கண்காணி
சபையை வழிநடத்தி, அதை நன்றாகக் கவனித்துக்கொள்கிற ஆண்; இது அவருடைய மிக முக்கியப் பொறுப்பு. பாதுகாப்பான மேற்பார்வை என்ற அர்த்தத்தைத் தரும் எப்பிஸ்கோபஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்கிறது. கிறிஸ்தவ சபையில், “கண்காணி,” “மூப்பர்” (பிரஸ்பிட்டிரோஸ்) ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கின்றன. “மூப்பர்” என்ற வார்த்தை, நியமிக்கப்பட்டவருக்கு இருக்கிற முதிர்ச்சியான குணங்களைச் சுட்டிக்காட்டுகிறது. “கண்காணி” என்ற வார்த்தை நியமிக்கப்பட்டவரின் கடமைகளைச் சுட்டிக்காட்டுகிறது.—அப் 20:28; 1தீ 3:2-7; 1பே 5:2.