உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 11/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 11/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

அறிவியல்பூர்வ ஏய்ப்பு? “விஞ்ஞானிகள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள்” என்ற உங்கள் சமீபத்திய கட்டுரை (ஜனவரி 8, 1994, ஆங்கிலம்) என்னுடைய கவனத்திற்கு வந்தது. அதில் உட்பட்டிருந்த விஞ்ஞானிகள் ஒரு சிறிய பிழையைச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது; அதையும் அவர்கள் பின்னர் திருத்திவிட்டார்கள். அறிவியல் இவ்வாறுதான் செயல்பட வேண்டியதாய் இருக்கிறது; ஆனால் ஏதோ ஒரு வகையான தவறு செய்யப்பட்டுவிட்டதுபோல் உங்கள் தலைப்பு சுட்டிக்காட்டுகிறது. கேள்விக்குரியதாக இருந்த மண்டை ஓடு, ஒரு கழுதையுடையதாக நிரூபித்திருக்கக்கூடும்; ஆனால் அந்த உண்மைதானே, பிரபலமான “லூசி” எலும்புக்கூடு போன்ற மற்ற கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மையுடன் தொடர்புடையதாக இல்லை. அந்தச் சிருஷ்டிகள் வாழ்ந்திருந்தன என்று நமக்குத் தெரியும்.

M. P., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் குறிப்பிட்ட கண்டுபிடிப்பில் உட்பட்டிருந்த விஞ்ஞானிகள் வேண்டுமென்றே நேர்மையற்றவர்களாக இருந்தார்கள் என்று நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில், டாக்டர் மோயாவைத் தானே நாங்கள் மேற்கோள் காட்டி அவருடைய நேர்மையைக் குறிப்பிட்டிருந்தோம். அறிவியல் உண்மை அடிக்கடி தனிப்பட்ட, அரசியல்பூர்வ, மற்றும் தேசிய அக்கறைகளுக்காக பலியாக்கப்படும் விதத்தை விளக்குவதற்கே அந்தச் சம்பவம் பயன்படுத்தப்பட்டது. நியாயமான புதைபடிவ உருமாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் அந்தச் சிருஷ்டிகள் உண்மையில் மனிதகுலத்தின் மூதாதையராக இருந்தனர் என்பதற்கு எவ்வித அத்தாட்சியும் இல்லை. உதாரணமாக, “லூசி” மனித மூளையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுள்ள மூளையைக் கொண்டிருந்தது. தெளிவாக, அது தற்போது இல்லாமற்போய்விட்ட குரங்கு இனத்தில் ஒன்றே அல்லாமல் வேறொன்றுமல்ல.—ED.

கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவது “கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவது—அதற்கு காரணம் என்ன?” (ஏப்ரல் 22, 1994) என்ற தொடருக்காக உங்களுக்கு மிக்க நன்றி. இந்தக் கட்டுரைகளை தொடக்கத்திலிருந்து முடிவு வரையாக நான் இருமுறை வாசித்தேன். நான் ஒரு சீரற்ற உணவுபழக்கத்தைக் கொண்டிருக்கிறேன். ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றபின் ஓரளவு நன்றாக உணருகிறேன், ஆனால் இன்னும் சில வேளைகளில் நான் ஒரு போராட்டத்தைக் கொண்டிருக்கிறேன். அந்தக் கட்டுரை என்னுடைய தீர்மானத்தைப் பலப்படுத்தியது.

T. S., ஜெர்மனி

நான் முன்னர் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவனாயும் குடிவெறிக்குட்பட்டவனாயும் இருந்தேன். நீங்கள் கொடுக்கிற புத்திமதி நிஜமாகவே பொருத்தமானதாக இருக்கிறது. கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கும் ஒருவர் நம்முடைய சிருஷ்டிகரின் பார்வையில் முழுமையாகச் சுத்தமாக இருக்க முடியாது என்பதால், ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது ஒரு ஆவிக்குரிய தடையாக இருக்கிறது என்பதை உணருவதன்மூலமும் நான் உந்துவிக்கப்பட்டேன்.

