப்புமையை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
7 அதனால் இயேசு மறுபடியும் அவர்களிடம், “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நான்தான் ஆட்டுத்தொழுவத்தின் கதவு.+ 8 என் பெயரில் போலியாக வந்த எல்லாரும் திருடர்கள், கொள்ளைக்காரர்கள்; அவர்களுடைய குரலுக்கு ஆடுகள் காதுகொடுக்கவில்லை. 9 நான்தான் கதவு; என் வழியாக நுழைகிற எவரும் மீட்புப் பெறுவார்; அவர் உள்ளே போவார், வெளியே வருவார், மேய்ச்சல் நிலத்தைக் கண்டுபிடிப்பார்.+ 10 திருடன் திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமே தவிர வேறெதற்கும் வருவதில்லை.+ நானோ, அவற்றுக்கு வாழ்வு கிடைப்பதற்காக, அதுவும் முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்காக, வந்திருக்கிறேன். 11 நான்தான் நல்ல மேய்ப்பன்;+ நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்.+ 12 ஆனால் கூலிக்கு மேய்ப்பவன், உண்மையான மேய்ப்பனாக இல்லாததாலும் ஆடுகளுக்குச் சொந்தக்காரனாக இல்லாததாலும், ஓநாய் வருவதைப் பார்த்ததுமே ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அந்த ஓநாய் ஆடுகளைப் பிடித்துக்கொண்டு, மந்தையைச் சிதறடித்துவிடுகிறது. 13 அவன் கூலிக்கு மேய்ப்பவனாக இருப்பதால் ஆடுகள்மேல் அவனுக்கு அக்கறையில்லை. 14 நான்தான் நல்ல மேய்ப்பன். தகப்பன் என்னைத் தெரிந்து வைத்திருப்பது போலவும் தகப்பனை நான் தெரிந்து வைத்திருப்பது போலவும்,+ 15 நான் என்னுடைய ஆடுகளைத் தெரிந்து வைத்திருக்கிறேன், என்னுடைய ஆடுகளும் என்னைத் தெரிந்து வைத்திருக்கின்றன.+ ஆடுகளுக்காக நான் என் உயிரையே கொடுக்கிறேன்.+
16 இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன.+ அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும்.* அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்.+ 17 நான் என் உயிரைக் கொடுப்பதால்+ என் தகப்பன் என்மேல் அன்பு காட்டுகிறார்;+ என் உயிரை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காக நான் அதைக் கொடுக்கிறேன். 18 ஒருவனும் என் உயிரை என்னிடமிருந்து பறிக்க மாட்டான். நானாகவே அதைக் கொடுக்கிறேன். அதைக் கொடுப்பதற்கு எனக்கு அதிகாரம் இருக்கிறது, மறுபடியும் பெற்றுக்கொள்வதற்கும் அதிகாரம் இருக்கிறது.+ இந்தக் கட்டளையை என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.
19 அவர் இப்படிச் சொன்னதால் மறுபடியும் யூதர்கள் மத்தியில் பிரிவினை உண்டானது.+ 20 அவர்களில் பலர், “இவனுக்குப் பேய் பிடித்திருக்கிறது. இவன் ஒரு பைத்தியம், இவன் சொல்வதை ஏன் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள். 21 மற்றவர்களோ, “பேய் பிடித்தவன் இப்படியா பேசுவான்? குருடர்களுக்குப் பேயால் பார்வை தர முடியுமா?” என்று கேட்டார்கள்.
22 அப்போது, எருசலேமில் ஆலய அர்ப்பணப் பண்டிகை நடந்தது. அது குளிர் காலமாக இருந்தது. 23 ஆலயத்தில் இருக்கிற சாலொமோன் மண்டபத்தில்+ இயேசு நடந்துகொண்டிருந்தார். 24 யூதர்கள் அவரைச் சுற்றிவளைத்து, “எவ்வளவு காலத்துக்குத்தான் உன்னைப் பற்றிச் சொல்லாமல் எங்களைக் காக்க வைப்பாய்? நீதான் கிறிஸ்து என்றால், அதை எங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்று கேட்டார்கள். 25 அதற்கு இயேசு, “நான் உங்களுக்குச் சொன்னேன், ஆனால் நீங்கள் நம்பவில்லை. என் தகப்பனுடைய பெயரில் நான் செய்கிற செயல்களே என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.+ 26 நீங்கள் என் மந்தையைச் சேர்ந்த ஆடுகள் இல்லை,+ அதனால்தான் நம்பாமல் இருக்கிறீர்கள். 27 என் ஆடுகள் என்னுடைய குரலைக் கேட்கின்றன,* நான் அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன், அவை என் பின்னால் வருகின்றன.+ 28 நான் அவற்றுக்கு முடிவில்லாத வாழ்வு தருகிறேன்,+ அவை ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. அவற்றை ஒருவனும் என் கையிலிருந்து பறித்துக்கொள்ள மாட்டான்.+ 29 என்னுடைய தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கும் அந்த ஆடுகள் மற்ற எல்லாவற்றையும்விட மதிப்புள்ளவை. அவற்றை ஒருவனும் என் தகப்பனுடைய கையிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.+ 30 நானும் என் தகப்பனும் ஒன்றாயிருக்கிறோம்”*+ என்று சொன்னார்.
31 அப்போது, அந்த யூதர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்வதற்காக மறுபடியும் கற்களை எடுத்தார்கள். 32 இயேசு அவர்களிடம், “என் தகப்பன் சொன்னபடி எத்தனையோ நல்ல செயல்களை உங்கள் முன்னால் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றில் எந்தச் செயலுக்காக நீங்கள் என்மேல் கல்லெறிகிறீர்கள்?” என்று கேட்டார். 33 அதற்கு அந்த யூதர்கள், “நல்ல செயலுக்காக அல்ல, கடவுளை நிந்தித்துப் பேசியதற்காக உன்மேல் கல்லெறிகிறோம்;+ நீ மனுஷனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக்கொள்கிறாய்” என்று சொன்னார்கள். 34 அதற்கு இயேசு, “உங்களுடைய திருச்சட்டத்தில் ‘“நீங்கள் எல்லாரும் கடவுள்கள்”*+ எனச் சொன்னேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது, இல்லையா? 35 கடவுளுடைய வார்த்தையால் கண்டனம் செய்யப்பட்டவர்களையே ‘கடவுள்கள்’+ என்று அவர் அழைத்திருக்கிறார்; அதோடு, வேதவசனங்கள் சொல்வதையும் தள்ளுபடி செய்ய முடியாது. 36 அப்படியிருக்கும்போது, தகப்பனால் புனிதமாக்கப்பட்டும் இந்த உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை ‘கடவுளுடைய மகன்’ என்று சொன்னதற்காகவா ‘கடவுளை நிந்திக்கிறாய்’ என்று சொல்கிறீர்கள்?+ 37 என் தகப்பனின் செயல்களை நான் செய்யாவிட்டால், நீங்கள் என்னை நம்ப வேண்டியதில்லை. 38 அவற்றைச் செய்கிறேன் என்றால், என்னை நீங்கள் நம்பாவிட்டால்கூட, என் செயல்களையாவது நம்புங்கள்;+ அப்போது, என் தகப்பன் என்னோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதையும், நானும் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருக்கிறேன் என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்,+ தொடர்ந்து தெரிந்துகொண்டே இருப்பீர்கள்” என்று சொன்னார். 39 இதனால், அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள்; அவரோ அவர்களிடம் சிக்காமல் தப்பித்துக்கொண்டார்.
40 அவர் மறுபடியும் யோர்தானைக் கடந்து, யோவான் முதலில் ஞானஸ்நானம் கொடுத்துவந்த இடத்துக்குப் போய்+ அங்கே தங்கினார். 41 நிறைய பேர் அவரிடம் வந்தார்கள்; அப்போது அவர்கள், “யோவான் எந்தவொரு அற்புதமும் செய்யவில்லை; ஆனால், இவரைப் பற்றி யோவான் சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கிறது”+ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். 42 அங்கே அவர்மேல் நிறைய பேர் விசுவாசம் வைத்தார்கள்.
11 பெத்தானியா கிராமத்தில் லாசரு என்பவன் வியாதியாக இருந்தான். மரியாளும் மார்த்தாளும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.+ 2 இந்த மரியாள்தான் இயேசுமேல் வாசனை எண்ணெயை ஊற்றி, தன்னுடைய கூந்தலால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள்;+ இவளுடைய சகோதரன் லாசருதான் வியாதியாக இருந்தான். 3 அதனால் அவனுடைய சகோதரிகள் ஆள் அனுப்பி, “எஜமானே, உங்கள் பாசத்துக்குரிய நண்பன் வியாதியாக இருக்கிறான்” என்று சொல்லச் சொன்னார்கள். 4 இயேசு இதைக் கேட்டபோது, “இந்த வியாதியின் முடிவில் மரணம் அல்ல, கடவுளுக்கு மகிமைதான் உண்டாகும்;+ இதன் மூலம் கடவுளுடைய மகனுக்கும் மகிமை உண்டாகும்” என்று சொன்னார்.
5 மார்த்தாளையும் அவளுடைய சகோதரியையும் லாசருவையும் இயேசு நேசித்தார். 6 ஆனால், லாசருவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதைக் கேள்விப்பட்ட பிறகும் தான் இருந்த இடத்திலேயே இன்னும் இரண்டு நாட்கள் தங்கினார். 7 அதன் பின்பு அவர் தன்னுடைய சீஷர்களிடம், “மறுபடியும் யூதேயாவுக்குப் போகலாம், வாருங்கள்” என்று சொன்னார். 8 அதற்குச் சீஷர்கள், “ரபீ,+ சமீபத்தில்தான் யூதேய மக்கள் உங்களைக் கல்லெறிந்து கொல்லப் பார்த்தார்கள்,+ மறுபடியுமா அங்கே போகப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். 9 அப்போது இயேசு, “பகலுக்கு 12 மணிநேரம் இருக்கிறது, இல்லையா?+ ஒருவன் பகலில் நடந்தால் தடுக்கி விழ மாட்டான். ஏனென்றால், அவன் இந்த உலகத்தின் ஒளியைப் பார்க்கிறான். 10 ஆனால், ஒருவன் இருட்டில் நடந்தால் தடுக்கி விழுவான். ஏனென்றால், அவனிடம் ஒளி இல்லை” என்று சொன்னார்.
11 இப்படிச் சொல்லிவிட்டு, “நம்முடைய நண்பன் லாசரு தூங்குகிறான்,+ அவனை எழுப்புவதற்காக நான் அங்கே போகப்போகிறேன்” என்று சொன்னார். 12 அதற்குச் சீஷர்கள், “எஜமானே, அவன் தூங்கினால் குணமாகிவிடுவானே” என்று சொன்னார்கள். 13 லாசரு இறந்துவிட்டதைப் பற்றி இயேசு பேசிக்கொண்டிருந்தார். அவர்களோ, தூங்குவதைப் பற்றி அவர் பேசுவதாக நினைத்துக்கொண்டார்கள். 14 அதனால் இயேசு, “லாசரு இறந்துவிட்டான்”+ என்று அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார். 15 “நான் அங்கே இல்லாததால் உங்கள் நம்பிக்கை அதிகமாவதற்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது, அதை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். வாருங்கள், இப்போது நாம் அவனிடம் போகலாம்” என்று சொன்னார். 16 திதிமு என்ற தோமா மற்ற சீஷர்களிடம், “நாம் அவரோடு சேர்ந்து சாக வேண்டியிருந்தாலும் சரி, அவரோடு போகலாம், வாருங்கள்”+ என்று சொன்னார்.
