அத்தி மரம், திராட்சைக் கொடி, முட்புதர்
இயேசு தன்னுடைய உவமைகளில் செடிகளைச் சிலசமயங்களில் பயன்படுத்தினார். அவற்றை அவர் கவனமாகத் தேர்ந்தெடுத்துதான் பயன்படுத்தினார் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்துக்கு, அத்தி மரமும் (1) திராட்சைக் கொடியும் (2) நிறைய வசனங்களில் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தி மரங்கள் திராட்சைத் தோட்டங்களில் பெரும்பாலும் நட்டு வைக்கப்பட்டதை லூ 13:6-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன. (2ரா 18:31; யோவே 2:22) “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள்” என்ற வார்த்தைகள் சமாதானமான, செழிப்பான, பாதுகாப்பான நிலைமை வரும் என்பதைக் குறித்தன. (1ரா 4:25; மீ 4:4; சக 3:10) ஆனால், ஆதாம் பாவம் செய்த பிறகு யெகோவா இந்த நிலத்தைச் சபித்தபோது முட்செடிகளையும் முட்புதர்களையும் பற்றிக் குறிப்பிட்டார். (ஆதி 3:17, 18) மத் 7:16-ல் இயேசு எந்த வகையான முட்புதரைப் பற்றிச் சொன்னார் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், இங்கே படத்தில் காட்டப்பட்டிருப்பது (3), இஸ்ரவேல் காடுகளில் வளரும் ஒரு வகையான முட்செடி (சென்ட்டௌரியா இபெரிக்கா).
நன்றி:
Todd Bolen/BiblePlaces.com; © Jaume Felipe/easyFotostock/age fotostock; Photo by Avinoam Danin, flora.org.il
சம்பந்தப்பட்ட வசனங்கள்: