“‘யெகோவா’ நாஸிகளால் அழிக்கப்பட்டது”
இவ்வார்த்தைகள் 1938, நவம்பர் 20-ம் தேதி, நியூ யார்க் ஹெரல்ட் ட்ரிப்யூன் செய்தித்தாளின் முன்பக்க தலைப்புச் செய்தியாக இருந்தன. அந்தக் கட்டுரை கூறியது: “நாட்டின் [ஜெர்மனி] சில பாகங்களில் உள்ள புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள், யெகோவா என்பதற்கான ஜெர்மானிய எழுத்துக் கூட்டலும் கடவுள் என்பதற்கான ‘யாவே’ என்ற எபிரெய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டதுமான ‘யேஹோஃபா’ என்ற வார்த்தையையும் யூத தீர்க்கதரிசிகளின் பழைய ஏற்பாட்டுப் பெயர்களையும் அழித்துவிடும்படி ஆணையிடப்பட்டன.”
இவையெல்லாம் யூதர்களைத் துன்புறுத்தும் நாஸிகளுடைய திட்டத்தின் பாகமாக இருந்தன. அதேசமயம், சந்தேகமின்றி இது, 1933-லிருந்து தடைசெய்யப்பட்டு, சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடத்த கருதிய திட்டமுமாயிருந்தது.
ஜெர்மனியில் 1933-ம் ஆண்டு 19,268 சுறுசுறுப்பான சாட்சிகள் இருந்தனர். இன்று, நாஸிகள், மற்றும் சமீபகாலம்வரை கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட்டுகள் கைகளால் நடத்தப்பட்ட இந்த எல்லா தொந்தரவுகளுக்குப் பிறகு, 1,938 சபைகளில் கூட்டுறவு கொள்ளும் 1,63,000 சாட்சிகள் இருக்கின்றனர். ஜெர்மானிய சொல்தொகுதிகளிலிருந்து யெகோவா என்ற பெயர் அழிக்கப்படாதிருக்கிறது. ட்ஸாய்கன் யேஹோஃபாஸ், யெகோவாவின் சாட்சிகள், ஜெர்மனி முழுவதும் அறியப்பட்டிருக்கின்றனர்.
யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி கூடுதல் தகவல்களைப் பெற்றிட விரும்புவீர்களானால், தயவுசெய்து உங்களுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்தோடு தொடர்புகொள்ளுங்கள், அல்லது 5-ம் பக்கம் உள்ள பட்டியலைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகிலுள்ள விலாசத்துக்கு எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படம்]
ஜெர்மனியின் ஸெல்ட்டர்ஸ்⁄டானுஸில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை தலைமையலுவலகம்