17 இயேசு அங்கே போய்ச் சேர்ந்தபோது, லாசரு கல்லறையில்* வைக்கப்பட்டு ஏற்கெனவே நான்கு நாட்கள் ஆகியிருந்தன. 18 எருசலேமுக்குப் பக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு மைல்* தூரத்தில் பெத்தானியா இருந்தது. 19 மார்த்தாள் மற்றும் மரியாளின் சகோதரன் இறந்திருந்ததால் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல யூதர்கள் நிறைய பேர் அங்கே வந்திருந்தார்கள். 20 இயேசு வந்துகொண்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது அவரைச் சந்திக்க மார்த்தாள் போனாள். ஆனால், மரியாள்+ வீட்டிலேயே உட்கார்ந்திருந்தாள். 21 மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். 22 ஆனாலும், நீங்கள் கடவுளிடம் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். 23 இயேசு அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான்” என்று சொன்னார். 24 அதற்கு மார்த்தாள், “கடைசி நாளில் உயிர்த்தெழுதல்+ நடக்கும்போது அவன் உயிரோடு வருவான் என்று எனக்குத் தெரியும்” என்று சொன்னாள். 25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். 26 உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள்.+ இதை நம்புகிறாயா?” என்று கேட்டார். 27 அதற்கு அவள், “ஆமாம், எஜமானே. நீங்கள்தான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து, நீங்கள்தான் இந்த உலகத்துக்கு வரவேண்டியவர் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னாள். 28 இப்படிச் சொல்லிவிட்டு தன் சகோதரி மரியாளிடம் போய், “போதகர்+ வந்திருக்கிறார், உன்னைக் கூப்பிடுகிறார்” என்று அவள் காதில் சொன்னாள். 29 மரியாள் இதைக் கேட்டவுடன், அவரைச் சந்திக்க வேகமாக எழுந்து போனாள்.
30 இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தன்னைச் சந்தித்த இடத்திலேயே இருந்தார். 31 மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், அவள் வேகமாக எழுந்து வெளியே போவதைப் பார்த்து, அழுவதற்காகக் கல்லறைக்குப்+ போகிறாள் என நினைத்துக்கொண்டு அவள் பின்னாலேயே போனார்கள். 32 இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் வந்து, அவரைப் பார்த்ததும் அவருடைய காலில் விழுந்து, “எஜமானே, நீங்கள் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள். 33 அவள் அழுவதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுவதையும் இயேசு பார்த்தபோது உள்ளம் குமுறினார், மனம் கலங்கினார். 34 “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “எஜமானே, வந்து பாருங்கள்” என்று சொன்னார்கள். 35 அப்போது, இயேசு கண்ணீர்விட்டார்.+ 36 அதனால் யூதர்கள், “பாருங்கள், அவன்மேல் இவருக்கு எவ்வளவு பாசம்!” என்று பேசிக்கொண்டார்கள். 37 ஆனால் அவர்களில் வேறு சிலர், “குருடனுடைய கண்களைத் திறந்த இவரால்+ லாசருவின் சாவைத் தடுக்க முடியவில்லையா?” என்று கேட்டார்கள்.
38 இயேசு மறுபடியும் உள்ளத்தில் குமுறியபடி கல்லறைக்கு வந்தார். அது கல்லால் மூடப்பட்டிருந்த ஒரு குகை. 39 “இந்தக் கல்லை எடுத்துப் போடுங்கள்” என்று இயேசு சொன்னார். அப்போது, இறந்தவனின் சகோதரியான மார்த்தாள் அவரிடம், “எஜமானே, நான்கு நாளாகிவிட்டது, நாறுமே” என்று சொன்னாள். 40 அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைப் பார்ப்பாய் என்று உனக்குச் சொன்னேன், இல்லையா?”+ என்று கேட்டார். 41 பின்பு, அவர்கள் கல்லை எடுத்துப் போட்டார்கள். அதன்பின், இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து,+ “தகப்பனே, என் ஜெபத்தைக் கேட்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன். 42 நீங்கள் எப்போதும் என் ஜெபத்தைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இங்கே சுற்றி நிற்கிற மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகவே இப்படி ஜெபம் செய்கிறேன்”+ என்று சொன்னார். 43 இவற்றைச் சொன்ன பின்பு, “லாசருவே, வெளியே வா!”+ என்று சத்தமாகக் கூப்பிட்டார். 44 அப்போது, இறந்தவன் உயிரோடு வெளியே வந்தான்; அவனுடைய கால்களும் கைகளும் துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. முகத்திலும் ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களிடம், “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள், இவன் போகட்டும்” என்று சொன்னார்.
45 மரியாளைப் பார்க்க வந்திருந்த யூதர்கள் நிறைய பேர் அவர் செய்ததைப் பார்த்து அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ 46 ஆனால், அவர்களில் சிலர் பரிசேயர்களிடம் போய், இயேசு செய்த காரியங்களைப் பற்றிச் சொன்னார்கள். 47 இதனால் முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் நியாயசங்கத்தைக் கூட்டி, “இப்போது என்ன செய்வது? இந்த மனுஷன் நிறைய அற்புதங்களைச் செய்கிறானே!+ 48 இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவன்மேல் விசுவாசம் வைப்பார்கள். பிறகு, ரோமர்கள் வந்து நம்முடைய ஆலயத்தையும் தேசத்தையும் எடுத்துக்கொள்வார்கள்” என்று சொன்னார்கள். 49 அப்போது, அவர்களில் ஒருவராகவும் அந்த வருஷத்தின் தலைமைக் குருவாகவும் இருந்த காய்பா+ அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 50 முழு தேசமும் அழிந்துபோவதைவிட மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது என்பதை யோசிக்காமல் இருக்கிறீர்களே” என்று சொன்னார். 51 இந்த வார்த்தைகளை அவர் சொந்தமாகச் சொல்லவில்லை; அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவாக இருந்ததால், இயேசு அந்தத் தேசத்துக்காகச் சாகப்போகிறார் என்றும், 52 அந்தத் தேசத்துக்காக மட்டுமல்ல, சிதறிப்போன கடவுளுடைய பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்கும்படி அவர்களுக்காகவும் சாகப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாகச் சொன்னார். 53 அன்றுமுதல், அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.
54 அதனால், யூதர்கள் மத்தியில் இயேசு வெளிப்படையாக நடமாடாமல், அங்கிருந்து புறப்பட்டு, வனாந்தரத்துக்குப் பக்கத்திலிருந்த எப்பிராயீம்+ என்ற நகரத்துக்குப் போய்த் தன்னுடைய சீஷர்களோடு தங்கினார். 55 யூதர்களுடைய பஸ்கா பண்டிகை+ நெருங்கிக்கொண்டிருந்தது. தூய்மைச் சடங்கு செய்துகொள்வதற்காக நாட்டுப்புறத்திலிருந்து நிறைய பேர் பஸ்காவுக்கு முன்பே எருசலேமுக்குப் போனார்கள். 56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தில் கூடிநின்றபோது, “அவர் பண்டிகைக்கு வர மாட்டாரா, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். 57 முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க* நினைத்தார்கள். அதனால், அவர் இருக்கிற இடம் யாருக்காவது தெரியவந்தால் அதைத் தங்களுக்குச் சொல்ல வேண்டுமென்று கட்டளை போட்டிருந்தார்கள்.
12 பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்ந்தார். அங்குதான் அவர் உயிரோடு எழுப்பிய லாசரு+ இருந்தான். 2 அங்கே அவருக்குச் சாயங்கால உணவு பரிமாறப்பட்டது. மார்த்தாள்தான் பரிமாறிக்கொண்டிருந்தாள்,+ அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் லாசருவும் ஒருவன். 3 அப்போது மரியாள் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை எடுத்துவந்தாள். ஒரு ராத்தல்* அளவுள்ள அந்த எண்ணெயை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, தன்னுடைய கூந்தலால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். வீடு முழுவதும் அந்த எண்ணெய் வாசம் வீசியது.+ 4 ஆனால், அவருடைய சீஷர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,+ 5 “இந்த வாசனை எண்ணெயை 300 தினாரியுவுக்கு* விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். 6 ஏழைகள் மீதுள்ள அக்கறையால் அல்ல, அவன் திருடனாக இருந்ததால்தான் அப்படிச் சொன்னான். பணப்பெட்டி அவனிடம் இருந்ததால், அதில் போடப்பட்ட பணத்தைத் திருடுவது அவனுடைய வழக்கமாக இருந்தது. 7 அதற்கு இயேசு, “இவளை ஒன்றும் சொல்லாதே, அடக்க நாளுக்கு என்னைத் தயார்செய்வதற்காக அவள் இதைச் செய்யட்டும்.+ 8 ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்,+ ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை”+ என்று சொன்னார்.
9 அவர் அங்கே இருப்பதைக் கேள்விப்பட்டு யூதர்களில் நிறைய பேர் கூட்டமாக வந்தார்கள். இயேசுவைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, அவர் உயிரோடு எழுப்பிய லாசருவைப் பார்ப்பதற்காகவும் வந்தார்கள்.+ 10 அதனால், லாசருவையும் கொலை செய்ய முதன்மை குருமார்கள் திட்டம் தீட்டினார்கள். 11 ஏனென்றால், லாசருவினால்தான் யூதர்களில் நிறைய பேர் இயேசுவிடம் போய், அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+
12 அடுத்த நாள், பண்டிகைக்கு வந்திருந்த ஏராளமான மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டார்கள். 13 அதனால், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போனார்கள். பின்பு, “கடவுளே, இவரைக் காத்தருளுங்கள்! யெகோவாவின்* பெயரில் வருகிற+ இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்!”+ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 14 இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்தபோது அதன்மேல் உட்கார்ந்தார்.+ 15 “சீயோன் மகளே, பயப்படாதே. இதோ! உன் ராஜா ஒரு கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்”+ என்று எழுதப்பட்டுள்ளபடியே இது நடந்தது. 16 இவற்றை அவருடைய சீஷர்கள் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அவரைப் பற்றிய இந்த விஷயங்கள் முன்பே எழுதப்பட்டிருந்தன என்பதும், அவற்றின்படியே தாங்கள் அவருக்குச் செய்தார்கள் என்பதும், இயேசு மகிமைப்படுத்தப்பட்ட பிறகுதான்+ அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன.+
17 லாசருவை அவர் கல்லறையிலிருந்து* வெளியே வரும்படி கூப்பிட்டு உயிர்த்தெழுப்பியபோது+ அவரோடிருந்த மக்கள், அங்கு நடந்ததைப் பற்றிச் சாட்சி கொடுத்துவந்தார்கள்.+ 18 அவர் செய்த இந்த அற்புதத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்களும் அவரைச் சந்திக்கப் போனார்கள். 19 அதனால் பரிசேயர்கள் ஒருவருக்கொருவர், “பாருங்கள், நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை. உலகமே அவன் பின்னால் போய்விட்டது”+ என்று பேசிக்கொண்டார்கள்.
