“நீங்கள் உண்மையிலேயே மனிதர்கள்மேல் அக்கறைகொள்கிறீர்கள்”
ஐ.அ.மா-வின் கலிபோர்னியாவில் உள்ள ஓர் ஆள் இந்த முடிவுக்குத்தான் வந்தார். இவர் உவாட்ச் டவர் சங்கத்தின் பிரசுரங்களைப் படித்தனுபவிக்கிறவர். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பற்றி அவர் எழுதுகிறார்:
“அதை நான் இப்போது இரண்டாம் முறையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது வாசிப்பதற்கு ஒருபோதும் மந்தமானதாக இருந்ததில்லை. இந்தப் புத்தகம் மிக அறிவூட்டுவதாய் மட்டுமல்லாமல், அந்த வண்ணப் படங்கள் மிகவும் உயிரூட்டமுள்ளவையாய் இருக்கின்றன. ஒவ்வொரு படமும் நான் இயேசுவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறதைப்போல உணரவைக்கிறது.
“உதாரணமாக, அதிகாரம் 45-ல் உள்ள அந்தப் பேய்பிடித்த மனிதனின் படம், உண்மையிலேயே பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. இருப்பினும் இயேசு பயப்படாமல் கரைக்கு வந்து அந்தப் பேய் ஆவிகளைத் துரத்துவதாகக் காண்பிக்கப்பட்டுள்ளார் . . .
“வெறுப்புணர்ச்சி நிறைந்த யூதர்களின் எல்லா படங்களுமே ஒரு கலையின் வேலையாகும். இயேசுவைக் கையாளும் சூழ்நிலையை எதிர்ப்படும்போது ஓர் ஆள் எவ்வளவு கோபமுள்ளவனாக காணமுடியும், இருப்பினும் எவ்வாறு தன்னுடைய பாவ வழிகளைக் கைவிடாது இருக்கமுடியும் என்பதைக் காண்பிக்கிறார்கள். நான் தொடர்ந்து அதிகத்தைச் சொல்லிக்கொண்டே போகமுடியும். . . . நீங்கள் உண்மையிலேயே மனிதர்கள்மேல் அக்கறைகொள்கிறீர்கள் . . .
“நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனல்ல, ஆனால் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளைப் பெற ஆவலாய் இருக்கிறேன். ஒவ்வொரு பிரதிக்காகவும் நான் காத்திருக்கிறேன், அது வரும்போது அதுவே அந்நாளில் எனக்கு வந்த அஞ்சலின் மிகச்சிறந்த பாகமாக இருக்கும். ஜூன் 22-ன் (ஆங்கிலம்) விழித்தெழு! விருதுபெற்ற ஒன்றாக இருந்தது! ‘ஒழுக்கக்கேடான இவ்வுலகில் பிள்ளைகளை வளர்த்தல்’ என்பது இதைவிட அதிகம் காலத்திற்கேற்றதாக இருக்கமுடியாது. . . .
“நான் 35 வயதுள்ளவன். இந்தப் பழைய உலகம் ஒரு பெரிய பிரச்னையை எதிர்ப்படுகிறது என்று உணர்ந்தேன். இப்பழைய உலகைப்பற்றியும் அதைப்பற்றி கடவுள் எவ்வாறு உணருகிறார் என்றும் உள்ளதை உள்ளவாறு சொல்வதற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்று நான் சந்தோஷமடைகிறேன்.”
யெகோவாவின் சாட்சிகள் நாற்பது லட்சத்திற்கும் அதிகமான பைபிள் மாணாக்கர்களைக் கொண்ட ஒரு சர்வதேசீய அமைப்பாகும். இவர்கள் கடவுளுடைய நோக்கங்களை மக்கள் அதிகம் அறிந்துகொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்ய தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள். கூடுதல் தகவல்கள் பெறவோ ஓர் இலவச பைபிள் படிப்பையோ விரும்புவீர்களானால் Watchtower, H-58, Old Khandala Road, Lonavla 410 401 Mah., என்ற முகவரிக்கோ பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கோ எழுதுங்கள்.