M. G., பிரான்ஸ்

கொக்கெயினுக்கு அடிமையாகி இருந்த என்னுடைய மகனை, நான் ஆறரை வருடங்களுக்கு முன் இழந்தேன். அவ்வளவு வேதனையை உணர்ந்து, பிழைத்திருப்பதால், நான் உணவு பொருளுக்கு அடிமையாக இருப்பதைக் கையாள தயாராக இருந்தேன். குடிவெறியுள்ள குடும்பம் ஒன்றில் வளர்ந்து வந்ததால், என்னை ஆறுதல்படுத்துவதற்கும் வேதனையைக் கையாளுவதைத் தவிர்ப்பதற்கும் நான் உணவைப் பயன்படுத்த கற்றிருந்தேன். நான் திட்ட உணவு முறையைப் பின்பற்ற முயன்றதும் தோல்வியாகவே இருந்தது. என்றபோதிலும், ஒரு கிறிஸ்தவளாக 20 வருடங்கள் இருந்தபின், மேலுமாக யெகோவாவின் அன்பை ருசித்துப்பார்ப்பது எனக்குப் பெரிய உதவியாக இருந்திருக்கிறது. நன்றி, அந்தக் கட்டுரைகளுக்கு நன்றி.

S. E., ஐக்கிய மாகாணங்கள்

சீர்திருந்திய குற்றவாளி “சத்தியத்தினிடமாக நான் தப்பி வந்தேன்” (பிப்ரவரி 8, 1994, ஆங்கிலம்) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு 24 வயதாகிறது; நான் மரண தீர்ப்பளிக்கப்பட்டு, வாஷிங்டன் நகர சிறைச்சாலையில் இருக்கிறேன். இந்தக் கட்டுரை எனக்கு நேரடியாகப் பொருந்தியது; யெகோவாவின் பார்வையில் நான் சரியானதைச் செய்ய விரும்பும்படி செய்கிறது. ப்ரையன் கார்னர் நிஜமாகவே என் நெஞ்சத்தைத் தொட்டுவிட்டார்.

J. B., ஐக்கிய மாகாணங்கள்

நான் மிஸ்ஸெளரி சீர்த்திருத்த சிறை ஒன்றில் இருக்கிறேன்; திரு. கார்னர் சத்தியத்தைப் படித்த பிறகு சரணடையும்படி தீர்மானித்தது தூண்டுதல் அளிப்பதாய் இருந்தது. திறந்த மனதும் நல்ல இருதயமுமுள்ள மக்கள் மீது உங்கள் அமைப்பு என்ன பாதிப்பைக் கொண்டிருக்க முடியும் என்பதை இது காண்பிக்கிறது. கடவுளிடம் விசுவாசத்தைக் காண்பிப்பதனால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கிறது என்பதைக் காண்பது எளிது.

W. B., ஐக்கிய மாகாணங்கள்

ஒரு வருடத்திற்கு முன்பு நான் வேலை செய்த கம்பெனிகளில் பணத்தைக் கையாடல் செய்தேன். நான் லட்சக்கணக்கான யென்களைத் திருடினேன்; ஒரு 20 வயது பெண் செய்வாள் என்று எவரும் நினைத்துப் பார்க்காத ஒரு காரியம் அது! என்றபோதிலும், நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தேன்; என்னுடைய மனச்சாட்சி என்னைக் கண்டனம் செய்ய ஆரம்பித்தது. ஆகவே நான் பணத்தை ஒப்படைத்துவிட்டு, பொறுப்பில் இருந்தவர்களிடம் குற்றத்தை ஒத்துக்கொண்டேன். சில கடினமான வார்த்தைகள் சொல்லப்பட்ட போதிலும், கூடுதலான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தக் கட்டுரைக்காக நான் ஆழ்ந்த நன்றியுள்ளவளாக இருக்கிறேன்; ஏனென்றால் யெகோவாவின் இரக்கம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று திரும்பவும் என்னை உணரவைக்க உதவியிருக்கிறது.

S. M., ஜப்பான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்