20 பண்டிகையின்போது கடவுளை வணங்குவதற்காக வந்தவர்களில் சில கிரேக்கர்களும் இருந்தார்கள். 21 கலிலேயாவில் இருக்கிற பெத்சாயிதாவைச் சேர்ந்த பிலிப்புவிடம்+ அவர்கள் போய், “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு போய் இதை அந்திரேயாவிடம் சொன்னார். பின்பு, அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவிடம் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படும் நேரம் வந்துவிட்டது.+ 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது ஒரே மணியாகத்தான் இருக்கும்; அது செத்தால்தான்+ அதிக விளைச்சலைத் தரும். 25 தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துபோவான்.* இந்த உலகத்தில் தன் உயிரை வெறுக்கிறவனோ+ அதைப் பாதுகாத்துக்கொண்டு முடிவில்லாத வாழ்வைப் பெறுவான்.+ 26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்ய விரும்பினால், அவன் என்னைப் பின்பற்றி வரவேண்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியனும் இருப்பான்.+ ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், அவனை என் தகப்பன் கெளரவிப்பார். 27 இப்போது என் மனம் கலங்குகிறது,+ நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து* என்னைக் காப்பாற்றுங்கள்.+ இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும். 28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.
29 அங்கே கூட்டமாக நின்றுகொண்டிருந்த மக்கள் இதைக் கேட்டு, இடி இடித்ததென்று பேசிக்கொண்டார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொன்னார்கள். 30 அதற்கு இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காக வந்தது. 31 இப்போதே இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன்+ வீழ்த்தப்படுவான்.+ 32 ஆனால், நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது*+ எல்லா விதமான மக்களையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” என்று சொன்னார். 33 எப்படிச் சாகப்போகிறார்+ என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னார். 34 அப்போது மக்கள் அவரிடம், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?+ யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்டார்கள். 35 அதற்கு இயேசு அவர்களிடம், “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். இருளில் நடந்துபோகும் ஒருவனுக்கு தான் போகிற இடம் தெரியாது.+ 36 நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு+ ஒளி உங்களோடு இருக்கும்போதே அதில் விசுவாசம் வையுங்கள்” என்று சொன்னார்.
இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, அவர்களைவிட்டுப் போய் மறைந்துகொண்டார். 37 அவர்கள் முன்னால் அவர் ஏராளமான அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை. 38 ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது: “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?+ யெகோவா* யாருக்குத் தன்னுடைய பலத்தை* காட்டியிருக்கிறார்?”+ 39 அதோடு, அவர்கள் நம்பாததற்கான காரணத்தையும் ஏசாயா சொன்னார்: 40 “அவர்கள் தங்களுடைய கண்களால் பார்க்காமலும் இதயத்தால் உணராமலும் என்னிடம் திரும்பி வராமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி, அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிறார், அவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்திருக்கிறார்.”+ 41 அவருடைய மகிமையைப் பார்த்ததால்தான் ஏசாயா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்.+ 42 இருந்தாலும், யூதத் தலைவர்களில்கூட நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ ஆனால், தங்களைப் பரிசேயர்கள் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடக் கூடாது என்பதற்காக அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை.+ 43 கடவுளிடமிருந்து வரும் மகிமையைவிட மனிதர்களிடமிருந்து வரும் மகிமையையே அவர்கள் அதிகமாக விரும்பினார்கள்.+
44 ஆனாலும் இயேசு சத்தமாக, “என்மேல் விசுவாசம் வைக்கிறவன், என்மேல் மட்டுமல்ல, என்னை அனுப்பியவர்மேலும் விசுவாசம் வைக்கிறான்.+ 45 என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பியவரையும் பார்க்கிறான்.+ 46 என்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும் இருளிலேயே+ இருக்காதபடி நான் இந்த உலகத்துக்கு ஒளியாக வந்திருக்கிறேன்.+ 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால், நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை மீட்பதற்காகவே வந்தேன்.+ 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.+ 50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்”+ என்றார்.
13 இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடம் போவதற்கு+ நேரம் வந்துவிட்டதென்று+ பஸ்கா பண்டிகைக்கு முன்பு இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், உலகத்திலிருந்த தன்னுடைய சீஷர்கள்மேல் அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.+ 2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான். 3 தகப்பன் எல்லாவற்றையும் தன்னுடைய கைகளில் ஒப்படைத்திருந்ததையும், தான் கடவுளிடமிருந்து வந்திருந்ததையும், கடவுளிடமே திரும்பிப் போக+ வேண்டியிருந்ததையும் இயேசு தெரிந்து வைத்திருந்தார். 4 அதனால், இயேசு எழுந்து, தன்னுடைய மேலங்கியைக் கழற்றி, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்;+ 5 பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, சீஷர்களின் பாதங்களைக் கழுவவும், தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கவும் ஆரம்பித்தார். 6 அவர் சீமோன் பேதுருவிடம் வந்தபோது, “எஜமானே, நீங்களா என் பாதங்களைக் கழுவப்போகிறீர்கள்?” என்று பேதுரு கேட்டார். 7 அதற்கு இயேசு, “நான் என்ன செய்கிறேன் என்பது இப்போது உனக்குப் புரியாது, பிறகு புரிந்துகொள்வாய்” என்று சொன்னார். 8 அப்போது பேதுரு, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று சொன்னார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால்+ என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொன்னார். 9 அதற்கு சீமோன் பேதுரு, “அப்படியென்றால் எஜமானே, என் பாதங்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவுங்கள்” என்று சொன்னார். 10 அதற்கு இயேசு, “குளித்தவன் தன் பாதங்களை மட்டும் கழுவினால் போதும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆனால் எல்லாருமே அல்ல” என்று சொன்னார். 11 தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+ அதனால்தான், “உங்களில் எல்லாருமே சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
12 அவர்களுடைய பாதங்களைக் கழுவிய பின்பு, தன்னுடைய மேலங்கியைப் போட்டுக்கொண்டு மறுபடியும் சாப்பிட உட்கார்ந்து, “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? 13 என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் கூப்பிடுவது சரிதான். ஏனென்றால், நான் போதகர்தான், எஜமான்தான்.+ 14 எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால்,+ நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்.*+ 15 நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்.+ 16 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் கிடையாது, அனுப்பப்பட்டவரும் தன்னை அனுப்பியவரைவிட உயர்ந்தவர் கிடையாது. 17 இதையெல்லாம் இப்போது தெரிந்துகொண்டீர்கள், ஆனால் இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்.+ 18 உங்கள் எல்லாரையும் பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், ‘என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்’*+ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.+ 19 அது நிறைவேறும்போது நான்தான் அவர் என்று நீங்கள் நம்புவதற்காக இப்போதே, அது நிறைவேறுவதற்கு முன்பே, நான் உங்களிடம் சொல்கிறேன்.+ 20 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்கிறவன் என்னையும் ஏற்றுக்கொள்கிறான்.+ என்னை ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறான்”+ என்று சொன்னார்.
21 இவற்றைச் சொன்ன பின்பு இயேசு மனம் கலங்கி, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்”+ என்று வெளிப்படையாகச் சொன்னார். 22 யாரைப் பற்றி இப்படிச் சொன்னார் என்று தெரியாமல் சீஷர்கள் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டார்கள்.+ 23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். 24 சீமோன் பேதுரு அவரிடம், “யாரைப் பற்றிச் சொல்கிறார்?” என்று சைகையால் கேட்டார். 25 அப்போது அவர் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, அது யார்?”+ என்று கேட்டார். 26 அதற்கு இயேசு, “நான் யாருக்கு ரொட்டித் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்”+ என்று சொன்னார். பின்பு, ரொட்டித் துண்டைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனான யூதாசிடம் கொடுத்தார். 27 அவன் ரொட்டித் துண்டை வாங்கியதும் சாத்தான் அவனுடைய இதயத்துக்குள் புகுந்தான்.+ அதனால் இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று சொன்னார். 28 ஆனால், எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்று அங்கே உட்கார்ந்திருந்த யாருக்கும் புரியவில்லை. 29 பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால்,+ பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ இயேசு சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள். 30 அவன் அந்த ரொட்டித் துண்டை வாங்கியதும் உடனடியாக வெளியே போனான். அது ராத்திரி நேரமாக இருந்தது.+
31 அவன் வெளியே போன பின்பு இயேசு, “இப்போது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார்,+ அவர் மூலம் கடவுளும் மகிமைப்படுகிறார். 32 கடவுளே அவரை மகிமைப்படுத்துவார்,+ உடனே அவரை மகிமைப்படுத்துவார். 33 சிறுபிள்ளைகளே, இன்னும் கொஞ்ச நேரம்தான் நான் உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனாலும், ‘நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது’+ என்று நான் யூதர்களிடம் சொன்னதையே இப்போது உங்களிடமும் சொல்கிறேன். 34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.
36 சீமோன் பேதுரு அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “நான் போகிற இடத்துக்கு என் பின்னால் வர இப்போது உன்னால் முடியாது, ஆனால் பிற்பாடு வருவாய்”+ என்று சொன்னார். 37 அப்போது பேதுரு, “எஜமானே, இப்போது உங்கள் பின்னால் வர என்னால் ஏன் முடியாது? உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்”+ என்று சொன்னார். 38 அதற்கு இயேசு, “நீ எனக்காக உயிரையே கொடுப்பாயா? உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்றார்.
14 பின்பு, “நீங்கள் மனம் கலங்க வேண்டாம்.+ கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்,+ என்மேலும் விசுவாசம் வையுங்கள். 2 என்னுடைய தகப்பனின் வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. அப்படி இல்லாதிருந்தால் நானே உங்களுக்குச் சொல்லியிருப்பேன். உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்துவதற்கு நான் போகிறேன்.+ 3 நான் போய் உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்திய பின்பு, மறுபடியும் வந்து என் வீட்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.+ 4 நான் போகும் இடத்துக்கான வழி உங்களுக்குத் தெரியும்” என்று சொன்னார்.
5 தோமா+ அவரிடம், “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது, அப்படியிருக்கும்போது அந்த வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
6 அதற்கு இயேசு, “நானே வழியும்+ சத்தியமும்+ வாழ்வுமாக இருக்கிறேன்.+ என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.+ 7 உங்களுக்கு என்னைத் தெரிந்திருந்தால் என் தகப்பனையும் தெரிந்திருக்கும்; இப்போதிலிருந்து நீங்கள் அவரைத் தெரிந்தும் பார்த்தும் இருக்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
8 பிலிப்பு அவரிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள், அது போதும்” என்று சொன்னார்.
9 அதற்கு இயேசு அவரிடம், “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா? என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்.+ அப்படியிருக்கும்போது, ‘தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று நீ எப்படிக் கேட்கிறாய்? 10 நான் என் தகப்பனோடும் என் தகப்பன் என்னோடும் ஒன்றுபட்டிருப்பதை நீ நம்பவில்லையா?+ நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சொந்தமாகச் சொல்லவில்லை.+ என்னோடு ஒன்றுபட்டிருக்கும் என் தகப்பன்தான் தன்னுடைய செயல்களை என் மூலம் செய்துவருகிறார். 11 நான் என் தகப்பனோடும் என் தகப்பன் என்னோடும் ஒன்றுபட்டிருப்பதாக நான் சொல்வதை நம்புங்கள். இல்லையென்றால், என் செயல்களைப் பார்த்தாவது நம்புங்கள்.+ 12 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிட பெரிய செயல்களையும் செய்வான்.+ ஏனென்றால், நான் என் தகப்பனிடம் போகிறேன்.+ 13 அதோடு, மகன் மூலம் தகப்பன் மகிமைப்படும்படி, என் பெயரில் நீங்கள் எதைக் கேட்டாலும் அதைச் செய்வேன்.+ 14 என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்.
