“மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்”
அ. ஐ.மா., கலிபோர்னியாவிலுள்ள ஒரு வாசகரிடமிருந்து போற்றுதல் கடிதம் ஒன்று, உவாட்ச் டவர் சங்கத்துக்கு வந்திருந்தது. அதில் அந்தப் பெண் இவ்வாறு சொன்னார்கள்: “‘தனிமை—அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்,’ என்ற விழித்தெழு! (ஜனவரி 8, 1994) என் பேனாவை நான் எடுக்கும்படி செய்து, சமீபத்தில் நான் பத்திரிகைகளை எவ்வளவு அனுபவித்து மகிழுகிறேன் என்பதை உங்களிடம் சொல்லும்படி வற்புறுத்துகிறது. மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தனிமைப் பற்றிய கட்டுரைகள் மிக நன்றாகவும், கவிதை நடையிலும் எழுதப்பட்டிருந்தன. தனிமைப்படுவதன் காரணத்தை தனிமைப்படுத்திக்கொள்ளும் நபர்மீதே வைப்பதன்மூலம் காட்டப்படும் கட்டுரைகளின் நேர்மைத்தன்மையை நான் போற்றினேன். உண்மையில் கட்டுரைகள் யெகோவா தம்முடைய மக்கள்மீது கொண்டுள்ள ஆழமான அன்பையும் பேணிக்காக்கும் அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றன.”
காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் யெகோவாவின் சாட்சிகளால் உலகமெங்கும் விநியோகிக்கப்படுகின்றன. முதலாவதாக குறிப்பிடப்பட்ட பத்திரிகை, காலத்திற்கேற்ற பிரச்சினைகளைக் குறித்த பைபிள் அடிப்படை கலந்தாலோசிப்புகளைக் கொண்டிருக்கிறது; 115 மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு, ஒவ்வொரு இதழும் 1.6 கோடிக்கும் மேலான சராசரி எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டும் வருகிறது. இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட பத்திரிகை, பல்வேறுபட்ட பொருள்களில் கல்விபுகட்டும் குறிப்புகளை அளிக்கிறது; 73 மொழிகளில் கிடைக்கிறது; ஏறக்குறைய 1.3 கோடி எண்ணிக்கையில் சராசரியாக அச்சடிக்கப்படுகிறது.
இந்தப் பத்திரிகைகளின் மாதிரி பிரதிகளை நீங்கள் பெற விரும்பினால், தயவுசெய்து உங்கள் பிராந்தியத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை ஒரு ராஜ்ய மன்றத்தில் தொடர்பு கொள்ளுங்கள், அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள உங்களுக்கு மிக அருகிலுள்ள முகவரிக்கு எழுதுங்கள்.