கல்விபுகட்டும் ஒரு முக்கிய கருவி
இலங்கை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் “‘விழித்தெழு!’ பதிப்பாசிரியருக்கு” எழுதினார். அவரது கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
“அன்புள்ள ஐயா,
“நீங்கள் பிரசுரிக்கும் விழித்தெழு! பத்திரிகை ஒரு சிறிய பத்திரிகையாயிருந்தாலும், அது மிகமிக முக்கியமானதாயும் காலத்துக்கேற்றதாயும் உள்ளது என்று சொல்லப்பட வேண்டும். தனிக்கட்டுரை ஒவ்வொன்றும் நன்மையைத் தீமையினின்று தெளிவாக வேறுபடுத்துவதற்கு இன்றைய இளைஞருக்கு உதவுகிறது.
“நான் எல்லா கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். பள்ளி ஆசிரியர், மாணவர், பெற்றோர் ஆகிய ஒவ்வொருவரும் இப்பத்திரிகையை நிச்சயமாக வாசிக்க வேண்டும் என்பது என் கருத்து.
“நீங்கள் ஈடுபட்டிருக்கும் இச்சிறந்த வேலையை நான் ஆழ்ந்து போற்றுகிறேன். உங்களது முயற்சிகளில் தொடர்ந்து வெற்றி பெறுமாறு நான் உங்களை ஆசிக்கிறேன்.”
ஒவ்வொரு விழித்தெழு! இதழிலும் கிட்டத்தட்ட 1.6 கோடி பிரதிகள், 78 மொழிகளில் அச்சிடப்படுகின்றன. இப்பத்திரிகை உலக முழுவதிலும் கல்விபுகட்டும் ஒரு முக்கிய கருவியாக அங்கீகரிக்கப்படுகிறது. அதை வாசிப்பதிலிருந்து நீங்களும் பயனடைவீர்கள். நீங்கள் ஒரு பிரதியைப் பெற விரும்பினால் அல்லது ஓர் இலவச வீட்டு பைபிள் படிப்பு நடத்தப்பட விரும்பினால், தயவுசெய்து Praharidurg Prakashan Society, Plot A/35, Nr Industrial Estate, Nangargaon, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான முகவரிக்கு எழுதுங்கள்.