15 என்மேல் உங்களுக்கு அன்பிருந்தால் என் கட்டளைகளின்படி நடப்பீர்கள்.+ 16 என் தகப்பனிடம் நான் வேண்டிக்கொள்வேன். அப்போது, என்றென்றும் உங்களோடு இருப்பதற்காக இன்னொரு சகாயரை* அவர் உங்களுக்குத் தருவார்.+ 17 அதுதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிற கடவுளுடைய சக்தி.+ உலகத்தால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த உலகம் அதைப் பார்க்காமலும் தெரிந்துகொள்ளாமலும் இருக்கிறது.+ ஆனால், நீங்கள் அதைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஏனென்றால், அது உங்களுடனேயே இருக்கிறது, உங்களுக்குள்ளும் இருக்கிறது. 18 நான் உங்களைத் தனியாக* தவிக்க விடமாட்டேன், கண்டிப்பாக உங்களிடம் வருவேன்.+ 19 இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்.+ ஏனென்றால் நான் உயிரோடிருக்கிறேன், நீங்களும் உயிரோடிருப்பீர்கள். 20 அந்த நாளில், நான் என் தகப்பனோடு ஒன்றுபட்டிருப்பதையும், நீங்கள் என்னோடு ஒன்றுபட்டிருப்பதையும், நான் உங்களோடு ஒன்றுபட்டிருப்பதையும் தெரிந்துகொள்வீர்கள்.+ 21 என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டி அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்” என்று சொன்னார்.
22 யூதாஸ்+ என்பவர் (யூதாஸ் இஸ்காரியோத்து அல்ல) அவரிடம், “எஜமானே, நீங்கள் உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துவதாகச் சொல்கிறீர்களே, ஏன்?” என்று கேட்டார்.
23 அதற்கு இயேசு, “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான்,+ என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார். நாங்கள் இரண்டு பேரும் அவனிடம் வந்து அவனோடு தங்குவோம்.+ 24 என்மேல் அன்பு காட்டாதவன் என் வார்த்தைகளின்படி நடக்க மாட்டான்; நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற வார்த்தை என்னுடையதல்ல, என்னை அனுப்பிய தகப்பனுடையது.+
25 நான் உங்களோடு இருக்கும்போதே இவற்றை உங்களுக்குச் சொல்லிவிட்டேன். 26 ஆனால், என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவருடைய சக்தியாகிய சகாயர் எல்லா காரியங்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா விஷயங்களையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்.+ 27 உங்களுக்குச் சமாதானத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்.+ இந்த உலகம் தருகிற விதத்தில் நான் அதைத் தருவதில்லை. நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். 28 ‘நான் போவேன், ஆனால் மறுபடியும் உங்களிடம் வருவேன்’ என்று உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்கள். என்மேல் உங்களுக்கு அன்பு இருந்தால், நான் என் தகப்பனிடம் போவதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், என் தகப்பன் என்னைவிட பெரியவர்.+ 29 இது நடக்கும்போது நீங்கள் நம்புவதற்காக இப்போதே, இது நடப்பதற்கு முன்பே, இதை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.+ 30 இனி நான் உங்களோடு அதிகம் பேச மாட்டேன். ஏனென்றால், இந்த உலகத்தை ஆளுகிறவன்+ வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை.+ 31 தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்காக என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்.+ எழுந்திருங்கள், இங்கிருந்து போகலாம்.”
15 “நான்தான் உண்மையான திராட்சைக் கொடி, என் தகப்பன்தான் திராட்சைத் தோட்டக்காரர். 2 கனி தராத என்னுடைய கிளைகள் எல்லாவற்றையும் அவர் வெட்டிப்போடுகிறார். கனி தருகிற கிளைகள் ஒவ்வொன்றையும், அது அதிகமாகக் கனி தரும்படி சுத்தம் செய்கிறார்.+ 3 நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே சுத்தமாகியிருக்கிறீர்கள்.+ 4 என்னோடு நிலைத்திருங்கள், நானும் உங்களோடு நிலைத்திருப்பேன். எந்தவொரு கிளையும் தானாகக் கனி தர முடியாது, திராட்சைக் கொடியோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் கனி தர முடியும். அதேபோல், நீங்களும் என்னோடு நிலைத்திருந்தால் மட்டும்தான் உங்களால் கனி தர முடியும்.+ 5 நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள். ஒருவன் என்னோடும் நான் அவனோடும் நிலைத்திருந்தால் அவன் அதிகமாகக் கனி தருவான்.+ என்னோடு இல்லையென்றால் உங்களால் எதையுமே செய்ய முடியாது. 6 ஒருவன் என்னோடு நிலைத்திருக்கவில்லை என்றால், கிளையைப் போல் அவன் வெட்டியெறியப்பட்டுக் காய்ந்துபோவான். அப்படிப்பட்ட கிளைகளை ஆட்கள் சேகரித்து நெருப்பில் போடுவார்கள், அவை எரிந்துபோகும். 7 நீங்கள் என்னோடு நிலைத்திருந்தால், அதோடு என் வார்த்தைகள் உங்களுடைய இதயத்தில் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்கள், கேட்டபடியே உங்களுக்கு நடக்கும்.+ 8 நீங்கள் அதிகமதிகமாகக் கனி தந்து, என்னுடைய சீஷர்கள் என்று நிரூபிக்கும்போது, என் தகப்பன் மகிமைப்படுகிறார்.+ 9 தகப்பன் என்மேல் அன்பு காட்டியதைப் போல்+ நான் உங்கள்மேல் அன்பு காட்டியிருக்கிறேன், அதனால் நீங்கள் என் அன்பில் நிலைத்திருங்கள். 10 நான் என் தகப்பனுடைய கட்டளைகளின்படி நடந்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போலவே, நீங்களும் என் கட்டளைகளின்படி நடந்தால் என்னுடைய அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
11 என்னைப் போலவே நீங்களும் நிறைவான சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.+ 12 நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை.+ 13 ஒருவன் தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்கிற அன்பைவிட மேலான அன்பு வேறு எதுவும் இல்லை.+ 14 என்னுடைய கட்டளைப்படி நீங்கள் நடந்தால் என் நண்பர்களாக இருப்பீர்கள்.+ 15 இனி உங்களை அடிமைகள் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், எஜமான் செய்வது ஒரு அடிமைக்குத் தெரியாது. நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். 16 நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நிலைத்திருக்கிற கனியைக் கொடுக்கும்படி நான்தான் உங்களை நியமித்தேன். நீங்கள் அப்படிக் கனி கொடுக்கும்போது, என் பெயரில் தகப்பனிடம் எதைக் கேட்டாலும் அதை அவர் உங்களுக்குத் தருவார்.+
17 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கட்டளையிடுகிறேன்.+ 18 உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 19 நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், அவர்களுக்குச் சொந்தமான உங்களை இந்த உலகம் நேசித்திருக்கும். ஆனால், நீங்கள் உலகத்தின் பாகமாக இல்லாததாலும்,+ நான் இந்த உலகத்திலிருந்து உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் உலகம் உங்களை வெறுக்கிறது.+ 20 நான் உங்களுக்குச் சொன்ன இந்த வார்த்தைகளை ஞாபகத்தில் வையுங்கள்: அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்;+ என் வார்த்தையின்படி நடந்திருந்தால் உங்கள் வார்த்தையின்படியும் நடப்பார்கள். 21 நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்தான் உங்களுக்கு விரோதமாக இவற்றையெல்லாம் செய்வார்கள். ஏனென்றால், என்னை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.+ 22 நான் வந்து அவர்களிடம் பேசியிருக்காவிட்டால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்களுடைய பாவத்துக்கு அவர்களால் எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது.+ 23 என்னை வெறுக்கிறவன் என் தகப்பனையும் வெறுக்கிறான்.+ 24 வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது.+ ஆனால், இப்போது அவர்கள் என்னைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள். 25 ‘காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்’+ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதப்பட்ட வார்த்தை நிறைவேறும்படியே இப்படி நடந்தது. 26 தகப்பனிடமிருந்து நான் அனுப்பப்போகிற சகாயர்* வரும்போது, அதாவது சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தி+ தகப்பனிடமிருந்து வரும்போது, அவர் என்னைப் பற்றிச் சாட்சி கொடுப்பார்.+ 27 ஆரம்பத்திலிருந்து நீங்கள் என்னோடு இருப்பதால், நீங்களும் என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்க வேண்டும்.+
16 “நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப்போகாமல் இருப்பதற்காக இவற்றை நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். 2 அவர்கள் உங்களை ஜெபக்கூடத்தைவிட்டு நீக்கிவிடுவார்கள்.+ சொல்லப்போனால், உங்களைக் கொலை செய்கிறவர்கள்+ கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதாக நினைத்துக்கொள்கிற காலம் வரும். 3 தகப்பனைப் பற்றியோ என்னைப் பற்றியோ தெரிந்துகொள்ளாததால் அவர்கள் இப்படியெல்லாம் செய்வார்கள்.+ 4 ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+
இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன். 5 ஆனால், இப்போது என்னை அனுப்பியவரிடம் போகப் போகிறேன்.+ அப்படியிருந்தும், ‘எங்கே போகிறீர்கள்?’ என்று நீங்கள் யாருமே என்னிடம் கேட்கவில்லை. 6 நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது.+ 7 இருந்தாலும், உண்மையைச் சொல்கிறேன், உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் போகிறேன். நான் போகவில்லை என்றால் அந்தச் சகாயர்*+ உங்களிடம் வர மாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். 8 அவர் வரும்போது, பாவத்தையும் நீதியையும் நியாயத்தீர்ப்பையும் பற்றி இந்த உலகத்திலுள்ள மக்களுக்கு நம்பகமான அத்தாட்சி கொடுப்பார். 9 அவர்கள் என்மேல் விசுவாசம் வைக்காததால்+ முதலில் பாவத்தைப்+ பற்றியும், 10 நான் தகப்பனிடம் போகப்போகிறேன் என்பதாலும் இனி நீங்கள் என்னைப் பார்க்க முடியாது என்பதாலும் நீதியைப் பற்றியும், 11 இந்த உலகத்தை ஆளுகிறவன் நியாயந்தீர்க்கப்பட்டிருப்பதால்+ நியாயத்தீர்ப்பைப் பற்றியும் அவர் நம்பகமான அத்தாட்சி கொடுப்பார்.
12 இன்னும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் இப்போது அவற்றை உங்களால் புரிந்துகொள்ள முடியாது. 13 இருந்தாலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிற சக்தியாகிய+ அவர்* வரும்போது, சத்தியத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவி செய்வார். ஏனென்றால், அவர் சொந்தமாகப் பேசாமல் தான் கேட்கிறவற்றையே பேசுவார், வரப்போகும் காரியங்களையும் உங்களுக்கு அறிவிப்பார்.+ 14 அவர் என்னை மகிமைப்படுத்துவார்.+ ஏனென்றால், என்னிடம் கேட்ட விஷயங்களை உங்களுக்கு அறிவிப்பார்.+ 15 தகப்பனிடம் இருக்கிற எல்லாமே என்னுடையது.+ அதனால்தான், அவர்* என்னிடம் கேட்ட விஷயங்களை உங்களுக்கு அறிவிப்பார் என்று சொன்னேன். 16 இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள்,+ அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்” என்று சொன்னார்.
