பொக்கிஷம் குப்பையில்
ஹங்கேரியிலுள்ள ஒருவர் தாம் கண்டெடுத்ததைக் குறித்து இவ்வாறுதான் உணர்ந்தார். அவர் யெகோவாவின் சாட்சிகளுக்கு இவ்வாறு எழுதி விவரித்தார்:
“உங்கள் அமைப்பிடம் நான் ஒன்று விண்ணப்பிக்க விரும்புகிறேன். உங்களிடமிருந்து காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது என்பதையும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தையும் ஆர்டர் செய்ய விரும்புகிறேன்.
“என்னுடைய விண்ணப்பத்திற்கான காரணத்தை விவரிக்கிறேன். என்னுடைய நகரில் குப்பை கொண்டுபோகும் ட்ரக்கில் நான் வேலை செய்கிறேன்; அங்குதான் இந்தப் பத்திரிகையைக் கண்டெடுத்தேன். நான் அதைச் சுத்தம்செய்து என்னோடு வீட்டிற்கு கொண்டுச்சென்றேன். வீட்டில் என்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து அதைப் படித்தேன். எங்களுடைய குறைந்த அறிவை பெருக்க நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, உங்களுடைய புரிந்துகொள்ளுதலுக்காகவும் உதவிக்காகவும் கேட்கிறோம்.”
பைபிள் பிரசுரங்களுக்கான மற்றும் பைபிளைப் பற்றிய நல்லறிவைப் பெற்றுக்கொள்வதற்கான அப்படிப்பட்ட விண்ணப்பங்களுக்குப் பிரதிபலிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகிறார்கள். ஆகவே, காவற்கோபுர பத்திரிகையின் ஒரு பிரதியைப் பெற நீங்கள் விரும்பினால் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள்-அடிப்படையிலான நம்பிக்கையைப் பற்றி உங்களுடன் கலந்தாலோசிப்பதற்கு உங்கள் வீட்டில் யாராவது ஒருவர் வந்து சந்திக்க விரும்பினால், தயவுசெய்து Watchtower, H-58, Old Khandala Road, Lonavla 410 401, Mah., என்ற விலாசத்துக்கு அல்லது பக்கம் 5-ல் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதவும்.