அவரது கவனத்தை அவை ஈர்த்தன
மே 1995-ல் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, நியூயார்க்கிலுள்ள புருக்லினிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திற்கு எழுதினார். அவர் இவ்வாறு விவரித்தார்:
“கிழக்கு 124-வது தெருவில் முதல் மற்றும் இரண்டாம் அவென்யூக்களுக்கு இடையே நான் நடந்து போய்க்கொண்டிருந்தேன். கீழே பார்த்தபோது, சில துண்டுப்பிரதிகளை காற்று அடித்து பறத்திக்கொண்டிருந்தது. நான் குனிந்து, மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல். குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள். நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? என்ற உங்களுடைய துண்டுப்பிரதிகள் மூன்றை எடுத்தேன். அவற்றை வாசித்துப் பார்த்தேன்: அவற்றை மிகவும் அனுபவித்தேன்.
“நீங்கள் மிகவும் தயவுகூர்ந்து, இலவச வீட்டு பைபிள் படிப்பு பற்றி எனக்குக் கொஞ்சம் தகவலை அனுப்புவீர்களானால் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். மேலும் முடிந்தால், உங்களுடைய பிரசுரங்கள் சிலவற்றை நான் பெற விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரையில். நான் கண்டுபிடிப்பதற்காக என்பாதையில் எனக்கு முன்பாக கடவுள் அந்த மூன்று துண்டுப்பிரதிகளைப் போட்டது ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. கடவுள் உண்மையிலேயே நமக்கு விளங்காத வழிகளில் செயல்படுகிறார்.”
கருத்தைத் தூண்டியெழுப்பும் இந்த துண்டுப்பிரதிகளை வாசிக்க அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றைக் கொண்டிருக்க நீங்கள் விரும்பினால் தயவுசெய்து, Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள்.