17 அப்போது அவருடைய சீஷர்களில் சிலர், “‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்.’ ‘ஏனென்றால், நான் தகப்பனிடம் போகப்போகிறேன்’ என்றெல்லாம் சொல்கிறாரே, இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். 18 அதோடு, “‘கொஞ்சக் காலம்’ என்று சொல்கிறாரே, இதற்கு என்ன அர்த்தம்? என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை” என்றும் சொல்லிக்கொண்டார்கள். 19 அவர்கள் தன்னிடம் கேள்வி கேட்க நினைக்கிறார்கள் என்பதை இயேசு புரிந்துகொண்டு அவர்களிடம், “‘இன்னும் கொஞ்சக் காலத்தில் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டீர்கள், அதன் பின்பு கொஞ்சக் காலத்தில் மறுபடியும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று நான் சொன்னதைப் பற்றி உங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? 20 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும். நீங்கள் வேதனைப்படுவீர்கள், ஆனால் உங்களுடைய வேதனை சந்தோஷமாக மாறும்.+ 21 குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண், தனக்குப் பிரசவ நேரம் வந்துவிட்டதற்காக வேதனைப்படுகிறாள். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த பின்பு, இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்ட சந்தோஷத்தில் அந்த வேதனையை மறந்துவிடுகிறாள். 22 நீங்களும்கூட இப்போது வேதனைப்படுகிறீர்கள். ஆனால், நான் மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். அப்போது, உங்கள் இதயம் சந்தோஷத்தால் நிரம்பும்.+ உங்கள் சந்தோஷத்தை யாராலும் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எந்தக் கேள்வியையும் கேட்க மாட்டீர்கள். உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும்,+ அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்.+ 24 இதுவரை நீங்கள் எதையுமே என்னுடைய பெயரில் கேட்கவில்லை. கேளுங்கள், அப்போது பெற்றுக்கொள்வீர்கள், நிறைவான சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள்.
25 ஒப்புமைகளைப் பயன்படுத்தி இவற்றை உங்களிடம் பேசியிருக்கிறேன். ஆனால், நான் ஒப்புமைகளைப் பயன்படுத்திப் பேசாத காலம் வரும். அப்போது, தகப்பனைப் பற்றி வெளிப்படையாகவே உங்களுக்குச் சொல்வேன். 26 அந்த நாளில் என்னுடைய பெயரில் நீங்கள் தகப்பனிடம் வேண்டிக்கொள்வீர்கள். அதற்காக, ஒவ்வொரு முறையும் நான் உங்களுக்காகத் தகப்பனிடம் வேண்டிக்கொள்ள அவசியம் இல்லை. 27 தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் என்மேல் பாசம் வைத்து,+ கடவுளுடைய பிரதிநிதியாக நான் வந்திருப்பதை நம்புகிறீர்கள்.+ 28 தகப்பனின் பிரதிநிதியாக நான் இந்த உலகத்துக்கு வந்தேன். இப்போது இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடமே போகப்போகிறேன்”+ என்று சொன்னார்.
29 அதற்கு அவருடைய சீஷர்கள், “இப்போதுதான் நீங்கள் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள், ஒப்புமைகளைப் பயன்படுத்திப் பேசவில்லை. 30 உங்களுக்கு எல்லாமே தெரியும், யாரும் உங்களைக் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது. அதனால், நீங்கள் கடவுளிடமிருந்து வந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்” என்று சொன்னார்கள். 31 அதற்கு இயேசு, “இப்போது நீங்கள் நம்புகிறீர்களா? 32 ஆனால் நேரம் வரும், சொல்லப்போனால், அது வந்துவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் சிதறடிக்கப்பட்டு அவரவருடைய வீட்டுக்குப் போவீர்கள். என்னையோ தனியாக விட்டுவிடுவீர்கள்.+ ஆனாலும், நான் தனியாக இல்லை, என் தகப்பன் என்னோடு இருக்கிறார்.+ 33 என் மூலம் உங்களுக்குச் சமாதானம் கிடைப்பதற்காக இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன்.+ இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும். ஆனால் தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”+ என்று சொன்னார்.
17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+ 2 ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தந்திருக்கிற எல்லா மனுஷர்களுக்கும்+ அவர் முடிவில்லாத வாழ்வைக்+ கொடுப்பதற்காக அவர்கள் எல்லார்மேலும் அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்கள்.+ 3 ஒரே உண்மையான கடவுளாகிய+ உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும்+ பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும். 4 நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்து+ பூமியில் உங்களை மகிமைப்படுத்தியிருக்கிறேன்.+ 5 அதனால் தகப்பனே, உலகம் உண்டாவதற்கு முன்பு உங்கள் பக்கத்தில் எனக்கிருந்த அதே மகிமையைத் தந்து+ இப்போது உங்கள் பக்கத்தில் என்னை மகிமைப்படுத்துங்கள்.
6 நீங்கள் இந்த உலகத்திலிருந்து தேர்ந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தியிருக்கிறேன்.+ இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள், இவர்களை என்னிடம் தந்தீர்கள், இவர்கள் உங்களுடைய வார்த்தையின்படி நடந்திருக்கிறார்கள். 7 நீங்கள் எனக்குத் தந்த எல்லாமே உங்களிடமிருந்து வந்தவை என்று இப்போது இவர்கள் தெரிந்துகொண்டார்கள். 8 ஏனென்றால், நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்;+ இவர்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு, நான் உங்களுடைய பிரதிநிதியாக வந்திருக்கிறேன் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டார்கள்,+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை நம்புகிறார்கள்.+ 9 இவர்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். உலகத்துக்காக அல்ல, நீங்கள் எனக்குத் தந்தவர்களுக்காகவே வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால், இவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். 10 எனக்குச் சொந்தமானவையெல்லாம் உங்களுக்குச் சொந்தமானவை, உங்களுக்குச் சொந்தமானவையெல்லாம் எனக்குச் சொந்தமானவை.+ இவர்களால் நான் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன்.
11 இனியும் நான் இந்த உலகத்தில் இருக்கப்போவதில்லை. ஆனால், இவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்,+ நான் உங்களிடம் வருகிறேன். பரிசுத்த தகப்பனே, நாம் ஒன்றாயிருப்பது* போல இவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்.+ 12 நான் இவர்களோடு இருந்தபோது, நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைப் பாதுகாத்தும் காப்பாற்றியும் வந்தேன்.+ வேதவசனம் நிறைவேறும்படி,+ அழிவின் மகனைத்+ தவிர இவர்களில் ஒருவர்கூட அழிந்துபோகவில்லை.+ 13 ஆனால், இப்போது நான் உங்களிடம் வரப்போகிறேன்; என்னுடைய சந்தோஷத்தை இவர்களும் நிறைவாய் அனுபவிப்பதற்காக+ நான் இந்த உலகத்தில் இருக்கும்போதே இவற்றைச் சொல்கிறேன். 14 உங்களுடைய வார்த்தையை நான் இவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+
15 நீங்கள் இவர்களை இந்த உலகத்திலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் கேட்கவில்லை, பொல்லாதவனிடமிருந்து இவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.+ 16 நான் இந்த உலகத்தின் பாகமாக இல்லாதது போலவே+ இவர்களும் இந்த உலகத்தின் பாகமாக இல்லை.+ 17 சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்;*+ உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்.+ 18 நீங்கள் என்னை இந்த உலகத்துக்குள் அனுப்பியது போலவே நானும் இவர்களை இந்த உலகத்துக்குள் அனுப்பினேன்.+ 19 சத்தியத்தின் மூலம் இவர்கள் புனிதமாகும்படி, இவர்களுக்காக என்னையே புனிதப்படுத்திக்கொள்கிறேன்.
20 இவர்களுக்காக மட்டுமல்ல, இவர்களுடைய வார்த்தையைக் கேட்டு என்மேல் விசுவாசம் வைப்பவர்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். 21 இவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ தகப்பனே, நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை அப்போது இந்த உலகம் நம்பும். 22 நாம் ஒன்றாயிருப்பது போலவே அவர்களும் ஒன்றாயிருப்பதற்காக,+ நீங்கள் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குத் தந்திருக்கிறேன். 23 அவர்கள் முழுமையாக ஒன்றுபட்டிருப்பதற்காக, நான் அவர்களோடும் நீங்கள் என்னோடும் ஒன்றுபட்டிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அப்போது, நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதையும், நீங்கள் என்மேல் அன்பு காட்டுவது போலவே அவர்கள்மேலும் அன்பு காட்டுகிறீர்கள் என்பதையும் இந்த உலகம் தெரிந்துகொள்ளும். 24 தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்கு முன்பு நீங்கள் என்மேல் அன்பு காட்டியதால் எனக்கு மகிமை தந்தீர்கள்;+ நீங்கள் எனக்குத் தந்தவர்கள் அந்த மகிமையைப் பார்ப்பதற்காக நான் இருக்கும் இடத்தில் அவர்கள் என்னோடு இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.+ 25 நீதியுள்ள தகப்பனே, இந்த உலகத்துக்கு உங்களைத் தெரியாது.+ ஆனால், எனக்கு உங்களைத் தெரியும்;+ நீங்கள்தான் என்னை அனுப்பினீர்கள் என்பதை இவர்களும் தெரிந்துகொண்டார்கள். 26 நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும்+ இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்”+ என்று சொன்னார்.
18 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, தன்னுடைய சீஷர்களோடு வெளியே போய், கீதரோன் பள்ளத்தாக்கைக்+ கடந்து ஒரு தோட்டத்தை அடைந்தார். அந்தத் தோட்டத்துக்குள் அவரும் அவருடைய சீஷர்களும் போனார்கள்.+ 2 அங்கே இயேசு தன்னுடைய சீஷர்களோடு அடிக்கடி போயிருந்ததால், அவரைக் காட்டிக்கொடுக்க இருந்த யூதாசுக்கும் அந்த இடம் தெரிந்திருந்தது. 3 அதனால் படைப்பிரிவினரையும், முதன்மை குருமார்கள் மற்றும் பரிசேயர்கள் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக்கொண்டு அவன் அங்கே வந்தான்; அவர்கள் தீப்பந்தங்களையும் விளக்குகளையும் ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.+ 4 இயேசு தனக்கு நடக்கப்போகிற எல்லாவற்றையும் தெரிந்திருந்ததால் அவர்களுக்கு நேராகப் போய், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். 5 அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்”+ என்று சொன்னார்கள். அப்போது அவர், “நான்தான்” என்று சொன்னார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.+
6 “நான்தான்” என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கி தரையில் விழுந்தார்கள்.+ 7 அவர் மறுபடியும் அவர்களிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்று சொன்னார்கள். 8 அப்போது இயேசு, “நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே. என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று சொன்னார். 9 “நீங்கள் எனக்குத் தந்தவர்களில் ஒருவரையும் நான் இழந்துவிடவில்லை”+ என்று அவர் சொன்ன வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படிச் சொன்னார்.
10 அப்போது, சீமோன் பேதுரு தன்னுடைய வாளை உருவி தலைமைக் குருவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனைத் தாக்கினார், அவனுடைய வலது காது அறுந்துபோனது.+ 11 அப்போது இயேசு, “வாளை உறையிலே போடு.+ என் தகப்பன் எனக்குக் கொடுத்திருக்கிற கிண்ணத்திலிருந்து* நான் குடித்தாக வேண்டும், இல்லையா?”+ என்று பேதுருவிடம் சொன்னார்.
