நினைவுகூர ஒரு நிகழ்ச்சி! சனி, மார்ச் 30
அது நைசான் 14, பொ.ச. 33-ம் ஆண்டு. இயேசு பாத்திரத்திலுள்ள திராட்சப்பழரசத்தையும் புளிப்பில்லா அப்பத்தையும் அவருடைய அப்போஸ்தலர்களோடு கூட பகிர்ந்து கொண்டிருந்தார். அவருடைய அறிவுரை? “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19. ஆகையால், உலகெங்கிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள், அவர் அந்த அறிவுரை கூறிய அந்த இராத்திரியிலே கற்பித்த பிரகாரம், ஆண்டில் ஒருமுறை, இயேசுவின் மரணத்தை நினைவுகூர ஒன்று கூடுகிறார்கள். இந்த ஆண்டு நைசான் 14, சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி சூரிய மறைவின்போது ஆரம்பமாகிறது. அந்தச் சனிக்கிழமை சாயங்கால வேலையிலே இந்த ஞாபகார்த்த கூட்டத்தில் எங்களோடு கலந்துகொள்ளும்படி உங்களை உள்ளன்போடு அழைக்கிறோம். கூட்டம் நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும் தயவுசெய்து உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.