12 அப்போது, படைப்பிரிவினரும் படைத் தளபதியும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, 13 முதலில் அன்னா என்பவரிடம் அவரைக் கொண்டுபோனார்கள். அவர் அந்த வருஷத்தின் தலைமைக் குருவான+ காய்பாவின்+ மாமனார். 14 ‘மக்களுக்காக ஒரேவொரு மனுஷன் சாவது உங்களுக்குத்தான் நல்லது’ என்று யூதர்களுக்கு ஆலோசனை சொன்னது இந்த காய்பாதான்.+
15 சீமோன் பேதுருவும் மற்றொரு சீஷரும் இயேசுவுக்குப் பின்னால் போனார்கள்.+ இந்தச் சீஷர் தலைமைக் குருவுக்குத் தெரிந்தவர் என்பதால் இயேசுவோடு தலைமைக் குருவுடைய வீட்டு முற்றத்துக்குப் போனார். 16 ஆனால், பேதுரு வெளியே வாசலில் நின்றுகொண்டிருந்தார். தலைமைக் குருவுக்குத் தெரிந்த அந்தச் சீஷர் வெளியே போய், வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த பெண்ணிடம் பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். 17 அப்போது, வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்த அந்த வேலைக்காரி, “நீயும் அந்த மனுஷனுடைய சீஷன்தானே?” என்று பேதுருவிடம் கேட்டாள். அதற்கு அவர், “இல்லை” என்று சொன்னார்.+ 18 குளிராக இருந்ததால் வேலைக்காரர்களும் காவலர்களும் கரியால் தீ மூட்டி அதைச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
19 இயேசுவிடம் அவருடைய சீஷர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் தலைமைக் குரு விசாரணை செய்தார். 20 அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. 21 அப்படியிருக்கும்போது, ஏன் என்னை விசாரணை செய்கிறீர்கள்? நான் பேசியதைக் கேட்டவர்களிடம் விசாரணை செய்யுங்கள். நான் என்ன பேசினேன் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று சொன்னார். 22 இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்டான். 23 அதற்கு இயேசு, “நான் தவறாகப் பேசியிருந்தால், அந்தத் தவறு என்னவென்று சொல். சரியாகப் பேசியிருந்தால், என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். 24 அதன் பின்பு, கட்டுகளை அவிழ்க்காமலேயே அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் அன்னா அனுப்பி வைத்தார்.+
25 சீமோன் பேதுரு அங்கே நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அப்போது சிலர் அவரிடம், “நீயும் அவனுடைய சீஷன்தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை” என்று மறுத்தார்.+ 26 தலைமைக் குருவுடைய வேலைக்காரர்களில் ஒருவன், பேதுருவால் காது வெட்டப்பட்டவனுடைய சொந்தக்காரன்.+ அவன் அவரிடம், “தோட்டத்தில் நான் உன்னை அவரோடு பார்த்தேனே” என்று சொன்னான். 27 ஆனால் பேதுரு மறுபடியும் மறுத்தார், உடனே சேவல் கூவியது.+
28 பின்பு, அவர்கள் இயேசுவை காய்பாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்குக் கொண்டுபோனார்கள்.+ அது பொழுது விடியும் நேரம். பஸ்கா உணவைச் சாப்பிடுவதற்கு முன்பு தீட்டுப்படக் கூடாது என்பதற்காக யூதர்கள் அந்த மாளிகைக்குள் போகவில்லை.+ 29 அதனால் பிலாத்து வெளியே வந்து, “இந்த மனுஷன்மேல் நீங்கள் என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். 30 அதற்கு அவர்கள், “இவன் ஒரு குற்றவாளி இல்லையென்றால், இவனை உங்களிடம் ஒப்படைத்திருக்கவே மாட்டோம்” என்று சொன்னார்கள். 31 அப்போது பிலாத்து, “இவனை நீங்களே கொண்டுபோய் உங்கள் சட்டப்படி தீர்ப்பு வழங்குங்கள்”+ என்று சொன்னார். அதற்கு யூதர்கள், “யாருக்கும் மரண தண்டனை விதிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை”+ என்று சொன்னார்கள். 32 தான் எந்த விதத்தில் சாக வேண்டியிருக்கும்+ என்று இயேசு குறிப்பாகச் சொல்லியிருந்தாரோ அது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
33 பிலாத்து மறுபடியும் ஆளுநர் மாளிகைக்குள் போய் இயேசுவைக் கூப்பிட்டு, “நீ யூதர்களுடைய ராஜாவா?”+ என்று கேட்டார். 34 அதற்கு இயேசு, “நீங்களே இதைக் கேட்கிறீர்களா, அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொன்னதை வைத்துக் கேட்கிறீர்களா?” என்றார். 35 அப்போது பிலாத்து, “நான் ஒரு யூதனா என்ன? உன்னுடைய தேசத்தாரும் முதன்மை குருமார்களும்தான் உன்னை என்னிடம் ஒப்படைத்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார். 36 அதற்கு இயேசு,+ “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.+ என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள்.+ ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று சொன்னார். 37 “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா?” என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு, “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.+ சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.+ சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொன்னார். 38 “சத்தியமா? அது என்ன?” என்று பிலாத்து கேட்டார்.
இப்படிக் கேட்டுவிட்டு, அவர் மறுபடியும் வெளியே வந்து யூதர்களைப் பார்த்து, “இவனிடம் எந்தவொரு குற்றமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.+ 39 பஸ்கா பண்டிகையின்போது உங்களுக்காக நான் ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் இருக்கிறதே.+ அதன்படி, யூதர்களுடைய ராஜாவை நான் உங்களுக்கு விடுதலை செய்யட்டுமா?” என்று கேட்டார். 40 அதற்கு அவர்கள், “வேண்டாம், பரபாசை விடுதலை செய்யுங்கள்!” என்று மறுபடியும் கத்தினார்கள். அந்த பரபாஸ் ஒரு கொள்ளைக்காரன்.+
19 பின்பு, இயேசுவைக் கொண்டுபோய் முள்சாட்டையால் அடிக்கும்படி பிலாத்து கட்டளையிட்டார்.+ 2 படைவீரர்கள் ஒரு முள்கிரீடம் செய்து அதை அவர் தலைமேல் வைத்தார்கள், பின்பு ஊதா நிற சால்வையை அவருக்குப் போர்த்திவிட்டார்கள்.+ 3 அவர் பக்கத்தில் திரும்பத் திரும்பப் போய், “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொன்னார்கள். அவருடைய கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் அறைந்தார்கள்.+ 4 பிலாத்து திரும்பவும் வெளியே வந்து கூட்டத்தாரிடம், “அவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை.+ இதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்று சொன்னார். 5 அப்போது, முள்கிரீடத்தோடும் ஊதா நிற சால்வையோடும் இயேசு வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! இந்த மனுஷன்!” என்று சொன்னார். 6 ஆனால், முதன்மை குருமார்களும் காவலர்களும் அவரைப் பார்த்தபோது, “இவனை மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!”+ என்று கத்தினார்கள். அப்போது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள், இவனிடம் எந்தக் குற்றத்தையும் நான் பார்க்கவில்லை”+ என்று சொன்னார். 7 அதற்கு யூதர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது, அந்தச் சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்.+ ஏனென்றால், இவன் தன்னைக் கடவுளுடைய மகன் என்று சொல்லிக்கொண்டான்”+ என்றார்கள்.
8 பிலாத்து இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாகப் பயந்தார். 9 அதனால் மறுபடியும் மாளிகைக்குள் போய், “நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு எந்தப் பதிலும் சொல்லவில்லை.+ 10 அப்போது பிலாத்து அவரிடம், “என்னிடம் பேச மாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது, உன்னைக் கொல்லவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார். 11 அப்போது இயேசு, “மேலே இருந்து உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு எதிராக எதையும் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்காது. இதனால்தான் என்னை உங்களிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவம் இருக்கிறது” என்று சொன்னார்.
12 அதனால், அவரை விடுதலை செய்வதற்கு பிலாத்து வழிதேடிக்கொண்டே இருந்தார். யூதர்களோ, “இவனை விடுதலை செய்தால் ரோம அரசனுக்கு* நீங்கள் நண்பர் கிடையாது. தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிற எவனும் ரோம அரசனுக்கு விரோதி”+ என்று கத்தினார்கள். 13 பிலாத்து இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இயேசுவை வெளியே வரவழைத்தார். பின்பு, கல்தளம் என்ற இடத்திலிருந்த நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்தார். அந்த இடத்துக்கு எபிரெய மொழியில் கபத்தா என்று பெயர். 14 அன்று, பஸ்காவுக்கு ஆயத்த நாளாக இருந்தது.+ அப்போது, சுமார் ஆறாம் மணிநேரமாக* இருந்தது. அவர் யூதர்களிடம், “இதோ! உங்கள் ராஜா!” என்று சொன்னார். 15 அதற்கு அவர்கள், “இவனை ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துக்கட்டுங்கள்! மரக் கம்பத்தில் அறைந்து கொல்லுங்கள்!” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் ராஜாவையா கொல்லச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு முதன்மை குருமார்கள், “ரோம அரசனைத் தவிர வேறெந்த ராஜாவும் எங்களுக்கு இல்லை” என்று சொன்னார்கள். 16 பின்பு, மரக் கம்பத்தில் அறைந்து கொல்வதற்காக அவரை பிலாத்து அவர்களிடம் ஒப்படைத்தார்.+
அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள். 17 சித்திரவதைக் கம்பத்தை* அவரே சுமந்துகொண்டு மண்டையோடு என்ற இடத்துக்குப் போனார்;+ எபிரெய மொழியில் அதற்கு கொல்கொதா என்று பெயர்.+ 18 அங்கே அவர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள்;+ அவருக்கு இந்தப் பக்கம் ஒருவனும் அந்தப் பக்கம் ஒருவனுமாக வேறு இரண்டு பேரையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+ 19 பிலாத்து ஒரு வாசகத்தை எழுதி அவருடைய சித்திரவதைக் கம்பத்தின்* மேல் வைத்தார். அதில், “நாசரேத்தூர் இயேசு, யூதர்களுடைய ராஜா”+ என்று எழுதப்பட்டிருந்தது. 20 மரக் கம்பத்தில் இயேசு ஆணியடிக்கப்பட்ட இடம் நகரத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் நிறைய யூதர்கள் அந்த வாசகத்தைப் படித்தார்கள். அது எபிரெயுவிலும் லத்தீனிலும் கிரேக்கிலும் எழுதப்பட்டிருந்தது. 21 யூதர்களின் முதன்மை குருமார்களோ, “‘யூதர்களுடைய ராஜா’ என்று எழுதாமல், ‘நான் யூதர்களுடைய ராஜா’ என்று அவன் சொல்லிக்கொண்டதாக எழுதுங்கள்” என்று பிலாத்துவிடம் சொன்னார்கள். 22 அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதுதான்” என்று சொன்னார்.
23 படைவீரர்கள் இயேசுவை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்த பின்பு, அவருடைய மேலங்கிகளை நான்கு பாகங்களாக்கி ஆளுக்கொரு பாகத்தை எடுத்துக்கொண்டார்கள்; உள்ளங்கியையும் எடுத்துக்கொண்டார்கள். அந்த உள்ளங்கி தையல் இல்லாமல் மேலிருந்து கீழ்வரை ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24 அதனால், “இதைக் கிழிக்க வேண்டாம்; இது யாருக்கு என்று குலுக்கல் போட்டுப் பார்க்கலாம்”+ என ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள். “என்னுடைய அங்கிகளைப் பங்கு போட்டுக்கொள்கிறார்கள், என்னுடைய உடைக்காகக் குலுக்கல் போடுகிறார்கள்”+ என்ற வசனம் நிறைவேறும்படியே அப்படி நடந்தது. உண்மையில், அந்தப் படைவீரர்கள் அதைத்தான் செய்தார்கள்.
25 இயேசுவுடைய சித்திரவதைக் கம்பத்துக்கு* பக்கத்தில் அவருடைய அம்மாவும்,+ அம்மாவின் சகோதரியும், குளோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும்+ நின்றுகொண்டிருந்தார்கள். 26 அப்போது, பக்கத்தில் இருந்த தன்னுடைய அம்மாவையும் அன்புச் சீஷரையும்+ இயேசு பார்த்து, தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார். 27 அடுத்ததாக அந்தச் சீஷரிடம், “இதோ! உன் அம்மா!” என்று சொன்னார். அன்றைக்கே அவருடைய அம்மாவை அந்தச் சீஷர் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்.
28 பின்பு, எல்லாம் முடிந்துவிட்டதை இயேசு தெரிந்துகொண்டு, “எனக்குத் தாகமாக இருக்கிறது”+ என்று சொன்னார். வேதவசனம் நிறைவேறும்படியே இப்படிச் சொன்னார். 29 புளிப்பான திராட்சமது நிறைந்த ஒரு ஜாடி அங்கே இருந்ததால், ஒரு கடற்பஞ்சை அதில் நனைத்து மருவுச்செடியின்* தண்டில் மாட்டி அவருடைய வாய்க்குப் பக்கத்தில் நீட்டினார்கள்.+ 30 இயேசு அந்தப் புளிப்பான திராட்சமதுவைச் சுவைத்த பின்பு, “முடித்துவிட்டேன்!”+ என்று சொல்லி, தலைசாய்த்து உயிர்விட்டார்.+
31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு+ ஆயத்த நாளாக இருந்தது;+ அதனால், ஓய்வுநாளிலே உடல்கள் சித்திரவதைக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருக்காதபடி+ அவர்களுடைய கால்களை உடைத்து உடல்களை எடுத்துவிடும்படி பிலாத்துவிடம் யூதர்கள் கேட்டுக்கொண்டார்கள். 32 உடனே படைவீரர்கள் போய், அவர் பக்கத்திலிருந்த மரக் கம்பங்களில் ஏற்றப்பட்டவர்களில் ஒருவனுடைய கால்களை முதலில் உடைத்தார்கள், பின்பு மற்றவனுடைய கால்களையும் உடைத்தார்கள். 33 ஆனால் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்திருந்ததைப் பார்த்து அவருடைய கால்களை உடைக்காமல் விட்டுவிட்டார்கள். 34 இருந்தாலும், படைவீரர்களில் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்;+ உடனே இரத்தமும் தண்ணீரும் வெளியே வந்தன. 35 இதை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கொடுத்திருக்கிறார், அவருடைய சாட்சி உண்மையானது. அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காக அவற்றைச் சொல்லியிருக்கிறார்.+ 36 “அவருடைய எலும்புகளில் ஒன்றுகூட முறிக்கப்படாது”*+ என்ற வசனம் நிறைவேறும்படியே அவை நடந்தன. 37 “அவர்கள் யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்”+ என்று வேறொரு வசனமும் சொல்கிறது.
38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீஷர்களில் ஒருவர். ஆனால், யூதர்களுக்குப் பயந்து அதை வெளியே சொல்லாமல் இருந்தவர்.+ அவர் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு போக பிலாத்துவிடம் அனுமதி கேட்டார். பிலாத்து அனுமதி கொடுத்ததால் அவருடைய உடலை எடுத்துக்கொண்டு போனார்.+ 39 முதல் தடவை ஒரு ராத்திரி நேரத்தில் அவரைச் சந்தித்திருந்த நிக்கொதேமு+ என்பவர்கூட, வெள்ளைப்போளமும்* அகில் தூளும் கலந்த நறுமணக் கலவையை* ஏறக்குறைய நூறு ராத்தல்* கொண்டுவந்தார்.+ 40 அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்கிற வழக்கத்தின்படியே நறுமணப் பொருள்களோடு நாரிழை* துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.+ 41 அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை* இருந்தது. அந்தக் கல்லறையில் அதுவரை ஒருவரும் அடக்கம் செய்யப்படவில்லை.+ 42 அது யூத பண்டிகையின் ஆயத்த நாளாக இருந்ததாலும்,+ பக்கத்திலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும் இயேசுவை அங்கே அடக்கம் செய்தார்கள்.
20 வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலையில், இன்னும் இருட்டாக இருந்தபோதே, மகதலேனா மரியாள் கல்லறைக்கு* போனாள்;+ கல்லறையின் கல் ஏற்கெனவே எடுத்துப் போடப்பட்டிருந்ததைப் பார்த்தாள்.+ 2 அதனால், சீமோன் பேதுருவிடமும் இயேசுவின் பாசத்துக்குரிய சீஷரிடமும்+ ஓடிப்போய், “நம் எஜமானை யாரோ கல்லறையிலிருந்து+ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னாள்.
3 அப்போது பேதுருவும் மற்ற சீஷரும் கல்லறைக்குப் போவதற்காகப் புறப்பட்டார்கள். 4 சொல்லப்போனால், அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தார்கள். ஆனால், மற்ற சீஷர் பேதுருவைவிட வேகமாக ஓடி முதலில் கல்லறைக்குப் போய்ச் சேர்ந்தார். 5 அவர் கல்லறைக்குள் குனிந்து பார்த்தபோது, அங்கே நாரிழை* துணிகள் கிடப்பதைப் பார்த்தார்,+ ஆனால் உள்ளே போகவில்லை. 6 அதன் பின்பு, சீமோன் பேதுருவும் வந்துசேர்ந்தார்; அவர் கல்லறைக்குள் போய், நாரிழைத் துணிகள் கிடப்பதைப் பார்த்தார். 7 இயேசுவின் தலையில் சுற்றப்பட்டிருந்த துணி மற்ற கட்டுத்துணிகளோடு இல்லாமல் தனியாக ஓர் இடத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததையும் பார்த்தார். 8 அப்போது, கல்லறைக்கு முதலில் வந்துசேர்ந்த சீஷரும் உள்ளே போய்ப் பார்த்தார், பின்பு நம்பினார். 9 அவர் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருந்தார்கள்.+ 10 பின்பு, அந்தச் சீஷர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள்.
11 ஆனால், மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுதபடியே குனிந்து கல்லறைக்குள் பார்த்தாள். 12 அப்போது, வெள்ளை உடை அணிந்த இரண்டு தேவதூதர்கள்+ இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில், தலைமாட்டில் ஒருவரும் கால்மாட்டில் ஒருவருமாக உட்கார்ந்திருந்ததைப் பார்த்தாள். 13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “யாரோ என் எஜமானை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று சொன்னாள். 14 அவள் இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியபோது, அங்கே இயேசு நிற்பதைப் பார்த்தாள். ஆனால், அவர் இயேசு என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.+ 15 இயேசு அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து, “ஐயா, நீங்கள் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் போய் அவரை எடுத்துக்கொள்கிறேன்” என்று சொன்னாள். 16 அப்போது இயேசு, “மரியாளே!” என்று கூப்பிட்டார். அவள் திரும்பிப் பார்த்து, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சொன்னாள்; இதற்கு, “போதகரே!” என்று அர்த்தம். 17 இயேசு அவளிடம், “என்னைப் பிடித்துக்கொண்டிருக்காதே. ஏனென்றால், நான் இன்னும் என் தகப்பனிடம் போகவில்லை. நீ என் சகோதரர்களிடம் போய்,+ ‘நான் என் தகப்பனிடமும்+ உங்கள் தகப்பனிடமும் என் கடவுளிடமும்+ உங்கள் கடவுளிடமும் போகப்போகிறேன்’ என்று சொல்” என்றார். 18 அதன்படியே, மகதலேனா மரியாள் சீஷர்களிடம் போய், “நான் எஜமானைப் பார்த்தேன்!” என்று சொன்னாள். அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களையும் அவர்களிடம் சொன்னாள்.+
19 அன்று வாரத்தின் முதலாம் நாள். அன்று சாயங்காலத்தில், யூதர்களுக்குப் பயந்து சீஷர்கள் கதவுகளைப் பூட்டி வைத்திருந்தார்கள். இருந்தாலும், இயேசு அவர்கள் நடுவில் வந்து நின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார். 20 இப்படிச் சொல்லிவிட்டு, தன்னுடைய கைகளையும் தன்னுடைய விலாவையும் அவர்களுக்குக் காட்டினார்.+ எஜமானைப் பார்த்ததால் சீஷர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ 21 இயேசு மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்குச் சமாதானம்!+ தகப்பன் என்னை அனுப்பியதுபோல்+ நானும் உங்களை அனுப்புகிறேன்”+ என்று சொன்னார். 22 இப்படிச் சொன்ன பின்பு அவர்கள்மேல் ஊதி, “கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+ 23 யாருடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ, அவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். யாருடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவை அவர்களுக்கு மன்னிக்கப்படாது” என்று சொன்னார்.
24 ஆனால், இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டு பேரில்* ஒருவரான திதிமு என்ற தோமா+ அவர்களோடு இல்லை. 25 அதனால் மற்ற சீஷர்கள் தோமாவிடம், “நாங்கள் எஜமானைப் பார்த்தோம்!” என்று சொன்னார்கள். அப்போது அவர், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட காயத்தை* பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவருடைய விலாவில்+ கை வைத்தால் தவிர நான் நம்ப மாட்டேன்” என்று சொன்னார்.
26 எட்டு நாட்களுக்குப் பின்பு சீஷர்கள் மறுபடியும் வீட்டுக்குள் இருந்தார்கள், தோமாவும் அங்கே இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு அவர்கள் நடுவில் வந்துநின்று, “உங்களுக்குச் சமாதானம்!”+ என்று சொன்னார். 27 பின்பு தோமாவிடம், “உன் விரலால் என் கைகளைத் தொட்டுப் பார். உன் கையை என் விலாவில் வைத்துப் பார். சந்தேகப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கை வை” என்று சொன்னார். 28 அதற்கு தோமா, “என் எஜமானே, என் கடவுளே!” என்று சொன்னார். 29 அப்போது இயேசு, “என்னைப் பார்த்ததால்தான் நம்புகிறாயா? பார்க்காமலேயே நம்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று சொன்னார்.
30 உண்மைதான், இயேசு தன்னுடைய சீஷர்கள் முன்னால் இன்னும் நிறைய அடையாளங்களைச் செய்தார்; அவை இந்தச் சுருளில் எழுதப்படவில்லை.+ 31 ஆனால், இயேசுதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்து என்று நீங்கள் நம்புவதற்காகவும், அப்படி நம்பிக்கை வைத்து அவருடைய பெயரில் வாழ்வு பெறுவதற்காகவும்தான் இவையெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன.+
21 இவற்றுக்குப் பின்பு, திபேரியா கடலுக்குப் பக்கத்தில் இயேசு மறுபடியும் தன்னுடைய சீஷர்களுக்குத் தோன்றினார். அவர் தோன்றிய விவரம் இதுதான்: 2 சீமோன் பேதுருவும், திதிமு என்ற தோமாவும்,+ கலிலேயாவில் இருக்கிற கானா ஊரைச் சேர்ந்த நாத்தான்வேலும்,+ செபெதேயுவின் மகன்களும்,+ அவருடைய சீஷர்களில் இன்னும் இரண்டு பேரும் கூடியிருந்தார்கள். 3 அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு, படகில் ஏறிப் போனார்கள். ஆனால், அன்று ராத்திரி அவர்களுக்கு ஒரு மீன்கூட கிடைக்கவில்லை.+
4 பொழுது விடியும் நேரத்தில், இயேசு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவர்தான் இயேசு என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை.+ 5 இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே, உங்களிடம் சாப்பிடுவதற்கு ஏதாவது* இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒன்றுமே இல்லை!” என்று சொன்னார்கள். 6 அப்போது அவர், “படகின் வலது பக்கத்தில் வலையைப் போடுங்கள், உங்களுக்கு மீன் கிடைக்கும்” என்று சொன்னார். அவர்களும் வலையைப் போட்டார்கள், ஏராளமான மீன்கள் சிக்கின. அதனால், வலையை அவர்களால் இழுக்கக்கூட முடியவில்லை.+ 7 இயேசுவின் அன்புச் சீஷர்+ அதைப் பார்த்து, “அவர் நம் எஜமான்தான்!” என்று சீமோன் பேதுருவிடம் சொன்னார். பேதுரு அதைக் கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு கடலில் குதித்தார். 8 மற்ற சீஷர்களோ சிறிய படகில் இருந்தபடி, மீன்கள் நிறைந்த வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஏனென்றால், கரையிலிருந்து அவர்கள் வெகு தூரத்தில் இல்லை, சுமார் 300 அடி* தூரத்தில்தான் இருந்தார்கள்.
9 அவர்கள் படகைவிட்டு இறங்கியபோது, கரியால் தீ மூட்டப்பட்டு அதன்மேல் மீன் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்கள், அங்கே ரொட்டியும் இருந்தது. 10 இயேசு அவர்களிடம், “இப்போது நீங்கள் பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 11 அதனால் சீமோன் பேதுரு படகில் ஏறி, பெரிய மீன்கள் நிறைந்த வலையைக் கரைக்கு இழுத்தார். அதில் 153 மீன்கள் இருந்தன. அத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களிடம், “வந்து சாப்பிடுங்கள்” என்று சொன்னார். சீஷர்களில் ஒருவருக்குக்கூட, “நீங்கள் யார்?” என்று கேட்கத் தைரியம் வரவில்லை; ஏனென்றால், அவர்தான் தங்கள் எஜமான் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. 13 இயேசு வந்து ரொட்டியை எடுத்து அவர்களுக்குக் கொடுத்தார், அதேபோல் மீனையும் கொடுத்தார். 14 இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு தன்னுடைய சீஷர்கள் முன்னால் தோன்றியது இது மூன்றாவது தடவை.+
15 அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்பு சீமோன் பேதுருவிடம் இயேசு, “யோவானின் மகனான சீமோனே, இவற்றைவிட என்மேல் உனக்கு அதிக அன்பு இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பது உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார். “அப்படியென்றால், என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார். 16 பின்பு இரண்டாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்கு அன்பு இருக்கிறதா?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஆமாம், எஜமானே, உங்கள்மேல் எனக்குப் பாசம் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்” என்று சொன்னார். “அப்படியென்றால், என் ஆட்டுக்குட்டிகளை நீ மேய்க்க வேண்டும்”+ என்று சொன்னார். 17 பின்பு மூன்றாவது தடவையாக, “யோவானின் மகனான சீமோனே, என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று கேட்டார். இப்படி மூன்றாவது தடவையாக, “என்மேல் உனக்குப் பாசம் இருக்கிறதா?” என்று அவர் கேட்டதால் பேதுரு துக்கப்பட்டு, “எஜமானே, உங்களுக்கு எல்லாமே தெரியும். உங்கள்மேல் எனக்குப் பாசம் இருப்பதும் தெரியும்” என்று சொன்னார். அப்போது இயேசு, “என் ஆட்டுக்குட்டிகளுக்கு நீ உணவு கொடுக்க வேண்டும்.+ 18 உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், நீ இளைஞனாக இருந்தபோது நீயே உடை உடுத்திக்கொண்டு விரும்பிய இடங்களுக்குப் போனாய். ஆனால், வயதாகும்போது நீ உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உனக்கு உடை உடுத்தி நீ விரும்பாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான்” என்று சொன்னார். 19 பேதுரு எப்படி மரணமடைந்து கடவுளுக்கு மகிமை சேர்ப்பார் என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னார். அப்படிச் சொல்லிவிட்டு, “நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”+ என்று சொன்னார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீஷர்+ பின்னால் நடந்து வருவதைப் பார்த்தார்; சாயங்கால உணவு சாப்பிட்ட சமயத்தில் அவருடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, உங்களைக் காட்டிக்கொடுப்பவன் யார்?” என்று கேட்டது அந்தச் சீஷர்தான். 21 பேதுரு அவரைப் பார்த்ததும் இயேசுவிடம், “எஜமானே, இவனுக்கு என்ன நடக்கும்?” என்று கேட்டார். 22 அதற்கு இயேசு, “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் என்றால், உனக்கென்ன? நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்று சொன்னார். 23 அதனால், அந்தச் சீஷர் இறந்துபோக மாட்டார் என்ற பேச்சு சகோதரர்கள் மத்தியில் பரவியது. ஆனால், அவர் இறந்துபோக மாட்டார் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, “நான் வரும்வரை இவன் உயிரோடிருக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம் என்றால், உனக்கென்ன?” என்றுதான் சொன்னார்.
24 அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும்.
25 இயேசு இன்னும் நிறைய காரியங்களைச் செய்தார். அவை ஒவ்வொன்றையும் எழுதினால், எழுதப்படும் சுருள்களை உலகமே கொள்ளாது என்று நினைக்கிறேன்.+
அதாவது, “அந்த வார்த்தை.”
நே.மொ., “ஒரு சதையாகி.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகனுக்கு.”
வே.வா., “கடவுளுடைய பிரியமும்.”
வே.வா., “தகப்பனின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவரும்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “மாலை சுமார் 4 மணியாக.”
நே.மொ., “எனக்கும் உங்களுக்கும் என்ன?” மறுப்புத் தெரிவிப்பதற்காக இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்பட்டது. “பெண்மணியே” என்ற வார்த்தை அவமரியாதையைக் குறிக்காது.
அநேகமாக, ஒரு குடம் என்பது “பாத்” அளவைக் குறிக்கலாம். ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “மேலிருந்து பிறக்கவில்லை.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகன்மேல்.”
அதாவது, “கடவுளால் நேரடியாகப் படைக்கப்பட்ட ஒரே மகனின்.”
வே.வா., “கண்டிக்கப்பட.”
வே.வா., “சக்தியை அளந்து அளந்து கொடுப்பதில்லை.”
வே.வா., “நீரூற்று.”
அதாவது, “மதியம் சுமார் 12 மணியாக.”
அதாவது, “பரலோகத்துக்குரிய உடலில்.”
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “குணமாகி வருவதாக.”
அதாவது, “பிற்பகல் சுமார் 1 மணிக்கு.”
வே.வா., “பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும்.”
இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தை.”
வே.வா., “சித்தத்தையே.”
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சுமார் 5 அல்லது 6 கி.மீ.” நே.மொ., “சுமார் 25 அல்லது 30 ஸ்டேடியா.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “சித்தம்.”
வே.வா., “இழுத்துக்கொள்ளாவிட்டால்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “உங்களுக்குள் வாழ்வு இருக்காது.”
அல்லது, “கப்பர்நகூமில் நடந்த பொதுக் கூட்டத்தில்.”
அதாவது, “அப்போஸ்தலர்களிடம்.”
வே.வா., “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனாக; பிசாசாக.”
வே.வா., “நடந்துகொண்டிருந்தார்.”
அதாவது, “யூதத் தலைவர்கள்.”
அதாவது, “ரபீக்களுடைய பள்ளிகளுக்கு.”
வே.வா., “சித்தத்தின்படி.”
பழமையான, அதிகாரப்பூர்வ கையெழுத்துப் பிரதிகள் பலவற்றில் 53-ஆம் வசனம்முதல் 8-ஆம் அதிகாரம் 11-ஆம் வசனம்வரை காணப்படுவதில்லை.
அதாவது, “மரக் கம்பத்தில் அறைந்து கொன்ற.”
வே.வா., “பாலியல் முறைகேட்டால்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சித்தத்தின்படி.”
வே.வா., “குரலுக்குக் கீழ்ப்படியும்.”
வே.வா., “குரலுக்குக் கீழ்ப்படிகின்றன.”
வே.வா., “ஒற்றுமையாக இருக்கிறோம்.”
வே.வா., “கடவுளைப் போன்றவர்கள்.”
வே.வா., “நினைவுக் கல்லறையில்.”
வே.வா., “சுமார் 3 கி.மீ.” நே.மொ., “சுமார் 15 ஸ்டேடியா.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “கைது செய்ய.”
அதாவது, “ரோம ராத்தல்.” சுமார் 327 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “நினைவுக் கல்லறையிலிருந்து.”
நே.மொ., “அழிக்கிறான்.”
நே.மொ., “நேரத்திலிருந்து.”
அதாவது, “மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்படும்போது.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
வே.வா., “செய்தியை.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
நே.மொ., “கையை.”
வே.வா., “கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.”
நே.மொ., “எனக்கு எதிராகத் தன் குதிங்காலைத் தூக்கினான்.”
வே.வா., “ஆறுதல்படுத்துகிறவரை.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.
வே.வா., “அநாதைகளைப் போல்.”
வே.வா., “ஆறுதல்படுத்துகிறவர்.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.
வே.வா., “ஆறுதல்படுத்துகிறவர்.” கடவுளுடைய சக்தி இங்கே ஆளுருவில் பேசப்பட்டிருக்கிறது.
13-ஆம் மற்றும் 14-ஆம் வசனங்களில் உள்ள “அவர்” என்ற வார்த்தை 7-ஆம் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘சகாயரை’ குறிக்கிறது. கடவுளுடைய சக்தியை ஆளுருவில் குறிப்பிடுவதற்காக “சகாயர்” என்ற வார்த்தையை இயேசு பயன்படுத்தினார். இது ஒரு நபர் கிடையாது.
அதாவது, “அந்தச் சகாயர்.”
வே.வா., “ஒற்றுமையாக இருப்பது.”
வே.வா., “தனியாகப் பிரித்து வையுங்கள்; பரிசுத்தமாக்குங்கள்.”
“கிண்ணம்” என்பது கடவுளுடைய சித்தத்தை, அதாவது இயேசு தெய்வ நிந்தனை செய்தார் என்று பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கொல்லப்படுவதற்குக் கடவுள் அவரை அனுமதித்ததை அடையாளப்படுத்துகிறது.
நே.மொ., “சீஸருக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
அதாவது, “மதியம் சுமார் 12 மணியாக.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “நொறுக்கப்படாது.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
அல்லது, “கட்டு ஒன்றை.”
அதாவது, “ரோம ராத்தல்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “லினன்.”
வே.வா., “நினைவுக் கல்லறை.”
வே.வா., “நினைவுக் கல்லறைக்கு.”
அதாவது, “லினன்.”
அதாவது, “அப்போஸ்தலர்களில்.”
வே.வா., “அடையாளத்தை.”
வே.வா., “மீன் ஏதாவது.”
நே.மொ., “200 முழம்.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.